நம்பிக்கை கால் கிலோ.....இளமை கால் கிலோ...அனுபவம் கால் கிலோ மும்பையின் வெற்றி ரகசியம் #MumbaiIndians #IPL2020

நம்பிக்கை கால் கிலோ.....இளமை கால் கிலோ...அனுபவம் கால் கிலோ மும்பையின் வெற்றி ரகசியம்! தோனி கூறிய 'Definitely not' 'நிச்சயமாக இல்லை' என்கிற சொற்றொடரை வைத்து 'Cricbuzz' இணையதளத்தில் இந்த ஐ.பி.எல் சீசன் குறித்து அருமையான ஒரு முடிவுரை எழுதப்பட்டிருந்தது. அதேமாதிரி நாமும் மும்பை அணிக்கு ஒன்று எழுதுவோம், துபாய் என்றாலே மும்பைக்கு தோல்விதானே? MI: 'Definitely not' Even Year ல் நீங்கள் கப் அடிக்க மாட்டீர்களே? MI: 'Definitely not' சென்னையை தவிர எந்த அணியும் கோப்பையை தக்க வைத்ததில்லையே...இனிமேலும் அந்த சாதனையை செய்வது ரொம்பே கடினம் MI: 'Definitely not' இப்படி எதிர்கேள்விகளும் 'எங்களால் முடியும் ஓரமாக நின்னு வேடிக்கை மட்டும் பாருங்க' என்பது போல 5வது முறையாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை சூட்டிக்கொண்டுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. மும்பை இந்தியன்ஸை பார்க்கும் போது கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்கள் அத்தனை பேரும் நியாயபகத்துக்கு வருகிறார்கள். ஒரு லாரி அடியாட்களை இறக்கினாலும், அயன் செய்த சட்டை கசங்காமல் அடித்து நொறுக்கி அதே லாரியில் பார்சல் போட்டு வில்லன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் மரண மாஸ் ஹீரோவாக தெரிகிறது மும்பை இந்தியன்ஸ். ஆனால், அந்த ஹீரோக்களாவது ஒப்புக்காவது மெயின் வில்லனிடம் இரண்டு அடி வாங்குவார்கள். மும்பை இந்தியன்ஸ் எங்கேயும் யாரிடமும் அடிவாங்கியது போல தெரியவில்லை. அவர்கள் டி20க்கான ஒரு பெஞ்ச் மார்க்கை செட் செய்துவிட்டார்கள். அந்த பெஞ்ச்மார்க்கை முதலில் எந்த அணியாவது அடைந்து முன்னேறி வரட்டும் அதன்பிறகு அவர்களோடு முட்டி மோதி சண்டை போட்டுக்கொள்ளலாம். அதுவரை அவர்களுக்கு இங்கே இருக்கும் அணிகள் யாவும் துக்கடாக்கள் போலத்தான் தெரியும். 'எந்த கேஸா இருந்தாலும் இப்டி போய் அப்டி வந்துரலாம் சார்' ரேஞ்சில் லெஃப்ட் ஹேண்டில்தான் டீல் செய்கிறார்கள். நேற்றைய இறுதிப்போட்டியும் டெல்லியை அப்படி மும்பை இந்தியன்ஸ் லெஃப்ட் ஹேண்டில்தான் டீல் செய்தது. ஆம், இன்னிங்ஸின் முதல் பந்தையே 'லெஃப்ட் ஆர்மர்' போல்ட் சுபமாக ஆரம்பித்து வைத்தார். அந்த பந்தை இன்ஸ்விங்கா-அவுட்ஸ்விங்கா என சரியாக கணிப்பவர்களுக்கு கோடி ரூபாய் பரிசுத்திட்டத்தை அறிவிக்கலாம். 