Posts

Showing posts from August, 2018

ஒரு அதிமுக MLA கூட இல்லாத மாவட்டம் !

Image
கடந்த 2016 மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது அதிமுக. ஆனால் இக்கட்சி சார்பில் கன்னியாகுமரியில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இதனால் கன்னியாகுமரியில் அதிமுக சார்பில் ஒரு MLA கூட இல்லாத நிலை உள்ளது. கன்னியாகுமரி மொத்தம் ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உடையது. இதில் 3 தொகுதிகளில் திமுக வும், 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் வெற்றி பெற்று MLA க்களாக உள்ளனர். 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக வும் காங்கிரஸ் ம் ஒரே கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாவட்டத்தில் உள்ள ஒரு பாராளுமன்ற தொகுதியிலும் பிஜேபி யே வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 2014 நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில், 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக வினால் கன்னியாகுமரியில் வெல்ல இயலவில்லை.

தமிழகம் வாழ்வதற்கு தகுதியான இடமா ?

Image
இந்தியாவில் வாழ்வாதாரம் மிக்க நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள 111 நகரங்களில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறப அமைச்சகம் உலக வங்கியின் உதவியுடன் செய்த இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் இந்திய அளவில் முதல் இடத்தை புனே வும், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை நவிமும்பை மற்றும் கிரேட்டர் மும்பை பெற்றுள்ளது. கடைசி இடமான 111 ஆவது இடத்தை உத்திரபிரதேசத்தின் ராம்பூர் பெற்றுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 12 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு: திருச்சி - 12 வது இடம் சென்னை - 14 வது இடம் கோயம்புத்தூர் - 25 வது இடம் ஈரோடு - 26 வது இடம் மதுரை - 28வது இடம் திருப்பூர் - 29 வது இடம் திருநெல்வேலி - 37 வது இடம் திண்டுக்கல் - 40 வது இடம் சேலம் - 42 வது இடம் வேலூர் - 48 வது இடம் ஆகியவற்றை பெற்றுள்ளது. இவை அனைத்தும் நகர நிர்வாகம், பொருளாதாரம், அடிப்படை வசதிகள்,நீர் மேலாண்மை, பூங்காக்கள் போன்ற காரணிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. முழுப் பட்டியல் : 1. Pune 2. Navi Mumbai 3. Greater Mumbai 4. Tirupati 5. Chandigarh 6. Thane

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான் - முழு விவரம்

Image
 பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக பிடிஐ கட்சியின் தலைவர் இம்ரான் கான் இன்று(18.08.2018) பதவியேற்றார். கடந்த ஜீலை 25 ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. 272 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேர்தல் முடிவு : பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்றது . நவாஸ் ஷெரீப் ன் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி 64 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களிலும் சுயேட்சைகள் 13 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தனர். பெரும்பான்மை ? ஆட்சியமைக்க தேவையான 137 பெரும்பான்மை உறுப்பினர்களை எந்த கட்சியும் பெறவில்லை. இதனால் பிரதமர் பதவிக்கு இழுபறி ஏற்பட்டது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி மற்ற சிறு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைப்பதாக முடிவு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 11 ம் தேதி இம்ரான் கான் பதவியேற்பதாக இருந்தார். தற்போது ஒரு வார தாமதத்துக்கு பிறகு இன்று ( 18.08.2018 ) பதவியேற்றுள்ளார். இன்று காலை இஸ்லாமாபாத் ல்

கேரளாவுக்கு நிதியுதவி செய்வது எப்படி ? #PrayforKerala

Image
கேரள மாநில மக்கள் பயங்கரமான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மக்கள் மீண்டு வருவதற்காக பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர். நாமும் கேரளாவுக்கு நிதியுதவி செய்ய வேண்டும் எனில் எவ்வாறு செய்ய வேண்டும் என்று பார்ப்போம். கூகுளுக்கு சென்று Cmdrf kerala என்று சர்ச் செய்யுங்கள். அதில் வருவதில் cmdrf.Kerala.gov.in என்று இருப்பதை க்ளிக் செய்யவும்.  அதனுள் சென்றவுடன் DONATE ONLINE என்று இருப்பதை க்ளிக் செய்யவும். க்ளிக் செய்தவுடன் இவ்வாறு வருவதில் உங்களது தகவல்களை தெரிவித்து உங்களால் முடிந்த பண உதவியை கேரள மக்களுக்கு செலுத்தலாம். ஆன்லைன் மூலம் பண உதவி செலுத்த இயலாதவர்கள் அருகிலுள்ள வங்கிக்கு சென்று பணம் செலுத்தும் படிவத்தில் பின்வரும் தகவல்களை நிரப்பியும் பண உதவி செய்யலாம். BANK TRANSFER Bank : State Bank of India (SBI) Account Number : 67319948232 Branch : City Branch, Thiruvananthapuram IFSC : SBIN0070028 PAN: AAAGD0584M Account Type: Savings SWIFT CODE : SBININBBT08 Na

