Posts

Showing posts from April, 2019

உங்கள் ஓட்டு ; உங்கள் உரிமை | YourVoteYourRight

உங்கள் ஓட்டு : உங்கள் உரிமை சரியாக இன்னும் ஒருவாரத்தில் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான தேர்தல் தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. மக்களாட்சியின் அழகியலே நம்மை ஆளப்போகும் ஆட்சியாளர்களையும் அரசாங்கத்தையும் நாமே வாக்களித்து தேர்ந்தெடுப்பதுதான். நாம் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் அரசாங்கம் அடுத்த 5 வருடத்தில் எடுக்கப்போகும் ஒவ்வொரு நடவடிக்கையும் செயல்பாடுகளும் நமது ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையிலும் , பொருளாதாரத்திலும், சமூகத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தபோகிறது. ஒரு நல்ல அரசாங்கத்தையும் ஆட்சியாளர்களையும் தேர்ந்தெடுக்க வேண்டியது நமது கடமை. அந்த கடமையை நிறைவேற்ற நமக்கு கிடைத்திருக்கும் அற்புத பரிசுதான் வாக்குரிமை. நமது ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்தை தாங்கி நிற்கும் தூண்களாக விளங்கபோகின்றன. வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஜனநாயகம் வலுப்பெறும். நம் நாட்டில் இருப்பதை முழுமையான ஜனநாயகம் என்று கூட சொல்லலாமா என தெரியவில்லை. ஏனெனில் இங்கு பெரும்பான்மை பெறும் வேட்பாளருக்கு செலுத்தப்படும் வாக்குகளுக்கு மட்டுமே மதிப்பு. உதாராணமாக ஒரு தொகுதியில் 100 வாக்காளர்கள் இருந்தால் 51 வாக்குகளை