Posts

Showing posts from January, 2021

இந்த குதிரை இன்னும் ஓயவில்லை...மீண்டெழுந்த தினேஷ் கார்த்திக்! #DK #Tamilnadu #SMAT

இந்த குதிரை இன்னும் ஓயவில்லை...மீண்டெழுந்த தினேஷ் கார்த்திக்! லாக்டவுணுக்கு பிறகு இந்தியாவில் நடைபெற்ற முதல் உள்ளூர் தொடரான சையத் முஷ்டக் அலி ட்ராஃபியில் தமிழ்நாடு அணி சாம்பியனாகியுள்ளது. இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் தமிழ்நாடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையையும் வென்றுள்ளது. 2007 இல் சையத் முஷ்டக் அலி ட்ராஃபியின் அறிமுக சீசனிலேயே தமிழக அணிதான் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அப்போதும் தமிழக அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்தான். 22 வயது இளைஞராக தமிழக அணியை துடிப்போடு வழிநடத்தி கோப்பையை வெல்ல வைத்தார். கேப்டன், கீப்பர், பேட்ஸ்மேன் என பல்திறன் மிக்கவராக இருந்தும் இந்திய அணியில் இவருக்கான தொடர் வாய்ப்புகள் கிடைத்ததே இல்லை. நீண்ட காலத்துக்கு பிறகு 2017 ல் நிதாஷ் ட்ராஃபியில் வங்கதேசத்துக்கு எதிராக தினேஷ் கார்த்திக் அடித்த அடி அவரை மீண்டும் பிரபலமாக்கியது. அதன்மூலம் உலகக்கோப்பைக்கான அணியில் இடம் கிடைத்தது. ஐ.பி.எல் ல் கொல்கத்தா அணிக்கான கேப்டன் பதவி கிடைத்தது. ஆனால், மீண்டும் சறுக்கல்கள் தொடர இந்திய அணியில் இடமில்லாமல் போனது. கொல்கத்தா அணியின் கேப்டன் பதவி

ஷேம்பைன் இல்லை....செலிப்ரேஷன் இல்லை..250 ரூபாய் சம்பளம்...இந்திய அணியின் முதல் டெஸ்ட் வெற்றி இப்படித்தான் இருந்தது...

ஷேம்பைன் இல்லை....செலிப்ரேஷன் இல்லை..250 ரூபாய் சம்பளம்...இந்திய அணியின் முதல் டெஸ்ட் வெற்றி இப்படித்தான் இருந்தது... இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளை செய்திருக்கிறது. இந்தியாவில் வைத்து மட்டும் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் வென்றுவிட்டது. ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் ட்ராஃபியை இரண்டு முறை வென்றுவிட்டது. ஆனால், இந்த வெற்றிகளைவிட எல்லாம் சிறப்பானது இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றி. அங்கே இருந்துதான் எல்லாமும் தொடங்கியிருக்கிறது. 68 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்துதான் இந்தியாவுக்கு அந்த முதல் டெஸ்ட் வெற்றி கிடைத்தது. அதுவும் இங்கிலாந்துக்கு எதிராக. இப்போது இந்தியா-இங்கிலாந்து இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் வைத்து நடைபெற இருக்கிற சூழ்நிலையில் இந்தியாவின் அந்த முதல் டெஸ்ட் வெற்றி குறித்த சின்ன ரீவைண்ட் இதோ... போர்பந்தர் மகாராஜா தலைமையில் இந்திய அணி 1932 ம் ஆண்டு தங்களது முதல் டெஸ்ட் போட்டியை ஆடுவதற்கு இங்கிலாந்துக்கு பயணப்பட்டது. போர்பந்தர் மகாராஜா தலைமையில் இந்திய அணி சென்றிருதாலும் லார்ட்ஸில் இந்திய அணி ஆடிய முதல் போட்

