Posts

Showing posts from April, 2020

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

சச்ச்சின்...சச்ச்ச்ச்சின்....சச்ச்ச்ச்சின்... அன்பே சச்சின் !!!! 'God of Cricket' சச்சின் டெண்டுல்கரின் பிறந்தநாள் இன்று. உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது சச்சின் மெமரிஸ்களை சிலாகித்து ஷேர் செய்து வருகின்றன. 'ஐ டெல் ப்யூப்புள் யூ நோ. சச்சின் விளையாட வந்தா என்னை கூப்டுங்கன்னு' சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் படத்தில் தோனி பகிர்ந்து கொண்ட சச்சின் மெமரி இது. தோனி மட்டுமில்லை இன்றைக்கு ரசிகர்களால் கொண்டாடப்படும் கோலி, ரோஹித் போன்ற  பலருக்கும் சச்சின் தான் இன்ஸ்பிரேஷன். சோஷியல் மீடியாக்களில் 2கே கிட்களை பார்த்து 80ஸ்-90ஸ் கிட்கள் பொறாமைப்படுவதை போல் பல போஸ்ட்களும் மீம்களும் உலாவிக்கொண்டிருக்கும். இன்றைய ஜென்z 2கே கிட்களின் எண்டர்டெயின்மெண்டும் நாஸ்டாலஜிக்கள் சூழ் உலகில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் 80-90ஸ் கிட்களின் அந்த கால ரசனைகளை  சுரண்டிபார்ப்பதுதான். ஆனால் தனிப்பட்ட முறையில் ஒரு 2கே கிட்டாக அந்த காலத்து ஆட்கள் மீது எனக்கு ஒரு பொறாமை உண்டு. ஆர்கானிக்கான எல்லா விஷயங்களையும் அனுபவித்து வாழ்ந்த தலைமுறையினர் அவர்கள்தான். உணவுப்பொருள்களில் இயற்கையான எல்லாவற்

World Book Day !!!

Image
#WorldBookDay ! 2018 நெல்லை புக் ஃபேர். அந்த எக்சிபிசன் நடந்தப்போ 10 நாளும் சும்மா போயி ஒவ்வொரு கடையா சுத்தி பார்த்திட்டு வந்துருவன். (எக்சிபிசன் தான வாங்கனும் னு அவசியம் இல்லையே😇) நம்ம பொறுத்தவரை ஸ்கூகுல் காலேஜ் படிக்கும் போது கைட் வாங்குனதோட சரி, மத்தபடி வேறெந்த புக்குக்கும் துட்டு செலவழிச்சதில்ல. மற்ற புக்குகள படிக்கிற பழக்கமும் இல்ல. அப்பதான் இந்த நெல்லை புக் ஃபேர் போட்டாங்க, அதுக்கு சும்மா டெய்லி போய் சுத்திட்டு, கடைசி நாள்ல இவ்ளோ நாள் வந்ததுக்காச்சு எதாது ஒரு புக் வாங்குவோம்னு பார்த்தா அங்க 100 புக் ஸ்டால் ல லட்சக்கணக்கான புக் இருந்துச்சு. எனக்கு புக் பத்திலாம் ஒரு விவரமும் தெரியாததுனால எத வாங்குறதுன்னு பயங்கர கன்ஃபியுசன். அப்பதான் தூரத்துல நம்ம விஜய் டிவி கோபிநாத் மைக் பிடிச்சிக்கிட்டு நிக்குறா மாதிரி ஒரு ஃபோட்டோ இருந்துச்சு, நேரா அங்க போய் பார்த்தா ப்ளீஸ் இந்த புக்க வாங்காதீங்கன்னு இந்த புக்கு இருந்துச்சு. எதை செய்யக்கூடாதுன்னு சொல்றாங்களோ அதை முதல்ல செய்றதுதான நம்மளோட மைண்ட் செட்😂 நானும் உடனே வாங்காதீங்கனு போட்ருந்த இந்த புக்க வாங்கிட்டேன். புக் வாங்குறதுக்கு நா வச்சிருந்த

