Posts

Showing posts from November, 2019

நிர்பயா நிதியில் அசால்ட்டு காட்டும் மாநில அரசுகள் ! - பிரியங்காவின் மரணத்திற்கு யார் காரணம்?? #Priyanka #Telengana #RIPPriyanka #Justice4Priyanka

Image
நிர்பயா நிதியில் அசால்ட்டு காட்டும் மாநில அரசுகள் ! -  பிரியங்காவின் மரணத்திற்கு யார் காரணம்? தெலுங்கானா வை சேர்ந்த பெண் மருத்துவர் பிரியங்கா எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரியங்கா வை எரித்து கொலை செய்த லாரி டிரைவர்கள் நால்வரையும் சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள் கைது செய்துள்ளது தெலுங்கானா காவல்துறை, பாராட்ட வேண்டிய விஷயம் தான். ஆனால் ஒவ்வொரு முறையும் குற்றம் நடந்த பிறகு மட்டுமே முடுக்கமடைந்து விரைந்து செயல்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? குற்றவாளிகளை தேடிப்பிடித்து கைது செய்வது மட்டுமே காவல் துறையின் வேலை இல்லை. மக்களை குற்றங்கள் தீண்டாமல் இருக்கும் வகையில் கண்காணித்து பாதுகாக்க வேண்டியதும் காவல் துறையின் கடமை தான். பெண்கள் சம்பந்தமான வழக்கில் அலட்சிய போக்கு அரவேக்கூடாது என்பதற்கு தெலுங்கானா சம்பவம் மீண்டுமொரு துயரமான உதாரணமாக மாறியுள்ளது. டோல்கேட் அருகில் நிற்கிறேன் என சொன்ன  பிரியங்காவின் மொபைல் சற்று நேரத்தில் சுவிட்ச் ஆஃப் ஆனவுடன்  ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்த பிரியங்காவின் குடும்பத்தினர் அருகில் உள்ள ஷம்ஷாபாத் காவல் நிலையத்தில

இந்த தோட்டா உங்களையும் பதம் பார்க்கலாம் ! - எனை நோக்கி பாயும் தோட்டா ! #Dhanush #GVM #ENPT #MyOpinion

Image
எனை நோக்கி பாயும் தோட்டா ! அண்ணனை கொன்றவர்களை தம்பி பழிவாங்கும் அதே பழைய காலத்து டெம்ப்ளேட் கதையை ஜிவிஎம் தன்னுடைய டெம்ப்ளேட்டில் தனுஷை மட்டும் ப்ரெஷ்ஷாக வைத்து இயக்கியிருக்கும் படம்தான் இந்த எனை நோக்கி பாயும் தோட்டா ! அண்ணனை கொன்றவர்களை தேடிப்பிடித்து பழிவாங்கும் ஹீரோ இதுதான் படத்தின் மையக்கதை. ஆனால், இந்த கதையே படம் முடிவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்புதான் தொடங்குவது படத்தின் மிகப்பெரிய மைனஸ். முதல் பாதியின் முதல் பாதி முழுவதும் வரும் தனுஷ் மேகா ஆகாஷ் காதல் காட்சிகள் ஜிவ்ஜிவ் ஃபீலிங்கை கொடுக்கின்றன. மேகா ஆகாஷ் சினிமா ஹீரோயின் என்பதை தவிர்த்து அவருக்கு வேறு மாதிரியான கேரக்டரை கொடுத்திருந்தால் காதல் காட்சிகள் ரசிகர்களுக்கு இன்னும் கனெக்ட் ஆகியிருக்கும். முதல் பாதி முழுவதும் மீண்டும் மீண்டும் காதலும் பாடலுமாக நகர்வது ஒரு கட்டத்தில்  சலிப்பை ஏற்படுத்துகிறது. இதே விஷயம் எடிட்டருக்கும் தோன்றியிருக்கும் போல, இரண்டாம் பாதியில் வரும் சண்டைக்காட்சிகளுக்கான லீடை முதல் பாதியில் ஆங்காங்கே சொருகி கொஞ்சம் நான் லீனியர் (nonlinear) முறையில் ஒப்பேத்த பார்த்திருக்கிறார்.படத்தின் முக்கியமான க

ஒத்தையடி பாதையில் வழியை மறைக்காதீர்கள் ராகுல்...| #RahulGandhi #Congress #Elections