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் - முழு தகவல்கள்

Image
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும் மூன்று முறை இந்திய பிரதமருமாக இருந்த பிஜேபி யை சேர்ந்த அடல் பிஹாரி வாஜ்பாய் (93 வயது ) அவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று (16-08-2018) மாலை 5.05 மணியளவில் உயிரிழந்தார். இதனை எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் தெரியப்படுத்தியுள்ளது. வாஜ்பாய் திருமணம் ஆகாதவர். அவருக்கு நமீதா பட்டாச்சார்யா என்ற வளர்ப்பு மகள் மற்றும் ரஞ்சன் பட்டாச்சார்யா என்ற மருமகனும் உள்ளனர். கடந்த ஜுன் மாதம் 11ம் தேதி சிறுநீரக பிரச்சனை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா போன்றோர் நலம் விசாரித்து சென்றிருந்தனர். கடந்த 9 வார காலமாக சீராக இருந்த அவரது உடல்நிலை கடந்த 36 மணி நேரமாக பின்னடவை சந்தித்தது. இதன் காரணமாக அவர் உயிர்பிரிந்தது என்று மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி அஞ்சலிக்காக மருத்துவமனையிலிருந்து வாஜ்பாய் அவர்களின் இல்லத்திற்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட இருக்கிறது.

நெஞ்சு பொறுக்குதில்லையே - சுதந்திரம் ?

Image
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளுள் ஒன்றான இந்தியா தனது 72 வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. சுதந்திரம் என்றால் என்ன? என்றால், வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை காந்திஜி,நேரு,நேதாஜி போன்ற தலைவர்கள் போராடி சுதந்திரம் பெற்று தந்தனர் என்பதே பதிலாக வரும். அடிமைத்தனத்திலிருந்து மீள்வது மட்டுமே சுதந்திரம் அல்ல. இன்று வறுமை, வேற்றுமை , வன்முறை போன்றவை ஒரு தரப்பினரால் மற்றொரு தரப்பு மீது திணிக்கப்பட்டு வருகிறது. வன்முறை : ஓடி விளையாடு பாப்பா- நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என்றார் முண்டாசுக் கவிஞர் பாரதி காஷ்மீர் மாநிலத்தில் கத்துவா வில் 8 வயது சிறுமி ஆஸிபா வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதுவே மிகப்பெரிய கொடுமை இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நாட்டை ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே ஊர்வலம் செல்கின்றனர் இதை என்னவென்று சொல்வது ? ஓடி விளையாடிக் கொண்டிருந்த பாப்பாவை ஒரேடியாக ஓய்வெடுக்க செய்து விட்டனரே.. வறுமை : தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. இன்று இந்தியாவின் தலைநகராக இருக்கக்கூடிய டெல்லியில் மனைவி மற்றும் மூன்ற

தேசத்தலைவர்களை போற்றும் நெல்லை மாவட்ட நூலகம் !

Image
நெல்லை மாவட்ட மைய நூலக சுவரில் விடுதலைப் போராட்ட வீரர்களின் படங்கள் வரையப்பட்டுள்ளது. இந்தியா தனது 72 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் வேளையில் சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் வகையில் நெல்லை மாவட்ட மைய நூலகத்தின் சுவரில் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய விடுதலை போராட்ட வீரர்களின் படங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. காந்தியடிகள், நேரு, அம்பேத்கர், வாஞ்சிநாதன், வ.உ.சி,பாலகங்காதர திலகர்  உட்பட பலரின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. மாவட்ட மைய நூலகம் சார்பில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு சிவராம் கலைக்கூட மாணவர்கள்,ஆசிரியர்களின் வழிக்காட்டலுடன் நூலக சுவரில் ஓவியங்களை வரைந்தனர்.

