அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster
சச்ச்சின்...சச்ச்ச்ச்சின்....சச்ச்ச்ச்சின்...
அன்பே சச்சின் !!!!
'God of Cricket' சச்சின் டெண்டுல்கரின் பிறந்தநாள் இன்று. உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது சச்சின் மெமரிஸ்களை சிலாகித்து ஷேர் செய்து வருகின்றன.
'ஐ டெல் ப்யூப்புள் யூ நோ. சச்சின் விளையாட வந்தா என்னை கூப்டுங்கன்னு' சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் படத்தில் தோனி பகிர்ந்து கொண்ட சச்சின் மெமரி இது. தோனி மட்டுமில்லை இன்றைக்கு ரசிகர்களால் கொண்டாடப்படும் கோலி, ரோஹித் போன்ற பலருக்கும் சச்சின் தான் இன்ஸ்பிரேஷன்.
சோஷியல் மீடியாக்களில் 2கே கிட்களை பார்த்து 80ஸ்-90ஸ் கிட்கள் பொறாமைப்படுவதை போல் பல போஸ்ட்களும் மீம்களும் உலாவிக்கொண்டிருக்கும். இன்றைய ஜென்z 2கே கிட்களின் எண்டர்டெயின்மெண்டும் நாஸ்டாலஜிக்கள் சூழ் உலகில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் 80-90ஸ் கிட்களின் அந்த கால ரசனைகளை சுரண்டிபார்ப்பதுதான். ஆனால் தனிப்பட்ட முறையில் ஒரு 2கே கிட்டாக அந்த காலத்து ஆட்கள் மீது எனக்கு ஒரு பொறாமை உண்டு. ஆர்கானிக்கான எல்லா விஷயங்களையும் அனுபவித்து வாழ்ந்த தலைமுறையினர் அவர்கள்தான். உணவுப்பொருள்களில் இயற்கையான எல்லாவற்றையும் இழந்துவிட்டு இப்போது ஆர்கானிக்கை தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். அதே நிலைதான் அரசியல், சினிமா, ஸ்போர்ட்ஸ் எல்லாவற்றிற்கும். இன்றைய வேகத்திற்கு ஏற்றவாறு எல்லாமும் உருமாறிவிட்டது. இந்த உருமாற்றத்தில் எதோ ஒன்று மிஸ் ஆகிறது. அரசியல்,சினிமா,ஸ்போர்ட்ஸ் இவற்றிலெல்லாம் பல வருடங்கள் கோலோச்சிய பெரிய தலைகள் எல்லாம் ஓய்வு பெறுகிற காலத்தில் பிறந்து விட்டோமே என்ற ஃபீலிங் எப்போதும் உண்டு. அரசியலில் கருணாநிதி-ஜெயலலிதா, சினிமாவில் ரஜினி-கமல் இந்த லிஸ்டில் கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால் அப்படி மிஸ் பண்ணும் ப்ளேயர் சச்சின் டெண்டுல்கர் என தயக்கமின்றி சொல்லிவிடுவேன். ஒவ்வொரு முறை இந்தியா கிரிக்கெட்டில் புதிய உயரங்களை அடையும் போதும் புதிது புதிதாக கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் அதிகரிப்பார்கள். அதுதான் 1983 தொடங்கி இன்றும் இந்தியாவில் கிரிக்கெட்டுக்கான க்ரேஷ் குறையாமல் இருப்பதற்கான காரணம். இந்தியா 2007 ம் ஆண்டு தோனி தலைமையில் டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு கிரிக்கெட் அறிமுகமான ரசிகர்களில் நானும் ஒருவன். நேச்சுரலி இந்த காலத்தில் கிரிக்கெட் பார்க்க தொடங்கியவர்களுக்கு தோனி,யுவராஜ் போன்ற இளம் வீரர்கள்தான் ஃபேவ்ரட் ப்ளேயர்களாக இருப்பர். என் கிரிக்கெட் அத்தியாயத்திலும் அப்படித்தான். தோனிதான் என்னுடைய ஃபேவ்ரட். தோனி மிடில் ஆர்டரில் களமிறங்குவதால் டாப் ஆர்டர் ப்ளேயர்கள் எல்லாம் சீக்கிரம் அவுட் ஆகி விட வேண்டும் என நினைப்பேன். அந்தளவுக்கு மேட் ஆன தோனி ரசிகன். ஆனால் சச்சின் மட்டும் இதில் விதிவிலக்கு. ஃபுட்பால் பார்க்க தொடங்கிய புதிதில் மெஸ்ஸி-ரொனால்டோ பெயரை மட்டும் தெரிந்துகொண்டு கம்பு சுற்றுபவர்கள் போன்று கிரிக்கெட் பார்க்க தொடங்கும்போது சச்சின் பெயரை மட்டும் தெரிந்துக்கொண்டு பல உதார்களை விட்டிருக்கிறோம். மேலும் தோனிக்கு கேப்டன் பதவி தோனிக்கு கிடைத்ததில் சச்சினுக்கும் பங்குண்டு என அப்போது வெளியாகியிருந்த செய்திகள் சச்சின் மீது ஒரு ஈர்ப்பை உண்டாக்கியது. ஆனால் நான் சச்சினை ரசிக்கத்தொடங்கிய இந்த காலக்கட்டம் அவரது பீக்கில் இருந்த சமயம் கிடையாது. 2011 உலகக்கோப்பையை வென்றவுடனே சச்சின் ஓய்வு எப்போது என்ற கேள்வி கிட்டத்தட்ட எல்லா ப்ரஷ் மீட்டிலும் கேட்கப்பட்டிருக்கும். சச்சின் முடிவை அறிவிக்காத நேரத்தில் 100 சதங்கள் அடிக்க வேண்டும் 200 டெஸ்ட்டில் விளையாடியே ஆக வேண்டும் என்ற சாதனைக்காக அவர் ஓய்வை அறிவிக்காமல் இருக்கிறார் என பல விமர்சனங்கள் சச்சினை துளைத்தெடுத்து கொண்டிருந்தன.
