Posts

Showing posts from September, 2019

அ(திர்ச்சி)மித் ஷா - சிறப்புக்கட்டுரை #Amitshah

உ.ஸ்ரீராமநாராயணன் அதிர்ச்சி 'ஷா' ஒரு காலத்தில் கிரிக்கெட் வீரர் சேவாக் களத்தில் இறங்கினால் சந்திக்கும் முதல் பந்தையே சிக்சருக்கு தூக்கி பந்துவீச்சாளர்களை அதிர்ச்சியடைய செய்வார்.  தற்போது முழு மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சி அமைத்துள்ள மோடி2.0 அணியின்  முக்கிய பேட்ஸ்மேனான அமித்ஷாவும் அதிரடி நடவடிக்கைகள்  மற்றும் அறிவிப்புகள் மூலம் பலருக்கும்  அதிர்ச்சியளித்து வருகிறார்.ஆனால்  சேவாக் கின் சிக்சர்கள் ரசிகர்களின் உற்சாகத்தால் மைதானத்தை அதிரவைத்தன அமித்ஷா வின் அதிரடி சிக்சர்கள் சர்ச்சைகளாக மாறி ஒட்டுமொத்த இந்தியாவையே அதிரவைக்கின்றன.  'நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தியே இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவை உலக அரங்கில் அடையாளப்படுத்த முடியும்' என ஹிந்தி திவாஷ் எனப்படும் ஹிந்தி தினத்தில் பேசியசன் சூடு தணிவற்குள் பலகட்சி ஆட்சிமுறை இந்தியாவில் வெற்றிப்பெற்றுள்ளதா? எனக் கேட்டு  அடுத்த நெருப்பை பற்ற வைத்துள்ளார் அமித்ஷா. 'அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் புறக்கணித்துவிட்டு இந்தி மட்டுமே இந்தியாவை ஒருங்கிணைக்கும் என உள்துறை அமைச்சர் கூறியிரு

விளையாட்டு வயதில் விபரீத தேர்வா?

விளையாட்டு வயதில் விபரீத தேர்வா?.. 5 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு அவசியமா?  10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மீதே கடுமையான விமர்சனங்கள் எழுந்தது அதனைத் தொடர்ந்து மாணவர்களின் சுமையை குறைக்கும் பொருட்டு மொத்த மதிப்பெண் குறைக்கப்பட்டது. மாநில அளவில் மாவட்ட அளவில் மாணவர்கள் முதலிடம் இரணடாமிடம் என அறிவிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தேர்வை பற்றியே முழுமையாக அறியாத சிறுவயது மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்ற அறிவிப்பு எந்த வகையில் அவர்களின்  கல்வித்தரத்தை உயர்த்திவிடும் ? என்ற கேள்வி எழுகிறது. இந்த புதிய பொதுத்தேர்வு முறை மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும் குறிப்பாக பெண்கல்விக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என கல்வியாளர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். "குழந்தை பருவத்தில் நடத்துகிற தேர்வு எதற்கான தேர்வுங்ற பெரிய கேள்வி இருக்கு , குழந்தைகள் எதை கற்றுக்கொண்டார்கள் எதை கற்க இயலவில்லை என்பதை அளவிட்டு கற்க முடியாததை கற்க வைக்கனும். அதுதான் இடைநிற்றல் தவிர்ப்பு திட்டத்தின் அடிப்படை " என குழந்தைகளுக்கான தேர்வுமுறை குறித்தும் இடைநிற்

அவர்களும் ; அண்ணாவும் #Anna111 #அண்ணா111 அண்ணா பிறந்தநாள் பகிர்வு

அவர்களும் ; அண்ணாவும் #அவர்கள் : இந்தியாவில் பெரும்பான்மையானோர் பேசும் மொழி ஹிந்தி அதனால் இந்திய நாடு ஹிந்தியால் அடையாளப்படுத்தப்பட வேண்டும். இதில் என்ன குற்றம் இருக்கிறது ? #அண்ணா : இந்திய மக்களில் 42% பேர் பேசும் மொழியாக இந்தி இருப்பதால் அதற்கு ஆட்சிமொழி அந்தஸ்து தரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.  இந்த 42% பேரும் நாடு முழுவதும் பரந்து விரிந்து வாழ்ந்தால் இந்த வாதத்துக்கு தர்க்க நியாயம் இருக்கும். உ.பி, ம.பி, ராஜஸ்தான், பிஹார் மாநிலங்களில் பேசும் மொழிதான் தேசியமொழி என்பதை எவ்வாறு ஏற்கமுடியும்? ஜனநாயகம் என்பது பெரும்பான்மையான எண்ணிக்கை அடிப்பைடையிலான ஆட்சி மட்டும் அல்ல; சிறுபான்மை மக்களின் உரிமைகள்,உணர்ச்சிகள் ஆகியவையும் புனிதம் என்று கருதி அவற்றைக் காப்பதற்கு பெயர்தான் ஜனநாயகம். #அவர்கள் : ஹிந்தியை எதிர்ப்பவர்கள் ஆங்கிலத்தை மட்டும் தூக்கிப்பிடிப்பது ஏன்? இதிலிருந்தே இவர்களின் உண்மை முகத்தை அறிய முடிகிறது. #அண்ணா :  நான் ஆங்கிலத்துக்காக மன்றாடுகிறேன், ஆங்கிலத்திலேயே பேசுகிறேன்- ஆங்கிலத்தால் மிகவும் கவரப்பட்டு அல்ல; என்னுடைய தாய்மொழியைவிட ஆங்கிலத்துக்கு உயர்ந்ததொர

ஒரு விதிமீறல்; ஒரு நொடி ; ஒரு உயிர். #Subashree #whokilledSubashree

#Sritorial ஒரு விதிமீறல் ; ஒரு நொடி ; ஒரு உயிர். விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட ஒரு பேனர் கண்ணிமைக்கும் நொடியில் ஒரு உயிரை கபளீகரம் செய்துள்ளது. இன்னும் எத்தனை லிட்டர்  இரத்தம் தேவைப்படுகிறது ? ஒரே இரவில் இந்த பேனர்கள் உருவாகவில்லை. பேனர் விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பிக்காத உத்தரவுகளே இல்லை. எந்த விஷேசமாக இருந்தாலும்  பேனர் வைத்தால் தான் வருவார்களா? என பேனர் சரிந்து உயிரிழந்த சுபஸ்ரீ யின் வழக்கில் நீதிமன்றம் எழுப்பியிருக்கும் ஒவ்வொரு கேள்வியும் சாட்டையடி. ஆனால் இதுபோன்ற சாட்டையடிகளெல்லாம் அரசியல்வாதிகளுக்கு ஒன்றும் புதிதல்ல. 2017ம் ஆண்டு   நடைபெற்ற எம்.ஜீ.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக கோவைக்கு சென்ற முதல்வரை வரவேற்று வைத்திருந்த அலங்கார வளைவில் மோதி ரகு என்ற இன்ஜினியர் பரிதாபமாக உயிரழந்தார். அப்போதும் சென்னை உயர்நீதிமன்றம் இதேபோன்ற சரமாரியான கேள்விகளை அரசையும் அரசியல்வாதிகளையும் நோக்கி கேட்டிருந்தது. மேலும் விதிமுறைகளை மீறி பேனர் வைப்பதற்கு தடையும் விதித்தது.  இந்த விஷயத்தில் அரசியல்வாதிகளை மட்டும் குறைகூறமுடியாது. திருமணம், சடங்கு, காதுகுத்து என கொண்டாட்டங்களின் போது சாலைகள் பொது