15 விக்கெட் எடுத்த அணியின் மெயின் ஸ்பின் பௌலரை ட்ராப் செய்துவிட்டு, அதிகம் ஆடாத ஆஃப் ஸ்பின்னர் ஜெயந்த் யாதவை அணிக்குள் கொண்டு வந்திருந்தார் ரோஹித். 'டெல்லியில் அதிகம் லெஃப்ட் ஹேண்டர்கள் இருப்பதால் இந்த முடிவு' என ரோஹித் காரணம் கூறினார். ஆனால், இதற்கு முன் தகுதிச்சுற்று உட்பட மூன்று முறை இதே சீசனில் டெல்லியை சந்தித்திருக்கிறது மும்பை. அப்போதும் டெல்லியில் இதே இடக்கை பேட்ஸ்மேன்கள்தான் இருந்தனர். அப்போது ஜெயந்த் யாதவ் பெஞ்சில்தான் உட்காந்திருந்தார். இன்னும் அதே பழைய மேட்ச் அப்களை வைத்துக்கொண்டு ரோஹித் இப்படி ஏன் முடிவெடுத்தார்? நரைனை ஆஃப் ஸ்பின் போட்டு வீழ்த்தமுடியாமல் அஸ்வினே லெக் ஸ்பின் போட்ட சீசனில் இப்படி ஒரு முடிவா? என அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யமாகத்தான் இருந்திருக்கும். கனா படத்தில் கோச் நெல்சன் திலீப் குமார் சொல்வது போல 'கௌசல்யாவ ஒதுக்கி வைக்கல..பதுக்கி வச்சிருந்தேன்' என்பது போன்ற மூவ் ஆகத்தான் இது அமைந்தது. ரோஹித்தின் திட்டம் சரியென நிரூபிக்க ஜெயந்த் யாதவ்க்கு 3 பந்துகளே போதுமானதாக இருந்தது. தான் வீசிய 3 வது பந்தில் லெஃப்ட் ஹேண்டர் தவாணை க்ளீன் போல்டாக்கிவிட்டார். 16 வது ஓவரில் அடித்து துவம்சம் செய்வதற்கென்றே உள்ளே வந்த ஹெட்மயரை திறம்பட சமாளித்தார். ஜெயந்த் யாதவ் விஷயத்தில் கேப்டன் ரோஹித் எடுத்த தீர்க்கமான முடிவும் அவர் மீது வைத்த முழு நம்பிக்கையும்தான் ஒட்டுமொத்த அணியை ரோஹித் எப்படி கட்டமைத்திருக்கிறார் என்பதற்கான உதாரணம். எப்படி லெஃப்ட் ஹேண்டர்களுக்கு நீதான் பொறுப்பு என ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள ஜெயந்த் யாதவ் கையில் பந்தை கொடுத்தாரோ அதேமாதிரிதான் அணியின் மற்ற வீரர்கள் கையிலும் அவரவர்களுக்கான பொறுப்பை முழுமையாக நம்பி ஒப்படைத்தார். பவர்ப்ளேயில் அடித்து துவம்சம் செய்ய வேண்டியது டீகாக் கின் பொறுப்பு. மிடில் ஓவர்கள் முழுவதும் சூரியக்குமார் யாதவ்-இஷன் கிஷனின் பொறுப்பு. ஃபினிஷிங் முழுவதும் பொல்லார்ட் மற்றும் ஹர்திக்கின் பொறுப்பு. பவர்ப்ளேன்னா போல்ட்டு...டெத்னா பும்ரா..என இவ்வளவு தெளிவான திட்டமிடலும் அதை செயல்படுத்திய விதமும் வேறு எந்த அணியிடமும் அமையாதது. உன்னிப்பாக கவனித்து பார்த்தால் கடைசி 4 இடங்களில் இருக்கும் அணிகளுக்கு இதுதான் பிரச்சனையாக இருந்திருக்கும். யார் எந்த ரோலில் ஆடப்போகிறார்? பேட்டிங் ஆர்டர் எப்படி இருக்கப்போகிறது? இந்த இரண்டு கேள்விகள்தான் CSK, RR, KXIP, KKR போன்ற அணிகளை பஞ்சராக்கியது. மேலே குறிப்பிட்டதை போல இந்த இரண்டு கேள்விகளுக்கும் மும்பையிடம் எப்போதுமே எந்த