எங்கே செல்லும் இந்த பாதை?



இவர்கள் மீதே இப்படியா?

எங்கே செல்லும் இந்த பாதை?


நிலம் மாறலாம்....மொழிமாறலாம்....திசை மாறலாம்....நம் இந்தியா அது ஒன்றுதான் நவபாரதம்....என்ற ரோஜா படத்தின் பாடலும் ரோஜா படமும் இன்றைக்கு பார்த்தாலும் தேசப்பறறை தூண்டி புள்ளரிக்க செய்துவிடும்.அப்படியே கட் செய்து பம்பாய் படத்திற்கு வருவோம்  " இல்ல நா இந்து இல்ல.....இல்ல என் புள்ளைங்க முஸ்லீம் இல்ல..நாங்க வெறும் இந்தியங்க. 10 முஸ்லீம கொல்லுன்னு உன் கீதை ல எங்கயாவது சொல்லிருக்கா.....? 10 இந்துவ கொல்லுன்னு உன் குரான் ல எங்கயாவது சொல்லிருக்கா...? பம்பாய் படத்தின்முக்கியமான காட்சியில் நாயகன் அரவிந்த்சாமி பேசும் வசனம் இது.தேசியத்தையும் தேசப்பற்றையும் தம் படங்கள் மூலம் கொண்டாடி வந்த இயக்குனர் மணிரத்னம் மீதும் ஒரு நாள் தேசத்துரோக வழக்கு பாயும் என அவரே நினைத்திருக்கமாட்டார். இயக்குனர் மணிரத்னம் மட்டுமல்ல அவருடன் சேர்ந்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 49 பேர் மீதும் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய  நீதிமன்றம் கூறியுள்ளது. "பெருமைமிகு இந்தியர்களான நாங்கள்  தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும்  வருந்தத்தக்க சம்பவங்களை நினைத்து மிகுந்த கவலையடைகிறோம்....எனத் தொடங்கும் அந்த கடிதம் பட்டியலினத்தவர்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான வன்முறை, ஜெய் ஸ்ரீராம் படுகொலைகள், பசுப்பாதுகாப்பு வன்முறை என பல விஷயங்களையம் உள்ளடக்கியுள்ளது. கடந்த ஜீலை 23 ம்தேதி எழுதப்பட்ட இந்த கடிதமானது இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக கூறி பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் தொடுத்த பொதுநல வழக்கில்தான் நடிகை ரேவதி,மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், ராமச்சந்திர குஹா உட்பட 49 பேர் மீதும் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யலாம் என முசாபர்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். . " ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையில் தான் பிரதமருக்கு கடிதம் எழுதினோம் ஆனால் நீதிமன்றமே இப்படியொரு தீர்ப்பை வழங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நாங்கள் அந்த கடிதத்தில் தனிப்பட்ட முறையில் யாரை பற்றியும் தவறாக எழுதவில்லை." என ஏமாற்றம் தெரிவித்துள்ளார் மூத்த இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன்.இதற்கு முன்னார் பல நீதிபதிகளும்  124 A சட்டப்பிரிவுக்கு எதிராக தீர்ப்பு அளித்துள்ளனர் ஆனால் இந்த முறை 124 A சட்டத்தை பயன்படுத்த நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. இது மத்திய அரசோ பாஜக கட்சியோ தாக்கல் செய்த வழக்கு இல்லை எனக்கூறப்பட்டாலும் இதன் பிண்ணனியில் பிஜேபி யின் ஆதரவு இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதுதொடர்பாக சிலரிடம் பேசினோம்,


"அவர்கள் ஒன்றும் ஹவாலா மோசடி செய்யவில்லையே சிறுபான்மையினருடையபாதுகாக்கப்பு உறுதிசெய்யப்பட வேண்டு என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதில் தேசத்துரோக வழக்கு சுமத்தும் அளவுக்கு என்ன குற்றம் அரசுதரப்பில் .தவறு இருக்கும்பட்சத்தில் திருத்திக்கொள்ள வேண்டிதானே. அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லிவிட்டு கடந்து சென்றிருக்க்கலாமே.. இந்திய சினிமாவினுடைய முகமாகிய மணிரத்னம் போன்றோர் மீது வழக்கு தொடரும்போது மற்ற எந்த கலைஞரும் தங்களின் கருத்தை கூறுவதற்கு தயங்குவர். இதே போன்ற விஷயங்களில் அரசு கவனமுடன் செயல்பட வேண்டும்." என அதிர்ச்சியுடன் தனது கருத்தை பதிவு செய்கிறார் இயக்குநர் வசந்தபாலன்