யாருடைய எலிகள் நாம்!? - Book Review

Image
லாக்-டவுன் நாளில் வெற்றிகரமாக முழுமையாக ஒரு புத்தகத்தை படித்து முடித்துவிட்டேன். சமஸின் #யாருடைய_எலிகள்_நாம்? பல காலக்கட்டங்களில் சமஸ் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு. நெல்லை புத்தகக்கண்காட்சியில் அவர் சிறப்புரையாற்றிய அன்று வாங்கிய புத்தகம். அரசியல்,பொருளாதாரம்,வெளியுறவு,சூழலியல்,வரலாறு,மருத்துவம் என பல தலைப்புகளில் பரந்துப்பட்ட கருத்துக்களாக விரிகிறது கட்டுரைகள். சமஸ் எழுத்துக்களில் அதிகாரப்பரவல் என்கிற விஷயம்தான் அடிநாதமாக இருக்கும். இதிலும் அப்படித்தான். கிட்டத்தட்ட அவருடைய எல்லா கட்டுரைகளும் சாமானியன் பங்களிப்பையும் சாமானியனுக்கான பயன்பாட்டையும் இந்த அரசாங்கங்கள் உறுதி செய்திருக்கின்றனவா!? என்பதை கேள்விக்குறியாக்கி பிரச்சனைகளை இருதரப்பிலிருந்தும் அலசுகிறது. விடுதலைப்புலிகள், தூக்குத்தண்டனை, தனியார்மயமாக்கல், பார்ப்பணியம் ஆகியவற்றிலெல்லாம் இந்த சமூகத்தின் பொதுப்புத்திகளையெல்லாம் உடைத்தெறிந்து பேசியிருப்பது சிறப்பு. நமக்குள் ஒழிந்திருக்கும் ஜாதிய ஆதிக்கத்தை பிராமணர்கள் பெயரை சொல்லி வசதியாக மறைத்துக்கொள்கிறோம். அவர்கள் மீது எல்லா பழிகளையும் சுமத்திவிட்டு நம்மை கேள்விக்குள்ளாக்

ஆஸ்கரை புறக்கணிக்கும் ரஜினி ! வாழ்க்கை ஒரு வட்டம்டா....வாழு விடு.... ட்ரம்புக்கு கோலிவுட் ஸ்டார்களின் பதிலடி...

ஆஸ்கரை புறக்கணிக்கும் ரஜினி ! வாழ்க்கை ஒரு வட்டம்டா....வாழு விடு.... ட்ரம்புக்கு கோலிவுட் ஸ்டார்களின் பதிலடி... ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை வழங்கி உதவுமாறு  இந்தியாவிடம் காலிங் பெல் அடித்துக்கொண்டிருக்கின்றன உலகநாடுகள்.  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒருபடி மேலே சென்று மாத்திரைகளை வழங்காவிட்டால் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என மிரட்டல் நெடி வீச ப்ரஸ்மீட்டில் பேசிவிட டிரம்பையும் மோடியையும் இந்த வார கண்டெண்ட்டாக மாற்றி ட்ரோல்களை பறக்கவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். இந்திய பிரதமரையே மிரட்டும் தொனியில் பேசிய ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நம்ம கோலிவிட் ஸ்டார்கள் ஒரு ப்ரஸ் மீட் வைத்தால் எப்படியிருக்கும்!? சும்மா கற்பைனையாக மைக் பிடிப்போம்.... வணங்கம்ட்டி....ட்ரம்ப் மாப்ளே கோலிவுட்லருந்து..... ரஜினிகாந்த் : அமெரிக்காவின் ஆஸ்கரை புறக்கணிக்கிறேன் ! வணக்கம் மிஸ்டர் ட்ரெம்ப், ட்ரம்ப் அவர்களோட அந்த பேட்டிய பார்த்து கொதிச்சு போயிருக்கேன். 'தனக்கு போகதான் தானமும் தர்மும்' அப்டினு எங்க முன்னோர்கள் சித்தர்கள் அப்பவே சொல்லிருக்காங்க...ஸோ டெஃபெனட்லியா எங்க