ஸ்டார்க் எனும் இரும்புக்கை மாயாவி! #Starc #IndVsAus

ஸ்டார்க் எனும் 'இரும்புக்கை மாயாவி' சம்பவம் 1: 2015 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியுசிலாந்து அணியின் கேப்டன் ஆன ப்ரெண்டன் மெக்கல்லம் முதல் ஓவரிலேயே ஒரு அசுரத்தனமான யார்க்கரில் ஸ்டம்பை பறிகொடுக்கிறார். சம்பவம் 2: 2017 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் வின்ஸ் இன்கம்மிங் டெலிவரி என நினைத்த ஒரு பந்து திடீரென டீவியேட் ஆகி போல்டை தகர்க்கிறது. சம்பவம் 3: 2019 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து இடையேயான ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் ஒரு இன்ஸ்விங்கிங் யார்க்கரில் ஸ்டம்பை பறிகொடுக்கிறார். மேலே குறிப்பிட்ட இந்த மூன்று சம்பங்களும் வெவ்வெறு காலக்கட்டதில் வெவ்வேறு போட்டிகளில் நிகழ்த்தப்பட்டவை. ஆனால், அந்த சம்பவத்தில் பலிகடாவான மெக்கல்லம், வின்ஸ், ஸ்டோக்ஸ் என மூவரின் முகத்திலும் ஒரே ரியாக்சன்தான். அது மிரட்சி. இங்கே ஒரு எண்ட்டில் இவர்கள் பேட் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் இன்னொரு எண்ட்டிலிருந்து அவர் ஓடிவந்தார். அவர் கையிலிருந்து பந்து ரிலீஸ் ஆனது. அதன்பிறகு என்ன நடந்தது? நிச்சயமாக தெரியவில்லை. என்ன நடந்தது? மொத்த கூட்டமும் கூச்சலிடுகிறது. அப்போதுதா

பாகிஸ்தானுக்கு ஸ்டாண்டிங் ஓவியேசன்....நெவர் கிவ் அப் சச்சின்....1999 சென்னை டெஸ்ட் சுவாரஸ்யங்கள்!

பாகிஸ்தானுக்கு ஸ்டாண்டிங் ஓவியேசன்....நெவர் கிவ் அப் சச்சின்....1999 சென்னை டெஸ்ட் சுவாரஸ்யங்கள்! 20 வருடங்களுக்கு முன்பு இதேநாளில் சென்னை சேப்பாக்கத்தில் வைத்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே ஒரு மகத்தான டெஸ்ட் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தற்போதைய இந்திய அணி காபாவில் செய்ததை போல எந்த சாதனைகளும் நிகழ்த்தப்படவில்லை. ஏன் இந்திய அணி அந்த போட்டியில் வெற்றியைக் கூட பெறவில்லை. இருப்பினும் காலம்காலமாக நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு பல சம்பவங்கள் அந்த போட்டியில் நடந்தது. 1999 ல் கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணி வந்திருந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு எற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வைத்து நடைபெற்றது. பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியால் 238 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பாகிஸ்தான் சார்பில் முகம்மது யுசுப்பும் மோயின் கானும் மட்டுமே அரைசதம் எடுத்திருந்தனர். இந்தியா சார்பில் அனில் கும்ப்ளே 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அட்டாகசப்படுத்தியிருந்த

Stalin Vs EPS #ADMK #DMK

வெற்றி நடைபோடும் தமிழகமே Vs உங்கள் தொகுதியில் ஸ்டாலின், ஸ்டாலின் வர்றாரு விடியல் தர்றாரு... கிரிக்கெட் விளையாட ஒரு காலத்தில் வீரர்கள் மட்டும் போதுமானவர்களாக இருந்தார்கள். அதன்பிறகு அவர்களுக்கு பயிற்சியளிக்க பயிற்சியாளர் குழு தேவைப்பட்டது. அதன்பிறகு கொஞ்ச கொஞ்சமாக வீடியோ அனலிஸ்ட், டேட்டா அனலிஸ்ட் போன்றவர்கள் உருவாகத் தொடங்கினர். இப்போது எல்லா அணிகளிலும் இந்த எதிரணியின் பலம் பலவீனத்தை ஆய்ந்து கொடுக்கும் அனலிஸ்டுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதேமாதிரிதான், அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் காலங்களில் வியூகங்களை வகுக்க முன்பெல்லாம் கட்சி நிர்வாகிகளும் மூத்த தலைவர்களுமே போதுமானவர்களாக இருந்தார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. எல்லா கட்சிகளுக்கும் வியூகங்கள் வகுத்துக்கொடுப்பதற்கு என்றே இப்போது பல நிறுவனங்கள் முளைத்துள்ளன. வரப்போகிற சட்டமன்ற தேர்தலிலும் இந்த தேர்தல் வியூக வகுப்பாளர்களின் பங்கு பெரிதாக இருக்கப்போகிறது. தி.மு.க பல கோடிகளை கொடுத்து பிரஷாந்த் கிஷோரின் IPAC நிறுவனத்தை வியூக வகுப்பாளர்களாக நியமித்திருக்கிறது. அ.தி.மு.க வுக்கு சுனில் தலைமையிலான OMG நிறுவனம் தேர்தல்

