விஜய், சாமானியர்களின் கனவு-கோபம்-ஆதங்கம் அத்தனையயையும் நிஜமாக்கும் சூப்பர் ஹீரோ !!! - #HBDVijay

கோலிவுட்டின் கமர்ஷியல் சினிமாக்கள் மீதும், கமர்ஷியல் பட ஹீரோக்கள் மீதும் உலக சினிமாக்களை கரைத்துக்குடித்த சில கலைப்படைப்பாளிகளுக்கும், அறிவுஜீவிகளுக்கும் எப்போதும் ஒரு பெருங்கோபமும் ஆதங்கமும் இருப்பதுண்டு. அவர்களை பொறுத்தவரை மக்களின் வாழ்க்கைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தப்படும் அழுகாட்சி படங்கள் மட்டுமே நல்ல சினிமா. அதை விடுத்து மற்ற பொழுதுபோக்குப் படங்கள் எல்லாம் ரசிக்க தகுதியவற்றவை, அவற்றை படமாக்க பெரிய மெனக்கெடல்கள் எதுவும் தேவைப்படுவதில்லை, என்பதே பொதுப்புத்தியிலிருந்து சற்றே விலகி நின்று சினிமாவை பார்ப்பவர்கள் என கூறிக்கொள்பவர்களின் பொதுப்புத்தி. ஆனால் உண்மையில் நல்ல சினிமா கெட்ட சினிமா என்பதை தாண்டி, வெகுஜன ரசனையிலிருந்து மாறுபட்டு வெளியாகும் படங்களுக்கு இருக்கும் ஜனநாயகத்தன்மையை விட மாஸ் ஹீரோக்கள் நடிக்கும் கமர்ஷியல் படங்களே அதிகப்படியான ஜனநாயகத்தன்மையை இயற்கையாகவே தங்களுக்குள் பொதிந்து வைத்துள்ளன. நாள் முழுவதும் உழைத்து அலுத்து சலைத்து முன் வரிசையில் டிக்கெட் எடுத்து பார்க்கும் சாமானியன் தொடங்கி பாப்கார்ன் க்கு மட்டுமே 300 ரூபாய் செலவழிக்கும் ஹை க்ளாஸ் ஆடியன்ஸ் வரை பரந்து விரிந்து எல்லா தரப்பு ரசிகர்களையும் உள்ளிழுத்துக்கொள்ளும் அந்த ஜனரஞ்சகம்தான் கமர்ஷியல் படங்களின் ஜனநாயகத்தன்மைக்கான சான்று. இந்த கமர்ஷியல் ஜனநாயகத்தில் வென்ற நடிகர்கள் கோட்டையில் கொடியேற்றும் அளவுக்கு செல்வாக்கு பெற்றது கோலிவுட்டின் அழிக்கமுடியாத வரலாறு. எவ்வளவுக்கு எவ்வளவு செல்வாக்கை பெற்றுத்தருமோ அதே அளவுக்கு இந்த வகை படங்கள் ரிஸ்கானவையும் கூட. ஒரு இயல்பற்ற வித்தியாசமான படம் தோற்கும் போது ஏற்படும் இழப்பை விட ஒரு கமர்ஷியல் படம் தோற்கும் போது ஏற்படும் இழப்பும் நஷ்டமும் அதிகம். அந்த தோல்வி தயாரிப்பாளர்-நடிகர்-இயக்குனர் தொடங்கி டெக்னீஷியன்கள் வரை வெகுவாக பாதித்துவிடும். ஒன்றிரண்டு படங்களிலேயே கேரியர் க்ளோஸ் ஆன நட்சத்திரங்கள் ஏராளம். கமர்ஷியல் எனும் முரட்டு குதிரையிடம் எத்தனை முறை அடிபட்டு விழுந்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்து வித்தையை கற்றுக்கொண்டு நீண்ட நெடிய வெற்றிப் பயணத்தை மேற்கொள்பவர்கள் வெகுசிலரே. அந்த வெகு சிலரில் மிகமுக்கியமானவர், கடந்த 28 வருடமாக தன்னுடைய கமர்ஷியல் படங்கள் மூலம் மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் விஜய். இன்று அவரின் பிறந்தநாளும் கூட.
