Posts

Showing posts from December, 2019

'ஆணியே புடுங்க வேண்டாம்'- நியு இயர் ரெசலியுசன் பரிதாபங்கள் | #NewYear #2020 #Resolution

தமிழ் சினிமாவுல இருக்குற அத்தனை நரம்பு புடைக்கிற 'மோட்டிவேஷன்' சாங்கையும் 31 ம் தேதியே முழுசா கேட்டுட்டு முறுக்கேறி போய் முரட்டுத்தனமா ரெசலியுசன் எடுக்க தயாராகிக்கொண்டிருக்கும் நம்ம வீட்டுப்  'புள்ளிங்கோ'க்களுக்கான அட்வைஸ் ஊட்டும் பதிவுதான் இது. நானும் நீங்களும் மட்டும் இல்லப்பா, உலகில் உள்ள 700 கோடிக்கும் அதிகமான மக்களில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் புத்தாண்டு அன்று ரெசலியுசன் எடுப்பதாகவும், இதில் பாதி பேர்தான் ஒருசில மாதமாவது எடுத்த ரெசலியுசனை உருப்படியாக கடைபிடிப்பதாகவும் ஒரு சர்வே சொல்லுது. எந்த சர்வே? எந்த கம்பெனி எடுத்தாங்க? எத்தன நாட்டுல எடுத்தாங்கன்னு? கேள்வியெல்லாம் கேட்டா, எப்பா தம்பி....போன வருசம் நீ என்ன ரெசலியுசன் எடுத்தன்னு ஞாபகம் இருந்தா சொல்லு பாப்போம்?? ன்னு பதில் கேள்வி கேட்கப்படும்.😜 இன்னைக்கு 28 ம் தேதி இன்னைக்கே முக்கால்வாசி பேரு கூகுல் லயும் யுடியுப் லயும் ஹவ் டூ ஃபாலோ ரெசலியுசன் ரெகுலர்லி ன்னு சர்ச் பன்ன ஆரம்பிச்சிருப்பீங்க, நீங்க தேடுவீங்கன்னு தெரிஞ்சே நானும் தேடிப்பார்த்தப்போ என் கையில் சிக்குன ஒரு டையலாக்க இங்க சொருகிருக்கேன்..

தண்டனைக்கு முன் இறந்துவிட்டாலும் இறந்த உடலை மூன்று நாட்கள் தூக்கிலிடுங்கள்..! | முஷரஃப் எனும் சர்வாதிகாரி வீழ்ந்த கதை | #Pakistan #Musharaff

Image
ஒரு சர்வாதிகாரி வீழ்ந்த கதை..! "இந்த உலகம் யாருடைய ஏகபோகத்தின் கீழும் அடங்காது, என்பதை நீங்கள் அறியாமல் இருப்பது வியப்பாக உள்ளது. நீங்கள் பின்பற்றும் வழியிலேயே வளர்ந்து நீங்கள் பயன்படுத்திய ஆயுதத்தை கொண்டே யாரோ ஒருவர் உங்களை தாக்கலாம். அப்போது உங்கள் மக்கள் பெருமைபடும் வகையிலான எந்த மரபையும் நீங்கள் விட்டு சென்றிருக்கமாட்டீர்கள்" 1940 ம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் தொடக்கக்காலத்தில், சர்வாதிகாரியான ஹிட்லருக்கு காந்தியடிகள் எழுதிய கடிதத்தில் இடம்பெற்றிருந்த வரிகள் இவை. சர்வாதிகாரம் குறித்த காந்தியின் பார்வைக்கு நிகழ்கால உதாரணமாகியுள்ளார் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரஃப். முஷரஃப் மீதான தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தானின் பெஷாவர் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதிகள் அவருக்கு மிகக்கடுமையான தூக்குத்தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளனர். பாகிஸ்தானின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த முன்னாள் நபர் ஒருவருக்கு முதல்முறையாக தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முஷரஃப் தூக்குதண்டனை பெறும் அளவுக்கு என்ன குற்றம் செய்தார்? இராணுவத்தளபதி முஷரஃப் முதல

எட்டு பதில் எவிட்டாக்களும்; எனர்ஜியூட்டும் சாக்லெட்டுகளும்...! | ரஃப் நோட் தாட்ஸ் - 1 | #RoughNote #Hero

