Posts

Showing posts from May, 2020

என்ன செய்தார் மோடி !? #1YrofModi2.0

என்ன செய்தார் மோடி!? நான்கு ஆண்டு ஆட்சிக்கு பிறகு 'இந்தியா ஒளிர்கிறது' என பிரச்சாரம் செய்த வாஜ்பாய்க்கு மீண்டும் கிடைக்காத வாய்ப்பு, 'சௌகிதார்' - நாட்டை பாதுகாக்க வந்த காவலனே நான் தான் என கூறிய போது மோடிக்கு கிடைத்தது. வாஜ்பாய்-அத்வானி காலத்தில் அமைந்த மூன்று அரசும் கூட்டணி குருமாக்கள். குறைந்தபட்ச செயல்திட்டத்தால் கையை கட்டிக்கொண்டு அமைதியாக ஆட்சியில் இருக்க வேண்டிய நிலை. காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி ஆட்சியை பிடித்து நின்றுவிட்டது என்பது மட்டுமே பெருமை. மோடி-அமித்ஷா காலம் வித்தியாசமானது. வியாபாரிகளின் பூமியான  குஜராத்தில் இருந்து புறப்பட்ட மோடி ப்ராண்ட் இந்தியா முழுவதும் கல்லா கட்டியது. (அதே குஜராத் மாடலை இன்றைக்கு கொரோனா நேரத்தில், நீதிமன்றங்கள் சாட்டையடி கேள்விகளால் வெளுத்து வாங்கிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.) வளர்ச்சி அரசியலை முன் வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் நாள் தான் இந்தியாவுக்கான 'அட்சே தின்' என மோடி எடுத்துக்காட்டிய குஜராத் மாடலை நம்பி 10வருடங்களுக்கு பிறகு மீண்டும் தாமரையை மலரச்செய்தனர் மக்கள். முழு மெஜாரிட்டியை நெருங்கிய பிரம்மாண்ட வெற்றி. இந

காந்தி கணக்கு தேவை நமக்கு !

சூப்பர் ஹீரோ காந்தி ! உலக பொருளாதரம் மட்டுமில்லை குடும்ப பொருளாதாரத்தையும் சேர்த்தே கபளீகரம் செய்திருக்கிறது கொரோனா. கொரோனா வுக்கு பிந்தைய மக்களின் இயல்பு வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை யாராலும் அறுதியிட்டு சொல்ல முடியவில்லை. ரெஸ்யூம் பட்டனை தட்டுவது போல் விட்ட இடத்திலிருந்தே எல்லோரின் இயல்பு வாழ்க்கையும் தொடங்கிவிடுமா அல்லது இந்த தொற்றின் தாக்கம் மக்களை வேறு விதமான புதிய இயல்புக்கு பழக்கிவிடுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இந்த புதுவிதமான இயல்பு என்பதை பற்றி பேசும்போது 'மினிமலிசம்' என்ற வார்த்தை பொருளாதார வல்லுநர்கள் உட்பட பலராலும் முன்வைக்கப்படுகிறது. கொரோனா காலத்தில் அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து பிற பொருட்கள் வாங்குவதை மக்கள் அடியோடு குறைத்துவிட்டனர். வாங்க நினைத்தாலும் அதற்கான வழிகளை இந்த லாக்டவுண் தடுத்துவிட்டது. மக்களுக்கும் அத்தியாவசிய பொருள்களை தாண்டி மற்ற ஆடம்பர பொருள்கள் கிடைக்காமல் இருப்பதால் வருத்தப்படுவதாக தெரியவில்லை. இந்த இடம்தான் மக்கள் தெரிந்தோ தெரியாமலோ மினிமலிஸ்ட் களாக வாழத்தொடங்கியிருக்கும் இடம். இந்த பழக்கம் அப்படியே தொடரும்பட்சத்தில் லாக்டவுனுக

I will make it One day ! - ஆச்சர்யங்கள் சூழ் அஜித்குமார் #BirthdaySpecial #AjithKumar #HBDDearestThalaAjith

'ஐ வில் மேக் இட் ஒன் டே' ஆச்சர்யங்கள் சூழ் அஜித் ! - ஒரு விஜய் ரசிகரின் பிறந்தநாள் வாழ்த்து... அஜித்தின் விவேகம் படம் ரிலீசான அன்று அஜித் ரசிகர்களை விட விஜய் ரசிகர்கள் செம ஹாப்பி. காரணம், முதல் ஷோ முடிந்தவுடனே படம் கொஞ்சம் சுமார்தான் என்ற டாக் பரவ ஆரம்பித்திருந்தது. போதாக்குறைக்கு விஜய் ரசிகர்களுக்கு கண்டெண்ட் கொடுக்கும் வகையில் படம் முழுவதும் பல மீம் மெட்டீரியல்கள் வேறு நிரம்பியிருந்தது. புலி படத்திற்கு அஜித் ரசிகர்கள் அடித்த அடியில் நொந்து நூடுல்ஸாகியிருந்தவர்கள், ஒட்டுமொத்த வென்ஜென்ஸையும் விவேகம் படத்தின் மீது இறக்கினார்கள். அப்படி விவேகத்தை மீம் போட்டு ஓட்டிய வெறித்தனமான விஜய் ரசிகர்களில் நானும் ஒருவன். துப்பாக்கி பட க்ளைமாக்ஸில் சத்யன், ஆர்மி குறித்து விஜய்யிடம் எமோஷனலாக பேசும் டெம்ப்ளேட்டை எடுத்து அதில், 2 வருசம் கழிச்சு ரிலீஸ் ஆன விவேகமும் ஃப்ளாப்பு.. இன்னும் 2 வருசத்துக்கு எந்த படமும் ஏன் ஒரு அப்டேட் கூட வர போறதில்ல.. அடுத்த படம் வர வரைக்கும் இந்த விவேகத்த நினைச்சுக்கிட்டே வாழனும்ல... உண்மையிலேயே அஜித் ரசிகர்கள் க்ரேட்தான்... இப்படியொரு மீம் போட்டு அஜித்