'அடுத்த நிமிசம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை, முடிஞ்சளவுக்கு எல்லாரயும் சந்தோஷப்படுத்தனும்' விஜய்யின் 28 வருட திரைப்பயணத்தை விவரிப்பதற்கு சச்சின் படத்தில் விஜய் பேசும் இந்த ஒற்றை டயலாக்கே போதுமானது. பூவே உனக்காக தொடங்கி பிகில் வரை அதே எனர்ஜியோடு இன்று வரை எண்டெர்டெயின் செய்து வருகிறார். இந்த லாக்டவுண் நாட்களில் மட்டும் 100 முறைக்கு மேல் டிவி சேனல்களில் விஜய் படங்கள் டெலிகாஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது. எல்லா படங்களும் பல முறை பார்த்தவை இருந்தும் ஒவ்வொரு டெலிகாஸ்ட்டின் போதும் டீஆர்பி ரேட்டிங்கில் புதிய உச்சம் தொட்டுவருகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்களின் மூலம் இன்ஸ்பையர் ஆகி திரையுலகில் காலடி எடுத்து வைத்த விஜய்யின் படங்கள்தான் இன்று அதே ரஜினிகாந்தின் படங்களுக்கு கடும் போட்டி அளித்து வருகின்றன. நெய்வேலியில் விஜய்க்கு ஆதரவாக திரண்ட ரசிகர் கூட்டமும் அதற்கு விஜய்யின் ரியாக்சனும் மாஸ்டர் க்ளாஸ். அதிலும் விஜய்யின் அந்த செல்ஃபி விஜய் படங்களின் மாஸை மிஞ்சிய ரியல் லைஃப் வெறித்தனம்.
இப்போதைய தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களுக்கு மத்தியில் இருக்கும் போட்டியை தவிர இளம் நடிகர்கள் மத்தியில் பெரிய போட்டி கிடையாது. காரணம், இப்போதைய தமிழ் சினிமாவில் இளம் நடிகர்கள் சொற்பம்தான். ஆனால் அஜித்-விஜய் அறிமுகமான காலத்தில் ரஜினி-கமல்-விஜயகாந்த் என டாப் லிஸ்டில் ஒரு போட்டி இருந்தால் அடுத்து கார்த்திக்-சரத்குமார்-பிரபு என அடுத்தகட்டத்தில் ஒரு போட்டி இருக்கும் இவர்களை தாண்டியும் பல இரண்டாம் கட்ட ஹீரோக்கள். அவர்களுக்கும் அடுத்த லெவலில் ப்ரஷாந்த்-அருண்விஜய்-அரவிந்த் சாமி என இன்னும் பல பேர். அப்போது மக்களுக்கு சாய்ஸ் அதிகம் இருந்தது. மக்களுக்கான இந்த சாய்ஸ்தான் இன்றைய தமிழ் சினிமாவுக்கும் 90களின் தமிழ் சினிமாவுக்கு இடையேயான வித்தியாசம். கொஞ்சம் சறுக்கினாலும் அடுத்தவாரம் ரிலீஸ் ஆகும் ஹிட் படத்தின் ஹீரோவிடம் தன்னுடைய இடத்தை பறிகொடுக்க வேண்டியிருக்கும். இப்படியான கடும் போட்டிகள்மிக்க சூழலில் அறிமுகமாகி நிலைத்து நின்று எம்.ஜீ.ஆர்-ரஜினி க்கு பிறகான தமிழ் சினிமாவின் முகமாக உருவெடுத்து நிற்கும் விஜய்யை இன்றும் 'எஸ்.ஏ.சி இல்லன்னா விஜய் இல்லப்பா' என்ற வகையில் போகிற போக்கில் ஜஸ்ட் லைக் தட் விமர்சித்து செல்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். விஜய் பாணியிலேயே ஒரு குட்டி ஸ்டோரி மூலம் அவர்களுக்கு பாடம் எடுத்து விடுவோம்...