Image
ரஃப் நோட் தாட்ஸ்-1 எட்டு பதில் எவிட்டாக்களும்; எனர்ஜியூட்டும் சாக்லெட்களும்...! சின்ன வயதில் நமக்கு நிகழ்ந்த அல்லது நம்மால் நிகழ்ந்த பல விஷயங்களும் இப்போது நினைத்துப் பார்த்தாலும் மெல்லிய புன்னகையை பரிசாக அளிக்கும். அதிலும் பள்ளிப்பருவத்தில் இந்த ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரையான காலக்கட்டம் என்பது, இத்தகைய மெல்லிய புன்னகைக்கு 100% கேரண்டியான காலக்கட்டம். இந்த மாணவப் பருவத்தில் ஒருவருக்கு நடக்கும் சிறு விஷயத்தைக் கூட பின் நாட்களில்  நினைத்து நினைத்து ரசிக்கலாம். அப்படி நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது நடந்த ஒரு சிறு சம்பவத்தை தான் இங்கே குறிப்பிடப்போகிறேன் இறுதியில் சில அழுத்தமான கேள்விகளோடு... முந்தைய நாள் டீச்சர் படித்துவிட்டு வர சொன்ன வாய்ப்பாடை அன்றைய நாள் காலையில் வகுப்பு தொடங்குவதற்கு முன்பாக 'ஓர்  எட்டு எட்டு...,ஈர் எட்டு பதினாறு...' என நெஞ்சிலடித்துக்கொண்டு  மனப்பாடம் செய்துகொண்டிருந்தோம். 9:15 மணிக்கு பெல் அடித்து இறைவணக்க பாடல் ஒலிக்க தொடங்கியது. எப்போதும் ஸ்பீக்கரில் ஒலிக்கும் இறைவணக்க பாடலோடு சேர்ந்து கோரஸாக பாடும் எங்கள் வகுப்பின் 45 மாணவர

ஹாலிவுட் டெம்ப்ளேட்டை உடைத்த கோலிவுட் சூப்பர் 'ஹீரோ' - #Hero My views #HeroReview #Sivakarthikeyan #Arjun #Mithran

Image
#ஹீரோ சூப்பரான சூப்பர் ஹீரோ படம் ! தரமான கதையும் கதைக்கேற்ற ஹீரோயிசமும் சேர்ந்தால் தமிழ் சினிமாவும் சூப்பர் ஹீரோ படங்கள் மூலம் அதிசயம் அற்புதம் நிகழ்த்த முடியும் என்பதை இந்த 'ஹீரோ' நிரூபணமாக்கியுள்ளது. சூப்பர் ஹீரோ படம் என்று முடிவாகி 'ஹீரோ' என்று டைட்டில் வைத்தவுடன் இனிமேல் எதற்கு லாஜிக் எல்லாம் பார்த்துக்கொண்டு உலகத்தை அழிக்க வரும் வில்லன் கும்பலை 'அப்பார்ட்மெண்ட்' ல் இருந்து 'அண்டர் கிரவுண்ட்' வரை பாய்ந்து பறந்து பாடாய்படுத்தி ஐந்து - ஆறு பார்ட்டுகளுக்கு பிறகு அழித்துவிட்டு, அடுத்த பார்ட் க்கு லீட் கொடுக்கும் ஹாலிவுட் பட டெம்ப்ளேட்டை கையில் எடுக்காமல், வால்த்தனமாக சுற்றித்திரியும் 'சுட்டி' குழந்தைகளை சொன்னதை செய்யும் 'சிட்டி' ரோபோவாக மாற்றும் கிளிப்பிள்ளைதனமான கல்விமுறை யின் பிரச்சனைகளை கையிலெடுத்த இயக்குனருக்கு முதல் வாழ்த்தும்...நன்றியும்...! போகிற போக்கில் பேச வேண்டுமே என்பதற்காக மெசேஜ் பேசும் படங்களுக்கு மத்தியில் இவ்வளவு டீடெயிலிங் களோடு 'கல்வி முறை' பற்றி களமாடியிருக்கும் 'ஹீரோ' விழிகளை விரியவைக்கிறது

வருது...வருது..! விலகு...விலகு..! - உள்ளாட்சித் தேர்தலில் நழுவும் கமல்-ரஜினி | #SuperStarRajinikanth #KamalHasan #LocalBodyElections