2000 களின் தொடக்கத்தில் சச்சினுக்கு எதோ காயம் ஏற்பட்டதாகவும் கிரிக்கெட்டிலிருந்து கொஞ்சம் விலகியிருந்து பிறகு சச்சின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியதாகவும் அந்த காலத்து ரசிகர்கள் சிலாகித்து சொல்வார்கள். அந்த சம்பவத்தை பார்ப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் அந்த சம்பவத்தின் மினியேச்சர் வெர்ஷன் போன்ற ஒரு நிகழ்வை ஐபிஎல் ல் பார்த்திருக்கிறேன். 2010 ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே வும் மும்பை இந்தியன்ஸும் மோதின. அந்த போட்டிக்கு முன்பாக அரையிறுதி போட்டியில் ஒரு கேட்ச் பிடிக்கும் போது சச்சினின் வலதுகையில் ஆள்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் இடைப்பட்ட ஜாயிண்டில் சதை கிழிந்து இரத்தம் கொட்டியது. அந்த இடத்தில் மட்டும் 5 தையல். சச்சின் போன்ற ஆர்த்தோடாக்ஸ் கிரிக்கெட்டருக்கு கையில் ஏற்படும் இந்த மாதிரியான காயம் பல ஷாட்களை முயற்சி கூட பண்ண முடியாத அளவுக்கு வலியை உண்டாக்கும். இறுதிப்போட்டியில் சச்சின் ஏறக்குறைய விளையாட மாட்டார் என செய்தி வெளியாகியது ஆனால் சச்சின் அந்த போட்டியில் இறங்கினார், 20 ஓவர் ஃபீல்டிங் செய்துவிட்டு சேஷிங்கில் மும்பையை வெற்றி பெற செய்ய போராடினார். அதுதான் சச்சின். அவருக்கு ரொம்ப பிடித்த விஷயத்தில் தோற்பது அவருக்கு எப்போதும் பிடிக்காது.
அப்பேற்பட்டவரை, 20 வருடங்களாக இந்திய அணியின் ஏற்றத்தாழ்வுகள் சகாப்தங்கள் சறுக்கல்கள் எல்லாவற்றிலும் முன்நின்றவரை, ஓய்வு குறித்த சர்ச்சையில்
கிட்டத்தட்ட சச்சின் தான் இந்திய அணியின் பெரிய சுமை என்பது போல் விமர்சித்த பேச்சுகள் எந்தவித இரக்கமுமின்றி கிரிக்கெட்டின் கடவுள் மீது எய்யப்பட்ட அம்புகள்தான். ஆனால் சச்சினுக்குத்தான் ரொம்ப பிடித்த விஷயங்களில் தோற்பது பிடிக்காதே. விமர்சனங்களையெல்லாம் தோற்கடித்தார். 100 சதம்-200 டெஸ்ட் என்ற இரண்டு இமாலய மைல்களையும் அடைந்தபிறகே ஓய்வு பெற்றார்.
சச்சினின் கிரிக்கெட் அத்தியாயத்தின் கடைசி க்கட்டத்தில் அவரை ரசிக்க ஆரம்பித்தவனின் சின்ன மெமரி இது. 90களின் ஆரம்பத்திலிருந்து சச்சினை ரசித்து வரும் ரசிகர்கள் செம லக்கிதான். சச்சினின் கிரிக்கெட்டுடன் சேர்ந்தே குழந்தைப் பருவம், டீன் ஏஜ், இளமைக்காலம் என அத்தனையையும் கடந்திருப்பார்கள். கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டு சச்சின் பெவிலியனை நோக்கி நடக்கும் போது சச்சின் கேரியருடன் சேர்ந்து அவர்களின் லைஃப்பும் பலவித ஞாபக நாஸ்டாலஜிக்களில் சுற்றி சுழன்றிருக்கும். மைதானத்தின் நடுவே நின்று மைக் பிடித்து சச்சின் பேசிய நன்றி வார்த்தைகளை கேட்டுக்கொண்டு சச்சின்....சச்ச்ச்சின்...சச்ச்சின்..என ஆராவரித்து கொண்டிருந்த ரசிகர்கள் சூழ் அந்த மைதானத்தின் ஆரா உலகிற்கே ஒருவித வெறித்தனமான ரசிப்பையும் அன்பையும் கடத்தியிருக்கும். அன்பே சச்சின் !!!
ஹாப்பி பர்த்டே மாஸ்டர் ப்ளாஸ்டர்.....
-உ.ஸ்ரீ

Comments
Post a Comment