'தெருவுல ஒருத்தன் நடந்து போய்கிட்டு இருந்தானாம். எதிர்ல வந்தவரு, எங்கப்பா போறன்னு கேட்டதுக்கு சினிமால நடிக்க போறேன்னு சொன்னானாம். அதுக்கு அவரு அப்ப நீ என்னய சந்திக்காம சினிமால ஜெயிக்க முடியாதேன்னு சொன்னாராம். அப்டியா நீங்க யாருன்னு கேட்டா, என் பெயருதான் அவமானம்னு சொல்றாரு. அவன் அந்த அவமானத்த நிராகரிச்சிட்டு சினிமால எப்டியாவது ஜெயிச்சே ஆகனும்னு தொடர்ந்து போய்கிட்டே இருக்கும் போது அதிர்ஷ்டம் எதிர்த்தாப்ல வந்து நா படத்துல நடிக்கிற வாய்ப்பு தர்ரன்னு கைய பிடிச்சு கூப்டுச்சாம். அப்ப சைடுல திறமைன்னு ஒன்னு வந்து என்னையும் கூப்டு போங்கன்னு சொல்ல, அதிர்ஷ்டமே என் கூட இருக்கு திறமை எதுக்குன்னு அதிர்ஷ்டத்து கூட பயணப்பட்டு படமும் நடிச்சானாம். அந்த படம் மிகப்பெரிய தோல்வி. இப்ப ஒன்னுமே இல்லாம அந்த சினிமா நடிகன் நிக்கும் போது அவமானமும் திறமையும் அவன் முன்னாடி வந்து நின்னுச்சான்' சினிமாவில் முதல் வாய்ப்பு கிடைப்பதற்கு வேண்டுமானால் அதிர்ஷ்டம் காரணமாக இருக்கலாம் ஆனால் நிலைத்து நிற்பதற்கு திறமை மட்டுமே காரணமாக இருக்க முடியும். நட்சத்திர கலைவிழா ஒன்றின் மேடையில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கூறிய குட்டி ஸ்டோரி இது. கவுண்டமணி பொதுவாக பேசியிருந்தாலும் விஜய்க்கு இந்த குட்டி ஸ்டோரி 100% பொருந்திப்போகும். எஸ்.ஏ.சி விஜய்க்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்திக்கொடுத்தார் ஆனால் நிலைத்து நின்று இன்றைய தேதிக்கு கோலிவுட்டின் நம்பர் 1 நாயகன் என விஜய் உயர்ந்திருப்பதற்கு முழுக்க முழுக்க அவரின் திறமையும் ஆரம்பகால அவமானங்களும் மட்டுமே காரணம். 'நெப்போட்டிசம்' பற்றி இன்று சினிமா உலகமே பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் இன்று குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு நெப்போட்டிசம் இல்லாமல் இருப்பதற்கு காரணம் விஜய்-சூர்யா போன்ற ஸ்டார் கிட்களே. விஜய் 'அவரு கிட்ஸ பிடிச்சிட்டாருங்க' என பாராட்டி சிவகார்த்திகேயனை தட்டிக்கொடுக்கவும் தயங்கியதில்லை. விஜய் சேதுபதியை ஒரு வெயிட்டான கேரக்டரில் தன் படத்தில் நடிக்க வைப்பதற்கும் தயங்கியதில்லை.கோலிவுட்டில் எளிதில் விஜய் ஒரு நெப்போட்டிச வட்டத்தை உருவாக்கியிருக்க முடியும் ஆனால் நம்மவர் அவமானத்தை அனுபவித்து தோற்று தோற்று முன்னேறியவர். திறமைகள் மீது கொடுக்கப்பட வேண்டிய மரியாதையை உணர்ந்தவர். 'கோல் போடுற வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாருமே சூப்பர் ஸ்டார்ஸ்தான்' என்கிற விஜய்யின் ஸ்டேட்மெண்டயே நெப்போட்டிசத்தின் மீதான கோலிவுட்டின் எதிர்வினையாக எடுத்துக்கொள்ளலாம்.
சற்றேறக்குறைய விஜய் கோலிவுட்டில் அறிமுகமான காலத்தில் பாலிவுட்டில் அறிமுகமான கான் நடிகர்களின் மார்க்கெட் இன்று ஊசலாடிக்கொண்டிருக்கிறது. டோலிவுட்டில் விஜய் தேவரகொண்டா அசால்ட்டாக 100 கோடி வசூலை அடித்து நொறுக்குகிறார். ஆனால் கோலிவுட்டில் விஜய் அறிமுகம் ஆகி வெற்றிப்படங்கள் கொடுக்க ஆரம்பித்ததிலிருந்து விஜய்யின் இடம் விஜய்க்கு மட்டுமே அதை அதன்பிறகு இன்று வரை எந்த நடிகராலும் தட்டிப்பறிக்க முடியவில்லை. மேட்டிமைத்தன்மையற்ற சாமானியர்களுக்கு நெருக்கமான விஜய்யின் பாத்திரப்படைப்புகளும் படங்களும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ரவி,முத்தப்பா,சிவா,வேலு, வேலாயுதம், சிவகிரி என கதாபாத்திரங்களின் பெயர்களிலிருந்தே சாமானியர்களை பிரதிபலிக்க தொடங்கிவிடுகிறார். கறாரான போலீஸாக நடித்தாலும் ஸ்டைலுக்காக பிற மொழி பின்னொட்டுகளை சேர்த்துக்கொள்ளாமல் விஜய்குமாராகவும்-சத்தியமூர்த்தியாகவுமே கெத்து