Posts

Showing posts from February, 2020

நமஸ்தே 'ட்ரம்ப்' - அமெரிக்க அதிபரின் இந்திய ட்ரிப்பும் பின்னாலிருக்கும் அரசியல் பொருளாதார கணக்குகளும்... | #NamasteTrump #Modi #India #America

'கெம்சோ ட்ரம்ப்' 'ஹவ்டி மோடி' என அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த விருந்தோம்பலுக்கு பதில் உபச்சாரமாக 'கெம்சோ ட்ரம்ப்' என்ற பெயரில் இந்தியாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வரவிருக்கும் அதிபர் ட்ரம்புக்கு  பிரம்மாண்ட வரவேற்பளிக்க காத்திருக்கிறார் பிரதமர் மோடி. வருகிற 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இந்தியப்பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா ட்ரம்ப் இருவரும் முதலில் 24 ஆம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழாவில் கலந்துகொள்கின்றனர்.முன்னதாக 50000 பேர் அமரும் வகையில் இருந்த ஸ்டேடியம் தற்போது புதுப்பிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் 1,10,000 பேர் அமர்ந்து போட்டிகளை ரசிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் பட்டேல் ஸ்டேடியம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மட்டும் 3 மணி நேரம் பங்கேற்று மீப்பெரும் அரங்கம்  நிறைந்த அந்தக்கூட்டத்தின் முன் பிரதமர் மோடியும் ட்ரம்பும் உரையாற்ற இருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆச

Actor of the Decade - Sivakarthikeyan ! #HBDSivakarthikeyan

Image
Actor of the Decade - #Sivakarthikeyan #சிவகார்த்திகேயன் பிறந்தநாள் சிறப்புப்பதிவு. 1970-80 நாடக பாணியிலான தன்மைகளில் இருந்து தமிழ்சினிமா தன்னை புதுப்பித்துக்கொண்ட காலக்கட்டம். புதுப்புது இயக்குனர்கள் பல வித்தியாசமான திறமைகளோடு வந்திறங்கினர். உண்மையின் தமிழ் சினிமாவின் ஆகபெரும் டைரக்டர்களாக போற்றப்படும் பலரும் இந்த காலக்கடத்தில் சினிமாவுக்கு அறிமுகமாகினர்.அதே காலக்கட்டத்தில்தான் பிரம்மலோகத்திலிருந்து இறங்கி வந்ததுபோல இருக்கும் பளிச் பாலிஷ் ஹீரோக்களை தாண்டி களைந்த தலையோடும் கருப்புத்தோற்றத்தோடும் முகம் முழுவதும் தாடியோடும் சற்று பெருத்த உடலோடும் சினிமாவுக்கென்று வரையறுக்கப்பட்ட அழகு எல்லையை உடைத்தெறிந்து திறமையை மட்டும் நம்பி திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி என தமிழ்நாட்டின்  இண்டு இடுக்குகளிலிருந்து ஹீரோக்கள் கோடம்பாக்கத்துக்கு விஜயம் செய்ய ஆரம்பித்தார்கள். கோலிவுட்டின் அந்த காலக்கட்டத்தை படமாக வரைந்தால் சாமானியன் சாதித்த பொற்காலம் எனப் பெயர் வைத்துவிடலாம். ஆனால் அதன் பிறகு 90 களின் நடுப்பகுதி அல்லது  பிற்பாதியிலிருந்து சாமானிய ஹீரோக்களின் வருகை மற்றும் நிலைத்தாடல் என்

உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு....- #தசாவதாரம் காதலும் பிரம்மிப்பும் !

Image
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு.... உன்னைப் பெற்றதில் பெருமைக் கொள்ளுது நாடு... உலகநாயகனே......! உலகநாயகனே....! தசாவதாரம் ! 4 ஆம் வகுப்பு படிக்கும்போது திரையரங்கில் குடும்பத்தோடு பார்த்த படம். அந்த வயதில் இந்தப் படம் புரிந்திருக்க வேண்டுமாயின் நான் ஒரு ஏலியனின் வாரிசாக இருந்திருக்க வேண்டும். புரியவில்லையென்றாலும் அந்த கிழவியா வருவது கமல்தானே அந்த கருப்பானவராக வருவது கமல்தானே என்று ஒரு கியுரியாசிட்டியோடு அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். சில தினங்களுக்கு முன்பு மீண்டும் தசாவதாரம் கலைஞர் டிவியில் ஒளிபரப்பப்பட்டது, எத்தனையாவது  முறையாக என்று தெரியவில்லை. இந்த முறை முழுவதுமாக உட்கார்ந்து பார்த்தேன். இந்தமுறை சொல்ல முடியாத அளவுக்கு ஒரு பிரம்மிப்பு. இப்படி ஒரு படத்தை 2008 ம் ஆண்டு ஒருவரால் எப்படி எடுத்திருக்க முடியும்?  ஒரு சிறிய கிருமி அது வில்லனிடம் கிடைத்தால் உலகமே பெரும்பிரச்சனையில் சிக்கும் அளவுக்கு நாச வேலைக்கு பயன்பட்டுவிடும். ஹீரோ தன் கையிலிருக்கும் கிருமியை துரத்தும் வில்லனிடம் இருந்து காப்பாற்றினாரா? என்பதுதான் கதை. இந்த கதை சினிமா உலகத்துக்கு ஒன்றும் புதிதானது அல்ல. ஹாலிவுட

ராஸ் க்கும் யாஸ் க்கும் உள்ள எக்ஸ்பீரியன்ஸ் கேப் தான் இந்த ஒயிட் வாஷிற்கு காரணம் ! #IndVsNz

ராஷ் க்கும் யாஸ்க்கும் உள்ள அந்த எக்ஸ்பீரியன்ஸ் கேப் தான் இந்தியாவின் ஒயிட்வாஷ் க்கு முக்கியக் காரணம்.... டாப் ஆர்டர் சொதப்பி ஒன் டவுனில் இறங்கும் ரன் மெஷினும் சொதப்பி மிடில் ஆர்டரில் தோனியும் லோயர் மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டயாவும் இல்லாத ஒரு சீரிஸ் இந்தியாவுக்கு எப்படி இருக்கும்? பதில், ஒற்றை வார்த்தையில் 'ஒயிட்வாஷ்' என்று இருக்கும் என்கிறது நடந்து முடிந்துள்ள இந்தியாVsநியூசிலாந்து தொடர். டி20 தொடரில் 5-0 என இந்தியா வெற்றி பெற்றிருக்கலாம் ஆனால் ஓடிஐ களம் என்பது வேறு. 2018 ஆம் ஆண்டு சிஎஸ்கே க்கும் கேகேஆர் க்கும் இடையே நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த கேகேஆர் முதல் 10 ஓவரில் 86 க்கு 5 என்ற பரிதாப நிலையிலிருக்க களமிறங்கிய ரஸல் சிஎஸ்கே பௌலிங்கை துவம்சம் செய்து டீம் ஸ்கோரை 200 க்கு மேல் உயர்த்திவிடுவார். அப்படியே கட் செய்து இந்த இந்திய-நியுசி டி20 தொடருக்கு வருவோம். மூன்றாவது டி20 போட்டியில் 'அவ்ளோதான் இந்தியா காலி' என்றிருந்த நிலையில் கடைசிபாலில் ராஸ் டெய்லரை ஷமி அவுட்டாக்கி கெத்துக்காட்டிவிடுவார். டி20 யில் யார் எங்கே எப்படி சொதப்பினாலும் ஒரே ஒரு ப்ளேயரால் ஒ

நன்றியும்.....மகிழ்வும்...! #NellaiBookFair2020

நன்றியும்....மகிழ்வும்...! #NellaiBookFair2020 எல்லா மக்களும் எந்த வேறுபாடுமின்றி சேர்ந்து கொண்டாடிய நெல்லை புத்தகத் திருவிழா நேற்று நிறைவுபெற்றது. நெல்லையில் ஒரு 6 அல்லது 7 பெரிய தியேட்டர்கள் புதிய படங்களை ரிலீஸ் செய்து வருகின்றன. இந்த தியேட்டர்களில் தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர்களின் படம் சிறப்புக்காட்சிகளுடன் சேர்த்து தொடர்ந்து 10 நாட்கள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடினாலும் அதிகப்பட்சம் 1.75 லட்சம் முதல் 2லட்சம் பேர் தான் படத்தை பார்த்திருப்பர்.(இன்றைய தேதிக்கு 10 நாள் ஹவுஸ்ஃபுல் என்பதெல்லாம் கனவுதான் என்பது வேறு கதை) ஆனால் நடந்து முடிந்துள்ள நமது நெல்லை புத்தகத்திருவிழாவில் தோராயமாக 5 லட்சம் மக்கள் கண்காட்சியில் பங்கு கொண்டதாகவும், ஏறக்குறைய 3 கோடி ரூபாய் அளவிலான புத்தகங்கள் விற்றுத்தீர்ந்ததாகவும் கூறப்படுகிறது. சென்னை கண்காட்சியில் மொத்தம் 15 லட்சம் பேர் பங்கேற்றதாகவும் 15 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடைபெற்றதாகவும் தெரிகிறது. சென்னையில் மொத்தம் 800 ஸ்டால்கள் நெல்லையில் இதில் எட்டில் ஒரு பங்கு ஸ்டால்தான். சென்னை மக்கள் தொகை 1 கோடிக்கும் மேல் நெல்லையின் மக்கள் தொகை அதில் 5 ல் ஒரு பங்கு

ஸ்ட்ரேட்டஜியில் மீண்டும் சொதப்பும் கோலி ! #IndVsNz #ODI

#Captainship #ViratKohli ஸ்ட்ரட்டஜியில் மீண்டும் சொதப்பும் கோலி ! 2009 ம் ஆண்டு வதோரா கிரிக்கெட் க்ரவுண்டில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஒரு ஒன்-டே மேட்ச். கேப்டன் தோனி. இரண்டாவது பேட்டிங் செய்த இந்தியாவுக்கு 293 ரன்கள் டார்கெட். 200 ரன்களுக்குள்ளாக இந்தியா 7 விக்கெட்டை இழந்தது. அப்போது களமிறங்கிய பௌலர் ஹர்பஜன் சிங் ப்ரெட் லீ, ஜான்சன், பீட்டர் சிடில் என ஆஸியின் டாப் பௌலர்ல்களை பொளந்து கட்டிவிட்டார். 49 ரன்கள், சிலபல இமாலய சிக்சர்களுடன். கடைசி ஓவரில் கிட்டத்தட்ட 10 ரன் எடுக்க வேண்டிய நிலையில் ஹர்பஜன் அவுட். இந்தியா தோல்வி. ப்ரஸ் மீட்டில் தோனிக்கு இப்படி ஒரு கேள்வி. ஹர்பஜன் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுகிறார். அவரை ஆல்ரவுண்டராக கருதி அவருக்கு பேட்டிங்கில் முக்கியத்துவம் அளிக்கப்படுமா? தோனி : ஹர்பஜன் ஒரு முழுநேர சுழற்பந்துவீச்சாளர். அவர் பேட்டிங்கில் கலக்குவது சிறப்புதான் இருந்தாலும் அவருக்கு ஆல்ரவுண்டர் என்ற பட்டத்தை சூட்டி அவரை எக்ஸ்ட்ரா ப்ரெஷருக்குள்ளாக்க விரும்பவில்லை. ஹர்பஜன் ஒரு சுழற்பந்துவீச்சாளரே...... அப்படியே கட் செய்து இன்றைக்கு நடந்துகொண்டிருக்கும் இந்தி

Nellai Book Festival Day - 3

Nellai Book Festival Day-3 சில பணிகள் காரணமாக பாதியிலேயே சென்று பாதியிலேயே கிளம்ப வேண்டிய சூழல்.அதனால் இந்த பதிவும் நீளமாக இல்லாமல் பாதியாகத்தான் இருக்கும். பாதி நிகழ்வில்தான் பங்குகொள்ள முடிந்தது என்றாலும் நான் எதிர்பார்த்து சென்ற இயற்கை வேளாண் ஆர்வலர் பாமயன் மற்றும் சூழலியலாளர் நக்கீரன் ஆகியோரின் பேச்சை கேட்டுவிட்டேன். பாமயன் அவர்கள் வழக்கம்போல நிலங்கள் குறித்தும் விவசாயம் குறித்தும் விரிவாக பேசினார். அவர் பேசியதில் 'எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு வீட்டுத்தோட்டத்தில் உள்ளது' என்ற மேற்கோளும் நவீன மையப்படுத்தப்படும் பொருளாதாரம் குறித்த பகுதியும் கவனம் ஈர்த்தது. சூழலியாளர் நக்கீரன் அவர்கள் காலநிலை மாற்றம் குறித்து விரிவாக பேசினார். இடையில் சமீபத்தில் 'அறிவாளிகள்' என்று வரையறுக்கப்பட்டவர்களை சீண்டி பேசினார். அரங்கத்தில் பலத்த கைத்தட்டல். கடைசியில் ஒரு விமானத்தில் விமானி, அரசியல்வாதி,மாணவன்,ஆசிரியர் ஆகிய நால்வர் இருக்கிறார்கள் ஆனால் மூன்று பாராசூட் தாம் இருக்கிறது என்ற ஆதிகாலத்து ஜோக்கை போட்டார். இருந்தும், அரங்கத்தில் பலத்த கைத்தட்டல். இந்த ஜோக் எவர்க்ரீன் ஜோக்,

Nellai Book Festival - Day 2 | #NellaiBookFestival2020

Nellai Book Festival - Day 2 சண்டே என்பதால் மாலை 6 மணிக்கு மேல் கூட்டம் அதிகமாகவே இருந்தது, புத்தக ஸ்டால்களுக்கு இணையாக ஃபுட் ஸ்டால்களிலும். இன்றைக்கு சித்த மருத்துவர் கு.சிவராமன் சிறப்புரையாற்றுகிறார் என்று அறிந்திருந்ததால் என்னுடைய ஃபோகஸ் முழுவதும்  மேடையின் மீதே இருந்தது. சாகித்ய அகாடமி விருது வென்ற 'வெட்கை' நாவலாசிரியர் பூமணி உட்பட பல எழுத்தாளர்கள் மேடையேற்றப்பட்டு கவுரவிக்கப்பட்டு உரையாற்றினர். தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளனின் பேச்சுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, மேடையில் பேசிய எழுத்தாளர்களிடமிருந்தும் கூட. எழுத்தாளர் ஸ்ரீதரனின் பேச்சு வாட்ஸ் அப் தலைமுறைகளுக்கேற்ற ரத்தினச்சுருக்கம். இளம் எழுத்தாளர் ப்ரதீப் வாசிப்பு முறைகள் பற்றியும் வாசிப்பின் மீதான நேசிப்பு குறித்தும் பேசினார். இளம் வயதில் பல புத்தகங்களை எழுதியிருக்கும் இவர் வியக்கவும் வைத்தார், ஊக்கமும் அளித்தார். பூமணி ஐயா கையில் மைக் சென்றவுடன், இவர்தான் அசுரன் கதையாசிரியர் என்று விவரமறிந்தவர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் காதுகளில் முணுமுணுத்தது பெரும் சத்தமாக கேட்டது. வயது முதி

Nellai Book Festival 2020- Day 1 Experience |

Image
Nellai Book Festival2020 - Day 1 2018 பிப்ரவரிக்கு பிறகு சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து 2020 பிப்ரவரி 1 ஆன இன்றைக்கு தொடங்கியுள்ளது.  கடந்த ஒரு வாரமாக மாவட்ட நிர்வாகம் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் ரிசல்ட்டை இன்று உணரமுடிந்தது. முதல் நாளே புத்தக அரங்குகளிலும், நிகழ்ச்சி மேடைக்கு முன்பும் ஒரு பெருங்கூட்டம் இருந்தது. மே பீ, சனிக்கிழமை சாயங்காலம் என்பதால் கூட கூட்டம் இருந்திருக்கலாம். இருந்தாலும், கடந்தமுறை கடைசி 2 நாளில்தான் இந்த அளவு கூட்டம் இருந்தது இந்த முறை முதல் நாளிலே உற்சாகமான கூட்டத்தை பார்ப்பதில் மகிழ்ச்சி. 2018 ல் நடந்த புத்தகக்கண்காட்சியை விட எல்லா வகையிலும் மேம்பட்ட கட்டமைப்போடு இந்த முறை அரங்கங்கள் அமைத்திருக்கிறார்கள். புத்தக அரங்குகளுக்கு நல்ல இடவசதி, மைதானம் முழுவதும் ஜொலிஜொலிக்கும் மின்விளக்குகள், கார் பார்க்கிங்,  டாய்லெட்டுகள் எல்லாம் ஓகே. புத்தக அரங்குக்கு வெளியே தனியாக ஒரு இடத்தில் 10 நாட்களுக்கு 24 மணி நேரமும் புத்தகம் படிக்கும் சாதனை முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் பெயர் கொடுத்து கொஞ்ச நேரம் உட்கார்ந்து