அயோத்தி தீர்ப்பு - என்ன சொல்கின்றனர் அரசியல் கட்சியினர்? #AyodhyaVerdict
#அயோத்தி தீர்ப்பு குறித்து தமிழக முக்கியஸ்தர்கள் என்ன சொல்கிறார்கள்???
வெறுப்பை அன்பால் வெல்வோம்;
அமைதி பரவட்டும்;
"உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமயாக வரவேற்கிறோம்.70 ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சனைக்கு இறுதியாக ஒரு தீர்வு எட்டப்பட்டுவிட்டது.அயோத்தி வழக்கின் தீர்ப்பால் எந்த தரப்புக்கும் வெற்றி தோல்வி இல்லை. மக்கள் அமைதியோடும் நல்லிணக்கத்தோடும் வாழ வேண்டும்." அயோத்தி வழக்கின் தீர்ப்பிற்கு பிறகு பெரும்பலான அரசியல் மற்றும் மதத்தலைவர்களின் அறிக்கை இதுவாகத்தான் இருந்தது. சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவில் அனைத்து அரசியல் கட்சிகளும் மக்கள் நலனுக்காக ஒரே புள்ளியில் நின்று கருத்து கூறிய ஒரு சில சம்பவங்களில் அயோத்தியும் ஒன்று. தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்பட்டுவிடும் என வியூகங்கள் வெளியான நாளிலிருந்தே பெரும்பாலான அரசியல்கட்சிகளும் மதத்தலைவர்களும் தீர்ப்பை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என மக்களிடம் பேசி மக்களை அமைதியான மனநிலைக்கு தயார்படுத்திவிட்டனர். தீர்ப்பிற்கு பிறகான மக்களின் பேரமைதியே இந்திய கட்சிகள் மற்றும் அமைப்புகள் எத்தகைய பொறுப்புணர்வுடன் செயல்பட்டுள்ளன என்பதை புரிந்துகொள்ள முடியும்.தீர்ப்பின் மீது ஒரு சில அமைப்புகளுக்கும் கட்சிகளுக்கும் விமர்சனம் இருந்தாலும் விமர்சிப்பதற்கு இது சரியாக தருணம் இல்லை என்பதை உணர்ந்து மிகச்சரியாக இந்த விஷயத்தை கையாண்டனர். இந்நேரத்தில் இத்தீர்ப்பை வரவேற்கும் மற்றும் விமர்சிக்கும் தமிழகத்தை சேர்ந்த ஒரு சிலரிடம் பேசினோம். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் கடைசியில் அமைதி என்னும் ஒற்றைப் புள்ளியில் இணைவது சிறப்பு.
ரவிக்குமார்,
வெறுப்பை அன்பால் நீக்குவோம் !
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கிய ஒரு பிரச்சனைக்கு 21ம் நூற்றாண்டில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மூன்று நூற்றாண்டுகளாக அரசியலில் ஆதிக்கம் செய்து வந்த ஒரு பிரச்சனைக்கு இறுதியாக தீர்ப்பு வழங்கப்படும் என்றும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பலநாட்களாக பல தலைவர்களும் கோரிக்கை வைத்து வந்தனர். தீர்ப்புக்கும் நீதிக்கும் வேறுபாடு உள்ளது. தீர்ப்பு என்பது சட்டத்தின் அடிப்படையில் வாதப்பிரதிவாதங்களை ஆய்ந்து அதன் அடிப்படையில் முடிவு செய்வது. கீழமை நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குகிற இடமாக இருக்கலாம் ஆனால் மக்களின் இறுதி புகலிடமாக இருக்கிற உச்சநீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குகிற இடமாக இல்லாமல் நீதி வழங்குகிற இடமாக இருக்க வேண்டும். சட்டத்தை மறுவரையறை செய்வதாகவும் சட்டத்தின் எல்லைகளை விரிவாக்குவதுமாக உச்சநிதிமன்றத்தின் நீதியென்பது அமைய வேண்டும். அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டிருப்பது தீர்ப்பேயன்றி நீதியில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைதே மதச்சார்பின்மைதான் என்றும் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம் என்றும், நிலத்தின் மீதான உரிமையை நம்பிக்கையின் அடிப்படையில் இல்லாமல் ஆதாரத்தின் அடிப்படியிலேயே முடிவு செய்ய முடியும் என்று உச்சநிதிமன்றம் கூறியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. இதற்கு மேலும் சீராய்வு மனு செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது எனவே இந்த தீர்ப்பே இறுதியானதாக எடுத்துக்கொள்ள முடியாது. இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க சொன்ன நீதிமன்றம் அங்கே மசூதி கட்டுவதற்கான பொறுப்பையும் அரசிடமே ஒப்படைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மார்டின் லூதர் கிங்கின் வார்த்தைகளை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். 'இருட்டை இருட்டால் விரட்டமுடியாது ஒளியால் தான் விரட்ட முடியும், வெற்றுப்பை வெறுப்பால் நீக்க முடியாது அன்பால் தான் நீக்க முடியும்." இந்த நாட்டை யார் வெறுப்பால் மூழ்கடிக்க நினைத்தாலும் அதை அன்பால் முறியடிப்போம்.