 "மக்கள் தாங்கள்  விரும்புவதை பேசுவதுதான் ஜனநாயகமே தவிர ஆட்சியாளர்கள் ப்விரும்புவதை மக்கள் பேச வேண்டும் என்பது ஜனநாயகமல்ல" என உறுதியுடன் பேசத் தொடங்குகிறார் எழுத்தாளர் மற்றும் எம்.பி ரவிக்குமார்.ஃ


.நாட்டினுடைய குடிமகன் குடியரசு தலைவர் முதல் யாருக்கு வேண்டுமானாலும் கடிதம் உரிமை உள்ளது. நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் ஒருகருத்தை வலியுறுத்தி கடிதம் எழுதும் போது அவர்கள்  மீது வழக்கை தொடுப்பதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது மணிரத்னம் அவர்களின் பல தொரைப்படங்கள்  தேசப்பற்றை மையப்படித்தியதாக அமைந்துள்ளது இந்த 49பேரும்  தேசிய நலனுக்காக தங்களின் கலைகளை பயன்படுத்தியவர்கள்
இந்த வழக்கு நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் பதியப்பட்டுள்ளது. நீதித்துறையை சங்பரிவார்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.. இது ஆபத்தான முன்னுதாரணம் ஆகும்.உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் காட்டப்படும் கறாரான நடைமுறைகளை போன்றே கீழமை நீதிமன்றங்களுக்கும் கடைபிடிக்க வேண்டும் . கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளை பணி நியமனம் செய்யும்போது அரசியல் சார்பற்றவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். . அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட சமயத்தில் சட்டமன்றம் நாடாளுமன்றத்தில்   இயற்றப்படும் சட்டங்களை  சீராய்வு செய்யும் உரிமை நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளிடையே உச்சபட்ச அதிகாரத்தை  அளிப்பதை விட நீதித்துறையிடம் அளிப்பதே சிறப்பானதாக இருக்கும் என முடிவெடுக்கப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் நீதிமன்றத்தின் மீது  உறுதியான நம்பிக்கையை வைத்திருந்தனர். ஆனால் இன்றைக்கு இந்த நிகழ்வு அந்த நம்பிக்கையை குலைப்பதாக அமைந்துள்ளது. இந்த 49 பேர்  எழுதியுள்ள கடிதத்தில் சட்டவிரோதமாகவோ, நாட்டின் நற்பெயரை குலைக்கும் வகையிலோ பிரதமரின் மதிப்பை குறைக்கும்வகையிலும்  எந்த கருத்தும் இல்லை. பிரதமர் மோடியே பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டவர்களை பல முறை தாக்கி பேசியுள்ளார். இந்த பிரச்சனை குறித்து மாநிலங்கவையிலேயே பேசியுள்ளார். பிரதமர் பேசிய அதே கருத்தை குறிப்பிட்டுத்தான் 49 பேரும் கடிதம் எழுதியுள்ளனர். . .இந்த 49 பேரும் பல விருதுகள் பெற்ற புகழ்பெற்ற கலைஞர்கள் எனவே இவர்களை சிறுமைபடுத்தும் வகையிலான வழக்குகளை தவிர்க்க வேண்டும். மத்திய அரசு இந்த வழக்கை தொடுக்கவில்லை என்றாலும் இதை ரத்து செய்யும் உரிமை மத்திய அரசுக்கு உள்ளது. இதுபோன்ற பிரபலங்கள் பேசும் போதுஅந்த கருத்து பெரும்பான்மையான. இந்த வழக்கை ரத்து செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இந்திய சட்ட ஆணையமே 124 ஏ பிரிவை நீக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளது. இதை நீக்குவற்கு சரியான தருணம் இதுதான். என்கிறார் ஆவேசமாக.


