Posts

Showing posts from July, 2021

அகதிகளுக்கான அங்கீகாரம், முன்னுதாரணமாக மாறிய ஒலிம்பிக்! #Tokyo #Olympics #Refugees

அகதிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் ஒலிம்பிக்ஸ்! #Refugees #Olympic #Tokyo அகதிகளுக்கான அங்கீகாரம், முன்னுதாரணமாக மாறிய ஒலிம்பிக்! சொந்தபந்தம், நண்பர்கள், சொத்து சுகம் எதுவுமே இல்லையென்றாலும் உங்களுக்கென்று ஒரு நாடு இருக்கும்பட்சத்தில், நீங்கள் ஒரு நாட்டின் குடிமகனாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவரே. உங்களுக்கென்று ஒரு அடையாளம் இருக்கிறது. உங்களுக்கான குறைந்தபட்ச வாழ்வுரிமையை அந்த அடையாளமே உறுதி செய்துவிடும். ஆனால், எந்த நாட்டின் குடிமகனாகவும் இல்லாதவர்களை நினைத்து பாருங்கள். 'அகதிகள்' என்பதே அவர்களுக்கான ஒற்றை அடையாளம். ஆனால், இந்த அடையாளம் எங்கேயும் செல்லுப்படியாகாது. ஒரு சில ரொட்டி துண்டுகளை கூட இந்த அடையாளத்தால் பெற்றுக்கொடுக்க முடியாது. அப்படிப்பட்ட அவலநிலையில் 'அகதிகள்' என்ற அடையாளத்தோடு உலகம் முழுவதும் 8 கோடி பேர் வாழ்கின்றனர். அதிகார வெறியினால் உண்டாகும் அநாவசிய போர்கள், அந்த போர்கள் அருளும் அசாதாரண சூழல், உயிர்ச்சேதம், வறுமை இவற்றிலிருந்து தப்பிப்பிழைக்க தினமும் 37000 பேர் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கின்றனர். அகதிகளின் வலி தமிழர்களுக்கு அந்நியமானத

குத்தெல்லாம் எதிராளிக்கு இல்லை....இந்த சமூகத்துக்கு' இலக்கணங்கள் உடைத்த வரலாற்று நாயகி மேரிகோம்! #Tokyo2020 #Olympics #MaryKom

' What's your daily routine? இப்படி ஒரு கேள்வியை கிண்டர் ஹார்டன் குழந்தையிடம் கேட்டால் Wake up in the morning என தொடங்கி ஒரு பத்து வரிகளை ரைம்ஸ் போல ஒப்பித்து கடைசியில் Goes to bed என முடிக்கும். எந்த குழந்தையிடம் அந்த கேள்வியை கேட்டாலும் இதே ரைம்ஸ் போன்ற பதில்தான் வரும். ஒரு குழந்தையின் சராசரி நாளில் அப்படிப்பட்ட சராசரி விஷயங்கள் மட்டுமேதான் நடக்கிறது. அதனால், அப்படி ஒரே மாதிரி கூறுவதில் எந்த பிரச்சனையுமில்லை. ஆனால், அதே குழந்தை வளர்ந்து பெரிய ஆள் ஆன பிறகும் What's your daily routine? என கேட்டால் இதே Wake up in the morning தொடங்கி goes to bed வரை ரைமிங்காக படித்தால் எவ்வளவு மொக்கையாக இருக்கும்? ஆனால், இந்திய சமூகம் அதைத்தான் விரும்பும். எந்த பிரச்சனையும் இல்லாமல் சுவாரஸ்யமும் இல்லாமல் கூட்டத்தோடு கூட்டமாக வாழ்ந்துவிட்டு சென்றால் போதும். குறிப்பாக, பெண்களுக்கு அவர்களுக்கென்று இருக்கும் பாரம்பரிய டெம்ப்ளேட்டை விட்டு வெளியே வந்து தனித்தே தெரிந்துவிடக்கூடாது. எல்லாருக்கும் பொதுவாக கொடுக்கப்பட்டிருக்கும் சூத்திரத்தின் அடைப்புக்குறிக்குள்ளையே வாழ்க்கையை ஓட்டி முடித்துவிட வேண்டு

மீராபாய் - வடகிழக்கின் பெருமை...தலைமுறைகளுக்கான இன்ஸ்பிரேஷன்! #Tokyo2020 #Olympics #MirabaiChanu

எதாவது ஒரு சம்பவத்தையோ எதாவது ஒரு நபரையோ இன்ஸ்பிரேஷனாக கொள்ளாதவர்கள் இங்கே மிகவும் குறைவு. தென்னை மட்டையை பேட்டாக மாற்றும் சிறுவனுக்கு சச்சின் இன்ஸ்பிரேஷனாக இருப்பது போல எல்லாருக்கும் இங்கே இன்ஸ்பிரேஷன்கள் இருக்கவே செய்கின்றனர். 26 வயதாகும் சாய்கோம் மீராபாய் ஜானுவுக்கும் அப்படியே! குஞ்சரணி தேவி எனும் இந்திய பளுதூக்கும் சூப்பர் வுமனே மீராபாயின் இன்ஸ்பிரேஷன். எப்படி இப்போது நடராஜனை இன்ஸ்பிரேஷனாக கொண்டு தமிழகத்தின் கிராமங்களிலிலிருந்து கிரிக்கெட்டை கரியராக மாற்றலாம் என்ற நம்பிக்கையோடு இளைஞர்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்களோ, அப்படித்தான் வடகிழக்கு இந்தியாவிற்கு குஞ்சரணி தேவி. ஒரு தனித்தீவு போல அரசியலர்களின் பார்வையற்று எல்லாவிதத்திலும் பின்தங்கி போயிருந்த வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பிறந்து அந்த பிராந்தியத்திற்கே பெரும் அடையாளமாக மாறியவர் குஞ்சரணி தேவி. பளுதூக்குதலில் உலக சாம்பியன்ஷிப்கள், ஆசிய போட்டிகள் போன்றவற்றில் பதக்கங்களை குவித்து ஒட்டுமொத்த இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தை தலைநிமிர வைத்தார். குஞ்சரணி தேவி ஒலிம்பிக்கில் ஆடியதில்லைதான் ஆனால் ஒலிம்பிக்கில் ஆடிய