Posts

Showing posts from June, 2021

More power to #AnushkaSharma

More power to #AnushkaSharma 2020 ஐ.பி.எல் சீசன் துபாயில் நடைபெற்றது. இதில் ஒரு போட்டியில் கோலி ரொம்ப சுமாராக அவுட் ஆகியிருப்பார். டக் அவுட் என நினைக்கிறேன். அப்போது கமெண்ட்ரி பாக்ஸில் பேசிக்கொண்டிருந்த கவாஸ்கர் 'லாக்டவுணில் கோலி அனுஷ்கா சர்மாவின் பந்துகளை மட்டும்தான் அடித்து பயிற்சி செய்திருப்பார் போல' என நக்கலாக பேசியிருந்தார். இது நக்கல் என்பதை தாண்டி எளிதில் இரட்டை அர்த்தமாக புரிந்துக்கொள்ளக்கூடிய வகையில் அமைந்திருந்தது. கவாஸ்கரின் இந்த கமெண்ட் பெரும் சர்ச்சையானது. அப்போது கவாஸ்கருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அனுஷ்கா சர்மாவும் ஒரு இன்ஸ்டா ஸ்டோரி போட்டிருந்தார். அதைத்தான் கீழே இணைத்திருக்கிறேன். கவாஸ்கர் கமெண்ட்ரி பாக்ஸில் சில மொக்கை ஜோக்குகளை அடிப்பார். ஆனால் இப்படி மலினமாக இரட்டை அர்த்தத்தில் பேசமாட்டார். அவருக்கென்று ஒரு மதிப்பிருக்கிறது. இரட்டை அர்த்தம் என்பதை ஒதுக்கிவிடுவோம். ஆனால், ஒரு கிரிக்கெட் வீரரின் ஆட்டத்தை விமர்சிக்க அந்த வீரரின் மனைவியை எதற்கு இழுக்க வேண்டும்? இது முழுக்க முழுக்க கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். இதையேத்தான் அனுஷ்கா சர்மாவும் கேட்டிருந்தார்.

உட்றாதீங்க கோலி...இந்தியா ஏன் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றே ஆக வேண்டும்?! #WTCFinals #Kohli #IndVsNz

இந்தியா ஏன் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றே ஆக வேண்டும்?! டைம் மெஷினில் ட்ராவல் செய்து 2028 க்கு பயணிப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். 2028 க்கு வந்துவிட்டோம். இங்கே இப்போது டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாக் அவுட் போட்டிகளெல்லாம் முடிந்து இறுதிப்போட்டி தொடங்குகிறது. ஆஃப்கானிஸ்தானும் இங்கிலாந்தும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. பரபரப்பான இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பையை வெல்கிறது. ரஷித்கானுக்கு மேன் ஆஃப் தி சீரிஸ் விருது வழங்கப்படுகிறது. விருதை பெற்றுவிட்டு பேசிய ரஷித்கான் 'உலகக்கோப்பை வென்றதில் பெரும் மகிழ்ச்சி. எங்களுடைய இந்த வெற்றிக்கு இந்திய அணியும் அதன் முன்னாள் கேப்டன் தோனியுமே கூட மிகப்பெரிய காரணமாக இருந்திருக்கின்றனர். அவர்களுக்கும் எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்' ஆஃப்கானிஸ்தான் உலகக்கோப்பையை வெல்லும் என்பதையே நம்பமுடியவில்லை. இதில் அவர்கள் இந்தியாவுக்கு வேறு நன்றி சொல்கிறார்களா?! கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாம் பாருங்க என தோன்றலாம். இந்த ஆஃப்கானிஸ்தான் விஷயத்தை ஒரு பக்கம் வைத்துக்கொள்

திமிறி எழும் நியுசிலாந்து.... தில்லாலங்கடி காட்டும் இந்தியா...இறுதிக்கட்ட பரபரப்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்..! #Day5 #WTCFinal #Kohli

