Posts

Showing posts from January, 2020

தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே ! கற்றுக்கொள்ளுங்கள் விராட் #IndvsNz #Kohli #Dhoni

Image
தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே ! கற்றுக்கொள்ளுங்கள் விராட் ! இன்றைய ஆட்டத்திற்கு முன்பாக இந்திய வீரர்களின் பேருந்து பயணத்தில் சஹால் ஒரு வீடியோ எடுத்து அப்லோட் செய்திருந்தார். பேருந்தின் ஒரு சீட்டை குறிப்பிட்டு இதில்தான் கேப்டன் தோனி அமருவார். இப்போது இந்த சீட் காலியாக உள்ளது. வீ மிஸ் யூ தோனி ! என கூறியிருப்பார். இன்றைய இந்தியா - நியூசிலாந்து ஆட்டத்தை பார்த்த பிறகுதான் புரிகிறது பேருந்தில் மட்டும் கேப்டன் தோனிக்கான வெற்றிடம் இல்லை. அணியிலும் கேப்டன் தோனிக்கான வெற்றிடம் இன்னும் இருக்கிறது. கடைசி நிமிட ஷமியின் அட்டகாச பெர்ஃபார்மால் கைவிட்டுபோன மேட்சை வெற்றிப்பெற்று கெத்து காட்டிவிட்டினர் இந்திய அணியினர். ஆனால் ஷமியின் அதிசயம் நிகழ்ந்த அந்த கடைசி பால் வரை இந்திய வீரர்களின் அட்டிடியுட் அவ்வளவு ரசிக்கும் வகையில் இல்லை. வில்லியம்சன் கொஞ்சம் நின்று பந்தாட தொடங்கும்போதே நம் வீரர்கள் பதற்றமடைய தொடங்கிவிட்டனர். கோலி,சஹால்,பும்ரா,ஷர்துல்,ரோஹித் என எல்லாரும் ஒரு பக்கம் முறைத்துக்கொண்டும் முருக்கிக்கொண்டும் இருந்தனர். இந்த இந்திய அணியை பொறுத்தவரை வெற்றி பெறும் வரை எந்த பிரச்சனையுமில்

லவ் யூ பட் ஹேட் யூ ! - அத்தியாயம் 2 - பப்பி லவ் வித் ரோஷி !

Image
லவ் யூ பட் ஹேட் யூ ! - அத்தியாயம் 2 -  பப்பி லவ் வித் ரோஷி ! லவ் யூ பட்ஹேட் யூ...! அறிமுக அத்தியாத்தை படித்துவிட்டு நீங்கள் கொடுத்த கமெண்டுகளால் 5th std ஸ்டூடண்ட் ஒருவனுக்கு க்ளாஸ் டெஸ்ட்டில் டீச்சர் வெரி குட் போட்டு கூடவே ஒரு ஸ்டார் போட்டால்,  அந்த பையன் எவ்வளவு ஹாப்பியாக இருப்பானோ அப்படி ஒரு சந்தோசமான மோடில் 'இளங்காற்று வீசுதே' பிதாமகன் இளையராஜா பாடலை இயர்போனில் போட்டுக் கொண்டு பார்க் ல் ஒரு குட்டி வாக்கிங் போய்க்கொண்டிருந்தேன். ஸ்கூல் முடிந்த கையோடு வீட்டில் பேக்கை தூக்கி கடாசிவிட்டு வந்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர் கூட்டம்,  இன்னும் கொஞ்ச நாளில் இந்தியாவில் உள்ள மொத்த பார்க்குகளையும் குத்தகைக்கு எழுதி வாங்கிவிடலாமா என்னும் ஐடியாவில் வாக்கிங் போய்க்கொண்டிருக்கும் சுகர் பேஷண்ட்ஸ், இந்த இடத்துல மாநகராட்சிக்கு ஒரு ரெக்யூஸ்ட், ப்ளீஸ்....இந்த பஸ்களிலெல்லாம் கரம்,சிரம்,புறம் நீட்டாதீர் என்று எழுதி போட்டிருப்பது போன்று பார்க்குகளிலும் எழுதிப்போடுங்கள். இட்ஸ் மை கைண்ட் ரெக்யூஸ்ட், இந்த சுகர் பேஷண்டுகள் தொல்லை தாங்கமுடியவில்லை, வாக்கிங் என்ற பெயரில் வாஹா எல்ல

