Posts

Showing posts from March, 2021

தடுப்பூசி காலத்தின் கட்டாயம்! #CoviShield

தடுப்பூசி காலத்தின் கட்டாயம்! கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே தேவையில்லாத ஒரு பயம் இருப்பதை பார்க்க முடிகிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் உடனே உடனே சுருண்டு விழுந்து இறந்து போவதாகவும்...இரத்தம் உறைந்து போவதாகவும்...கை கால்கள் இழுத்துக் கொள்வதற்காகவும் ஏகப்பட்ட வதந்திகள் மக்கள் மத்தியில் பேசப்படுவதை காதுபட கேட்க முடிகிறது. இன்னும் சிலர், தடுப்பூசிகள் இலுமினாட்டிகளின் சதி என்கிற ரேஞ்சுக்கு கட்டுக்கதைகளை அள்ளிவிடுகின்றனர். மக்கள் கொரோனாவை பார்த்து பயப்படுவதை விட, தடுப்பூசியை பார்த்துதான் அதிகம் பயப்படுகின்றனர். ஆனால், இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது. எனக்கு இதில் முதலிலிருந்தே ஒரு தெளிவான பார்வை இருந்தது. இப்படி ஒரு கொடூரமான நோய்க்கு நம் கையில் எந்த மருந்தும் இல்லாதபோது, நமது அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியது நம் கடமை. மேலும், தடுப்பூசிகள் குறித்த வதந்திகளையும் நம்பக்கூடாது. குறிப்பாக, இணையத்தில் தடுப்பூசி குறித்து பரப்பப்படும் எந்த நெகட்டிவ்வான செய்தியையும் நம்பிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். பிரதமர் மோடி டெல்லியின் தடுப்பூ

யாருக்கு சார் ஓட்டு போடுறது?

யாருக்கு சார் ஓட்டு போடுறது? தேர்தல் வந்தாச்சு...ஓட்டு போடுற நேரமும் நெருங்கியாச்சு...அதிகபட்சம் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு. ஆனால், யாருக்கு என்னுடைய வாக்கை செலுத்துவது என்று மட்டும் இன்னும் முடிவாகவில்லை. அ...வின் ஆட்சியை கொடுப்போம் என கூறுகிறார்கள். அந்த அ....வே மக்கள் பணத்தை கொள்ளையடித்ததற்காக ஊழல் வழக்கில் உள்ளே சென்று கம்பி எண்ணியவர். அவருடைய ஆட்சியை கொடுக்கிறோம் என்பது கேவலத்திலும் கேவலம். ஒரு கட்சி 10 வருடமாக ஆட்சியிலிருந்து ஒன்றையும் சாதிக்கவில்லை. 10 வருட ஆட்சி முடிந்த பிறகு, வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை என்கிற வாக்குறுதியோடு தேர்தலை சந்திக்கிறது. இது இந்த 10 வருடத்தில் வேலைவாய்ப்புக்காக ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை என்பதை அவர்களே ஒத்துக்கொள்வது போல இருக்கிறது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியையே டிவியில் பார்த்து தெரிந்துக்கொள்ளும் அளவுக்கான அப்பாவி முதலமைச்சரை தமிழக அரசியல் இதுவரை சந்தித்ததில்லை. சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய பன்னீர் செல்வம் இன்று சசிகலாவுக்கு 'தூய ஆத்மா' பட்டம் கொடுக்கிறார

ஆன்மாவை தொடும் ரஹ்மானின் அன்பும் அமைதியும்! - 99 சாங்ஸ் ஆல்பம் ரிவியூவ் #99Songs #ARR

