வாய்ப்பை தவறவிட்டாரா? ஸ்டாலின் | is Stalin was slow down in this issue? in election campaign

 

பஸ் கட்டண உயர்வு. 10 ரூ இருந்த டிக்கெட் விலை 18 லிருந்து 20 ரூ வரை உயர்ந்தது. கிட்டத்தட்ட 100% உயர்வு. டவுன் பஸ்கள் முதல் தொலைதூரம் செல்லும் setc வரை இதே நிலை. கிராமவாசிகள்,நகரவாசிகள், கல்லூரி மாணவர்கள், தினக்கூலிகள் என ஒவ்வொரு தரப்பினரையும் அவஸ்தைக்குள்ளாக்கிய பிரச்சனை.
தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு நபரும் பாதிக்கப்பட்ட  பிரச்சனை. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் தனது பிரச்சாரக் களத்தில் இது குறித்து பேசியதாக  தெரியவில்லை. ஒரு வேளை பேசியிருந்தாலும் அதை முதன்மை பிரச்சாரமாக எடுத்து செல்லவில்லை. டீமானிட்டைசேசன் , GST , மோடி போடுவதாக சொன்ன 15 லட்சம் என
பிரச்சாரத்தை முன்னெடுத்து சென்ற ஸ்டாலினுக்கு 37 தொகுதிகளை வாரி வழங்கினர் மக்கள்.இவற்றையெல்லாம் பேசியவர்  பேருந்து கட்டண பிரச்சனையை பேச மறந்தது வியப்பாக உள்ளது. ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு தனிநபரையும் பிரச்சனைக்குள்ளாகும் விஷயங்கள் தேர்தல் களத்தில் வாக்குகளாக பிரதிபலிக்கும். எ.கா: 2011 தேர்தலில் மின்தடை பிரச்சனை. ஒவ்வொரு குடும்பத்தையும் தனிநபரையும் வாட்டி வதைத்த மின்தடையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிமுக வுக்கு பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெற செய்தனர்.
இப்போதும் ஸ்டாலின் அவர்களும் திமுகவும் பெற்றிருக்கும் வெற்றி மகத்தானதுதான் அதில் எந்த சந்தேகமுமில்லை. பேருந்து கட்டண பிரச்சனை பற்றி பேசியிருந்தால் முழுமையானதொரு வெற்றியை பெற்றிருக்கலாம் என்பது என் கணிப்பு.

தங்கள் கைகளுக்குள் இல்லாத பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலையை பற்றி தேர்தல் அறிக்கையிலும் பிரச்சாரங்களிலும்  குறிப்பிட்ட ஸ்டாலின் இந்த பேருந்து கட்டண பிரச்சனையையும் குறிப்பிட்டு  கையிலெடுத்திருந்தால் ஆட்சியே கைமாறியிருக்கலாம்.

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review