Posts

Showing posts from February, 2021

தமிழகத்தில் தேர்தல் எப்போது?? #Elections #Tamilnadu

தமிழகத்தில் தேர்தல் எப்போது?? #Elections #Tamilnadu தமிழகம், கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுவைக்கான சட்டமன்ற தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கவிருக்கிறது. தேர்தல் அறிவிப்புக்கும் தேர்தல் நடைபெறும் நாளுக்கும் இடையே குறைந்தப்டசம் ஒரு மாதமாவது இடைவெளி இருப்பது வழக்கம். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 10 ம் தேதி வெளியானது. எட்டுக் கட்டங்களாக நடைபெற்ற அந்த தேர்தலில் முதல் கட்டம் ஏப்ரல் 11 ம் தேதி தொடங்கியது. சரியாக ஒரு மாத இடைவெளி. தமிழகத்தில் ஏப்ரல் 18 ம் தேதி தேர்தல் நடந்தது. தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் மே 24 ம் தேதியோடு முடிவடைகிறது. இன்று பிப்ரவரி 26, தேர்தல் அறிவிப்பு வெளியாகப்போகிறது. சரியாக ஒரு மாதம் என கணக்கிட்டால் மார்ச் கடைசியில் தேர்தல் இருக்க வேண்டும். ஆனால், அவ்வளவு சீக்கிரமாக நெருக்கி தேர்தல் வைப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால் மார்ச் கடைசி வாரம் என்கிற ஆப்சன் அடிபட்டுவிடுகிறது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மே 21 இல் தான் தேர்வுகள் முடிவுகிறது.

அஷ்வின் எனும் பெரும் நம்பிக்கையாளன்!! #IndVsEng #Ashwin

அஷ்வின் எனும் பெரும் நம்பிக்கையாளன்! எந்த ஒரு மனிதருக்கும் மனபலம் என்பது ரொம்ப முக்கியமானது. குறிப்பாக, விளையாட்டு வீரர்களுக்கு எந்த சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடிய மனோதிடமும் துணிச்சலும் அதிகம் இருக்க்ந் வேண்டும். கிரிக்கெட்டை பொருத்தவரை இந்த விஷயத்தில் அஷ்வினை மிகச்சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். சமகால கிரிக்கெட்டர்கள் யாருடன் ஒப்பிட்டாலும் அஷ்வினின் மனோதிடமும் துணிச்சலும் அவர்களைவிட ஒருபடி அதிகமாகவே இருக்கும். கெரியரின் ஆரம்பக்கட்டத்திலேயே சூறாவளியாய் மிரட்டும் கெய்லுக்கு எதிராக ஐ.பி.எல் போட்டிகளில் இளம் வீரராக முதல் ஓவரை தைரியமாக வீசியதிலிருந்து அவரின் மனோதிடத்துக்கான உதாரணங்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். 2013 சாம்பியன்ஸ் ட்ராஃபியில் கடைசி ஓவரை வீச வந்தது இன்னொரு உதாரணம். அவரது யூடியூப் சேனலில் குவாரண்டைனின் போது ஒரு நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் 'நீங்கள் எந்த வீரருக்கு பந்துவீசும் போது பயப்படுவீர்கள்?' என கேள்விக் கேட்டிருப்பார். அதற்கு அஷ்வின் 'நான் எந்த வீரருக்கும் பயப்பட்டதில்லை. தில்லுக்கு துட்டாக இறங்கி வீசி விடுவேன்' என கூறியிருப்பார். இதுதான்

கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிடுவோமா?? #Kohli #IndVsEng

#GamePlan #GullySports கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிடுவோமா?? #Kohli #IndVsEng இங்கிலாந்தை முதல் இன்னிங்ஸில் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியதே இந்திய அணி இன்று வெற்றியின் விளிம்பில் இருப்பதற்கு மிக முக்கிய காரணம். இங்கிலாந்து 134 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக ஜோ ரூட் சீக்கிரமே அவுட் ஆனது காரணமாக அமைந்தது. கடந்த 3 போட்டிகளில் இரண்டு இரட்டை சதம் ஒரு 180+ ஸ்கோர் என ரூட் அசுர ஃபார்மில் இருந்தார். ஒருவேளை ரூட் முதல் இன்னிங்ஸில் நின்று ஒரு சதம் அடித்திருந்தால் கூட ஆட்டம் இன்னும் நெருக்கமாக சென்றிருக்கும். ஆனால், ரூட்டை மிக சாமர்த்தியமாக ப்ளான் செய்து கோலி வெளியேற்றினார். ஸ்வீப் ஷாட் தான் என்னுடைய ஆயுதம் என வெளிப்படையாக கூறிவிட்டு இந்தியா வந்தார் ரூட். ஆனாலும், முதல் போட்டியில் அவரின் ஸ்வீப் ஷாட்டை இந்திய பௌலர்களால் கட்டுப்படுத்த முடியவே இல்லை. பௌலர்களின் லைன் & லெந்தை ஸ்வீப் ஷாட்டின் மூலம் மொத்தமாக குலைத்திருந்தார். ஆனால், அதே ஸ்வீப் ஷாட்டின் மூலம் இந்த முதல் இன்னிங்ஸில் ரூட்டின் விக்கெட்டை எடுக்க திட்டம் போட்டார் கோலி. ரூட்டின் பலம் ஸ்வீப்தான். ஆனால், அந்த ஸ்வீப்பை வலுக்கட்டாயமா

