Posts

Showing posts from March, 2020

விஜய்-முருகதாஸ் காம்போ ஒரு சக்ஸஸ்ஃபுல் ப்ராண்ட்தான் இருந்தாலும் முருகதாஸ் அந்த பழைய 'ரமணா' வா வந்தா தளபதி65 பட்டாசுதான்

வெற்றிமாறன், மகிழ் திருமேனி, அருண்ராஜா காமராஜ் என தளபதி65 படத்தின் இயக்குனர் குறித்து அடுத்தடுத்த தகவல் வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இறுதியாக சுதா கொங்காராதான் தளபதி65 க்கான இயக்குனர் என ஏறக்குறைய உறுதியான செய்திகள் வெளியாக விஜய் ரசிகர்கள் ஃபேன் மேட் போஸ்டர்களெல்லாம் தயார் செய்ய தொடங்கிவிட்டார்கள். ரசிகர்களின் இந்த உற்சாகத்திற்கு காரணம், தளபதி65 இயக்குனர் லிஸ்டில் இருந்த எல்லாருமே விஜய்யுடன் இதுவரை இணைந்திராத புது இயக்குனர்கள் அதுவும் இந்த இயக்குனர்கள் தாங்கள் கடைசியாக இயக்கிய படங்கள் எல்லாம் ஆல் செண்டர் ஹிட் அடித்து ஆல் இந்தியா அளவில் ஃபேமஸ் ஆனவர்கள். புது காம்பினேஷோடு புது ஸ்டைலில் விஜய்யை பார்க்கலாம் என ஆவலோடு எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் தற்போது வெளியாகியுள்ள செய்தியால் கொஞ்சம் அப்செட்தான். தளபதி65 சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலேயே விஜய் நடிக்கப்போவதாக தற்போது வெளியாகியுள்ள் செய்தி விஜய் ரசிகர்களிடையேயே கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. நான்காவது முறையாக இணையப்போகும் இந்த காம்பினேஷனின் ட்ராக் ரெக்கார்டு ஒரு அலசல். துப்பாக

நோ ஐபிஎல் ! ஓய்வு பெறுகிறாரா தோனி??? #Dhoni #IPL #ViratKohli

கொரோனா பாதிப்பில் ஐபிஎல்....ரிட்டையர் ஆகிறாரா தோனி? கேள்விக்குறியில் தோனியின் கம்பேக்... கொரோனா பாதிப்பால் தியேட்டரெல்லாம் மூடியிருக்கே, 'மாஸ்டர்' ரீலிஸ் என்னாகும்? 'வலிமை' அப்டேட் வருமா வராதா?? என ஒருபுறம் தலதளபதி ரசிகர்கள் கன்னத்தில் கைவத்திருக்க, ஐபில் நடக்குமா...நடக்காதா? தோனியின் கம்பேக் ஐ எதிர்பார்க்கலாமா கூடாதா?? என கிரிக்கெட் ரசிகர்கள் மறுபுறம் சோக எமோஜிக்களை பறக்கவிட்டு கொண்டிருக்கின்றனர். ஐபிஎல் என்றாலே இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். ஏப்ரல்-மே இரண்டு மாதமும் திருவிழா கொண்டாட்டம்தான். அதிலும் இந்த ஐபிஎல் தோனி ரசிகர்களுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் தோனி ரன் அவுட் ஆகி இந்தியா தோல்வியுற்ற பிறகு எந்த சர்வேதேச போட்டிகளிலுமே தோனி விளையாடவில்லை.  இராணுவத்தில் கொஞ்ச நாட்கள் பயிற்சி, ஷிவா வுடன் டைம்பாஸ், சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு, அப்பப்போ ஜார்கண்ட் வீரர்களுடன் வலைப்பயிற்சி என தோனி இந்த காலக்கட்டத்தில் வழக்கம்போல கூலாகவே இருந்தார். ஆனால் 9 மாதமாக தோனியை இந்திய அணியின் ஜெர்ஸியில் பார்க

'மாஸ்டர் கம்மிங்' ! ஒத்துடா.......ஆடியோ விழாவில் என்ன பேசப்போகிறார் விஜய் !

