அ(திர்ச்சி)மித் ஷா - சிறப்புக்கட்டுரை #Amitshah
உ.ஸ்ரீராமநாராயணன்
அதிர்ச்சி 'ஷா'
ஒரு காலத்தில் கிரிக்கெட் வீரர் சேவாக் களத்தில் இறங்கினால் சந்திக்கும் முதல் பந்தையே சிக்சருக்கு தூக்கி பந்துவீச்சாளர்களை அதிர்ச்சியடைய செய்வார். தற்போது முழு மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சி அமைத்துள்ள மோடி2.0 அணியின் முக்கிய பேட்ஸ்மேனான அமித்ஷாவும் அதிரடி நடவடிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் மூலம் பலருக்கும் அதிர்ச்சியளித்து வருகிறார்.ஆனால் சேவாக் கின் சிக்சர்கள் ரசிகர்களின் உற்சாகத்தால் மைதானத்தை அதிரவைத்தன அமித்ஷா வின் அதிரடி சிக்சர்கள் சர்ச்சைகளாக மாறி ஒட்டுமொத்த இந்தியாவையே அதிரவைக்கின்றன.
'நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தியே இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவை உலக அரங்கில் அடையாளப்படுத்த முடியும்' என ஹிந்தி திவாஷ் எனப்படும் ஹிந்தி தினத்தில் பேசியசன் சூடு தணிவற்குள் பலகட்சி ஆட்சிமுறை இந்தியாவில் வெற்றிப்பெற்றுள்ளதா? எனக் கேட்டு அடுத்த நெருப்பை பற்ற வைத்துள்ளார் அமித்ஷா. 'அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் புறக்கணித்துவிட்டு இந்தி மட்டுமே இந்தியாவை ஒருங்கிணைக்கும் என உள்துறை அமைச்சர் கூறியிருப்பது வேற்றுமையில் ஒற்றுமை எனும் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக்கு விடப்பட்டிருக்கும் சவால் ஆகும். இந்தி திணிப்பை எதிர்க்க எத்தகைய தியாகத்தையும் செய்ய தயார்' என தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அமித்ஷாவுற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகம் மட்டுமில்லாமல் கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகத்தின் சித்தராமையா, குமாரசாமி என வழக்கம்போல இந்த முறையும் ஹிந்திக்கு எதிராக தென்னிந்தியாவின் குரல் ஓங்கியே ஒலித்துள்ளது.
உள்துறை அமைச்சர் என்பதை தாண்டி தேர்தல்களுக்கான வியூகங்கள் அமைத்து களப்பணியாற்றுவதில் கில்லாடி என்ற பெயரும் அமித்ஷாவுக்கு உண்டு.பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் எல்லா பாடங்களையும் படிக்காமல் ப்ளூபிரிண்டை பார்த்து அதிகமான கேள்விகள் எந்தப்பாடத்தலிருந்து கேட்கப்படுமோ அந்த பாடத்தை மட்டும் படித்துவிட்டு பாஸ் மார்க் வாங்குவது போல ஹிந்தி திணிப்பு என்ற விஷயத்திற்கு பின்னால் அமித்ஷாவின் வேறொரு ப்ளூபிரிண்ட் இருப்பதாக கூறப்படுகிறது பிஜேபி கூட்டணியாக சேர்ந்து இந்த தேர்தலில் பெற்ற வாக்குகள் 45% ஆகும். இந்த 45 சதவீதத்தில் பெரும்பான்மையான தொகுதிகள் ஹிந்தி பேசும் மாநிலங்களில்தான் கிடைத்துள்ளது. தென்னிந்தியாவில் சொல்லிக்கொள்ளும் அளவுக்குகர்நாடகாவில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் மொத்தமே 43 சதவீதம்தான் ஹிந்தி பேசும் மக்கள் ருக்கிறார்கள் அதிலும் பாதி பேருக்கு ஹிந்தி தாய்மொழி கிடையாது. அதனால் ஆங்கிலத்தை நீக்கி விட்டு ஹிந்தியை மற்றும் ஒற்றை மொழியாக கொண்டு வரமுடியாது என்பது அமித்ஷாவுக்கும் தெரியும். இருந்தும் இப்போது அமித்ஷா ஹிந்தி குறித்து பேசியிருப்பதன் மூலம் தங்களை ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு ஆதரவானவர்களாக காட்டிக்கொள்வதன் மூலம் அடுத்தடுத்து வரவிருக்கும் பல்வேறு வடமாநில சட்டமன்ற தேர்தல்களில் ஹிந்தி பேசும் மக்களின் வாக்குவங்கியை தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற சூட்சமம் ஒழிந்திருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலை நாடுகளை போன்ற ஒற்றைக்கட்சி ஆட்சி முறையே இந்தியாவுக்கும் உகந்தது என்பதை பட்டுபடாமலும் பேசியுள்ளார் அமித்ஷாஇந்திய ஜனநாயக்த்தின் அடிப்படைஆணிவேரே பலகட்சி ஜனநாயகம்தான். ஒன்றுக்கும் மேற்பட்ட வேறுபட்ட கருத்துகளும் விவாதாங்களும் இருந்தால் தான் அது உண்மையான ஜனநாயகம். அமித்ஷா கூறுவதை போல ஒரு கட்சி ஆட்சிமுறை என்றால் அது மக்களாட்சி என்ற முகமூடி போர்த்திய மன்னராட்சியாகத்தான் காட்சியளிக்கும். மன்னராட்சியும் சர்வாதிகாரமும் நாட்டையும் நாட்டு மக்களையும் எந்த நிலைக்கு தள்ளும் என்பதை அனைவரும் அறிவர் அதை அமித்ஷாவும் அறிந்திருப்பாராக.