நான்காவது நாள் ஆட்டம் மழையால் மொத்தமாக வாஷ் அவுட் ஆகியிருந்த நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. 101-2 என்ற நிலையிலிருந்து நியுசிலாந்து அணி ஆட்டத்தை தொடங்கியது. வில்லியம்சனும் ராஸ் டெய்லரும் க்ரீஸில் தொடர்ந்தனர். இந்திய அணியின் சார்பில் இஷாந்த் சர்மாவும் பும்ராவும் ஓப்பனர்களாக களமிறங்கினர். இரண்டு அணிகளும் ரிசல்ட்டுக்காக முட்டி மோதும் என நினைக்கையில் இரண்டு அணிகளுமே டிஃபன்ஸிவ்வாக சென்றது அதிர்ச்சியாக இருந்தது. இந்திய பௌலர்கள் துணிச்சலாக ஃபுல் லெந்த்தில் வீசி ஸ்விங் செய்து நியுசிலாந்து பேட்ஸ்மேன்களை தடுமாற செய்ய வேண்டும். ரன்கள் போனாலும் பரவாயில்லை என இந்தியா ரிஸ்க் எடுக்க வேண்டும் என கமெண்ட்ரி பாக்ஸில் பேசிக்கொண்டே இருந்தனர். நமக்கு பார்க்கும்போதும் அப்படியே தோன்றியது. இந்திய அணி மூன்றாம் நாளில் 62% பந்துகளை குட் லெந்த்தில் வீசியிருந்தனர். ஒரு சாதாரண நாளில் இது மிகச்சிறந்த பந்துவீச்சு என்று கூறலாம். ஆனால், நெருக்கடியான நிலையில் இப்படி சீராக வீசுவது மட்டும் போதாது. பேட்ஸ்மேனை ஷாட் ஆட வைத்து விக்கெட் எடுக்க வேண்டும். அதை இந்திய அணி தொடக்கத்தில் செய்ய தவறியது. ஸ்டம்புக்கு

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.... தடுமாறும் இந்தியா... மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?! #WTCFinals #Day3

இந்திய அணி 146-3 என்ற நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை முடித்திருந்தது. இரண்டாம் நாளில் இருதரப்புமே சம அளவில்தான் ஆதிக்கம் செலுத்தியிருந்தது. இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. வருணபகவானின் புண்ணியத்தால் மழையின் குறுக்கீடு பெரிதாக இல்லை. அதனால் இரண்டாம் நாளை விட அதிக ஓவர்கள் வீசப்பட்டது. இரண்டாம் நாளின் தொடர்ச்சியாக ரஹானேவும் கோலியும் க்ரீஷுக்கு வந்தனர். ஜேமிசனும் போல்ட்டும் முதல் ஸ்பெல்லை வீசினர். இரண்டாம் நாளில் தட்டுத்தடுமாறியிருந்த ரஹானே நேற்று கொஞ்சம் நல்ல டச்சில் இருந்தார். போல்ட்டை அவர் டிஃபன்ஸ் செய்த விதத்தை கமெண்ட்ரி பாக்ஸில் தினேஷ் கார்த்திக்கும் நாஸீர் ஹுசைனும் சிலாகித்து கொண்டிருந்தனர். கோலியும் இன்னொரு எண்ட்டில் நல்ல கண்ட்ரோலான முறையிலேயே ஆடிக்கொண்டிருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சீக்கிரமே அவுட் ஆகிவிட்டார். ஜேமிசன் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே 5-6 ஸ்டம்ப் லைனில் தொடர்ந்து வீசி கோலியை செட் செய்து திடீரென ஒரு இன்கம்மிங் டெலிவரியை வீசி ஏமாற்றி lbw ஆக்கினார். இரண்டு நாட்களாக ஜேமிசன் வெறும் 7 பந்துகளை மட்டுமே ஸ்டம்ப்பை அட்டாக் செய்யுமாறு வீசியிருந்தார். கோலிக்கு ஒர