சில நாட்களுக்கு முன்பு அயலான் படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'வேற லெவல் சகோ' என்ற பாடல் வெளியாகியிருந்தது. இந்த பாடல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று சிலரும், ரஹ்மானின் வழக்கமான 'ஸ்லோ பாய்ஸன்' வகையறா என்று சிலரும் கூற கலவையான விமர்சனங்களே இந்த பாடலுக்கு கிடைத்திருந்தது. இந்நிலையில், நேற்று ரஹ்மானின் கதை-திரைக்கதையில் அவரே தயாரித்து இசையும் அமைத்திருக்கும் '99 சாங்ஸ்' படத்தின் பாடல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த ஆல்பம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறாரா ரஹ்மான்? என்பது குறித்த சிறு அலசல் இங்கே.. '99 சாங்ஸ்' படத்தின் ஹிந்தி வெர்ஷன் பாடல்கள் கடந்த ஆண்டு லாக்டவுணுக்கு முன்பாகவே வெளியாகிவிட்டது. ஹிந்தி வெர்ஷனையே ரஹ்மான் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இருந்தாலும், பாடல் வரிகளுக்கும் பாடலாசிரியர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் ரஹ்மான் என்பதால் இந்தப் படத்தின் தமிழ் வெர்ஷன் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. இந்நிலையில், நேற்று '99 சாங்ஸ்' படத்தின் தமிழ் ஆல்பம் வெளியா

சூர்யகுமார் யாதவ் - இந்திய அணி தவறவிடக்கூடாத டி20 பேட்ஸ்மேன்!

சூர்யகுமார் யாதவ் - இந்திய அணி தவறவிடக்கூடாத டி20 பேட்ஸ்மேன்! #IndVsEng #SKY முதல் போட்டியில் டக் அவுட் ஆன பிறகு, இரண்டாவது போட்டிக்கு முன்பாக டீவில்லியர்ஸிடம் சில ஆலோசனைகளை கோலி பெற்றிருக்கிறார். அதன்பிறகு நடந்த இரண்டு போட்டிகளிலுமே வெளுத்தெடுத்துவிட்டார். கோலி மாதிரியான லெஜண்ட்டை இன்னொரு வீரரிடம் ஆலோசனை பெற வைக்கும் அளவுக்கு இங்கிலாந்து என்ன செய்தது? ரூட் மாதிரி இந்திய பிட்ச்களுக்கு அணியை தகவமைக்க முடியாமல் மோர்கன் திணறவில்லை. மோர்கன், ஸ்பின்னுக்கு சாதகமான பிட்ச், இந்திய சூழல் இவற்றையெல்லாம் மனதில் வைத்துக் குழம்பிக்கொள்ளவில்லை. மாறாக, தங்கள் அணியின் பலம் என்ன? அதைவைத்து இந்தியாவை என்ன செய்யலாம்? என்பது பற்றி மட்டுமே யோசித்தார். தனது வேகப்பந்து வீச்சாளர்கள் மீது மட்டுமே முழுநம்பிக்கையையும் வைத்தார். அவர்களின் திறனே இந்திய பேட்ஸ்மேன்களை திணறடிக்க போதும் என நம்பினார். அதனால்தான், ஒரே ஒரு ஸ்பின்னரோடு அஹமதாபாத் பிட்ச்சில் தைரியமாக களமிறங்கினார். அவருடைய நம்பிக்கையை பொய்யாக்காத வகையில் இங்கிலாந்து வேகங்களும் பிட்ச்சை குறை கூறாமல், தங்களது வேரியேஷன்களை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தினர். ல

Happy Birthday AamirKhan

ஆ..!மீர் கான்💝 சேவியர்ஸில் எட்டாம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய வகுப்பாசிரியராக செல்வக்குமார் சார் இருந்தார். மாணவர்கள் புத்தகங்களை மட்டும் படித்தால் எதையும் சாதிக்க முடியாது. அனைத்து விஷயங்களையும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். அதனால், பல நேரங்களில் வெகு இயல்பாக மாணவர்களோடு நெருங்கி உரையாடிக் கொண்டிருப்பார். அப்போது, ஒரு நாள் தாரே ஷமீன் பார் என்று ஒரு படம் வெளியாகியிருப்பதாகவும் அதை அனைவரும் பார்க்க வேண்டும் என்று கூறி அந்த படம் குறித்து பல விஷயங்களை சிலாகித்து கூறிவிட்டு அவர் செல்லும் போது வழிமறித்து படத்துல யார் சார் ஹீரோ?? என நான் கேட்டேன். அப்போது அவர் சிரித்துக் கொண்டே 'அமீர்கான்' என பதிலளித்தார். அப்போதுதான் 'அமீர்கான்' என்ற நடிகரை முதன் முதலாக நான் அறிந்தேன். ஆனாலும்,இப்போது லாக்டவுணில்தான் அமீர்காமின் பல படங்களையும் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. 2000 களுக்கு பிறகு மாறிவரும் சினிமா ரசிகர்களின் ரசனையை புரிந்துக்கொண்டு திரையில் பிரதிபலித்த முதல் வெகுஜன இந்திய நடிகர் ஆமிர்கான் தான். லகான் ரங் தே பஸந்தி தாரே ஷமின் பார் கஜி

