கோலி(யாத்துகள்) டேவிட் டிடம் திணறியது ஏன் ? India vs Afghanistan | CWC2019

கோலி(யாத்துகள்) டேவிட்டிடம் திணறியது ஏன் ?

டாப் - 3 பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் சதமடிக்க தவறிவிட்டாலோ அல்லது டாப் ஆர்டரில் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் அமையாமல் போய்விட்டாலோ இந்திய அணியின் பாடு எப்போதும் திண்டாட்டமாகத்தான் உள்ளது. ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் உருகுலைந்து போக 70-5 என்ற நிலையிலிருந்து மிடில் மற்றும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் உதவியுடன் 280 க்கும் மேல் டார்கெட் செட் செய்தது ஆஸி. நிச்சயம் இந்தியா நேற்று இதே போன்றதொரு இன்னிங்ஸை ஆடியிருக்க வேண்டும். டாப் ஆர்டரே 35 முதல் 40 ஓவர் வரை நிலைத்து நின்றுவிட்டு அதன் பிறகு மற்றவர்கள் ஒரு 25 முதல் 30 ரன்களை அடித்தால் போதும் என்ற ப்ளானுடன் தான் இந்தியா களமிறங்குவதாக தெரிகிறது. ஆனால் இந்த ப்ளான் A சொதப்பும் போது இந்திய அணியிடம் உருப்படியான ப்ளான் B இருப்பதாக தெரியவில்லை. விக்கெட் கள் மளமளவென விழுகின்ற பொழுது சிங்கிள்ஸ் ஓடி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்திருக்க வேண்டும். ஆனால் 25 ஓவர்கள் டாட் பாலே ஆடியிருக்கிறார்கள் கோலிப்படை , அதிலும் 40 வது ஓவருக்கு மேலும் ஒரு சில ஓவர்களில் நான்கைந்து டாட். திறமையிருந்தாலும் விஜய் சங்கர் ஏனோ பெரிய அளவில் கிளிக் ஆகாமல் உள்ளார்.விஜய் சங்கர் அ கேதாருக்கு பதிலாக ரிஷப் பண்டை உள்ளே இறக்கலாம். தோனியை நம்பர் 4 ல் இறக்கிவிடலாம். ஒரு வேளை நம்பர் 4 ல் தோனி இறங்கினால் தனக்கு பின்னால் அடித்து ஆட பண்ட் மற்றும் பாண்ட்யா இருப்பதை உணர்ந்து டாட் பால்களை குறைத்துக் கொண்டு சீரான ரன்குவிப்பில் இறங்க வேண்டும்.எந்த மாற்றமும் இல்லாமல் இதே நிலை நீடித்தால், நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டதால் அரை இறுதி நிச்சயம். ஆனால் அதன் பிறகு ??????

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.... தடுமாறும் இந்தியா... மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?! #WTCFinals #Day3

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்