கேரளாவின் நாகரீக அரசியல் ! தமிழகத்திலும் ஏற்பட்டால் நல்லாயிருக்குமே

Image
ஆளுங்கட்சி எதிர்க்கட்சி தலைவர்கள் என்றாலே ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதும் குற்றச்சாட்டுக்களை கூறுவதும் தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடுவதுமே தமிழ்நாட்டில் நாம் பார்த்த அரசியல், ஆனால் கேரளாவில் நாம் வியந்து பார்க்கும் அளவுக்கு நாகரீகமான அரசியல் செயல்பாடுகள் இருந்து வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக அங்குள்ள 24 அணைகளும் நிரம்பி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை முழுவதுமாக நிரம்பி ஐந்து மதகுகளிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக கேரளாவில் பயங்கர வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இன்று இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளை காண்பதற்காக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன்(மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட்) அதிகாரிகளுடன் தனி ஹெலிகாப்டர் மூலம் சென்றிருந்தார். அவருடன் எதிர்க்கட்சியின் சட்டமன்ற தலைவர் ரமேஷ் சென்னிதாலாவையும்(காங்கிரஸ்) அழைத்து சென்றார். எதிரெதிர் கட்சித் தலைவர்கள் ஒன்றாக செயல்படுவது பாரட்டுக்களை பெற்றுள்ளது. மேலும் 08.08.2018 அன்று கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் ப

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

வங்கிகளில் தொழில் தொடங்குவதற்காகவோ பிற தேவைகளுக்காகவோ கடன் பெற்று விட்டு திருப்பி செலுத்தவில்லையெனில் அது வாராக்கடன் ஆகும். இந்திய வங்கிகளுக்கு தற்போது இருக்கும் மிகப்பெரிய தலைவலி இந்த வாராக்கடன்கள் தான். இந்தியாவில் உள்ள 21 பொதுத்துறை வங்கிகளில் 19 பொதுத்துறை வங்கிகள் தற்போது வாராக்கடன் உள்ளிட்ட பிரச்சனைகளால் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. எடுத்துக்காட்டாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான் காலாண்டின் நஷ்டம் 4,876 கோடி ஆகும்.வங்கியின் மொத்த வாராக்கடன் 10.69% ஆகும். இந்தியாவின் மொத்த வாராக்கடன் 8.6 லட்சம் கோடிக்கும் மேல் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பெரிய தொழிலதிபர்கள் வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதே ஆகும். நீரவ் மோடி மற்றும் மெகுல் கோக்சி 13,500 கோடி விஜய் மல்லையா 9000 கோடி, விக்ரம் கோத்தாரி 800 கோடி என வங்கிகளில் கடன் பெற்று  தப்பிச் சென்று விட்டனர் என்று நாம் செய்தித்தாள்களில் படித்திருப்போம். தப்பிச்சென்ற இவர்களில் ஒருவரை கூட இன்னும் வெ

காமராஜர் இறப்பின் போது நடந்தது என்ன?

கலைஞர் கருணாநிதி இறப்பின் போது அதிகம் பகிரப்பட்ட தகவல் கருணாநிதி காமராஜர் இறந்த போது அவரை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர மறுத்தார் என்பதாகும். ஆனால் உண்மையில் நடந்தது என்ன? அக்டோபர் 2,1975 அன்று காமராஜர் இறந்த போது அவரது இறுதிச் சடங்குகள் தேனாம்பேட்டையில் இருந்த காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து நடப்பதாக இருந்ததாம்.ஆனால் கருணாநிதிதான் காமராஜர் ஒரு தேசிய தலைவர் அதனால் அவரது இறுதி சடங்கினை காந்தி மண்டபத்து அருகில் வைத்து நடத்துவதே சிறந்தது என்று கூறி அதற்கான இடத்தையும் ஒதுக்கி காமரஜருக்கு பெருமை சேர்த்தார்.மேலும் யாரும் காமரஜருக்கு மெரினாவில் இடம் கேட்டு கோரிக்கையும் வைக்கவில்லை. இந்த தகவலை அப்போதய காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் பழ.நெடுமாறன் அவர்கள் பகிர்ந்துள்ளார்.

கலைஞர் தொடர்பாக இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட புகைப்படங்கள்

Image
 மெரினாவில் கலைஞரை அடக்கம் செய்ய நீதிமன்றம் அனுமதியளித்தது தெரிந்து உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்ட காட்சி.  கலைஞர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடி ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் ஆறுதல் கூறினார்.  கலைஞர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ள சந்தனப் பேழை.  கலைஞர் கருணாநிதி தனது இறுதிக் காலங்களில் பயன்படுத்திய தானியங்கி நாற்காலி தனித்து இருக்கும் புகைப்படம்.  2000ம் ஆண்டு ஒரு இதழின் அட்டைப் படத்தில்  வெளியான புகைப்படம். ஓடிசா மாநில கடற்கரையில் கலைஞர் கருணாநிதியை போற்றும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த மணற் ஓவியம்.