'அந்த ஒரு நாள்..' My Vikatan Story

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்! 757, அண்ணா சாலை என்கிற இந்த முகவரி என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது. கல்லூரியின் இரண்டாமாண்டின் இறுதியில் எதிர்காலம் குறித்த ஒருவித பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது. துறைரீதியான அறிவும் இல்லாமல் பொது அறிவும் இல்லாமல் எப்படி காலேஜை முடித்துவிட்டு பிழைக்கப்போகிறோம் என்கிற பயம் வெகுவாக எனக்குள் உண்டானது. அப்போதுதான் ஒரு பேராசிரியர் அட்லீஸ்ட் ஒரு குமுதம், குங்குமம், விகடன் போன்ற பத்திரிகைகளை ஆவது வாசிக்கிற பழக்கத்தை உண்டு பண்ணிக்கொள்ளுங்கள் அது பெரியளவில் கைக்கொடுக்கும் என அறிவுரை கூறியிருந்தார். அதை மனதில் வைத்துக்கொண்டு 2018 பிப்ரவரியின் இரண்டாம் வாரத்தில் ஒரு நாள் ஆனந்த விகடன் இதழை வாங்கினேன். காசு கொடுத்து நான் வாங்கிய முதல் ஆனந்த விகடன் இதழ் அதுதான். பக்கங்களை புரட்ட புரட்ட திடீரென ஒரு பக்கத்தில் மாணவப் பத்திரிகையாளருக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. (பட்டர்ஃப்ளை எஃபெக்ட்டோ என்னவோ!) அதற்கு விண்ணப்பித்துவிடுவோம் என எதோ ஒரு உந்துதல். அதன்படி விண்ணப்பித்தும் விட்டேன். முதல் ரவுண்ட்டில் நாம் ஒரு கட்டுரை எழுதி அன

ராஸ் டெய்லரும் கொண்டாடப்பட வேண்டியவரே!! #RossTaylor

ராஸ் டெய்லரும் கொண்டாடப்பட வேண்டியவரே!! உலகளவில் கொண்டாடப்படுபவர்கள் எல்லாருமே எதோ ஒரு வகையில் தனித்துவமான திறமையை உடையவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், திறமையானவர்கள் அத்தனை பேருமே இங்கே கொண்டாடப்படுகிறார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே. ஸ்டார் அந்தஸ்துடைய ஒரு முன்னணி பிரபலத்துக்கு கிடைக்கும் பாராட்டுகளும் அங்கீகாரங்களும் அவர்களுக்கு பின்னால் இரண்டாம் வரிசையில் நிற்கும் பிரபலங்களுக்கு கிடைத்ததேயில்லை. கிரிக்கெட் உலகில் ராஸ் டெய்லரும் அப்படியான கொண்டாட மறந்த இரண்டாம் வரிசையில் நிற்கும் வீரர்தான். ஆனால், அவரின் பெர்ஃபார்மென்ஸ்கள் என்றைக்கும் நியுசிலாந்தை முதல் வரிசையை நோக்கியே நகர்த்தியிருக்கின்றது. நியுசிலாந்தை நெடுங்காலமாக 'அண்டர்டாக்ஸ்' என்கிற வகைமைக்குள்ளேயே கிரிக்கெட் உலகம் வைத்திருந்தது. இதனாலேயே அந்த அணியின் பெரும் திறமையாளர்கள் பலரும் பெரிதாக புகழ் வெளிச்சத்தை பெறாமலேயே இருந்தனர். மெக்கல்லம் கேப்டனாகி அதிரடியாக நியுசிலாந்து அணியை முன்னகர்த்தி உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்ற காலக்கட்டத்தில்தான் நியுசிலாந்து ஒரு அணியாக முழுமையாக புகழ் வெளிச்சம் பெ