Posts

Showing posts from April, 2021

எளியவனை எளியவனுக்கு எதிராகவே கொம்பு சீவிவிடும் கபடத்தனம்!

எளியவனை எளியவனுக்கு எதிராகவே கொம்பு சீவிவிடும் கபடத்தனம்! கடந்த சில நாட்களுக்கு முன்பு Vikatan EMagazine பக்கத்தில் ஒரு கார்ட் போஸ்ட் செய்திருந்தார்கள். அதில், சிலிண்டர் டெலிவரி செய்பவர்கள் கூடுதல் பணம் கேட்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என கேட்கப்பட்டிருந்தது. அந்த போஸ்ட்டின் கீழே கமெண்ட் பாக்ஸில், நூற்றுக்கணக்கான பேர் தங்களுடைய ஆதக்கங்களை கொட்டித் தீர்த்திருந்தார்கள். பெரும்பாலான கமெண்ட்டுகள் சிலிண்டர் டெலிவரி செய்பவர்களை பகற்கொள்ளையர்கள் என சித்தரிக்க முயல்வதாகவே இருந்தது. இந்த எண்ணம் பெரும்பாலான மக்களிடம் இருப்பதாக உணர்கிறேன். 'இவனுக கம்பெனிலயும் சம்பளம் வாங்கிப்பானுக..நம்மக்கிட்ட டிப்ஸுங்ற பேர்லயும் கொள்ளையடிப்பானுக' என பேசப்படுவதை காதுபட பல இடங்களில் கேட்டிருக்கிறேன். என்னுடைய அப்பா 25 வருடத்திற்கும் மேலாக சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். அதனால் உண்மை என்ன என்பது எனக்கு கொஞ்சம் தெரியும். அதை விளக்குவதற்காகவே இந்த பதிவு. முதலில் மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய ஆதங்கம், இவனுக கம்பெனிலயும் சம்பளம் வாங்குறானுக என்பதே. ஆனால், உண்மை என்ன தெரியுமா?? 25 வ