Posts

Showing posts from May, 2019

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review

NGK My Views சுத்தியலடி பட்டு மருத்துவமனையிலிருந்த பாஸ் நேசமணி உடல்நலம் தேறி வருவதாகவும் அவர் இட்லி சாப்பிட்டதாகவும் ப்ரஸ் மீட்டில் கோவாலு கூறியதால் மனதை தேற்றிக்கொண்டு #NGK படம் பார்க்க சென்றோம். நானெல்லாம் காதல் கொண்டேன் படமே முழுசா பார்த்தது கிடையாது இருந்தாலும் செல்வராகவன் டா....மேஜிக் டா....க்ளாஸ் டா....ஆயிரத்தில் ஒருவன் டா  இன்னும் நிறைய தஸ்புஸ் வார்த்தைகளை சொல்லி ட்வீட் லாம்  போடுவாங்களே உண்மையிலேயே அவர் எதோ மேஜிக்லாம் பன்னி விடுவாறு போலன்னு நம்மளும் செல்வராகவன் ட்டா......காத்திருப்போம் டா என்று டீவிட்டை போட்டு விட்டு ரெண்டு நாளைக்கு முன்னாடியே டிக்கெட்டயும் போட்டு ஒரு வழியா படத்தையும் பார்த்திட்டு வந்தாச்சு... சிஸ்டமே சரியில்லை எல்லாவற்றையும் மாற்றனும் என ஹீரோ அரசியல் களத்தில் இறங்கி கடைசியில் ப்ரஸ்மீட் ல் முடிகின்ற அதே டெம்ப்ளேட் அரசியல் படம் தான் NGK ! நம்ம படம் வந்து பல வருடங்கள் ஆகுதே...ரசிகர்கள் வேற வெறித்தனமா வெயிட் பன்னுவாங்களேன்னு  நினைச்சாரோ என்னவோ இண்டெர்வெல் முடிவதுக்குள்ளாகவே ரெண்டு படம் பார்த்த  ஃபீலிங்கை கொடுத்துவிடுகிறார் செல்வராகவன். என்னதான் ஸ்லோவா இ

வாய்ப்பை தவறவிட்டாரா? ஸ்டாலின் | is Stalin was slow down in this issue? in election campaign

  பஸ் கட்டண உயர்வு. 10 ரூ இருந்த டிக்கெட் விலை 18 லிருந்து 20 ரூ வரை உயர்ந்தது. கிட்டத்தட்ட 100% உயர்வு. டவுன் பஸ்கள் முதல் தொலைதூரம் செல்லும் setc வரை இதே நிலை. கிராமவாசிகள்,நகரவாசிகள், கல்லூரி மாணவர்கள், தினக்கூலிகள் என ஒவ்வொரு தரப்பினரையும் அவஸ்தைக்குள்ளாக்கிய பிரச்சனை. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு நபரும் பாதிக்கப்பட்ட  பிரச்சனை. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் தனது பிரச்சாரக் களத்தில் இது குறித்து பேசியதாக  தெரியவில்லை. ஒரு வேளை பேசியிருந்தாலும் அதை முதன்மை பிரச்சாரமாக எடுத்து செல்லவில்லை. டீமானிட்டைசேசன் , GST , மோடி போடுவதாக சொன்ன 15 லட்சம் என பிரச்சாரத்தை முன்னெடுத்து சென்ற ஸ்டாலினுக்கு 37 தொகுதிகளை வாரி வழங்கினர் மக்கள்.இவற்றையெல்லாம் பேசியவர்  பேருந்து கட்டண பிரச்சனையை பேச மறந்தது வியப்பாக உள்ளது. ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு தனிநபரையும் பிரச்சனைக்குள்ளாகும் விஷயங்கள் தேர்தல் களத்தில் வாக்குகளாக பிரதிபலிக்கும். எ.கா: 2011 தேர்தலில் மின்தடை பிரச்சனை. ஒவ்வொரு குடும்பத்தையும் தனிநபரையும் வாட்டி வதைத்த மின்தடையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிமுக வுக்கு பெருவாரியான வாக்குகளை அளித

மிஸ்டர் லோக்கல் - விமர்சனம் ! Mr.local Review !

மிஸ்டர் லோக்கல் விமர்சனம் ! மிடிஸ் க்ளாஸ் மனோகரான எஸ்கே க்கும் சர்க்கார் விஜய் பாணி சிஇஓ நயனுக்கும் இடையே நடக்கும் முட்டல்களும் மோதல்களுகும் அதன் பின் க்ளைமாக்ஸில் கனியும் காதல்தான் படத்தின் கதை. சிவகார்த்திகேயனுக்கு பழக்கப்பட்ட காமெடி ஜானர் என்பதால் டைட்டில் கார்ட் முதல் எண்ட் கார்ட் வரை  இறங்கி அடித்திருக்கிறார். படம் முழுவதயும் காமெடி, ஆக்சன், டான்ஸ், பைட் என ஒற்றை ஆளாக தாங்கி பிடித்து மாஸ் காட்டுகிறார் சிவா. காமெடியனே இல்லாமல் சிவா வை வைத்தே முழு நீள காமெடி படம் எடுத்துவிடலாம் என்ற அளவுக்கு காமெடியான மேனரிசம்களிலும், டைமிங் காமெடிகளிலும் பின்னியெடுத்திருக்கிறார் சிவா.  முதல் பாதியில் ஹீரோவுடனே ட்ராவல் ஆகும் சதிசூம் யோகி பாபுவும் சகட்டுமேனிக்கு கவுண்டர்களாக அடித்து தள்ளியிருக்கிறார்கள். பிஜேபி,ரஜினி,மத்திய அரசின் ஸ்கீம் என சில பொலிட்டிக்கல் விஷயங்களையும் போகிறபோக்கில் கலாய்த்திருக்கிறார்கள். சதீஸின் முக்கால்வாசி டயலாக்குகள் கிச்சுகிச்சு மூட்டிவிடுகின்றன என்பது நமக்கடித்த அதிர்ஷ்டம். திமிரு பிடித்த ப்ரொடக்சன் கம்பெனி சிஇஓ வாக தனக்கான கேரக்டரை முழுவதுமாக உணர்ந்து செய்திருக்கிறார