பௌலர்களுக்கு உதவும் ஃபுல் லெந்த்...தடுமாறி மீண்ட இந்திய அணி...முதல் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?? #IndVsEng #RohitSharma #Rahane

பௌலர்களுக்கு உதவும் ஃபுல் லெந்த்...தடுமாறி மீண்ட இந்திய அணி...முதல் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?? #IndVsEng #RohitSharma #Rahane இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவடைந்திருக்கிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி இன்றைய நாள் முடிவில் 300 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஓப்பனரான ரோஹித் சர்மா சிறப்பாக ஆடி சதமடித்திருக்கிறார். இதே சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து டாஸை வென்று முதல் பேட்டிங் செய்திருந்தது. அது ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால், இன்றைய போட்டியில் டாஸுக்கும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த முறை இந்திய அணியின் கேப்டன் கோலி டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்துவிட்டார். இதுவே பாதி ஆட்டத்தை வென்றது போன்றதொரு மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்தது. கடந்த போட்டியில் முதல் 3 நாட்களுக்கு பிட்ச் பௌலர்களுக்கு ஒத்துழைக்கவே இல்லை. பிட்ச்சிலும் ஆங்காங்கே திட்டுத்திட்டாக புற்களும் ஆங்காங்கே வறண்ட பகுதிகளும் இருந்தது. இது பெரிதாக பௌலர்களுக்கு உதவவே இல்லை. இந்நிலையில்,

'நூற்றுக்கு நூறு...தரம்...தரம்..' ஜோ ரூட் அசத்தல்!

'நூற்றுக்கு நூறு...தரம்...தரம்..' ஜோ ரூட் அசத்தல்! பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கிய இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவடைந்திருக்கிறது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்களான டாம் சிப்லேவும் ஜோ ரூட்டும் சிறப்பாக ஆடியிருக்கின்றனர். குறிப்பாக, 100 வது போட்டியில் ஆடிய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தியிருக்கிறார். ஜோ ரூட் தனது அறிமுக போட்டியையும் இந்தியாவில்தான் ஆடியிருக்கிறார். 50 வது போட்டியையும் இந்தியாவில்தான் ஆடியிருக்கிறார். இப்போது 100 வது போட்டியையும் இங்கேதான் ஆடிக்கொண்டிருக்கிறார். மூன்று போட்டிகளிலுமே குறைந்தபட்சம் அரைசதமாவது அடித்திருக்கிறார். அதுமட்டுமில்லை இந்தியாவில் ஆடியுள்ள 7 போட்டிகளிலுமே குறைந்தபட்சம் அரைசதமாவது அடித்திருக்கிறார். ஆவரேஜ் 53 ஐ விட அதிகம். 2012 இல் ஜோ ரூட் இந்தியா வரும்போது அறிமுக வீரர். அடுத்து 2016 இல் வரும்போது துணை கேப்டன். இப்போது கேப்டன். இந்தியாவில் ஜோ ரூட் பதித்துள்ள இந்த தடங்களின் மூலமே இங்கிலாந்து கிரிக்கெட்டில் அவரின் வளர்ச்சியையும் புரிந்துக்கொள்ள முடியும். கெவின் பீட்

'இங்கிலிஸ் தன்மையுடைய இந்திய பௌலர்' #HappyBirthdayBhuvaneswarkumar

'இங்கிலிஸ் தன்மையுடைய இந்திய பௌலர்' ஹாப்பி பர்த்டே புவி! இந்திய கிரிக்கெட் சூழல் பொதுவாகவே ஸ்பின்னர்களுக்கு உகந்ததாகத்தான் காலம் காலமாக இருக்கிறது. ஒரு காலத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தின் பொலிவுத்தன்மையை போக்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர். இங்கே ஒரு வேகப்பந்து வீச்சாளர் வெற்றிகரமான பெரிய கெரியரை கொண்டிருப்பது கடினமான விஷயமாகவே பார்க்கப்பட்டது. ஆனால், 70-80 களுக்கு பிறகு கபில்தேவின் காலத்திலிருந்து இது கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியது எனினும் முழுவதுமாக பெரிய மாற்றம் எதுவும் வந்துவிடவில்லை. இந்தியா இன்னமும் ஸ்பின்னர்களை மையமாகக் கொண்ட நாடாகவே இருந்தது. வேகப்பந்து வீசுவதற்கென்று ஒரு சில வீரர்கள் உருவாகியிருந்தனர் அவ்வளவே. ஆனால், கபில்தேவின் ஓய்வுக்கு பிறகு ஜெவஹல் ஸ்ரீநாத் பிரபலமடைய தொடங்கும் போது இந்த நிலை மாற தொடங்கியது. இந்தியாவுக்கென்று ஒரு வேகப்பந்து வீச்சு முகம் உருவாக தொடங்கியது. அந்த 90 களில் உலகளவில் அதிவேகமாக வீசக்கூடிய பௌலர்களில் ஒருவராக ஸ்ரீநாத் உருவெடுத்தது வேகப்பந்து வீச்சை மேலும் பிரபலமாக்கியது. ஆலன் டொனால்டு, லேன்ஸ் க்ளூஸ்னர், மெக்ராத் ஆகிய

