முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் - முழு தகவல்கள்
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும் மூன்று முறை இந்திய பிரதமருமாக இருந்த பிஜேபி யை சேர்ந்த அடல் பிஹாரி வாஜ்பாய் (93 வயது ) அவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று (16-08-2018) மாலை 5.05 மணியளவில் உயிரிழந்தார். இதனை எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் தெரியப்படுத்தியுள்ளது.
வாஜ்பாய் திருமணம் ஆகாதவர். அவருக்கு நமீதா பட்டாச்சார்யா என்ற வளர்ப்பு மகள் மற்றும் ரஞ்சன் பட்டாச்சார்யா என்ற மருமகனும் உள்ளனர்.
கடந்த ஜுன் மாதம் 11ம் தேதி சிறுநீரக பிரச்சனை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா போன்றோர் நலம் விசாரித்து சென்றிருந்தனர். கடந்த 9 வார காலமாக சீராக இருந்த அவரது உடல்நிலை கடந்த 36 மணி நேரமாக பின்னடவை சந்தித்தது. இதன் காரணமாக அவர் உயிர்பிரிந்தது என்று மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி அஞ்சலிக்காக மருத்துவமனையிலிருந்து வாஜ்பாய் அவர்களின் இல்லத்திற்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட இருக்கிறது.

Comments
Post a Comment