கலைஞர் கருணாநிதிக்கு சிகிச்சை அளித்த கின்னஸ் சாதனை டாக்டர் !

Image
கலைஞர் கருணாநிதி 28.07.18 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்பட்டிருந்த கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு உலகப் புகழ்பெற்ற டாக்டர் முகமது ரேலா தலைமையிலான குழு சிகிச்சை அளித்தது. ரேலா உலகம் முழுவதும் 4000க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்தவர். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் இவர் கடந்த 1997 ம் ஆண்டு பிறந்து ஐந்தே நாளான பெண் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தார். அந்த பெண் தற்போது அயர்லாந்தின் ட்ரினிட்டி கல்லூரியில் சட்டம் படித்து வருகிறார்.                            முகமது ரேலா இதற்காக  2000ம் ஆண்டு இவர் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இவரின் சொந்த ஊர் நாகப்பட்டினமத்திலுள்ள மயிலாடுதுறை. சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப்படிப்பை முடித்துள்ளார். லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் தலைசிறந்த கல்லீரல் மருத்துவராக பணியாற்றியுள்ளார்.

போராடி வென்ற திமுக - மெரினாவில் இடமளிக்க உத்தரவு

மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகே கலைஞர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வேண்டும் என திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தை அனுகினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் மற்றும் சுந்தர் ஆகியோர் மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகே கலைஞரின் உடலை அடக்கம் செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டனர். நேற்று மாலை 6:10 க்கு கருணாநிதி மறைவிற்கு பிறகு குடும்பத்தினர் மற்றும் தொண்டர்கள் துயரத்தில் ஆழ்ந்தனர்.இத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் வன்முறை போன்ற விரும்பத்தகாத விஷயங்களில் ஈடுபடாமல் ஜனநாயக ரீதியில் சட்டப்போராட்டம் நடத்தி வென்றிருப்பது திமுகவினர் கலைஞருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி ஆகும்.

கருணாநிதி நேற்று முதல் இன்று வரை..

நேற்று (06.08.18) மதியம் முதலே காவேரி மருத்துவமனை வளாகம் பரபரப்பாக தொடங்கியது. காரணம் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவரை சந்திக்க அழைத்து வரப்படாத அவரது துணைவியார் தயாளு அம்மாள் நேற்று முதல் முறையாக மருத்துவமனைக்கு கலைஞரை காண்பதற்காக அழைத்து வரப்பட்டிருந்தார். அதன்பிறகு காவேரி மருத்துவமனைக்கு சென்று விட்டு வெளியே வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு கலைஞரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்ப்ட்டுள்ளது.கடவுளை பிராத்திப்போம் என பேட்டியளித்து சென்றார்.இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்களின் வருகையும் மெதுவாக அதிகரிக்க தொடங்கியது.மாலை 4:30 மணியளவில் செயல் தலைவர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு வந்தார் அவரை தொடர்ந்து குடும்ப உறுப்பினர் கொஞ்சம் கொஞ்சமாக மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர்.மருத்துவமனையின் அறிக்கையை எதிர்பார்த்து தொண்டர்கள் வெளியே காத்திருக்க மாலை 6:30 மணியளவில் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இது மேலும் தொண்டர்களை கவலையடயச் செய்வதாக இருந்தது.அதில் கூறப்பட்டிருந்ததாவது: கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ளது.வயது

கருணாநிதியின் உடல்நிலை இதுவரை..

18.07.18 - உடலில் பொருத்தப்படிருந்த ட்ரக்கியோஸ்டோமி கருவியை மாற்றுவதற்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார். 26.07.18 - வயது முதிர்வின் காரணமாக கலைஞர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளது.கோபாலபுரம் இல்லத்திலேயே மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தார். 28.07.18 - நள்ளிரவு 1:30 மணியளவில் திடீரென ஏற்பட்ட இரத்த அழுத்தக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு இரத்த அழுத்தம் சீரானது.மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தார். 28.07.18 - இரவு 8 மணிக்கு வெளியான அறிக்கையில் கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. 29.07.18 - இரவு 9:50 மணிக்கு வெளியான அறிக்கையில் கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு பின் தற்போது கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை முன்னேறி வருவதாக கூறப்பட்டிருந்தது. 31.07.18 - கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது. வயது முதிர்வின் காரணமாக தொடர்ந்து மருத்துவமனையிலலிருந்து சிகிச்சை பெற வேண்டும். மேலும் கல்லீரல் பாதிப