India Vs England SF Match Preview !
பௌலிங் ட்ரிபிள் ஓகே பட் பேட்டிங் கொஞ்சம் ட்ரபிளிங்கே....
'அண்ணாத்த' இங்கிலாந்தை அரையிறுதியில் வீழ்த்துமா இந்தியா?
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள பெண்கள் டி20 உலகக்கோப்பையின் முதல் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.
க்ரூப்-ஏ ல் இடம்பெற்றிருந்த இந்திய அணி தனது 4 லீக் போட்டிகளிலும் தரமான பௌலிங் அட்டாக்கினால் எதிரணியை பஞ்சராக்கி முதல் அணியாக அரையிறுதியை எட்டியது.
க்ரூப்-பி ல் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து அணி முதல் போட்டியில் சௌத் ஆப்பிரிக்கா வுடன் ஏற்பட்ட அதிர்ச்சி தோல்வியிலிருந்து மீண்டு எஞ்சிய 3 போட்டிகளையும் எந்த தடுமாற்றமும் இல்லாமல் வெற்றி பெற்று அரையிறுதியை எட்டியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து இரு அணிகளும் கடைசியாக கடந்த மாதம் இதே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரில் இரண்டு முறை மோதியுள்ளது. இதில் இந்தியா ஒரு போட்டியிலும் இங்கிலாந்து ஒரு போட்டியிலும் மோதியுள்ளது. உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவும் இங்கிலாந்தும் 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 5 முறையும் இங்கிலாந்தே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2018 ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் மிதாலி ராஜை பெவிலியனில் உட்கார வைத்த சர்ச்சையான முடிவோடு களமிறங்கிய இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
2018 அரையிறுதி தோல்விக்கு பழி தீர்த்து உலகக்கோப்பை போட்டிகளில் முதல் முறையாக இங்கிலாந்தை வீழ்த்திய சாதனையோடு இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா இந்திய அணி?
இந்திய அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் 'பூனம் இல்லன்னா ராதா' 'ராதா இல்லன்னா ராஜேஷ்வரி' என எல்லா பௌலர்களுமே சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எந்த குறையும் சொல்லமுடியாத அளவுக்கு பெர்ஃபெக்ட்டான காம்பினேஷனோடு களமிறங்குகிறது பௌலிங் படை.
பவர்ப்ளேயை பொறுத்தமட்டில் ஷெஃபாலி எவ்வளவு ஸ்ட்ரைக் எடுக்க முடியுமோ எடுத்து அவரது வழக்கமான அடிதடி ஆக்சன்களை நிகழ்த்திவிடுவார்.
இந்திய அணிக்கு பிரச்சனை என்றால் அது ஓப்பனர் மந்தனா மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத்தின் ஃபார்ம் அவுட் தான். 3 போட்டிகளில் விளையாடியுள்ள மந்தனா 38 ரன்களையும் 4 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்மன்ப்ரீத் 26 ரன்களையுமே எடுத்துள்ளனர். இந்த இரண்டு முக்கியமான வீரர்களும் சோபிக்காததால் இந்திய அணி பவர்ப்ளேக்கு பிறகான 7-20 ஓவர்களில் தொடர்ந்து மிகக்குறைவான ரன்களே எடுத்துள்ளது. 84,88,84 இதுதான் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த மூன்று போட்டிகளில் 7 முதல் 20 க்கு இடைப்பட்ட 14 ஓவர்களில் இந்திய அணி எடுத்த ரன்கள். இதே ஓவர்களில் இங்கிலாந்து அணி 92,104,110,131 என மிரட்டியுள்ளது. இந்திய அணியின் சராசரி ஸ்கோர் 130 ஆக உள்ளது இதிலிருந்து ஒரு பத்து இருபது ரன்கள் கூடுதலாக எடுக்கும்போதுதான் இங்கிலாந்தை அழுத்ததிற்கு உள்ளாக்க முடியும். அதற்கு இந்த இடைப்பட்ட ஓவர்களில் கேப்டன் ஹர்மன்ப்ரீத்தோ மந்தனாவோ ஒரு நல்ல இன்னிங்ஸ் ஆடியே ஆக வேண்டும்.