அய்யநாதன்,
அரசியல் விமர்சகர்
இன்னும் ஆய்வு செய்திருக்கலாம் !
உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர இந்திய வரலாற்றில் மிகப்பெரிய கலவரம் அரங்கேறியது பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகுதான்..மசூதியை இடித்தது குற்றம் என்று சொல்லிவிட்டு குற்றம் புரிந்தவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். இந்த நாட்டில் எப்போதும் நீதிக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நம்பிக்ககையின் அடிப்படையில் நிலத்துக்கு உரிமை கோரமுடியாது என இந்த தீர்ப்பிலே கூறியுள்ள நீதிபதிகள் ஒரு தரப்பின் நம்பிக்கைக்கு முன்னுரிமை தந்து தீர்ப்பு வழங்கியுள்ளது முரணாக உள்ளது. அந்த நம்பிக்கைகளுக்கும் குறிப்பிடத்தகுந்த வகையில் எந்த ஆதாரங்களும் இல்லை. அமைதி என்பது நீதியன்றி நிலைநாட்டப்படாது நீதியோடுதான் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும். தொல்லியல் துறை மூலம் இன்னும் ஆழமான ஆய்வுகளை நடத்தி இன்னும் சரியான தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டும். நம்பிக்கைதான் முதன்மையானது என்றால் சபரிமலை விவகாரத்தில் ஏன் நம்பிக்கையை தவிர்த்து தீர்ப்பு வழங்கினார்கள்? அமைதிக்காக அல்ல நியாயத்திற்காக மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும்.நாட்டின் பிரதமர் இந்த தீர்ப்பின் மீது என்ன சொல்கிறார் என்பது முக்கியமில்லை. இந்த தீர்ப்பின் மீது வருங்காலம் என்ன சொல்லப்போகிறது என்பதே முக்கியம்.தீர்ப்பின் மூலம் ஏற்படும் விளைவுகளை இந்த நாடே சுமக்கப்போகிறது.
நாராயணன் திருப்பதி,
பாஜக செய்தித்தொடர்பாளர்,
தீர்ப்புக்கு அரசு கட்டுப்படும்,
உச்சநிதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக வரவேற்கிறோம். பல நூற்றாண்டுகளாக இருந்த சிக்கலான வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. உச்சநீதிமன்றம் மிகச்சரியான அதே நேரத்தில் நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆதாரங்கள் மற்றும் சரித்திர வரலாற்றின் அடிப்படையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதில் யாருக்குமே மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. சிலபேர் இதனால் பிரச்சனை ஏதும் வந்துவிடாதா?இந்த தீர்ப்பின் மூலம் பதற்றநிலை ஏற்பட்டுவிடாதா? என்ற உள்ளக்கிடங்கோடு காத்திருந்தனர். ஆனால் மக்கள் இந்த தீர்ப்பை முழுமையாக வரவேற்று ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் என மதங்களை கடந்து அனைத்து மக்களும் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் ஒரு சில அமைப்புகள் வேண்டுமென்றே இந்த தீர்ப்பை விமர்சித்து வருகின்றனர். அவர்களை புறக்கணித்து விட்டு மதச்சார்பின்மயை காப்பதுதான் நமது கடமை. ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக வேலை நடப்பதாக சில தீயசக்திகள் தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுபான்மை மக்களின் வாக்குகளை எப்படியாவது பெற்றுவிட முடியாதா? என வாக்கு அரசியல் செய்பவர்கள்தான் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். இதற்க்கெல்லாம் இந்த நாட்டினுடைய மதச்சார்பற்ற மக்கள் செவிசாய்க்கமாட்டார்கள். நல்ல தீர்ப்பிற்கு அரசும் கட்டுப்பட்டு தீர்ப்பின்படி உறுதிபட செயல்படும்.
கோபண்ணா,
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்,
மக்களின் அமைதியே முக்கியம்,
நீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி மதிக்கிறது.70 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த ஒரு வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. யாருக்கு நியாயம் வழங்கியுள்ளது யாருக்கு நீதி வழங்கியுள்ளது என்பதை பார்ப்பதை விட தீர்ப்பு வெளியான பிறகு மக்களிடம் வெளிப்பட்ட அமைதிதான் மிக முக்கியமான விஷயம். இந்த பிரச்சனைக்கு முடிவுகட்டப்பட்டு அமைதியாக வாழ்வதயே மக்கள் விரும்புகிறார்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம் என நீதிமன்றமே கூறிவிட்டது. மக்களின் நம்பிக்கையை மதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிறுபான்மை மக்களிடையே சிறு அதிருப்தி இருக்கலாம் இருந்தாலும் அவர்கள் அதை வெளிக்காட்டாமல் இருப்பதே அவர்களின் பெருந்தன்மையை காட்டுகிறது. பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டுமென சிறுபான்மை மக்கள் நினைப்பதே ஆரோக்கியமான விஷயம். தீர்ப்பை கடுமையாக விமர்சிப்பதன் மூலம் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. விமர்சனம் செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த தீர்ப்பில் நிறைய வாய்ப்புள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கென்று ஒரு பண்பும் கலாச்சாரமும் உள்ளது அதன் காரணமாக உச்சபட்ச அதிகாரமான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக வரவேற்கிறோம்.

Comments
Post a Comment