Posts

Showing posts from December, 2020

ப்ரித்திவியின் டக் அவுட்டும்....கோலியின் ரன் அவுட்டும்...அடிலெய்டில் இந்தியாவின் முதல் நாள் எப்படியிருந்தது? #IndVsAus #Kohli #Prithivishah #Rahane

ப்ரித்திவி ஷாவின் டக் அவுட்டும்....கோலியின் ரன் அவுட்டும்....இந்தியா தடுமாறியதற்கான காரணங்கள் என்ன!? இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அடிலெய்டில் தொடங்கிய முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவடைந்திருக்கிறது. ஆஸியினரின் பௌலிங்கை தட்டுத்தடுமாறி எதிர்கொண்டுதான் முதல் நாளை முடித்திருக்கிறது இந்திய அணி. இந்த நாளின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்களை எடுத்திருக்கிறது இந்தியா. கோலி டாஸ் வென்று முதல் பேட்டிங்கை தேர்வு செய்ததே கொஞ்சம் பாசிட்டிவ்வாக இருந்தது. ஏனெனில், இதற்கு முன் கோலி டாஸ் வென்ற 25 போட்டிகளில் இந்திய அணி தோற்றதே இல்லை. ஆரம்பமே கொஞ்சம் சாதகமாக அமைய இந்திய அணியின் சார்பில் ஓப்பனர்களாக மயங்க் அகர்வாலும் ப்ரித்திவி ஷா வும் களமிறங்கினர். சுப்மன் கில்லுக்கு பதிலாக ப்ரித்திவி ஷா வை ப்ளேயிங் லெவனில் சேர்த்ததே பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது. கோலியும் ரவிசாஸ்திரியும் ப்ரித்திவி ஷாவவை டிக் அடித்ததற்கு நம்பிக்கையை தவிர வேற எந்த காரணமும் இருந்திருக்க முடியாது. அந்த நம்பிக்கையை ப்ரித்திவி ஷா இன்று காப்பாற்றியிருக்க வேண்டும்.

கோலியின் கனவை நிஜமாக்கப்போகும் இரண்டு தமிழர்கள் இவர்கள்தான்!! #Natarajan #Washington #Kohli

கோலியின் கனவை நிஜமாக்கப்போகும் இரண்டு தமிழர்கள் இவர்கள்தான்!! இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நேற்றைய போட்டி ரொம்பவே சுவாரஸ்யமாக அமைந்திருந்தது. டாஸ் போடப்படும் போது ஆட்டத்தில் இல்லாத சஹால் இறுதியில் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். ஃபின்ச், ஸ்மித், மேத்யூ வேட் என இவர் வீழ்த்திய மூன்று விக்கெட்டுகளுமே ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இதுமட்டுமே வெற்றிக்கு காரணமாக அமையவில்லை. தமிழக வீரர்களான நடராஜனும் வாஷிங்டன் சுந்தரும் கூட சஹால் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திதான் இருக்கின்றனர். ஆனால், ஆட்டத்தில் இந்த இரண்டு தமிழர்களும் ஏற்படுத்திய தாக்கத்தை விட கோலியின் மனதில் மிகபெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். முதலில் வருண் சக்கரவர்த்திதான் டி20 அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். நடராஜன் ரிசர்வ் ப்ளேயராக மட்டுமே அழைத்து செல்லப்பட்டிருந்தார். திடீரென வருண் காயமடைய டி20 அணிக்குள் நடராஜனுக்கு இடம் கிடைத்தது. சைனி கொஞ்சம் காயம் காரணமாக அவதிப்பட ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலும் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி த