Posts

Showing posts from November, 2020

எச்சரிக்கும் ஸ்மித்...பொன் முட்டையிடும் ஸ்டாய்னிஸ்..என்ன செய்யப் போகிறது இந்தியா!? #IndVsAus #India #Kohli #Rohit

300 நாட்களுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் இந்திய அணி சிட்னியில் ஆஸிக்கு எதிராக சோபிக்குமா? Ind Vs Aus #Matchpreview ஐ.பி.எல் ஐ முடித்த கையோடு துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பறந்து சென்ற இந்திய அணி நாளை முதல் ஒருநாள் போட்டியை ஆடவிருக்கிறது. கொரோனாவுக்கு பிறகு புத்தியல்பு சூழலில் விளையாட்டு போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட்டதற்கு பின் இந்திய அணி விளையாடப்போகும் முதல் தொடர் இது. கடைசியாக பிப்ரவரியில் நியுசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்தது இந்திய அணி. அதன்பிறகு தென்னாப்பிரிக்காவுடன் நடைபெற வேண்டிய தொடர், லாக்டவுண் காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 300 நாட்களுக்கு பிறகு இந்திய அணி மீண்டும் களத்திற்கு திரும்பியிருக்கிறது. ஆஸ்திரேலிய அணியும் லாக்டவுனுக்கு பிறகு இங்கிலாந்து சம்மரில் ஒரு தொடர் மட்டுமே ஆடியிருக்கிறது. அதன்பிறகு, ஐ.பி.எல் ஐ முடித்துவிட்டு இப்போதுதான் அவர்கள் சொந்தமண்ணில் முதல் தொடரை ஆடவிருக்கிறார்கள். ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுக்குமே இந்த சீரிஸ் ரொம்பவே முக்கியமானதாக இருக்கிறது. உலகக்கோப்பையை நடத்துவதை விட இந்த சீரிஸை நடத்துவதில்தான் ஆஸ

வாழ வைக்கும் சென்னை கொஞ்சம் வாழட்டுமே ப்ளீஸ்! #Nivar #Cyclone #Chennai

வாழவைக்கும் சென்னை கொஞ்சம் வாழட்டுமே ப்ளீஸ்...! 'சிங்கார சென்னை' 'வந்தாரை வாழ வைக்கும் சென்னை' போன்ற அலங்கார மேற்கோள்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. சென்னையை மையமாக வைத்து புல்லட் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா தொற்று 'மீண்டும்' ஒரு பதற்ற நிலையை உண்டாக்கியுள்ளது. மீண்டும் என்ற வார்த்தை யை இங்கே பயன்படுத்த அழுத்தமான காரணங்கள் இருக்கிறது. கடந்த 10 வருடங்களில் எத்தனை முறை சென்னை இதே போன்ற இயற்கையின் கோரதாண்டவத்தின் பிடியில் சிக்கியுள்ளது என்பதை பாருங்கள். புயல், வெள்ளம், மழை, வறட்சி என கிட்டத்தட்ட வருடா வருடம் எதாவது ஒரு பேரிடரில் சிக்கி சின்னாபின்னாமாகி அடுத்த பேரிடருக்கு ரெடியாகி கொண்டிருக்கும். இப்போது ஒரு கிருமி. ஒவ்வொரு முறை இயற்கை சூறையாடி சென்ற பிறகும் இந்த மாநகரத்தில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை அலசி ஆராய்ந்து தீர்வுகளை நோக்கி பயணப்பட முயற்சிக்கிறோமா என்றால் இல்லவே இல்லை. யாரும் கணித்திடமுடியாத இயற்கையின் வினைகளுக்காக ஒரு நகரத்தின் அடிப்படை கட்டமைப்பின் மீது சந்தேகப்பார்வையை செலுத்திட முடியுமா!? செலுத்திதான் ஆக வேண்டு

ஆஸியில் கோலியை கிங் ஆக்கிய அந்த 5 இன்னிங்ஸ்கள்! #Kohli #Australia

ஆஸி மண்ணில் கோலியை கிங் ஆக்கிய டாப்-5 பெர்ஃபார்மென்ஸ்கள்.. வெளிநாட்டு தொடர் என்றாலே இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பதான் செய்வார்கள். ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கும் இந்திய மைதானங்களிலேயே ஆடிவிட்டு வெளிநாட்டு மைதானங்களில் வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க திணறுவர் என்பதுதான் பொதுவான கருத்தாக இருந்தது. ஆனால், இந்திய அணியின் கேப்டன் கோலி இதையெல்லாம் மாற்றி எழுதத்தொடங்கினார். எங்கேயெல்லாம் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறுவார்களோ அங்கேயெல்லாம் அசால்ட்டாக பெர்ஃபார்ம் செய்து வெறித்தனம் காட்டியிருக்கிறார். ஆஸ்திரேலிய மண்ணும் இதற்கு விதிவிலக்கல்ல. டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான காலக்கட்டத்திலிருந்து இதுவரை 12 போட்டிகளை ஆஸி மண்ணில் ஆடி 6 சதங்களை அடித்திருக்கிறார் கோலி. இதில் சில சதங்கள் ஆஸி வீரர்களை மிரட்சியாக்கி உறைய வைத்திருக்கிறது. ஆஸி மண்ணில் கோலியின் டாப்-5 பெர்ஃபார்மென்ஸ்கள் இதோ.. 1. மெய்டன் சென்ச்சூரி: 2011 ம் ஆண்டே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகியிருந்தாலும் கோலியின் முதல் சதம் ஆஸ்திரேலிய மண்ணில் 2012 ம் ஆண்டுதான் பதிவாகியிருக்கிறது. 2011-12 ல் நடைபெற்ற அந்த டெஸ்ட் சீரிஸில்

ஹர்ஷா போக்ளே ஏன் இந்தியாவின் சிறந்த கமெண்டேட்டர் தெரியுமா? #HarshaBhogle #Cricket

'இந்திய கிரிக்கெட்டின் குரல் அவர்' ஹர்ஷா போக்ளே ஏன் இந்தியாவின் சிறந்த கமெண்டேட்டர் தெரியுமா!? உங்களிடம் 'KGF' படம் பற்றி கேட்டால், பெரும்பாலும் முதலில் உங்களுக்கு அந்த படத்தின் நாயகன் யாஷ் நினைவுக்கு வரமாட்டார், அந்த படத்தின் மாஸ் காட்சிகள் நியாபகம் வராது. மாறாக, யாஷ் கேரக்டருக்கு 'காயம்பட்ட சிங்கத்தோடு மூச்சுக்காத்து' என பில்டப் கொடுக்கும் அந்த குரல்தான் முதலில் நியாபகம் வரும். அதேமாதிரிதான் கிரிகெட் கமெண்ட்ரியும், தோனி அடித்த சிக்சர் நியாபகம் வருவதற்கு முன் ரவிசாஸ்திரியின் India lift the worldcup...என்ற அந்த கமெண்ட்ரி குரல்தான் நியாபகம் வரும். விரும்புகிறமோ இல்லையோ...புரிகிறதோ...புரியவில்லையோ..கமெண்ட்ரி இருந்தால்தான் கிரிக்கெட்டுக்கு மதிப்பே. கமெண்ட்ரி மட்டுமே கிரிக்கெட்டை உயிரோட்டத்துடன் ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ரவிசாஸ்திரி தொடங்கி கம்பீர், நெஹ்ரா வரை இந்தியாவின் முண்ணனி வீரர்கள் பலரும் கமெண்ட்ரியில் சிறப்பாக செயல்பட்டாலும் ஒட்டுமொத்தமாக கமெண்ட்ரி என்றால் இந்தியர்களின் காதுக்கு எட்டுவது என்னவோ ஹர்ஷா போக்ளேவின் குரல் மட்டும்தான். 'இந்திய கிரிக்க

Rohit Vs Kohli யார் பெஸ்ட்? ரோஹித் ஏன் இந்திய அணியின் கேப்டன் ஆக வேண்டும் தெரியுமா? #Kohli #Rohit

ரோஹித் Vs கோலி இந்திய டி20 அணிக்கு யார் சிறந்த கேப்டனாக இருக்க முடியும்?, கொரோனாவுக்கு நடுவே புத்தியல்பு நடைமுறைகளுடன் ஐ.பி.எல் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டன. எப்போதும் ஐ.பி.எல் நடக்கும் போது மட்டுமே கோலி, ரோஹித், தோனி என ஒவ்வொரு ஸ்டார் ப்ளேயர்களின் ரசிகர்களும் குடுமிப்பிடி சண்டை போட்டுக்கொண்டிருப்பர். மற்ற நேரங்களில் ஜனகனமண என இந்தியாவுக்கு சப்போர்ட் செய்ய ஊதா ஜெர்சியோடு ஒன்றாகிவிடுவார்கள். ஆனால், இந்த முறை இந்திய அணி வீரர்கள் ஐ.பி.எல் ஐ முடித்துவிட்டு ஆஸ்திரேலிய மண்ணில் காலடி எடுத்த வைத்துவிட்ட பிறகும் ஒரு முக்கியமான சண்டை இணையதளங்களில் வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது. கோலி VS ரோஹித் யார் சிறந்த கேப்டன்? ஒயிட் பால் ஃபார்மட்டுக்கு கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு ரோஹித்தை கேப்டனாக்கலாமே? இவைதான் இந்த சண்டையின் அடிப்படை சாராம்சம். ரசிகர்கள் அடிக்கடி இப்படி சண்டையிட்டு கொள்வது வழக்கம்தான் என்றாலும் இந்த முறை ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டன் ஆவதற்கு ஆதரவாக பல முன்னாள் வீரர்களும் குரல் கொடுத்திருக்கின்றன. 'ரோஹித்தை ஒயிட் பால் கிரிக்கெட்டுக்கு கேப்டனாக்காவிடி

நம்பிக்கை கால் கிலோ.....இளமை கால் கிலோ...அனுபவம் கால் கிலோ மும்பையின் வெற்றி ரகசியம் #MumbaiIndians #IPL2020

நம்பிக்கை கால் கிலோ.....இளமை கால் கிலோ...அனுபவம் கால் கிலோ மும்பையின் வெற்றி ரகசியம்! தோனி கூறிய 'Definitely not' 'நிச்சயமாக இல்லை' என்கிற சொற்றொடரை வைத்து 'Cricbuzz' இணையதளத்தில் இந்த ஐ.பி.எல் சீசன் குறித்து அருமையான ஒரு முடிவுரை எழுதப்பட்டிருந்தது. அதேமாதிரி நாமும் மும்பை அணிக்கு ஒன்று எழுதுவோம், துபாய் என்றாலே மும்பைக்கு தோல்விதானே? MI: 'Definitely not' Even Year ல் நீங்கள் கப் அடிக்க மாட்டீர்களே? MI: 'Definitely not' சென்னையை தவிர எந்த அணியும் கோப்பையை தக்க வைத்ததில்லையே...இனிமேலும் அந்த சாதனையை செய்வது ரொம்பே கடினம் MI: 'Definitely not' இப்படி எதிர்கேள்விகளும் 'எங்களால் முடியும் ஓரமாக நின்னு வேடிக்கை மட்டும் பாருங்க' என்பது போல 5வது முறையாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை சூட்டிக்கொண்டுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. மும்பை இந்தியன்ஸை பார்க்கும் போது கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்கள் அத்தனை பேரும் நியாயபகத்துக்கு வருகிறார்கள். ஒரு லாரி அடியாட்களை இறக்கினாலும், அயன் செய்த சட்டை கசங்காமல் அடித்து நொறுக்கி அதே லாரியில் பார்

உலகம் மீண்டும் இயங்குவதற்கான அத்தனை நம்பிக்கையையும் ஸ்போர்ட்ஸ் மட்டுமே கொடுக்கிறது! #ThankYouIPL

  உலகம் மீண்டும் இயங்குவதற்கான அத்தனை நம்பிக்கையையும் ஸ்போர்ட்ஸ் மட்டுமே கொடுக்கிறது!  #ThankYouIPL ஸ்போர்ட்ஸால் என்ன செய்ய முடியும்? தோல்வியை ரசிக்க செய்ய முடியும். அடக்குமுறைகளுக்கு எதிராக ஒடுக்கப்பட்டவர்களின் குரலை ஓங்கி ஒலிக்க செய்ய முடியும். பிரிவினைவாத அரசியலுக்கு எதிராக வேற்றுமைகளை கடந்து ஒன்றிணைய செய்ய முடியும். கருப்பினத்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக ஓங்கிய ஒவ்வொரு விளையாட்டு வீரனின் கைகளும், பாகிஸ்தான் வீரர்களின் ஆட்டத்திற்காக ஸ்டாண்டிங் ஓவியேசன் கொடுக்கும் இந்திய ரசிகனின் மனமுமே இதற்கு சான்று. வரலாறு நெடுகிலும் பற்றி பரவியிருந்த அடக்குமுறைகள், பிரிவினைவாதங்கள் போன்ற கொடூர நோய்களுக்கு முதல் தடுப்பூசியாக ஸ்போர்ட்ஸ் மட்டுமே இருந்திருக்கிறது. ஆனால், இப்போது நுண் கிருமியின் விளைவாக உலகம் எதிர்கொண்டிருக்கும் ஆபத்து நூற்றாண்டு காணாதது. அரசியல்...அதிகாரம்..பணபலம்.. அறிவியல்...மருத்துவம் என அத்தனையும் கையறு நிலையில் கொரோனா வைரஸ் முன்பு ஏறக்குறைய மண்டியிட்டுவிட்டது. ஒலிம்பிக் முதலான முக்கிய போட்டிகளே கொரோனா அச்சத்தினால் தள்ளிப்போனதை பார்க்கும் போது, எப்போதும் இதே மாதிரியான