தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே ! கற்றுக்கொள்ளுங்கள் விராட் #IndvsNz #Kohli #Dhoni

தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே !

கற்றுக்கொள்ளுங்கள் விராட் !

இன்றைய ஆட்டத்திற்கு முன்பாக இந்திய வீரர்களின் பேருந்து பயணத்தில் சஹால் ஒரு வீடியோ எடுத்து அப்லோட் செய்திருந்தார். பேருந்தின் ஒரு சீட்டை குறிப்பிட்டு இதில்தான் கேப்டன் தோனி அமருவார். இப்போது இந்த சீட் காலியாக உள்ளது. வீ மிஸ் யூ தோனி ! என கூறியிருப்பார்.




இன்றைய இந்தியா - நியூசிலாந்து ஆட்டத்தை பார்த்த பிறகுதான் புரிகிறது பேருந்தில் மட்டும் கேப்டன் தோனிக்கான வெற்றிடம் இல்லை. அணியிலும் கேப்டன் தோனிக்கான வெற்றிடம் இன்னும் இருக்கிறது. கடைசி நிமிட ஷமியின் அட்டகாச பெர்ஃபார்மால் கைவிட்டுபோன மேட்சை வெற்றிப்பெற்று கெத்து காட்டிவிட்டினர் இந்திய அணியினர். ஆனால் ஷமியின் அதிசயம் நிகழ்ந்த அந்த கடைசி பால் வரை இந்திய வீரர்களின் அட்டிடியுட் அவ்வளவு ரசிக்கும் வகையில் இல்லை. வில்லியம்சன் கொஞ்சம் நின்று பந்தாட தொடங்கும்போதே நம் வீரர்கள் பதற்றமடைய தொடங்கிவிட்டனர். கோலி,சஹால்,பும்ரா,ஷர்துல்,ரோஹித் என எல்லாரும் ஒரு பக்கம் முறைத்துக்கொண்டும் முருக்கிக்கொண்டும் இருந்தனர். இந்த இந்திய அணியை பொறுத்தவரை வெற்றி பெறும் வரை எந்த பிரச்சனையுமில்லை, ஆனால் தோல்வியடையும் போதோ, தோல்வியை நெருங்கும்போதோ தான் இன்னொரு முகம் வெளிப்படுகிறது. தோனி கேப்டனாக இருக்கும் வரை எந்த ஒரு வீரரும் இப்படி அடுத்தவரை முறைக்கும், தவறுகளை அடுத்தவர் தலையில் கெட்டும் வகையில் கோபிக்கும் அட்டிடியுட்களை காண்பிக்கமாட்டார்கள். சென்னை அணியில் தீபக் சாஹர் ஆடும்வரை எங்கேயும் கோபத்தையும் அதிருப்தியையும் வெளிக்காட்டாமல் இருந்தார்.ஏனெனில் தோனியே அந்த மாதிரியான வீரர்தான்.
 அதே சாஹர் கடந்த சீரிஸ்களில் கோலியின் கேப்டன்ஷியில் ஆடும்போது பயங்கர எக்ஸ்ப்ரஸ்ஸிவ்வாக இருந்தார்.  தோனிக்கு ஒரு ஆட்டத்தின் ஆழம் புரிந்திருக்கும் எப்போது வேண்டுமானலும் ஒரே பந்தில் கூட ஆட்டம் மாறும் என்பதை உணர்ந்திருப்பார். அந்த ஒரு பந்தும் நம் பவுலர்களிடமிருந்துதான் வரும் என்பதை அறிந்து யாரையும் பதற்றப்படுத்தமாட்டார். அந்த கூல் மைண்ட் செட் தான் பதற்றமான சூழ்நிலைகளில் தற்போது கேப்டன் கோலியிடமும் இந்திய அணியிடமும் மிஸ்ஸிங். முன்பை போல  அந்தளவுக்கு ஆக்ரோஷமான கோலி தற்போது இல்லைதான் இருந்தாலும் கோலி ஒரு வீரர் மட்டும் இல்லை கேப்டன் என்பதை உணர்ந்து எல்லாவற்றிற்கும் எக்ஸ்ப்ரஸ்ஸிவாக இருப்பதை கொஞ்சம் குறைக்கலாம். தலைவன் எவ்வழியோ....தொண்டனும் அவ்வழியே....கோலி மாறினால் சஹால்,பும்ரா,ஷர்துல் எல்லோருமே மாறுவார்கள்.

#IndVsNz
#BCCI
#Kohli
#Dhoni

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review