தடுமாறலும் இருந்திருக்காது. காயங்கள் மற்றும் சூழ்நிலை காரணமாக தடுமாற்றங்கள் ஏற்பட்டாலும், கச்சாமுச்சாவென குழப்பாமல் அதற்கென சரியான பேக் அப் ப்ளேயர்கள் அணிக்குள் வந்தனர். பேட்ஸ்மேன் யாருக்காவது காயமா? உடனே சவுரப் திவாரி மட்டும்தான் வருவார். லின் சும்மா உட்காந்திருக்கிறாரே ஏதாவது மாற்றம் செய்து அவரை உள்ளே கொண்டு வந்து பார்ப்போம் என்கிற பேச்சுக்கெல்லாம் இடமில்லை. ஃபீல்டிங்கிற்கு கூட சப்ஜுட் வீரராக அனுகுல் ராய் தான் முதல் ஆப்சனாக உள்ளே வருவார். அந்தளவுக்கு பேக் அப் வீரர்களுக்கும் சேர்த்து சரியான திட்டமிடல் இருக்கும். இதுதான் ப்ளேயிங் லெவன் என்பதில் ரோஹித் தீர்க்கமாக இருந்தார். அவர் முடிவை மறுபரிசீலனை செய்ய வைக்கும் வகையில் வீரர்களும் சொதப்ப மாட்டார்கள். இந்த சீசனிலேயே குறைவான வீரர்களை ப்ளேயிங் லெவனுக்கு பயன்படுத்திய அணி மும்பையாகத்தான் இருக்கும். ஆனாலும், சில அணிகளை போல பெஞ்சில் உட்காந்திருக்கும் வீரரை கடைசி வரை பெஞ்சிலேயே உட்காரவைத்த் வழியனுப்பிவிடாமல் அணிக்குள் அவர்களுக்கான தேவை ஏற்படும்போது அனுபவமான வீரரா இளம் வீரரா என்பதையெல்லாம் பார்க்காமல் திறனுடைய வீரரா என்பதை மட்டும் பார்த்து அணிக்குள் எடுத்துக்கொள்வார்கள். யாருக்கு தெரியும்..அடுத்த வருடம் அனுகுல் ராய் கூட மும்பைக்காக ஒரு மேட்ச் வின்னராக உருவெடுக்கலாம். மும்பை அணியில் மட்டுமே அப்படியொரு அசாத்தியமான சாத்தியம் இருக்கிறது. இன்றைக்கு அணியில் இருக்கும் வீரர்களை முழுமையாக நம்ப வேண்டும், நாளைக்காக தொடர்ந்து புதிய வீரர்களை அறிமுகப்படுத்தி அப்டேட் ஆகிக்கொண்டே இருக்க வேண்டும். பாய்ஸ் படத்தில்.. சேர்த்துக்கோ லக்கு கால் கிலோ.. டேலண்ட் கால் கிலோ.. பக்தி கால் கிலோ... ...... இவைதானே வெற்றியின் ரகசியம் என வாலியின் வரிகளில் ஒரு பாடல் இடம்பெற்றிருக்கும். மும்பையின் வெற்றி ரகசியத்திற்கு இதேமாதிரி ஒரு பாடல் எழுதினால்.. சேர்த்துக்கோ அனுபவம் கால் கிலோ.. இளமை கால் கிலோ.. கேப்டன்சி கால் கிலோ.. நம்பிக்கை கால் கிலோ.. இவைதானே மும்பையின் வெற்றி ரகசியம்!! #Mi isn’t just the best team in the #IPL, they’re the best team on the planet என ஆகாஷ் சோப்ரா ஒரு ட்வீட்டிருந்தார். உண்மைதான்! Continue your legacy! Congratulations Paltans!!! - Vj Sriram

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.... தடுமாறும் இந்தியா... மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?! #WTCFinals #Day3

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்