Image
ஒத்தையடி பாதையில் வழியை மறைக்காதீர்கள் ராகுல் ! ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி , பிரியங்கா காந்தி திட்டம்? என்ற செய்தியை இன்று இந்து தமிழில் படித்தேன். இந்த செய்தியை பற்றியும் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகான ராகுலின் மௌனம் குறித்து கட்டாயம் விவாதிக்க வேண்டும் என நினைக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கும் ராகுலுக்கும் விழுந்தது மிகப்பெரிய அடிதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதன் பிறகு தற்போது நடைபெற்று முடிந்த ஹரியானா மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் மக்கள் இன்னும் காங்கிரஸின் மீது நம்பிக்கை வைத்திருப்பதையே வெளிச்சமிட்டு காட்டுகின்றன. மகாராஷ்டிரா நாடாளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் தற்போது சட்டமன்ற தேர்தலில் 44 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதேபோல, ஹரியானா வில் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத காங்கிரஸ் சட்டமன்ற தேர்தலில் 31 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. ராஜஸ்தானில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக வை விட அதிக இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்து 5

ஆட்டமே இனிதான் ஆரம்பம் ! இது மகா திரில்லர் ! |Maharashtra Politics | #Shivasena #Cong #NCP

Image
பரபரப்பு ஓய்ந்தாலும் ஆட்டம் ஓயாது ; இது மகா திரில்லர் ! அக்டோபர் 24 ம் தேதி தேர்தல் முடிவு வெளியானதிலிருந்தே பரபரப்பு தீயால் பற்றி எரிந்து கொண்டிருந்த மகாராஷ்டிரா அரசியல்  உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு கொஞ்சம் ஆசுவாசமடைந்துள்ளது. தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலகியதை தொடர்ந்து  உத்தவ் தாக்கரே முதல்வராவது ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில் மகா அரசியல் பரபரப்பு சற்று தணிந்திருந்தாலும் உண்மையான ஆட்டம் இனிதான் ஆரம்பம் ஆக போகிறது. இரு வெவ்வேறு துருவ கொள்கைகளை உடைய மூன்று கட்சிகள் ஆட்சியமைக்கிறதே இதனால் கொள்கை முரண்பாடு ஏற்பட்டு ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று நினைத்தால் நாம்தான் முட்டாள். இது அதிகாரத்திற்காக எந்த வண்ணத்தையும் பூசிக்கொள்ள அரசியல் கட்சிகள்  தயாராக இருக்கும் காலம். அதனால் கொள்கையெல்லாம் இவர்கள் கூட்டணியை முறித்து விடுவதற்கு வாய்ப்பிருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் இவர்கள் கூட்டாக கைப்பற்றப்போகும் அதிகாரத்திற்கு  இவர்களை பிளவுபடுத்தி சுக்குநூறக்கும் வல்லமை அதிகம் உள்ளது உத்தவ் தாக்கரே முதல்வர் ஆன பிறகு அமைச்சரவை ஒதுக்குவதுதான் இந்த கூட்டணியின் மிகப்பெரிய தலைவலியா

எச்சரிக்கை - இது காய்ச்சல் காலம் ! நெல்லை மருத்துவர் திருமலைக்கொழுந்துவின் பேட்டி | #Dengue #Fever #டெங்கு

Image
                                                             எச்சரிக்கை- இது காய்ச்சல் காலம்       பருவமழைக்கான அறிகுறி தொடங்கும் போதே போட்டி போட்டுக் கொண்டும் காய்ச்சல் சீசனும் தொடங்கிவிட்டது.  இக்காலத்தில் பரவும் டெங்கு மாதிரியான காய்ச்சல்கள் சாதாரண காய்ச்சல் போல் அல்லாமல் ஒரு படி மேலே சென்று மரணம் வரை விடாப்பிடியாக இழுத்து செல்லும் எமனாக விளங்குகின்றன. எந்த காய்ச்சலாக இருந்தாலும் 48 மணி நேரத்தில் ஆரம்பநிலையிலே மருத்துவமனையை அணுகி சிகிச்சை மேற்கொண்டால் 98 சதவீதம் உயிரிழப்புகளை தவிர்க்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். இது தொடர்பாக பொது மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் எஸ். திருமலைக்கொழுந்து அவர்களிடம் பேசினோம்.                       திருமலைக்கொழுந்து பொதுவாகவே மழைக் காலங்களில் வைரஸ் கிருமிகளால் தாக்கக்கூடிய நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஃப்ளூ , பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்றவைஅக்டோபர், நவம்பர் மழைக்காலங்களில் அதிகம் பரவும். பன்றிக்காய்ச்சல் பற்றி? சாதாரண ஜலதோஷம் என்று சொல்வது போல் மூக்கில் நீர் வடிதல், இருமல், தொண்டை கரகரப்பு ,எரிச்சல

