Posts

Showing posts from June, 2019

கோலி(யாத்துகள்) டேவிட் டிடம் திணறியது ஏன் ? India vs Afghanistan | CWC2019

கோலி(யாத்துகள்) டேவிட்டிடம் திணறியது ஏன் ? டாப் - 3 பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் சதமடிக்க தவறிவிட்டாலோ அல்லது டாப் ஆர்டரில் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் அமையாமல் போய்விட்டாலோ இந்திய அணியின் பாடு எப்போதும் திண்டாட்டமாகத்தான் உள்ளது. ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் உருகுலைந்து போக 70-5 என்ற நிலையிலிருந்து மிடில் மற்றும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் உதவியுடன் 280 க்கும் மேல் டார்கெட் செட் செய்தது ஆஸி. நிச்சயம் இந்தியா நேற்று இதே போன்றதொரு இன்னிங்ஸை ஆடியிருக்க வேண்டும். டாப் ஆர்டரே 35 முதல் 40 ஓவர் வரை நிலைத்து நின்றுவிட்டு அதன் பிறகு மற்றவர்கள் ஒரு 25 முதல் 30 ரன்களை அடித்தால் போதும் என்ற ப்ளானுடன் தான் இந்தியா களமிறங்குவதாக தெரிகிறது. ஆனால் இந்த ப்ளான் A சொதப்பும் போது இந்திய அணியிடம் உருப்படியான ப்ளான் B இருப்பதாக தெரியவில்லை. விக்கெட் கள் மளமளவென விழுகின்ற பொழுது சிங்கிள்ஸ் ஓடி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்திருக்க வேண்டும். ஆனால் 25 ஓவர்கள் டாட் பாலே ஆடியிருக்கிறார்கள் கோலிப்படை , அதிலும் 40 வது ஓவருக்கு மேலும் ஒரு சில ஓவர்களில் நான்கைந்து டாட். திறமை

காங்கிரஸை கழட்டி விட பார்க்கிறதா திமுக?

எவ்வளவு நாள் தான் காங் க்கு பல்லக்கு தூக்குவது.....வருகிற உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து நிற்க வேண்டும் என திருச்சியில் கே.என்.நேரு பேச்சு. சில தினங்களுக்கு முன் நடைபெற்ற திமுக கூட்டத்தில் " நாங்குநேரி தொகுதியை காங் எங்களிடம் கொடுத்துவிடுங்கள், திமுக ஈசியாக ஜெயித்துவிடுவோம். வருகிற சட்டமன்ற தேர்தலிலும் தலைவர் கூட்டணி கட்சிகளுக்கு குறைவான சீட்டையே கொடுக்க வேண்டும்." என உதயநிதி பேசியிருந்தார். இவ்விரண்டு பேச்சுகளை வைத்து பார்க்கையில் திமுக காங்கிரஸை ஒரு சுமையாக பார்ப்பதாகவே தோன்றுகிறது. ஸ்டாலினால் வெளிப்படையாக பேச முடியாததை அவருக்கடுத்த வரிசையில் இருப்பவர்கள் ஸ்டாலினின் குரலாக ஒலிக்கின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் கொடுத்த வெற்றியின் மமதையாக கூட இருக்கலாம். உண்மையில் நடந்து முடிந்த தேர்தலை ஒட்டுமொத்தமாக பார்த்தால் திமுக க்கு மிகப்பெரிய வெற்றிபோலவே தோன்றும் . ஆனால் இந்த வெற்றியை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் என  இரண்டாக பகுத்து பார்த்தால் நாடாளுமன்ற அளவில் அதிமுக + யை திமுக + ஒயிட் வாஷ் செய்துவிட்டது. ஆனால் இடைத்தேர்தலி

லோக்கல் ல இருந்து நேஷனல் வரைக்கும் தளபதி தான் !

தளபதி ன்னா சும்மா இல்லடா.... விஜய் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத சூப்பர்ஸ்டார்....ஸாரி..ஸாரி.....மெர்சலுக்கு பிறகுதான் ஆல் இந்தியா முழுவதும் அறிமுகமாகிவிட்டாரே ! அதனால் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகன் என்றே சொல்லலாம். விஜய்யின் மெர்சலான மேடைப் பேச்சுகளை போலவே அவரது சினிமா பயணமும் கனவுகளை தேடி ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் மோட்டிவேசன் டானிக் ! நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை இவரது கேரியரை கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தாலே இது தெரியும். என்னதான் இயக்குனரின் பையனாக கொஞ்சம் எளிதாகவே சினிமாக்குள் நுழைந்துவிட்டாலும் வாய்ப்புகளை பயன்படுத்தி அடுத்தடுத்து முன்னேறியது என்னவோ விஜய்யின் உழைப்பாலும் சாமர்த்தியத்தாலும்தான். ' குரங்கு மாதிரி இருக்குறான் இவன் மூஞ்சையெல்லாம் காசு கொடுத்து பாக்கனுமா' என 20 வயது பையன் மீது வைக்கப்பட்ட விமர்சனம் இல்லை இதை விமர்சனம் என்றே சொல்ல முடியாது. முட்டி மோதி மேலே ஏற முயற்சித்துக்கொண்டிருப்பவனை பார்த்து ஏற்கனவே மேலே இருக்கும் ஒருவன் கைத்தட்டி இழிவாக பேசுவது போன்றது. அவன் பேசுகிறான் என்பதற்காக மேலே ஏறும் முயற்சியை விஜய் கைவிட்டிருந்தால் ஜோசப

சட்டமன்றத்தில் கலைஞர் ஆற்றிய முதல் உரை | கலைஞர் கருணாநிதி | Kalaignar96

முத்தமிழறிஞர் கலைஞர், ஐந்து முறை தமிழக முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 50 ஆண்டுகள், போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும்  வெற்றி,  சட்டமன்றத்தில் வைர விழா கொண்டாடியவர் என பல வரலாற்றுச் சிறப்புகளை பெற்ற கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 96 வது பிறந்த நாள் இன்று. 1957 ம் ஆண்டு முதல் முறையாக தேர்தல் அரசியலில் காலடி எடுத்து வைத்த திமுக சார்பில் அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட   15 பேர் பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்று சட்டமன்றத்திற்கு சென்றனர். அப்போதிலிருந்து கலைஞர் மறைவு வரைக்கும் எத்தனையோ முறை அவரின் கரகர காந்தக் குரலினால் சட்டசபையை அதிரவைத்துள்ளார். முதன்முதலில் குளித்தலை தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு சென்ற கலைஞர், 1957 ம் ஆண்டு மே4 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தனது முதல் சட்டமன்ற உரையை ஆற்றினார். கலைஞரின் கன்னிப்பேச்சு இதோ... கவர்னர் உரைக்குப் பிறகு தனது கன்னிப்பேச்சை ஆரம்பித்த கலைஞர் அவர்கள், 'அவைத்தலைவர் அவர்களே, இன்று மேன்மை தங்கிய கவர்னர் அவர்களுடைய உரையைப் பற்றி நான் போற்றவும் வரவில்லை, தூற்றவும் வரவில்லை; என்னுடைய கருத்துரையைஆற்றவே வந்திருக்கிறே