காட்டுவார். தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கும் ஹீரோக்களுக்கும் வைக்கப்படும் பெயர்களுக்கு பின்னால் கூட அரசியல் குதர்ப்பங்கள் ஒழிந்திருப்பதாக பேசப்படுவதுண்டு. தமிழ்ப்படங்களை தொடர்ந்து உற்றுக்கவனித்தால் இது ஓரளவுக்கு உண்மையே என தோன்றும். விஜய்யின் சூப்பர் ஹிட் படமான துப்பாக்கி கூட சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவரை தீவிரவாதியாக காட்டியதற்காக கடும் கண்டனங்களை பெற்றது. இதை புரிந்துக்கொண்டு விஜய்யின் கதாப்பாத்திரங்களுக்கு சிறுபான்மையினரின் பெயரை சூட்டும் வழக்கம் இப்போது அதிகரிக்கவே செய்திருக்கிறது. தெறியில் 'ஜோசப் குருவில்லா' பிகிலில் 'மைக்கேல்-ராயப்பன்' அடுத்து மாஸ்டரில் 'ஜான் துரைராஜ்' என அடுத்தடுத்து சிறுபான்மையினரை நாயக பின்பமாக விஜய் காட்டுவது வரவேற்கத்தக்கது. தனிப்பட்ட முறையில் விஜய் மீது மதச்சாயம் பூசி அசிங்கமான அரசியலுக்குள் இழுத்துவிட சிலர் முயன்ற பிறகும் எந்தவித பின்வாங்கலும் பயமுமின்றி தொடர்ந்து சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் விஜய்யை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். இதேபோன்று டீக்கடைக்காரர், ஆட்டோக்காரர், மெக்கானிக், பால்க்காரர்,மீனவன் என விஜய் ஏற்று நடித்த கதாபாத்திரங்களின் தொழிலும் சாமானியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலே தொடர்ந்து அமைந்திருக்கின்றன. ஆட்சியாளர்களுக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக வெளிக்கொணர முடியாத தங்கள் உள் ஆதங்கத்தை பிரதிபலிக்கும் வகையில் தங்களால் செய்யமுடியாததை திரையில் விஜய் செய்து காட்டும்போது விஜய்யை ஒரு சூப்பர் ஹீரோவாக மக்கள் எளிதில் ஏற்றுக்கொள்ள தொடங்கிவிடுகின்றனர். நெய்வேலியில் விஜய்க்கு ஆதரவாக கூடிய கூட்டம் அதற்கு ஒரு சாட்சி. அரசியல் ரீதியாக தன் முன்னோடி நடிகர் போட்டுவைத்த க்ளீஷேக்களின் பயணப்படாமல் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார் விஜய்.
விஜய் அரசியல் பேச தொடங்கிய பிறகு விஜய் படங்களில் எண்டெர்டெயின்மெண்ட் வேல்யூ குறைந்தே போயிருக்கிறது. விஜய் கட்டாயம் எல்லா படங்களிலும் மைக் பிடித்து சோசியல் மெசேஜ் பேசிய ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தை யாரும் விதிக்கவில்லை. காலத்தின் கட்டாயமாக சமூக பிரச்சனைகளை பேச விரும்பினால் ஒரு படம் விட்டு ஒரு படம் பேசிக்கொள்ளலாம். சொல்லப்போனால் விஜய்யே இந்த 1:1 பார்முலாவை தான் கொஞ்ச நாளாக பின்பற்றி வந்தார். வேலாயுதம் போன்று ஒரு நல்ல கமர்ஷியல் படம் நடித்தால் அதன்பிறகு வித்தியாசமாக நண்பன் செய்தார் அதன்பிறகு மாஸான துப்பாக்கி அடுத்து அரசியல் சூட்டை கிளப்பிய தலைவா கொடுத்தால் அடுத்து ஜில்லாவாக இறங்கியடித்திருப்பார். ஆனால் கடைசியாக மெர்சல்,சர்கார்,பிகில் என மூன்றுமே அரசியல் நெடி வீசிய மெசேஜ் படங்கள். பழைய 1:1 மிக்சிங்கை விஜய் மீண்டும் கையில் எடுக்க வேண்டும்.
ஒரு ரசிகனாக விஜய் இப்போது இருப்பதை போன்றே ஒரு தரமான எண்டெர்டெயினராக இன்னும் பல காலத்துக்கு இருக்க வேண்டும். தொடர்ந்து மக்களை மகிழ்வித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே விருப்பம். விஜய்யின் சமீபத்திய படங்கள் ஏற்படுத்தும் பரபரப்பு விஜய்யை இந்தியா முழுமைக்குமான நடிகராக மாற்றிக்கொண்டிருக்கிறது. ஒரு எண்டெர்டெயினராக விஜய் என்னும் கமர்ஷியல் பேக்கேஜ் மொழி கடந்து அனைத்து மக்களையும் வசீகரிக்க தொடங்கியிருக்கிறது. வாழ்த்துக்கள் விஜய் !!
"அடுத்த நிமிசம் நிச்சயம் இல்லாத வாழ்க்கைங்க.முடிஞ்சளவுக்கு எல்லாரயும் சந்தோஷப்படுத்தனும்"
கீப் ராக்கிங்....ஹாப்பி பர்த்டே விஜய் !!
-உ.ஸ்ரீ

Comments
Post a Comment