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பாணியில் இந்தியாவை உலுக்கிய 20,000 கோடி ஊழல் | வியாபம் ஊழல் | Vyapam Case | Madhya Pradesh |

Image
வசூல் ராஜா எம்பிபிஎஸ் பாணியில் இந்தியாவில் நடந்த 20,000 கோடி  ஊழல் ! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த மத்திய பிரதேசத்தின் வியாபம் ஊழலில் சம்பந்தப்பட்ட 30 பேருக்கு 7 ஆண்டுகள் மற்றும் ஒருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது, சிபிஐ சிறப்பு நீதிமன்றம். சொத்துக்குவிப்பு மற்றும் பல ஊழல் வழக்கிலும் பெரிய தலைகளுக்கே  4 ஆண்டு சிறை தண்டனை தான் வழங்குகிறார்கள் அப்படியிருக்கும் போது இவர்களுக்கு ஏன் இத்தனை வருடம் என யோசித்தால் விஷயமும் கொஞ்சம் பெருசுதான். வியாபம் ஊழல் என்றால் என்ன? வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் தனக்கு பதிலாக அதே கல்லூரியை சேர்ந்த மருத்துவரான கிரேஷி  மோகனை நுழைவுத்தேர்வை எழுதச் செய்து எம்.பி.பி.எஸ் படிப்பில் சேருவார் கமல்ஹாசன். கல்லூரியில் சேர்ந்த பிறகு எக்சாமில் பாஸ் ஆவதற்கும் பல மைமா வேலைகளையும் கிமோ உதவியுடன் நிகழ்த்துவார்  கமல்.  இந்த சிரியஸ் மேட்டரில் இருந்தே வியாபம் ஊழல் என்னும் சீரியஸ் மேட்டருக்குள் பயணிப்போம். வசூல் ராஜா படத்தில் கமல் தேர்வுகளில் செய்யும் தில்லுமுல்லுகளையெல்லாம் ஒரு அரசாங்க அமைப்பும் அதன் ஊழியர்களுமே செய்தால் எப்படி இருக்கும்

உணவு ; உடல் ; உண்மை ! | நெல்லை மக்களின் அபிமானத்துக்குரிய மருத்துவர் திருமலைக்கொழுந்து பகிர்ந்துகொள்ளும் ஹெல்த் டிப்ஸ் ! | Health Tips by Dr.ThirumalaiKolunthu

Image
உணவு ; உடல் ; உண்மை ! முன்பெல்லாம் சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவை எங்காவது ஒருவருக்குத்தான் இருக்கும் . இப்போதோ நம் குடும்பத்தில் ஒருவருக்கோ இல்லை நமக்கு தெரிந்த ஒருவருக்கோ இத்தகைய நோய்கள் இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கமும் தவறான வாழ்க்ககைமுறையும் நோய் நிரம்பிய வாழ்க்கைக்கு சிகப்பு கம்பளம் விரித்துவிட்டன. ஜவுளிக்கடைகளில் கூட ஆடிமாதம் மட்டும்தான் தள்ளுபடி அளிக்கின்றனர் ஆனால் நம் ஊரில் புற்றீசல் போல் பெருகியுள்ள மெடிக்கல்களில் வருடம் முழுவதும் தள்ளுபடி அளிக்கின்றனர். ஹோட்ட் ஹோட்டல்களில்  இருக்கும் கூட்டத்தை விட மெடிக்கல்களில் மருந்து வாங்க நிற்கும் கூட்டம் அதிகம். உணவே மருந்து என்ற வாழ்க்கை முறையிலிருந்து மருந்தே உணவு என்ற வாழ்க்கைமுறைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.     இருபது முப்பது வருடங்களுக்கு முன்னர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன் , புற்றுநோய் போன்றவை அரிதினும் அரிதாகத்தான் இருக்கும். இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாரபட்சமின்றி ஒரு கூட்டமே நோயாளியாக மாறியுள்ளனர். தவறான உணவுப்பழக்க வழக்கங்களே இவற்றிற்கு காரணம் என்றும் சரியான ச