Image
ஸ்டாண்டிங் மைக்....செண்டர் ஸ்டேஜ்....'மாஸ்டர் கம்மிங்' ! விஜய்யின் புதுப்பட ரிலீஸ் அன்று அதிகாலை காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருக்குமோ அதே அளவுக்குனான ஆர்வமும் எதிர்பார்ப்பும் கடந்த சில வருடங்களாக விஜய்யின் மேடைப் பேச்சிற்கும் ஏற்பட்டுள்ளது. 'அய்யோ.....விஜய்யா அவரு ரொம்ப கூச்ச சுபாவமான ஆளு... அமைதியானவருங்க' என பலராலும் வரையறுக்கப்பட்ட விஜய் கூச்சங்களை உடைத்து தன்னுடைய மேடைப்பேச்சிற்கு இப்படியொரு எதிர்பார்ப்பை சாத்தியப்படுத்தியது எப்படி? இந்த 2010-20 டிகேடின் ஆரம்ப காலத்தில் 2013 ல் தலைவா பட ரிலீஸ் பிரச்சனையின் போது கையை கட்டியபடி ஒரு வீடியோவில் தோன்றி மிகவும் மனமுடைந்து அப்போதைய முதல்வருக்கு கோரிக்கை வைத்த விஜய்க்கும், 2019-ல் பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் இடுப்பில் கைவைத்தபடி 'யார் யார எங்க வைக்கனுமோ அவங்கள அங்க வச்சா எல்லாம் கரெக்டா நடக்கும்' என அனல் தெறித்த விஜய்க்கும் இடைப்பட்ட காலம் தான் மேடைப்பேச்சில் விஜய் தன்னைத்தானே செதுக்கிக்கொண்ட காலம். தலைவா படம் வரைக்குமே தன்னுடைய முந்தைய 55 படங்களின் ரிலீஸின

அரசியலில் என்னவாக போகிறார் ரஜினி ? #Rajinikanth #Politics #Tamilnadu #RMM

Image
அரசியலில் என்னவாக போகிறார் ரஜினி? வேறெதுவும் தேவையில்லை.....நீங்கள் முதல்வர் ஆனால் மட்டும் போதும்...! திருநெல்வேலியில் ரஜினி ரசிகர்கள் அடித்துள்ள போஸ்டர் இது. ராகவேந்திரா மண்டபத்தின் நாலு எட்ஜூக்குள் நடந்த மீட்டிங் குறித்து வெளியாகியுள்ள யூகங்கள் பற்றி என்னுடைய நாலேஜுக்கு எட்டியதை இங்கே எழுதுகிறேன். ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம் என ரஜினி குறிப்பிட்டிருந்தார் அந்த ஒற்றை ஸ்டேட்மெண்டில் இருந்துதான் அத்தனை யூகங்களும் கிளம்பியுள்ளன. முதலில் இந்த ஏமாற்றம் நிதி சார்ந்ததாக இருக்கும் என சில பத்திரிகையாளர்கள் பேசியிருந்தார்கள்.  என்னை பொறுத்தவரையில் அது நிச்சயம் நிதி சார்ந்த பிரச்சனையாக இருக்காது, அப்படியிருந்தாலும் அது உள்ளே மட்டுமே பேச வேண்டிய விஷயம் அது ரஜினிக்கும் தெரியும். அதனால் அதைப்பற்றி நிச்சயம் குறிப்பிட்டிருக்கமாட்டார். பிஜேபியுடனான உறவு, மற்ற கட்சிகளுடன் கூட்டணி என ரஜினியின் ஏமாற்றத்தை சுற்றி பல விவாதங்கள் நீண்டு கொண்டிருக்கும் போதுதான் பாண்டே ஒரு வீடியோவை வெளியிடுகிறார்.அதில், *தேவையற்ற கட்சி பதவிகளை நீக்க வேண்டும். *48 வயதிற்கு கீழ் உள்ள இளைஞர்களுக்கும், மாற்றுக்

India Vs England SF Match Preview !

பௌலிங் ட்ரிபிள் ஓகே பட் பேட்டிங் கொஞ்சம் ட்ரபிளிங்கே.... 'அண்ணாத்த' இங்கிலாந்தை அரையிறுதியில் வீழ்த்துமா இந்தியா? இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள பெண்கள் டி20 உலகக்கோப்பையின் முதல் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது. க்ரூப்-ஏ ல் இடம்பெற்றிருந்த இந்திய அணி தனது 4 லீக் போட்டிகளிலும் தரமான பௌலிங் அட்டாக்கினால் எதிரணியை பஞ்சராக்கி முதல் அணியாக அரையிறுதியை எட்டியது. க்ரூப்-பி ல் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து அணி முதல் போட்டியில் சௌத் ஆப்பிரிக்கா வுடன் ஏற்பட்ட அதிர்ச்சி தோல்வியிலிருந்து மீண்டு எஞ்சிய 3 போட்டிகளையும் எந்த தடுமாற்றமும் இல்லாமல் வெற்றி பெற்று அரையிறுதியை எட்டியுள்ளது. இந்தியா-இங்கிலாந்து இரு அணிகளும் கடைசியாக கடந்த மாதம் இதே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரில் இரண்டு முறை மோதியுள்ளது. இதில் இந்தியா ஒரு போட்டியிலும் இங்கிலாந்து ஒரு போட்டியிலும் மோதியுள்ளது. உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவும் இங்கிலாந்தும் 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 5 முறையும் இங்கிலாந்தே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2018 ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அரைய