டிண்டா - இந்திய டெஸ்ட் அணி தவறவிட்ட ரெட்பால் ஸ்பெசலிஸ்ட்!! #AshokDinda #India #Bengal #Ganguly

டிண்டா- இந்திய டெஸ்ட் அணி தவறவிட்ட திறமைசாலி! ஒட்டுமொத்தமாக அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார் அசோக் டிண்டா. இந்திய அணிக்காக 13 ஓடிஐ போட்டிகளிலும் 9 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார். 29 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். கொண்டாடும் வகையில் இந்த எண்களில் எந்த விசேஷமுமில்லை என்பதால் ரசிகர்கள் டிண்ட்டாவை கொண்டாடமல் விட்டதில் எந்த பிரச்சனையுமில்லை. ஆனால், இந்த டிகேடில் ரசிகர்களால் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டிருப்பவரும் டிண்ட்டாதான். எந்த பௌலர் எந்த ஆட்டத்தில் எந்த அணிக்கெதிராகவும் அதிக ரன்களை கொடுத்துவிட்டால் போதும் அவர்களுக்கு உடனே டிண்ட்டா அகாடெமியில் அட்மிஷனை போட்டுவிடுவார்கள் ரசிகர்கள். உமேஷ் யாதவ், சிராஜ் எல்லாம் அந்த அகாடெமியின் முதல் பெஞ்ச் மாணவர்களாக முத்திரைக் குத்தப்பட்டவர்கள். உண்மையிலேயே இந்தளவுக்கு மோசமான கிரிக்கெட்டையா ஆடிவிட்டு சென்றிருக்கிறார் டிண்டா? டிண்டா அதிக ரன்களை கொடுத்துவிடுவார் என்பதுதான் அவர் ட்ரோல் செய்யப்படுவதற்கான அடிப்படை காரணமாக கூறப்படுகிறது. இந்திய அணிக்காக அவர் 13 ஓடிஐ க்களில் ஆடி 12 வ

தோற்பதற்கென்றே கட்சி நடத்துகிறாரா சீமான்?? #Seeman #NTK

தோற்பதற்கென்றே கட்சி நடத்துகிறாரா சீமான்?? 1949 இல் தி.மு.க தொடங்கப்பட்டு 1967 இல் அவர்கள் ஆட்சியை பிடிப்பதற்கு இடைப்பட்ட 18 ஆண்டுகளில் அந்த கட்சி எப்படி உருப்பெற்று வளர்ந்தது என்பதை உன்னிப்பாக பார்க்க வேண்டும். முழுக்க முழுக்க மேடைப் பேச்சுகளின் மூலமே அந்த கட்சி தமிழகத்தின் இண்டு இடுக்குகளிலெல்லாம் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கிறது. கட்சி ஆரம்பித்த ஒரே வருடத்தில் மட்டும் 2035 பொதுக்கூட்டங்கள் நடைபெற்றிருக்கிறது. பேசியே பேசியே வளர்க்கப்பட்ட கட்சி என்கிற பெயரும் தி.மு.க வுக்கு உண்டு. தி.மு.க வுக்கு பிறகு எந்த கட்சியும் அப்படி பேச்சை மட்டுமே அடிப்படையாக வைத்து வளர்ந்ததாக தெரியவில்லை. மக்களை ஈர்க்கும் வகையில் பேச்சாற்றல் உடைய தலைவர்கள் தனிக்கட்சி கண்டிருந்தாலும் அவர்களுக்கும் பெரிய செல்வாக்கு உண்டானதாக தெரியவில்லை. நீண்ட நெடுங்காலத்துக்கு பிறகு பேச்சின் மூலம் மட்டுமே ஒரு கூட்டத்தை கட்டிப்போட்டிருக்கும் கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சிதான். அந்த கட்சி ஈழப்பிரச்சனையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கட்சி என்றாலும் இன்றைக்கு அந்த கட்சிக்கென்று ஒரு கூட்டம் கூடியிருக்கிறதென்றால் அதற்கு அந