நேர்மையின் நாயகன்-டி என்.சேஷன் | T.N.Sesan | Sesan |
நினைவேந்தல் நேர்மையின் நாயகன் ; 'நான் ஒன்றும் இந்திய அரசாங்கத்தின் ஊழியர் கிடையாது அவர்கள் சொல்வதை கேட்பதற்கு, நான் இந்திய நாட்டின் ஊழியர்' என துணிச்சலாக பேசி ஒரு தேர்தல் ஆணையருக்குள்ளான அனைத்து அதிகாரங்களையும் முழுமையாக பயன்படுத்தி தேர்தல்களத்தில் பல புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வந்தவர்தான் டி.என்.சேஷன் என்ற திருநெல்லை நாராயண சேஷன் ஆவர். ஆட்சியில் இருப்பவர்களின் ஆக்டோபஸ் கரங்கள் அரசு நிர்வாகம் முழுவதும் பரவியிருக்கும் இந்தியா போன்றதொரு நாட்டில் ஒரு தன்னாட்சி அமைப்பின் அதிகாரி இந்த எல்லை வரை தான் நேர்மையாக இருக்க முடியும் அதற்கு மேல் ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்துதான் செல்ல வேண்டும் என்ற இலக்கணத்தையெல்லாம் உடைத்தெறிந்து சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் தான் எனக்கான எல்லை அந்த எல்லைக்குள் என்னைத் தவிர வேறு யாரும் கோலோச்ச முடியாது என்ற அளவுக்கு நேர்மையின் நாயகனாக விளங்கினார். பிறந்தது கேரளாவாக இருந்தாலும் தமிழகப்பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகத்தான் தேர்வாகிறார். பல வருடங்கள் மாநில அரசுப்பதவிகளில் பணிபுரிந்தார். சேஷனின் நேர்மை மாநில அரசை சுரண்டி பார்க்க, திடீரென மத்திய அரசுக்கு மாற்...