Letter to Thalapathy Vijay #Master #Vijay

'மாஸ்டர்' விஜய்க்கு 'பிகில்' அடிக்க தயார்; சொம்படிக்க தயாரில்லை.. ரசிகர்களை நெஞ்சில் வைத்து போற்றும் விஜய் அவர்களுக்கு, உங்களின் ஒவ்வொரு படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கும் முண்டியத்துக் கொண்டு டிக்கெட் வாங்கி தியேட்டர் வாசல்களிலேயே தீபாவளிக்களையும் பொங்கலையும் கொண்டாடி வரும் வெறிபிடித்த ரசிகர்களில் நானும் ஒருவன் என்கிற உரிமையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன். 'பிகில்' படம் வெளியாவதற்கு முன்பே மாஸ்டர் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. வித்தியாசமான படங்களை கொடுக்கும் இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் நீங்கள் இணைகிறீர்கள் என்பதை அறிந்தவுடன் அளவில்லா மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது. இதுவரை பார்த்திடாத விஜய்யை திரையில் பார்த்துவிடலாம் என்கிற எதிர்பார்ப்பு எகிறியது. அடுத்தடுத்து வந்த அறிவிப்புகளும் போஸ்டர்களும் பாடல்களும் இந்த எதிர்பார்ப்புகளுக்கெல்லாம் சரியான தீனியாக இருந்தது. ஏப்ரல் 9 எப்படியும் படம் ரிலீஸ் ஆகிவிடும் என்ற நிலையில் திடீரென கொரோனா பரவல் காரணமாக லாக்டவுண் அறிவிக்கப்பட மாஸ்டரை திரையில் பார்க்கமுடியாமல் மிகுந்த ஏமாற்றமாகத்தான் இருந்தது. மே,ஜீன்,ஜீலை., ஆகஸ்ட

ரஹானேவை புகழ்வதற்காக...கோலியை திட்ட வேண்டாமே! #Kohli #Rahane #IndVsAus

ரஹானேவை புகழ்வதற்காக...கோலியை திட்ட வேண்டாமே! அடிலெய்டில் வாங்கிய முரட்டுத்தனமான அடிக்கு மெல்பர்னில் வைத்து ரஹானே தலைமையில் ஆஸிக்கு பலத்த அடி கொடுத்தது இந்தியா. கோலி இல்லை....ரோஹித் இல்லை...ஷமி இல்லை....நிச்சயமாக இந்திய அணி ஜெயிக்காது என ஆருடம் கூறியவர்களின் வாக்குகளையெல்லாம் பொய்யாக்கி காட்டினார் ரஹானே. இந்த வெற்றியை கொண்டாட்டத்துக்கு இடையிலேயே இன்னொரு விவாதமும் எழுந்துள்ளது. அதாவது, கோலியை விட ரஹானே கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறார். எனவே ரஹானேவையே இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆக்கிவிடலாம் என்கிற வாதம் பரவலாக அனைத்து தரப்பினராலும் எடுத்துவைக்கப்பட்டது. கோலி என்ன அவ்வளவு மோசமான கேப்டனா?? ஒரு தோல்வியை வைத்து அவரின் கேப்டன்சியை அளந்துவிட முடியுமா?? மெல்பர்ன் வெற்றி மட்டுமே ரஹானேவை கேப்டனாக்குவதற்கு போதுமா?? கோலியின் கேப்டன்சி மீதான சர்ச்சைகளும் குற்றச்சாட்டுகளும் புதிதானவை ஒன்றும் கிடையாது. ஐ.பி.எல் முடிந்த போது கூட மும்பைக்காக ஐந்து முறை கோப்பையை வென்ற ரோஹித்தை இந்திய அணிக்கு கேப்டன் ஆக்கிவிடலாம் என்ற பேச்சு பரவலாக எழுந்தது. ரோஹித் காயம் காரணமாக ஆஸி தொடரை தவறவிட்டதால் இந்த பேச்சு