"நீதிமன்றம் இப்படியொரு உத்தரவை பிறப்பித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.. நீதிமன்றம் இவ்வாறு கூறியிருப்பதை ஏற்கமுடியாது. நீதிமன்றங்களில் கூட சங்பரிவார்களின் ஆதிக்கம் அதிகரித்துவருகிறதோ என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. இந்த 49 பேரும் தேசிய ஆவணக்குற்ற காப்பகத்தின் புள்ளிவிவதரத்தை குறிப்பிட்டே கடிதம் எழுதியுள்ளனர். தலீத்துக்கள் மீதான வன்முறை குறஒந்திருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்கள். கும்பல் படுகொலைகள் இல்லவே இல்லை என்ற பிஜேபியினர் கூறுகின்றனர் ஆனால் உண்மைநிலை அவ்வாறு  இல்லை. .  பிரதமருக்கு எழுதியுள்ள கடித்தத்தை வெளியிடுவது என்பது அவர்களின் உரிமை. பிஜேபி எதிர்க்கட்ட்சியாக இருக்கும் போது பிரதமருக்கு எழுதிய கடிதங்களை வெளியிட்டது தேசத்துரோகம் ஆகாதா 2014 க்கு முன்பு பசுப்பாதுகாப்பு கொலைகளும் , ஜெய் ஸ்ரீராம் கொலைகளும் நடைபெற்றதா? ? ஜனநாயகம் என்பது ஒரு  நெறிசார்ந்த அரசியல். நாடு செல்லும் திசை வருத்தமளிப்பதாக நாட்டினுடைய பிரதமருக்கு கடிதம் எழுதுவது எந்தவிதத்தில் தவறு. கேள்விகளுக்கு பதில் சொல்வதையே ஜனநாயகவிரோதமாக கருதுகின்றனர். கலைஞர்கள் சமூகம் குறித்து பேசும்போது அவர்களுக்கு சட்டரீதியிலும் தனிப்பட்டரீதியிலும் அழுத்தம் கொடுப்பது சட்டவிரோதம் ஆகும். சகித்துக் கொண்டிருப்பதே குற்றம் எதிர்த்து குரல்கொடுபதுதான் மனிதாபிமானம். அந்தக்குரலைத்தான் இந்த 49 பேரும் கொடுத்துள்ளனர். உங்களிடம் பதிலை எதிர்பார்த்து கடிதம் எழுதியிருப்பவர்கள் மீது வழக்குத்தொடுக்கப்பட்டிருப்பது குறித்து பிரதமர் சார்பில் ஒரு அறிக்கையும் வெளியாகவில்லையெ. இந்த வழக்குகள் தேவையற்றது என பிரதமர் சார்பில் ஒரு அறிக்கை வெளிவந்தால் அனைத்தும் சரியாகிவிடும்." என்கிறார் நம்முடன் பேசிய  அரசியல் விமர்சகர் அய்யநாதன்
.
கடிதம் எழுதிய 49 பேருக்கும் ஏதோ உள்நொக்கம் இருக்கிறது என உறுதியாக கூறுகிறார் பிஜேபியி. செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி,
"இந்த வழக்கை பிஜேபி யோ மத்திய அரசோ தொடுக்கவில்லை. கடிதம் எழுதிய 49 பேர்  மீது வழக்கு தொடுத்திருப்பது வழக்கறிஞர் ஒருவர்.தீர்ப்பளித்திருப்பது நீதிபதி. சட்டம் அதனுடைய கடமையை செய்யும். அவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் நீதிமன்றத்தில் வாதிட்டு விடுதலையாகட்டும்.. இந்த கடிதமானது முழுக்க முழுக்க பொய் மற்றும் தவறான தகவல்களால் நிறைந்துள்ளது. கடிதம் எழுதிய அனைவருக்கும்  ஏதோ உள்நோக்கம் உள்ளது. கும்பல் படுகொலை என்ற வார்த்தையே தேசிய ஆவண குற்றக் காப்பகத்தில் கிடையாது. இவர்கள் அந்த புள்ளிவிவரங்களை கூறியிருப்பதே தவறு. இந்த நாட்டில் தலித்துகளும் சிறுபான்மையினரும் மிரட்டப்பாடுகிறார்கள் எனக்கூறப்படுவது  மக்களிடம் தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கும். 2004 முதல் 2014 வரை பல வன்முறை சம்பவங்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இறந்துள்ளர் அப்போது இவர்கள் பேசாதது ஏன்? அங்கொன்றும் இங்கொனறுமாக நடைபெறும் சம்பவங்களை மாநில சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்களை ஏதோ இந்தியா முழுவதுக்குமான பதற்றமாக இருப்பது போன்று . பிரச்சநையை  பூதாகரமாக ஊதிப் பெரிதாககுவதே இவர்களுக்கு ஏதோ உள்நோக்கம் இருப்பதை காட்டுகிறது.. நாட்டில் இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி மக்களை பதற்றப்படுத்தி சமூக நல்லிணக்கத்தை கெடுப்பதற்கும் இதுபோன்ற பிரபலங்கள் துணைபோவது தவறான விஷயம்தான்" என்கிறார்
.

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review