Image
அஸ்திவாரம் இன்றி கட்டிடம் எழுப்பும் ரஜினி-கமல் ? 'வரும் ஆனா வராது' என்ற நிலையில் இருந்த உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ஒரு வழியாக வெளியாகிவிட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியான சூட்டோடு ஆழ்வார்பேட்டை மற்றும் போயஸ்கார்டனில் இருந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியுமில்லை யாருக்கும் ஆதரவுமில்லை என்ற அறிக்கைகள் வெளியாகியுள்ளது. வெற்றிடத்தை நிரப்பப்போகும் மாற்று நாங்கள்தான் என தொடங்கப்பட்டு  ஆரம்பநிலையில் உள்ள கமலஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இன்னும் கட்சியாக தொடங்கப்படாத ரஜினி மக்கள் மன்றமும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்திருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழத்தை பொறுத்தவரை  15 மாநகராட்சிகள், 152 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 12,524 கிராம ஊராட்சிகள் மற்றும் இவற்றை உள்ளடக்கிய 160000 க்கும் அதிகமான உள்ளாட்சி பதவிகள்  என பரந்துபட்ட உள்ளாட்சி அமைப்பை கொண்டது. உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஒரு லட்சத்திற்கும் அதிமான பதவிகளுக்கு வேட்பாளரை நிறுத்திவிட்டாலே ஒரு கட்சி தமிழகம் முழுவதும் கிளை பரப்பி வலுவாக உள்ளது என்பதை புரிந்துகொள்ளலாம். 2001 இல் நடிகர் விஜயகாந்த் கட்சி தொடங்குவதற்கு முன்

2021 ல் அதிசயம்..!அற்புதம்...! நிகழுமா? - ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெசல் ! #HBDSuperStarRajiniKanth #Rajini #SuperStar

Image
கலைஞர் சொன்ன அந்த அரசியல் சூடு ! ஜெயலலிதா, ஸ்டாலினுக்கு கிடைத்த அந்த  Boom ! டிடிவி க்கு கிடைத்த அந்த பரபரப்பு ரஜினிக்கும் கிடைக்குமா? ரஜினியின் இந்த 70வது பிறந்தநாளில் அவரின் சினிமா காலக்கோடை அனைவரும் சிலாகித்து கொண்டிருக்க அவரின் அரசியல் குறித்து பேசுவோமே என்பதற்காகத்தான் இந்த பதிவு. ரஜினி சொன்ன "அற்புதம், அதிசயம்" ஆகியவற்றிற்கு தமிழக அரசியலில் இதற்கு முன்னர் பல உதாரணங்கள் உள்ளன. 1989 நாடாளுமன்ற தேர்தலில் கலைஞர் சொன்ன அந்த 'சூடு' தொடங்கி டிடிவி யின் ஆர்.கே.நகர் வெற்றி முதல்  நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலினின் அசுரத்தனமான  வெற்றி வரை தமிழக அரசிலும்  தேசிய அரசியலும்  பல அதிசய அற்புதங்களை சந்தித்துள்ளன.  ஆனால் இதையெல்லாம் அதிசயம், அற்புதம் என்ற ரஜினியின் வார்த்தைகளில் பதிவு செய்யாமல் ஒரு பரபரப்பு,  ஒரு Momentum, ஒரு Boom ( தமிழில்; சராசரியான வேகத்திலிருந்து பெரும் உந்துதலுக்கு உள்ளாகி வேகமெடுத்தல் என்ற வகையில் புரிந்து கொள்ளுங்கள்) என்ற வேறு வார்த்தைகளில் பதிவு செய்துள்ளனர். 80களின் கடைசிகாலட்டம் அது. 1989 ம் ஆண்டு நவம்பர் மாதம் 9 வது நாடாளுமன்ற தேர்தல் முடிவு

அரசு நிறுவனங்கள் விற்பனைக்கு ! - யாருக்கு லாபமளிக்கும் இந்த நடவடிக்கை? #Privatisation #CentralGovernment #Modi #BJP