இங்கிலாந்து பேட்டிங்கை பொறுத்தவரையில் நஷீவர் மற்றும் கேப்டன் ஹெதர் நைட் இருவரும் முதுகெலும்பாக உள்ளனர். அதிலும் நஷீவர் இந்த உலகக்கோப்பையில் மட்டும் நான்கு போட்டிகளில் 3 அரைசதங்கள் விளாசி முரட்டுத்தனமான ஃபார்மில் உள்ளார். இங்கிலாந்து பேட்டிங் லைன் அப்பில் மிகப்பெரிய பிரச்சனை ஓப்பனர்ஸ்தான். அந்த அணியின் ஓப்பனர்களான ஜோன்ஸும், வியாட்டும் தாய்லாந்துக்கு எதிராக கூட டக் அவுட் ஆகி பாப்பம்பட்டி அணியின் ஓப்பனர்களுக்கு சவால்விட்டு வருகின்றனர். கடைசி லீக் போட்டியில் ஜோன்ஸை மிடில் ஆர்டருக்கு தள்ளிவிட்டு பீமண்ட் ஐ ஓப்பனிங் இறக்கி பார்த்தும் பிரயோஜனமில்லை. இருந்தாலும் ஓப்பனர்களுக்கு அடுத்து களமிறங்கும் நஷிவரும், நைட்டும் எல்லா ப்ளேயர்களுக்கும் சேர்த்து பேட்டிங் செய்துவிடுவதால் இங்கிலாந்து அணி நல்ல ஸ்கோரை எடுத்துவிடுகிறது. இந்திய பௌலர்கள் இந்த போட்டியில் விரைவில் முறிக்க வேண்டிய கூட்டணி இதுதான். இங்கிலாந்து பௌலிங்கும் இந்திய பௌலிங் அளவுக்கு சிறப்பாகவே உள்ளது. சௌத் ஆப்பிரிக்காவிடனான கடைசி ஓவர் தோல்விக்கு பிறகு பாகிஸ்தானையும் வெஸ்ட் இண்டீஸையும் ஆல் அவுட் எடுத்துள்ளனர். பூனம் யாதவ் ஸ்டைலில் ப்ளைட்டட் டெலிவரிகளை வீசும் லெக்ஸ்பின்னர் க்ளென் னும், எக்லெஸ்டனும் ஸ்பின்னிலும் வேகப்பந்து வீச்சில் ஸ்ரப்சோலும் இந்திய அணிக்கு குடைச்சல் கொடுக்கலாம்.
2009 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு கோப்பையை கைப்பற்ற இங்கிலாந்தும், முதல்முறையாக கோப்பையை கைப்பற்ற இந்தியாவும் ஆவலோடு இருப்பதால் இந்த அரையிறுதி அதிரிபுதிரியாக இருக்கப்போகிறது.
சுவாரஷ்ய தகவல்கள்
டாப்-3 யுத்தம் !
இந்த உலகக்கோப்பையில் அதிகபட்சமாக ரன்கள் அடித்துள்ள டாப்-3 ப்ளேயர்கள் மூவரும் இந்தியா - இங்கிலாந்து அணியை சேர்ந்தவர்களே. நஷீவர், ஹெத்தர் நைட், ஷெஃபாலி ஆகிய மூவரும் தான் டாப் ஸ்கோரர்கள்.
அதேபோல பௌலிங்கில் அதிக விக்கெட் எடுத்த டாப்-3 ப்ளேயர்களான பூனம் யாதவ், எக்கெல்ஸ்டன், ஸ்ரப்ஸோல் மூவரும் இந்திய இங்கிலாந்து அணியை சேர்ந்தவர்கள்தான்.
இந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளிலும் டாஸில் தோல்வியுற்றுள்ளது. அதேநேரத்தில் இந்த நான்கு போட்டிகளிலும் வெற்றியே பெற்றுள்ளது.
-உ.ஸ்ரீ

Comments
Post a Comment