Love You ! But Hate you ! - இது புதுவிதமான 'கேட்ஜெட்' காதல் பகுதி-1 | #Love #Gadgets

Image
லவ் யூ....! பட்... ஹேட் யூ..! 'உன்ன நினைச்சு நினைச்சு உருகிப்போனேன் மெழுகா....நெஞ்ச உதைச்சு உதைச்சு பறந்து போனா அழகா....யாரோ இவளோ எனை தீண்டும் காற்றின் விரலோ..! யாரோ இவளோ தாளாட்டும் தாயின் குரலோ..!' எப்போதும் உடனிருந்து தழுவிக்கொண்டிருக்கும் அன்பு, விரல் தீண்டி கரம்கோர்த்து கீச்சிட தொடங்கினால் நகரும் நொடிகள் ஏற்படுத்தும் நஷ்டத்தை கணக்கில் காட்டாத காதல் முட்டிய கயவுத்தனம், தயக்கமின்றி கொட்டிய உணர்ச்சிகளையும் புலம்பல்களையும் கண்டு ரசிக்கும் பொன்மனம். தழுவிக்கொள்ளும் அன்பிலும் காதல் முட்டிய கயவுத்தனத்திலும் காதலின் பொன்மனத்திலும் கரைந்துபோன ஒரு காதல் கதை இது. Yes,  It's a love Story but அவனுக்கும் அவளுக்குமான காதல்  அல்ல. அவனுக்கும் ஆண்ட்ராய்டுக்குமான காதல் இது. காலையில் எழுந்தவுடன் வாங்கி 3 வருடம் ஆன அந்த மொபைலில் பேட்டர்ன் லாக் ஐ போட்டுவிட்டு, பல் தேய்த்து பாத்ரூமெல்லாம் போய்விட்டு வந்து எடுத்தால்தான் ஸ்கீரின் லாக் ஓப்பன் ஆகியிருக்கும் என்றால் அந்த மொபைலின் நிலை என்ன என்று உங்களுக்கு புரியும். 'ஒடைஞ்சிருந்தாலும் தங்கம் சார்..' ங்ற மாதிரி எவ்வளவுதான் கோளாறாக

20 வயது புதியவர் அல்ல; 70 வயது பெரியவர் என்பதை உணர்ந்து பேசுங்கள் சூப்பர் ஸ்டாரே...! #Rajinikanth #Periyar #SuperStar #Sorry

Image
20 வயது புதியவர் அல்ல; 70 வயது பெரியவர் என்பதை உணர்ந்து பேசுங்கள் சூப்பர் ஸ்டாரே...! தன் மீதான எந்த சர்ச்சைக்கும் பதிலளிக்காதவர், அப்படியே பேசினாலும் அங்குட்டும் இல்லாமல் இங்குட்டும் இல்லாமல் பேசுபவர், இந்த முறை கொஞ்சம் தெளிவாக வெளிப்பட்டிருக்கிறார். உறுதியான வெளிப்பாடா என்பதில் உறுதியில்லை. பொறுத்திருந்து பார்த்தால் புரியுமென நம்புவோம். விஷயத்திற்கு வருவோம், 50 வருடத்திற்கு முன்னால் நடந்த, இன்றைய தேதிக்கு பேசினால் அரசியல் லாபத்தை தவிர ஐந்து பைசாவிற்கும் ப்ரயோஜனமில்லாத ஒரு சர்ச்சையை தூக்கி கொண்டு வந்து களமாடியது ஏன்? 'ஒரு வரி பேசுனா நியுஸுதான் தெரிஞ்ச்சுக்கோ' என்று தர்பார் பாடலில் ஒரு வரி வரும். நிஜத்துலும் கூட உண்மை அதுவே. நீங்கள் பொதுவெளியில் தும்மினால் கூட செய்தியாகிவிடும். அப்பேற்பட்ட ஊடக வெளிச்சத்தின் வீச்சில் சிக்கியிருக்கும் நபர் தாம் பேசும் பேச்சில் அசுர ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும். அரசியல் அறிவிப்புக்கு பிறகு சூப்பர்ஸ்டார் பேசிய எந்த பேச்சும் இந்த ஜாக்கிரதை ரகத்தில் சேராது. ஒரு கொள்கையை பற்றிக்கொண்டு உறுதியான கருத்துக்களை வெளிப்படுத்தும் பேச்சை இதுவரை அவர் உதி