Image
தனியார்மயபடுத்துதல் யாருக்கு லாபம்? ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம், இந்திய சரக்கு பெட்டக கழகம் உட்பட ஐந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயபடுத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 2014 ம் ஆண்டு பிஜே அரசு ஆட்சியமைத்ததிலிருந்து இதுவரையில் 2017 - 2018 ம் ஆண்டில் அதிகபட்சமாக 1,00,642 கோடி மதிப்பிற்கு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்தியுள்ளது. 2019-2020 காலக்கட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து ஐயாயிரம் கோடி ரூபாயை தனியார்மயப்படுத்துவதற்கான இலக்காக நிர்ணையித்துள்ளது மத்திய அரசு. பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் சமூக நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படு அதன் பலன் கடைக்கோடி சாமானியனையும் சென்றடைந்து பொருளாதார வளர்ச்சிக்கு துணையாக நிற்கின்றன.நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் விற்பதென்றால் கூட சரி ஆனால் லாபத்தில் இயங்கும் நிறுவனங்களையும் தனியாருக்கு கைமாற்றிவிடுவதற்கான காரணம் என்ன? என பல தரப்பிலிருந்தும் விமர்சன கணைகள் மத்திய அரசை நோக்கி பாய்ந்து வருகின்றன. இது தொடர்பாக சிலரிடம் பேசினோம், "இந்தியாவில் உள்ள 280 பொதுத்துறை நிறுவனங்களும

இனி ரேஷனில் அரிசி பருப்பெல்லாம் கிடைக்குமா? - ஒரே நேஷன் ஒரே ரேஷன் யாருக்கு லாபம்? #OneNationOneRation

Image
'ஒரே நேஷன் ஒரே ரேஷன்' மத்திய அரசின் 'ஒரே' வரிசை திட்டங்களில் அடுத்ததாக இணனைந்திருக்கிறது 'ஒரே நாடு ஒரே ரேஷன்' என்ற திட்டம். இத்திட்டத்தின் படி ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் எனவும் இதனால் பணிநிமித்தமாக இடம்பெயர்பவர்கள் பெரிய அளவில் பயனடைவர் எனவும் கூறப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா, மகாராஷ்ட்ரா,ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் ஆகிய 8 மாநிலங்கள் முதல் கட்டமாக இத்திட்டத்தில் இணைந்துள்ளன. 2020 மார்ச் மாதத்திற்குள் இன்னும் 16 மாநிலங்களிலும் அதன்பிறகு ஜீன் 2020 க்குள் இந்தியா முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என மத்தியமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏறக்குறைய 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இவை அனைத்தும் ஸ்மார்ட் அட்டைகளாக மாற்றப்பட்டு கணினியில் இணைக்கப்பட்டவை.இந்த அட்டைகள் 5 வகைகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்தின் நிலைக்கேற்ப பொருள்கள் வழங்கப்படுகிறது. மிகவும் வசதிபடைத்த சில லட்சம் குடும்ப அட்டைத்தாரர்களை தாண்டி அனைவரும் ரேஷன் கடைகளி

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே ! - சுந்தர் பிச்சையின் தர்பாரில் இணைகிறது ஆல்பபெட். #SundarPichai #Google #Alphabet

Image
ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே ! - சுந்தர் பிச்சையின் தர்பாரில் ஆல்பபெட் ! 'வழக்கமான எளிய பாதையை தேர்ந்தெடுத்தால் அதில் அதிகம் போட்டி இருக்கும். கடினமான புதிய பாதையை தேர்ந்தெடுங்கள், அதில் போட்டி இருக்காது. நீங்கள் பல்வேறு முயற்சிகளை செய்து பார்க்கலாம். தோல்விகள் ஏற்பட்டாலும் புதிதாக ஏதோ செய்தோம் என்ற திருப்தி இருக்கும்' இது சுந்தர் பிச்சையின் வின்னிங் பார்முலா !       அகிலத்தையே ஆண்ட்ராய்டுக்குள் அடக்கியிருக்கும் கூகுளின்  சிஇஒ சுந்தர்பிச்சை தற்போது கூடுதலாக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டிற்கும் தலைமையேற்க உள்ளார்.      நடுத்தர குடும்பத்தில் மதுரையில் பிறந்த பிச்சை சுந்தரராஜன் வளர்ந்தது படித்தது எல்லாம் சென்னையில்தான்.  பழைய படங்களில் எல்லாம் உள்ள நம்பர் சுற்றும் டெலிபோன் தான் அவர் வீட்டின் முதல் கேட்ஜட்.அதை பார்த்துதான் சுந்தருக்கு தொழில்நுட்பத்தின் மீது ஆர்வமே ஏற்பட்டது. பள்ளியில் எந்தவிதத்திலும் கவனம் பெறாமல் சராசரி மாணவனாகவே இருந்துள்ளார் சுந்தர். 12 ம் வகுப்பிலும் அதிக மதிப்பெண்ணெல்லாம் எடுக்கவில்லை இருந்தும் அவரது புத்திக்கூர்மையால் கரக்பூர் ஐஐடி யில் இ