வங்கி இணைப்பும் சர்ச்சைகளும் - பொருளாதார நிபுணர்களுடன் ஒரு அலசல் | Bank Merger |

Image
வங்கி இணைப்பும் சர்ச்சையும்... பொருளாதார மந்தநிலை குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் 10 பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைக்கப்பட்டு 4 பெரிய வங்கிகளாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 21லிருந்து 12 ஆக குறைந்துள்ளது. பஞ்சாப் நேஷ்னல் பேங்க், ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை ஒன்றாகவும், கனரா வங்கி சிண்டிகேட் வங்கிஒன்றாகவும், யுனியன் வங்கி, ஆந்திரா வங்கி,கார்ப்பரேசன் வங்கி ஆகியவை ஒன்றாகவும், இந்தியன் வங்கி அலகாபாத் வங்கி ஆகியவை ஒன்றாகவும் இணைக்கப்பட்டுள்ளன. பொருளாதாரம் மந்தமாக இருக்கும் இந்த நிலையில் வங்கி இணைப்பு நடவடிக்கை என்ன பலனைத் தரும்? வங்கி இணைப்பின் மூலம் என்னென்ன விளைவுகள் உண்டாகும்? இதனால் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள பொதுமக்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்படுமா? என பல கேள்விகளோடு நிபுணர்களிடம் பேசினோம். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பொருளாதார ஆலோசகர் வி.நாகப்பன், "குறிப்பிட்ட ஒரே இடத்தில் வெவ்வேறு பொதுத்துறை வங்கிகள் அதிகளவ

உத்த(ம)வ் - புத்திரன் ! - மகராஸ்ட்ரா அரசியல் சூழ்நிலை ஒரு பார்வை | Maharashtra Political crisis | Uththav Thacrey, Devendra Fadnavis |

உத்த(ம)வ் - புத்திரன் ! வாரிசு அரசியல் வாரி தந்த வினை...! நேற்று இரவு ஒருவரை முதல்வர் என்கிறார்கள் தூங்கி எழுந்து காலையில் பார்த்தால் மாநிலத்தில் இருந்த குடியரசுத்தலைவர் ஆட்சி நீக்கப்பட்டு வேறொருவர் வேறொரு கட்சியின் சில பேரின் உதவியுடன் முதல்வராகவே ஆகிவிட்டார். இன்றைக்கு மகாராஷ்டிரா அரசியலில் நடைபெற்ற களேபரத்தை அதிசயம் என்றோ அற்புதம் என்றோ குறிப்பிட்டால் அதிசயமும் அற்புதமும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ளும். தேர்தல் முடிவுகள் வெளியாகி இன்றோடு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. இந்த ஒரு மாதமும் மகாராஷ்டிராவில் நடந்த அரசியல் கேலிக்கூத்துகளை, மீண்டும் இங்கே நினைவுபடுத்தி எங்கோ ஒரு மூலையில் ஜனநாயகத்தின் மீது இன்னுமும்  நம்பிக்கை வைத்திருப்பவர்களை எரிச்சலூட்ட விரும்பவில்லை நேராக விஷயத்துக்கு வருவோம். தேர்தலுக்கு பிறகான எல்லா குழப்பத்திற்கும் விதை சிவசேனா போட்டது. கடந்த தேர்தலில் கூட சிவசேனா ஆதரவோடுதான் பிஜேபி ஆட்சியை நகர்த்தி சென்றது. சிவசேனா அப்போதெல்லாம் ஏன் முதல்வர் பதவி கேட்கவில்லை. ஏனெனில் இந்த முறை சிவசேனா சார்பில் முதல்வராக முன்னிறுத்தப்பட்டவர் உத்தவின் மகனும் பால் தாக்

Out of Contact bounds ! | is the lose of telecom companies are affect people or not? | a Brief analysis | #Airtel #Jio #Vodafone

Image
Out of contact bounds..! The telecommunications sector, which has been a new patient in the suffocated Indian economy, two leading service providers has faced a loss of nearly 70,000 crore in the three leading private telecom companies in the market today, Airtel and Vodafone idea. As far as the Vodafone company was concerned, the second quarter of the financial year 2019 was it has 4973 crore as a loss. But in this financial year, the amount has been increased by 10 times and a loss of 50,922 crore. In the same period of last financial year, Airtel, which has been operating at a profit of 118.8 crores, is now at a loss of 23,045 crore. After Jio's visit, many companies were unable to cope with the competition, leaving the telecom market. The latest example is the Aircel. The idea company aligned itself with Vodafone. The companies that have been in the market have been stuck in Jio storm.. ' The court recently issued an AGR ruling that has resulted in huge financial