டெல்லி 'தர்பார்' யாருக்கு? Delhi assembly election analysis in Tamil | #Delhi #ArvindKejriwal #Bjp #Congress #AAP

Image
டெல்லி 'தர்பார்' யாருக்கு? பிப்ரவரி 8 ம் தேதி டெல்லி 'தர்பார்' யாருக்கு என  நிர்ணயிக்கப்போகும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் வெடவெடக்க செய்யும் குளிரிலும் தேர்தல் சூட்டால் தகதகக்கிறது தலைநகரான டெல்லி. இந்தியாவின் அதிகார மையமாக டெல்லி இருந்தாலும் யுனியன் பிரதேசம் என்பதால் முதல்வர் பதவிக்கான அதிகாரம் சற்றே குறைவுதான். அருகே பாண்டிச்சேரியில் முதல்வருக்கும் கவர்னருக்கும் நடைபெறும் குடும்பிப்பிடி சண்டைகள் அப்படியே டெல்லியிலும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. காங்கிரஸ்-பிஜேபி என மாறி மாறி ஆட்சியிலிருந்த தேசிய கட்சிகளுக்கு மாற்றாக 2013 ல் சூறாவளியாக தேர்தலில் நுழைந்தது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி. டெல்லியில் அண்ணா ஹசாரே தலைமையில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு மற்றும் லோக்பால் போராட்டம்  தேசம் முழுவதும் கவனம் பெற்றிருந்த காலகட்டம் அது. அந்த போராட்டங்கள் கொடுத்த மைலேஜ்ஜில் அரசியலில் நுழைந்த அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி என்ற கட்சியை தொடங்கி ஒரே வருடத்தில் டெல்லியின் முதல்வரானார். யாரை எதிர்த்து அரசியலில் குதித்தாரோ அவர்களின் ஆதரவோடே (காங்கிரஸ்) ஆட்சியமைக்க நேர்ந

செக்கச்சிவந்த ஆஸ்(தீ)ரேலியா....| Australia Wild fire | Climate Emergency |

Image
செக்கச்சிவந்த ஆஸ்(தீ)ரேலியா..... 'எனக்கு அற்புதங்களின் மீது நம்பிக்கை உண்டு' கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரதமாரக பதவியேற்றுக்கொண்ட ஸ்காட் மாரிசனின் கூற்று இது. உண்மையில் ஸ்காட் நம்புவது போன்ற ஒரு அற்புதம் அரங்கேறினால்தான்  காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியுமோ? என்ற துயரமான நிலையில் உள்ளது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை காட்டுத்தீ என்பது நூற்றாண்டு காலமாக நிகழும் ஒரு சகஜமான சம்பவம். ஆனால் இந்த முறை கொளுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ சகஜம், சராசரி என்ற நிலைகளை தாண்டி மக்களுக்கும் வன உயிரினங்களுக்கும் பெருத்த வாழ்வியல் சங்கடங்களை ஏற்படுத்தியுள்ளது.  இயற்கை அள்ளித்தரும் தண்ணீரை பருகி தாகம் தீர்த்த உயிரினங்கள் கருகிப்போய் குற்றுயிரும் குலையுயிருமாக  மீட்புப்படையினரின் பாட்டில் தண்ணீரை  எதிர்பார்த்து காத்திருக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. செப்டம்பரிலிருந்து இதுவரை நியுசவுத் வேல்ஸ், விக்டோரியா போன்ற பகுதிகளில் மட்டும் கிட்டத்தட்ட 5 மில்லியன் ஹெக்டேர் வனப்பகுதிகள் தீக்கிரையாகி உள்ளன. உலகின் நுரையீரல் என வர்ணிக்கப்படும் அமேசானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீயி

திமுக-காங்கிரஸ் கூட்டணி சலசலப்பும் பிண்ணனியும்.....

உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீட்டில் திமுகவுடன் ஏற்பட்ட மனக்கசப்பில் "இது கூட்டணி தர்மத்துக்கு புறம்பானது என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம்" என சத்தியமூர்த்தி பவன் அதிருப்தி அலையை பரவவிட்டுள்ளது. "இது எங்களின் ஆதங்கம்தானே தவிர மிரட்டல் அல்ல" என ப.சி வாய்ஸ் கொடுத்துள்ளார். உண்மையில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் என்னதான் பிரச்சனை? உள்ளாட்சி தேர்தல் பதவி ஒதுக்குவதில்தான் பிரச்சனையா என்றால் இல்லை என்றே சொல்லலாம். திமுக-காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்ற கொஞ்ச நாளிலே திருச்சியில் நடந்த ஒரு கூட்டத்தில் "காங்கிரஸிற்கு இன்னும் ஏன் பல்லாக்கு தூக்கி கொண்டிருக்க வேண்டும்?" என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் முக்கிய உடன்பிறப்பான கே.என்.நேரு.நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன் ஒரு கூட்டத்தில் ஸ்டாலினும் திருநாவுக்கரசும் மேடையில் இருக்கும் போதே "நாங்குநேரி தொகுதியை எங்களிடம் கொடுத்துவிடுங்கள். நாங்கள் ஜெயித்துக்காட்டுகிறோம்" என திருநாவுக்கரசை பார்த்து  உதயநிதி பேச்சுவாக்கில் கொளுத்திப்போட்டிருப்பார். அதேநேரத்தில்

இளங்காற்று வீசுதே.......! இளம் பிரதமர் சன்னா மரினின் ஸ்டோரி |

Image
இளங்காற்று வீசுதே.... "நான் இந்த நாட்டை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இங்கேதான் ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஒருவர் தன் திறமைகளை வளர்த்துக்கொண்டு நினைத்த இலக்கை அடையமுடியும். இங்கேதான் ஒரு கேஷியர் நாட்டின் பிரதமராக கூட உயரமுடியும்" இது பிரதமர் மோடியின் குரல் அல்ல, ஃபின்லாந்து நாட்டு லேடியின் குரல். சன்னா மரின் என்ற 34 வயதே ஆன பெண்மணி கடந்த டிசம்பர் 10ம் தேதி ஃபின்லாந்து நாட்டின் பிரதமராக பதவியேற்றுக்கொண்ட பிறகு பேசிய வார்த்தைகள்தான் இவை. சன்னா மெரினின் வருகைக்கு பிறகு இளங்காற்று வீசும் இளையோர் மன்றமாக மாறியுள்ளது ஃபின்லாந்து நாடாளுமன்றம். பிரதமர் சன்னா வுடன் கல்வித்துறை அமைச்சராக லீ ஆண்டர்சன், நிதியமைச்சராக கேத்ரி கல்முனி, உள்துறை அமைச்சராக மரியா ஓய்சாலோ ஆகியோரும் பொறுப்பேற்றுள்ளனர். இவர் பெண்கள் என்பதை தாண்டி அனைவரும் 35க்குட்பட்ட இளையோர்கள் என்பது கூடுதல் சிறப்பு. 'என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் நானா செதுக்குனதுடா' என்ற வசனத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாக பொருந்தி போகிறார் பிரதமர் சன்னா. பொருளாதாரரீதியாக பின்தங்கிய குடும்பத்தில் பிறந்

துப்பாக்கி ஸ்டைலில் வந்திருக்க வேண்டிய படம் ஆனால்......| #MyViews #Darbar #DarbarFDFS #DarbarPongal #Rajinikanth #ARM

