Posts

Showing posts from June, 2020

விஜய்யின் 63 படங்களும் 63 குட்டி ஸ்டோரிஸும் - Part1 #HBDVijay

தளபதி விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெசலாக அவர் நடித்து இதுவரை வெளியாகியுள்ள 63 படங்கள் பற்றிய சுவாரஷ்ய தகவல்களுடனான குட்டி ரீவைண்ட் இங்கே... 1.நாளைய தீர்ப்பு : வெற்றி, குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி என தனது தந்தை இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ஹீரோவாக அறிமுகமான முதல் படம். விஜய்யின் அம்மா ஷோபா தான் நாளைய தீர்ப்பின் கதாசிரியர். இயக்கம் எஸ்.ஏ.சி. 'அன்புள்ளம் கொண்டோரே.....வணக்கம் எங்களை போன்றே எங்கள் மகன் விஜய்யையும் உங்கள் கைகளில் ஒப்படைக்கிறோம்' என டைட்டில் கார்டில் எஸ்.ஏ.சியின் வாய்ஸ் ஓவரோடு ஒரு மாஸ் ஹீரோவுக்கே உரித்தான ஸ்டைலில் விஜய்யை அறிமுகப்படுவார்கள். 'நடு ரோட்ல நாலு பேர் சேர்ந்து ஒரு அப்பாவிய அடிக்கிறத பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது' என அநியாயத்தை கண்டு வெகுண்டெழும் ஆங்க்ரி யங் மேன் டைப் கதாப்பாத்திரம் விஜய்யுடையது. விஜய் தனது கல்லூரி நண்பர்களோடு சேர்ந்து 'நாளைய தீர்ப்பு' என்ற பத்திரிகை நடத்தி சமூக அட்டூழியங்களை தட்டிக்கேட்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். விஜய்க்கு நாளைய தீர்ப்பு ஒரு

விஜய், சாமானியர்களின் கனவு-கோபம்-ஆதங்கம் அத்தனையயையும் நிஜமாக்கும் சூப்பர் ஹீரோ !!! - #HBDVijay

Image
விஜய், சாமானியர்களின் கனவு-கோபம்-ஆதங்கம் அத்தனையயையும் நிஜமாக்கும் சூப்பர் ஹீரோ !!! - #HBDVijay கோலிவுட்டின் கமர்ஷியல் சினிமாக்கள் மீதும், கமர்ஷியல் பட ஹீரோக்கள் மீதும் உலக சினிமாக்களை கரைத்துக்குடித்த சில கலைப்படைப்பாளிகளுக்கும், அறிவுஜீவிகளுக்கும் எப்போதும் ஒரு பெருங்கோபமும் ஆதங்கமும் இருப்பதுண்டு. அவர்களை பொறுத்தவரை மக்களின் வாழ்க்கைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தப்படும் அழுகாட்சி படங்கள் மட்டுமே நல்ல சினிமா. அதை விடுத்து மற்ற பொழுதுபோக்குப் படங்கள் எல்லாம் ரசிக்க தகுதியவற்றவை, அவற்றை படமாக்க பெரிய மெனக்கெடல்கள் எதுவும் தேவைப்படுவதில்லை, என்பதே பொதுப்புத்தியிலிருந்து சற்றே விலகி நின்று சினிமாவை பார்ப்பவர்கள் என கூறிக்கொள்பவர்களின் பொதுப்புத்தி. ஆனால் உண்மையில் நல்ல சினிமா கெட்ட சினிமா என்பதை தாண்டி, வெகுஜன ரசனையிலிருந்து மாறுபட்டு வெளியாகும் படங்களுக்கு இருக்கும் ஜனநாயகத்தன்மையை விட மாஸ் ஹீரோக்கள் நடிக்கும் கமர்ஷியல் படங்களே அதிகப்படியான ஜனநாயகத்தன்மையை இயற்கையாகவே தங்களுக்குள் பொதிந்து வைத்துள்ளன. நாள் முழுவதும் உழைத்து அலுத்து சலைத்து முன் வரிசையில் டிக்கெட் எடுத்து பார்க்கும

சும்மா இருக்க கத்துக்கனும்.... #Lockdown #Quarantine

சும்மா இருக்க கத்துக்கனும் ! 21 நாட்கள் முழு ஊரடங்கு என்ற செய்தியை முதல் முறையாக கேட்டு திக்குமுக்காடி திகைத்து போனவர்கள் எல்லாம் 60 நாள் தொடர் ஊரடங்கை அசால்ட்டாக கடந்துவிட்டோம். இன்னும் நீண்டாலும் பரவாயில்லை எல்லாம் பழக்கப்பட்டுவிட்டது என்ற ஜென் நிலைக்கு வந்துவிட்டோம். பிழைத்திருத்தலே பெரும்பாடு என்ற இந்த சூழ்நிலையிலும் டிசைன் டிசைனான சேலஞ்ச்களால் சமூகவலைதளங்கள் பரபரக்கின்றன. இந்த லாக்டவுண் நாட்கள் முழுவதும் தாங்கள் புதிதாஜ கற்றுக்கொண்ட விஷயங்களை வீடியோவாகவும் ஸ்டேட்டஸ்களாகவும் போட்டு அங்கலாய்த்து வருகின்றனர் இணையவாசிகள். காலம் பொன் போன்றது என்ற பழைய பழமொழியை நன்கு உணர்ந்து கிடைத்த நேரத்தை தங்கள் திறமைகளை கூராக்கவும் புதுவிஷயங்களை கற்றுக்கொள்ளவும் பயன்படுத்திக்கொள்கிறார்கள், நல்ல விஷயம் தான். ஆனால் இதை பார்த்துவிட்டு ரெஸ்ட் எடுத்து டயர்டாகி ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு பெருங்கூட்டம் மனஉளைச்சலுக்கு தங்களை ஆற்படுத்திக்கொள்வது வருந்ததக்கது. ஒன்றுமே செய்யாமல் மூணு வேளை தின்றுவிட்டு முக்காடு போட்டு தூங்குபவர்களுக்கு, இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் யூடியூப் பை பார்த்து சமையல் தொட