டேட்டா விலை உயர்வும் பிண்ணனியும் ! | தொடர்பு எல்லைக்கு வெளியே | #jio #Airtel #Vodafone

Image
தொடர்பு எல்லைக்கு வெளியே...! மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் இந்திய பொருளாதாரத்தில் புதிய நோயாளியாக சேர்ந்திருக்கிறது தொலைதொடர்புத் துறை.இன்றைய தேதிக்கு சந்தையில் உள்ள மூன்று முக்கிய தனியார் டெலிகாம் நிறுவனங்களில் ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஏறக்குறைய 74000 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளன. வோடாபோன் நிறுவனத்தை பொறுத்தவரை 2019 ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 4973 கோடி ரூபாயை சந்தித்திருந்தது ஆனால் இந்த நிதியாண்டில் இந்த தொகை அப்படியே 10 மடங்காக அதிகரித்து 50,922 கோடி நஷ்டமாகியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் 118.8 கோடி லாபத்தில் இயங்கிவந்த ஏர்டெல் நிறுவனம் இப்போது 23,045 கோடி நஷ்டத்தில் சிக்கியுள்ளது. ஜியோ வருகைக்குப் பிறகு பல நிறுவனங்களும்  போட்டியை சமாளிக்கமுடியாமல் டெலிகாம் சந்தையிலுந்தே வெளியேறின. சமீபத்திய உதாரணம் ஏர்செல் நிறுவனம். ஐடியா நிறுவனம் வோடாபோனுடன் தன்னை இணைத்துக்கொண்டது. ஜியோ புயலில் சிக்கி சின்னாபின்னமாகி சந்தையில் ஓரளவு ஊன்றி நின்ற நிறுவனங்கள் தலையிலும் தற்போது இடியாக விழுந்துள்ளது உச்சநீதிமன்ற தீர்ப்பு. "நீதிமன்றம் சமீபத

Chating முதல் Videocall வரை அரசே உங்கள் மொபைலை உளவு பார்க்கப் போகிறதா? | விவாதம் | முழு விளக்கம் | #Modi #Amitshah #Congress #CentralGovernment

கணினி கண்காணிப்பு நாட்டு நலனா ?  உரிமை மீறலா ? விவாதம் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 69 (1) ன் படி, நாட்டு நலனுக்காக நாட்டில் உள்ள அனைத்து கண்னிகளையும் கண்காணிக்கும் அதிகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் சிபிஐ, ஐபி, என்ஐஏ, ரா, அமலாக்கத்துறை உட்பட 10 அமைப்புகளுக்கு வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தனிமனித உரிமையில் தலையிடும் செயல், தனிமனித நலனா ? பொது நலனா என்றால் பொது நலம்தான் முக்கியம்,  அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் என்றும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு குரல்களும், எதிர்ப்பு கண்டனங்களும் வலுக்கத் தொடங்கியுள்ளது.  இது தொடர்பாக இருதரப்பு விவாதம்.... நாட்டு நலனே ! தமிழ்தாமரை VM வெங்கடேஷ், பாஜக சமூகஊடக பிரிவின் மாநில இணை அமைப்பாளர், ஆம் இது  நாட்டு நலன், தேச நலன் சார்ந்த நடவடிக்கையே,  இன்று இந்தியாவில் கைபேசி, கணினி  மற்றும் இணைய பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அது இன்று  50 கோடியை தாண்டி விட்டது. பொதுவாக எந்த ஒன்றின்  பயன்பாடும், வளர்ச்சியும் அதிகரிக்க அதிகரிக்க அது சார்ந்த குற்றங்களும் அத்துமீறல்களும் அ

சுட்டதெல்லாம் தங்கம் - இது இளவேனில் ஸ்டைல் | Ilavenil Valarivan | World cup Shooting 2019 |

சீனாவில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன்  குறித்த ஸ்டோரி. (கடந்த செப்டம்பர் மாதத்தில் புதிய தலைமுறை இதழில் வெளியான கட்டுரை ) ' இது தங்கமழை பொழியும் "இளவேனில்" காலம்' பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோவில் நடைபெற்ற சீனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதலின் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாளறிவன்.ரியோவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் அனுபவமிக்க சீனியர் வீராங்கனைகள் சொதப்ப சிங்கிளாக நின்று தோட்டாக்களை தெறிக்கவிட்டு தங்கம் வென்றுள்ளார் இளவேனில். தங்கப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து, மானசி ஜோஷி வரிசையில் இளவேனிலும் இணைந்து ஆகஸ்ட் மாதத்தை 'கோல்டன்' மாதமாக மாற்றியுள்ளார். இன்று இந்தியா முழுவதும் பெருமிதம் பேசிக்கொண்டிருக்கும் 20 வயதே ஆன இளவேனிலின் இன்றைய சாதனைப் பக்கங்களுக்கு முன்புள்ள வாழ்க்கை பக்கங்கள் அத்தனையும் நம்மை ஆச்சரியபடவைக்கும் மோட்டிவேஷ்னல் பக்கங்கள். . தமிழகத்தின் கடலூரில் உள்ள கார