Image
'ரஜினி சாருக்கு முதல் ல ஒரு ஸ்டோரி பன்னி வச்சிருந்தேன். பேட்ட படம் பார்த்துட்டு வந்த பிறகு அந்த ஸ்டைல் ல பன்னலாமேன்னு வேற ஒரு ஸ்டோரி பன்னிட்டு ரஜினி சார் ட்ட போனேன். ரஜினி சார் சொன்ன கரெக்சனெல்லாம் உடனே உடனே பன்னிட்டு போயி ஓகே வாங்கிட்டேன்' தர்பார் ப்ரொமோஷனுக்காக  இண்டர்வியூ கொடுக்கும் போது ஏ.ஆர்.முருகதாஸ் கூறிய தர்பாரின் முன்கதை இது. உண்மையில் ஏ.ஆர்.முருகதாஸ் என்னும் இயக்குனர் தோற்றுப்போன இடமும் இதுதான். மும்பையில் 17 போலீஸ்காரர்களை போலீஸ் ஸ்டேசனிலேயே எரித்துக் கொன்றுவிட்டு வெளிநாடு தப்பிச்சென்ற அரக்கத்தனமான வில்லனும் ரஃப் அண்ட் டஃப் ஆன ஆதித்ய அருணாச்சலம் எனும் வில்லத்தனமான போலீஸீம் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் எப்படியிருக்கும்? தனிஒருவன் மாதிரியான வெறித்தனமான வில்லன்-போலீஸ் படமாக அமைந்திருக்கும். அப்படி அமைவதற்கான அத்தனை வாய்ப்புகளும் காட்சியமைப்புகளும் இருந்தும் முருகதாஸ் கோட்டைவிட்டிருக்கிறார்.  இயக்குனர் முருகதாஸ் இந்தப் படத்தை எடுப்பதற்கு பதிலாக ரஜினி வெறியரான முருகதாஸ் இந்தப் படத்தை எடுத்ததுதான் மிகப்பெரிய பிரச்சனை. படத்தில் ரஜினிக்கு 8736 ஸ்லோ மோஷன

எங்களுக்கும் காலம் வரும் - காங்கிரஸ் 135 ஸ்பெசல் !

Image
உ.ஸ்ரீராமநாராயணன் இந்தியா  இருக்கும்  வரை காங்கிரஸூம் இருக்கும்..! பிரிட்டிஷாரை எதிர்த்து போராடிய ஒரு கட்சி, ஒரு பிரிட்டிஷ்காரரால் தொடங்கப்பட்டது என்ற வினோத விசித்திரத்தோடு தொடங்ககிறது காங்கிரஸ் கட்சியின் வரலாறு. 1857இல் நடைபெற்ற 'முதல் இந்திய சுதந்திரப் போர்' என்றழைக்கப்படும் சிப்பாய் கலகம் ஒரு ஆயுத புரட்சியாகும். மக்களின் கோரிக்கைகளை அரசிடம் தெரிவிப்பதற்கு ஒரு அமைப்பு இல்லாத காரணத்தால்தான் இதுபோன்ற  ஆயுத புரட்சி எல்லாம் நடைபெறுகிறது என்பதை உணர்ந்து,  ஆலன் ஆக்டேவியன் ஹியூம்  என்ற பிரிட்டிஷ்காரரால்  தான் காங்கிரஸ் இயக்கம் தொடங்கப்பட்டது. உமேஷ் சந்திர பானர்ஜி,  சுரேந்திரநாத் பானர்ஜி, ஜி.சுப்ரமணிய ஐயர் போன்ற பல தலைவர்கள் ஆலோசனை செய்து 1885 ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி மும்பை மாநகரில் புனே மாநாட்டில்  காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. அதன் பிறகு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் ஏதாவது ஒரு ஊரில் கூடி பிரிட்டிஷ் அரசுக்கு ஒரு சில கோரிக்கைகளை காங்கிரஸார் முன்வைப்பார்கள். அந்த காலக்கட்டத்தில் அரசுக்கு எதிராக போராடுகிற மனநிலை அந்த இயக்கத்திற்கு கிடையாது. அன்றைக்கு பிரிட்டிஷ் அரசிடம