Posts

Showing posts from October, 2019

அடித்தட்டு மக்களை தள்ளி வைத்து பார்க்கிறதா அறிவியல் உலகம்??

#MyVoice அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை தள்ளி வைத்து பார்க்கிறதா  அறிவியல் உலகம்? நிலவுக்கு மனிதரை அனுப்ப 10,000 கோடி நிதி ஒதுக்கியிருப்பதாக மத்திய அரசு அறிவித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் தான், மேகாலயாவில் நிலக்கரி  சுரங்கத்தில் சிக்கிய 17 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஒரு மாதத்திற்கும் மேலாக காப்பாற்ற முடியாமல் திணறி வந்தனர், மீட்புக்குழுவினர். இராணுவம் , தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் என நாட்டில் இருக்கிற அனைத்து மீட்புக்குழுவினரும் கடுமையாக போராடி 1 மாதத்திற்கு அப்புறமாக 2 ஹெல்மெட்களை மட்டுமே கண்டுபிடித்தனர். அதன்பிறகு சில நாட்களில் 17 பேரில் வெறும் 2 பேரின் உடலை மட்டுமே கண்டுபிடித்தனர். தேடித்தேடி ஓய்ந்து போன மீட்புக்குழுவினரும் இராணுவத்தினரும் 2 மாதத்திற்கு பிறகு மீட்புபணியையே கைவிட்டுவிட்டனர். சுரங்கத்தில் தேங்கியிருந்த நீரை உறிஞ்சி வெளியேற்ற சக்தி வாய்ந்த பம்புகள் மீட்புக்குழுவினரிடம் இல்லாததே மீட்புப்பணிகள் தொய்வடைய காரணமாக கூறப்பட்டது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உயர்தர மீட்புப்படையிடம் சக்திவாய்ந்த ஒரு மோட்டார் பம்ப் இல்லை என்பதை எந்தவிதத்தில் எடுத்துக்கொள்வது ? டிஜ

ப்ரஸ்மீட் விஜய்யை விட எண்டெர்டெயினர் விஜய்யே அதிகம் கவர்கிறார் ! இது பிகிலின் வெறித்தனம் ! #Bigil #BigilMyViews

ஃபுட்பாலும் ரவுடியிசமும் ஒரே ப்ளாட்பார்மில் முட்டிக்கொள்ள விதிவசத்தால் ரவுடியாகும் ஃபுட்பால் ப்ளேயர் மீண்டும் கால்பந்தை கையிலெடுத்து....ஸாரி...ஸாரி...காலில் எடுத்து பெண்கள் அணியின் கோச் ஆக மாறி  கப்பை தட்டித் தூக்குவதுதான் பிகிலின் கதைச்சுருக்கம். 'ராஜா ரணி ன்னு ஒரு அழகான லவ் ஸ்டோரிக்கு பிறகு, என்னை வச்சு ஒரு ஆக் ஷன் படம் கொடுக்கனுங்ற அட்லீ யோட 'வெறி' தான் இந்த 'தெறி'.." இது தெறி ஆடியோ வெளியீட்டு விழாவில் அட்லீ குறித்து விஜய் பேசியது. இது தெறி படத்திற்கு எவ்வளவு பொருந்துகிறதோ இல்லையோ 'பிகில்' க்கு 200% பொருந்திப்போகிறது. கேப்டன் மைக்கேல் ஆக அறிமுகமாகும் முதல் காட்சியிலிருந்தே அதகளப்படுத்துகிறார் விஜய். குறிப்பாக அந்த ஓப்பனிங்க் சண்டை காட்சியும் வெறித்தனம் பாடலுக்கு விஜயின் நடனும் தொபக்கென்று ஸ்கீரினை கிழித்துக் கொண்டு உள்ளே சென்று விஜயிடம் மைக்கை நீட்டி "உங்களுக்கு வயசே ஆகாதா விஜய்?? என கேட்க வைத்துவிடும் போல. ஆடுறாரு...பாடுறாரு...விளையாடுறாரு...நடிக்கிறாரு காமெடி உட்பட எல்லா ஏரியாவிலும் ராவடி ராசாவாக நிற்கிறார்  'வேற லெவல் விஜய் நீங்க வேற ல

எங்கே செல்லும் இந்த பாதை?

இவர்கள் மீதே இப்படியா? எங்கே செல்லும் இந்த பாதை? நிலம் மாறலாம்....மொழிமாறலாம்....திசை மாறலாம்....நம் இந்தியா அது ஒன்றுதான் நவபாரதம்....என்ற ரோஜா படத்தின் பாடலும் ரோஜா படமும் இன்றைக்கு பார்த்தாலும் தேசப்பறறை தூண்டி புள்ளரிக்க செய்துவிடும்.அப்படியே கட் செய்து பம்பாய் படத்திற்கு வருவோம்  " இல்ல நா இந்து இல்ல.....இல்ல என் புள்ளைங்க முஸ்லீம் இல்ல..நாங்க வெறும் இந்தியங்க. 10 முஸ்லீம கொல்லுன்னு உன் கீதை ல எங்கயாவது சொல்லிருக்கா.....? 10 இந்துவ கொல்லுன்னு உன் குரான் ல எங்கயாவது சொல்லிருக்கா...? பம்பாய் படத்தின்முக்கியமான காட்சியில் நாயகன் அரவிந்த்சாமி பேசும் வசனம் இது.தேசியத்தையும் தேசப்பற்றையும் தம் படங்கள் மூலம் கொண்டாடி வந்த இயக்குனர் மணிரத்னம் மீதும் ஒரு நாள் தேசத்துரோக வழக்கு பாயும் என அவரே நினைத்திருக்கமாட்டார். இயக்குனர் மணிரத்னம் மட்டுமல்ல அவருடன் சேர்ந்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 49 பேர் மீதும் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய  நீதிமன்றம் கூறியுள்ளது. "பெருமைமிகு இந்தியர்களான நாங்கள்  தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும்  வருந்தத்தக்க சம்பவங்களை நினைத்து மிகுந்த க

இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு?

உ.ஸ்ரீராமநாராயணன் இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? 24×7 பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் தமிழக  அரசியல் களத்தை தேர்தல் ஆணையத்தின் இடைத்தேர்தல் அறிவிப்பு மேலும் பரபரப்பாக்கியுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளான நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21 ம் தேதி நடைபெறவுள்ளது. நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இரண்டு தொகுதிகளுமே திமுக மற்றும் அதன் கூட்டணியான காங்கிரஸ் வசம் இருந்த தொகுதிகள். விக்கிரவாண்டி எம்.எல்.ஏ கு.ராதாமணி யின் மரணமும் நாங்குநெரி தொகுதியின் எம்.எல்.ஏ வசந்தகுமார் கன்னியாகுமரி தொகுதியின் எம்.பி யானதும் தான் இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் உண்டாவதற்கான முன்கதை . தமிழகத்தை பொறுத்தவரை  கருணாநிதி-ஜெயலலிதா காலக்கட்டத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பெரும்பாலும் ஆளும்கட்சியே வெற்றி பெற்று வந்தது. இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடைபெற்ற ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கிய தினகரன் மாபெரும் வெற்றியைப் பெற்றார். அதன்பிறகு நடந்து  முடிந்த நாடாளுமன்ற தேர்தலோடு நடைபெற்ற 21 தொகுதிக்கான இடைத்தேர்தலில்