அயோத்தி தீர்ப்பு - என்ன சொல்கின்றனர் அரசியல் கட்சியினர்? #AyodhyaVerdict

#அயோத்தி தீர்ப்பு குறித்து தமிழக முக்கியஸ்தர்கள் என்ன சொல்கிறார்கள்??? வெறுப்பை அன்பால் வெல்வோம்; அமைதி பரவட்டும்; "உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமயாக வரவேற்கிறோம்.70 ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சனைக்கு இறுதியாக ஒரு தீர்வு எட்டப்பட்டுவிட்டது.அயோத்தி வழக்கின் தீர்ப்பால் எந்த தரப்புக்கும் வெற்றி தோல்வி இல்லை. மக்கள் அமைதியோடும் நல்லிணக்கத்தோடும் வாழ வேண்டும்." அயோத்தி வழக்கின் தீர்ப்பிற்கு பிறகு பெரும்பலான அரசியல் மற்றும் மதத்தலைவர்களின் அறிக்கை இதுவாகத்தான் இருந்தது. சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவில் அனைத்து அரசியல் கட்சிகளும் மக்கள் நலனுக்காக ஒரே புள்ளியில் நின்று கருத்து கூறிய ஒரு சில சம்பவங்களில் அயோத்தியும் ஒன்று. தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்பட்டுவிடும் என வியூகங்கள் வெளியான நாளிலிருந்தே பெரும்பாலான அரசியல்கட்சிகளும் மதத்தலைவர்களும் தீர்ப்பை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என மக்களிடம் பேசி மக்களை அமைதியான மனநிலைக்கு தயார்படுத்திவிட்டனர். தீர்ப்பிற்கு பிறகான மக்களின் பேரமைதியே இந்திய கட்சிகள் மற்றும் அமைப்புகள் எத்தகைய பொறுப்புணர்வுடன் செயல்பட்டுள்ளன என்பதை புர

நேர்மையின் நாயகன்-டி என்.சேஷன் | T.N.Sesan | Sesan |

நினைவேந்தல் நேர்மையின் நாயகன் ; 'நான் ஒன்றும் இந்திய அரசாங்கத்தின் ஊழியர் கிடையாது அவர்கள் சொல்வதை கேட்பதற்கு, நான் இந்திய நாட்டின் ஊழியர்' என துணிச்சலாக பேசி ஒரு தேர்தல் ஆணையருக்குள்ளான அனைத்து அதிகாரங்களையும் முழுமையாக பயன்படுத்தி தேர்தல்களத்தில் பல புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வந்தவர்தான் டி.என்.சேஷன் என்ற திருநெல்லை நாராயண சேஷன் ஆவர். ஆட்சியில் இருப்பவர்களின் ஆக்டோபஸ் கரங்கள் அரசு நிர்வாகம் முழுவதும் பரவியிருக்கும் இந்தியா போன்றதொரு நாட்டில் ஒரு தன்னாட்சி அமைப்பின் அதிகாரி இந்த எல்லை வரை தான் நேர்மையாக இருக்க முடியும் அதற்கு மேல் ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்துதான் செல்ல வேண்டும் என்ற இலக்கணத்தையெல்லாம் உடைத்தெறிந்து சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் தான் எனக்கான எல்லை அந்த எல்லைக்குள் என்னைத் தவிர வேறு யாரும் கோலோச்ச முடியாது என்ற அளவுக்கு நேர்மையின் நாயகனாக விளங்கினார். பிறந்தது கேரளாவாக இருந்தாலும் தமிழகப்பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகத்தான் தேர்வாகிறார். பல வருடங்கள் மாநில அரசுப்பதவிகளில் பணிபுரிந்தார். சேஷனின் நேர்மை மாநில அரசை சுரண்டி பார்க்க, திடீரென மத்திய அரசுக்கு மாற்