திணறி மீண்ட நியுசிலாந்து....தாக்கம் ஏற்படுத்திய ரோஹித் விக்கெட்...முதல் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?? #CompleteReview #WTCFinals #Kohli #Williamson

நேற்று தொடங்க வேண்டிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி மழை காரணமாக தடைபட்டு இன்றே தொடங்கியது. இன்றைக்கு பெரிய அளவில் மழை இல்லாமல் போட்டி நடைபெறுவதற்கான சூழலே இருந்தது. நேற்று முழுவதும் மழை பெய்து மைதானம் கொஞ்சம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸை வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாகவும் இருந்தது. 'டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்து இந்த ஓவர்காஸ்ட் கண்டிஷனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என கவாஸ்கரும் ப்ரீ மேட்ச் ஷோவில் பேசியிருந்தார். இதனால் டாஸின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு உண்டானது. டாஸை நியுசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனே வென்றார். அனைவரின் எதிர்பார்ப்புக்கேற்ப பௌலிங் செய்யப் போவதாகவே அறிவித்தார். டாஸில் தோற்றதால் கோலி கொஞ்சம் அப்செட்டாகவே இருந்தார். 'டாஸ் வென்றிருந்தால் நாங்களும் பந்துதான் வீசியிருப்போம்' என கூறியிருந்தார். நியுசிலாந்தின் அணித்தேர்வும் மிரட்டலாக இருந்தது. சவுதி, போல்ட்,ஜேமிசன், வேக்னர் + க்ராண்ட்ஹோம் என முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே வில்லியம்சன் ப்ளேயிங் லெவனில் எடுத்திருந்தார். ந

கோலி எனும் சபிக்கப்பட்ட மாவீரன்! #Kohli #WTCFinals #IndVsNz

கோலி எனும் சபிக்கப்பட்ட மாவீரன்! #WTCFinals #Kohli #IndVsNz பேராண்மை படத்துல ஜெயம் ரவி ஒரு வசனம் பேசுவாரு. 'இந்த சாக்பீஸ்ல இருந்து உழைப்ப கழிச்சிட்டா..வெறும் சுண்ணாம்பு மட்டும்தான் மிஞ்சும்' இதே மாதிரியே 'கடந்த 10 ஆண்டுகளுக்கான இந்திய அணியில் கோலியின் பங்களிப்பை கழித்துவிட்டு பார்த்தால் ஒன்றுமே மிஞ்சாது'. அப்படி கோலி இல்லாத ஒரு அணியை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. இந்திய கிரிக்கெட் வரலாற்றின் ஒரு தசாப்தத்தை முழுக்க முழுக்க தன்னுடையதாக்கியிருக்கிறார். விஜய் ஹசாரேவிலிருந்து ஆரம்பித்து கபில்தேவ், சச்சின், தோனி வரிசையில் ஒரு தலைமுறைக்கான வீரராக உருவெடுத்திருக்கிறார். ஆனாலும் நான் கோலியை ஒரு சபிக்கப்பட்ட மாவீரன் என்றே கூறுவேன். கபில்தேவ், சச்சின், தோனி என முன்னவர்கள் எதிர்கொள்ளாத அத்தனை விமர்சனங்களையும் வெறுப்புகளையும் கோலி எதிர்கொண்டிருக்கிறார். அவருக்கு ஞாயமாக வழங்கப்பட வேண்டிய க்ரெடிட்கள் கூட வழங்கப்பட்டதில்லை. அது கூட பரவாயில்லலை. ஆனால், விமர்சனங்கள். அதை விமர்சனம் என்று கூட சொல்ல முடியாது. கோலி டக் அவுட் ஆனதற்கு அனுஷ்கா சர்மா குறித்து பக்கம் பக்கமாக ரைட் அப்