மோடி 2.0 அரசில் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்தே தொடர்ந்து அதிரடியான நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் குறியாக இருந்துவருகிறார் அமித்ஷா முதலாவதாக .ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் உச்சபட்ச கட்டுப்பாடுகளை அந்த மக்களுக்கு விதித்து இன்று வரை அம்மக்களை இயல்பு வாழ்க்கையிலிருந்து ஒதுக்கியே வைத்திருப்பது பெருந்துயரம். 'எல்லாம் சரியாக இருக்கிறது. மக்கள் இயல்பாக இருக்கிறார். வேண்டுமென்றால் உங்களுக்கு தனிவிமானம் அனுப்புகிறோம் நீங்கள் தாராளமாக ஜம்முவிற்கு வரலாம்' என ஆளுநர் சத்தியபால் மாலிக் கூறியதை தொடர்ந்து எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் அங்கு சென்ற ராகுல் காந்திக்கு ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் மெகபூபா முக்தியை காண சென்னையில் படிக்கும் அவரது மகள் நீதிமப்றத்தில் வழக்கு தொடர வேண்டியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் மூத்த அரசியல்வாதி பரூக் அப்துல்லா மீது மக்கள் பாதுகாப்பு சட்டம் போடப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார். இன்னும் பலபேர் கைது செய்யப்பட்டு வெவ்வேறு ஊர்களில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதற்கு இவ்வளவு பெரிய கட்டுப்பாடுகள் என்ற கேள்வியை எழுப்புகின்றன.
சிறப்பு அந்தஸ்து விஷயத்தில் அமித்ஷா அடித்த பந்து ஜம்மு காஷ்மீர் மக்களின் தலையில் தாக்கி அவர்களை பேச்சுமூச்சில்லாமல் செய்துவிட்டது ஆனால் மற்றவர்கள் அதை சிக்சர் என நினைத்து கொண்டாடி வருகின்றனர் .ஜம்மு காஷ்மீர் மக்களின் எதிர்க்குரலை விவாதக்குரலை நசுக்குவதற்குத்தான் இவ்வளவு பெரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன எனக் கூறும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு உண்மை இருப்பது உறுதிபட தெரிகிறது.
1971 க்கு பிறகு அசாமில் குடியேறியவர்களை கண்டுபிடித்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைதான் தேசிய குடிமக்கள் பதிவேடு. சரி ஒருவர் 1972 ல் இந்தியாவில் குடியேறியிருந்தார் என வைத்துக்கொள்வோம். இன்றைய தேதிக்கு அவர் பேரன் பேத்திகளை பெற்று கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலத்தை இந்தியாவில் கழித்துவிட்டார். அவர் இந்திய குடிமகனா? இல்லையா?முதலில் வெளியான பட்டியலில் 60 லட்சம் பெயர்கள் பட்டியலில் விடுபட்டிருந்தன இது. அடுத்ததாக வெளியானதில் 40 லட்சமாகவும் அடுத்ததாக வெளியானதில் 19 லட்சமாகவும் குறைந்தன. மனைவி குழந்தைகளின் பெயர் உள்ளது கணவரின் பெயர் இல்லை , மகனின் பெயர் உள்ளது அப்பாவின் பெயர் இல்லை. எம்.எல்.ஏக்கள் , பத்திரிகையாளர்கள் என முக்கியமான நபர்களின் பெயரும் விடுபட்டுள்ளது. 3.50 கோடி மக்கள் தொகை கொண்ட அசாமிலேயே இவ்வளவு குழப்பங்கள் என்றால் அமித்ஷா மற்றும் பாஜகவினர் கூறுவது போல இந்தியா முழுவதும் இந்த பதிவேட்டை செயல்ப்ந்டுத்தினால் விளைவுகள் என்னவாக இருக்கும்? இந்தவிஷயத்தில் சிறுதவறு ஏற்பட்டாலும் நாட்டின் ஒட்டுமொத்த அமைதியும் குலைந்துவிடக்கூடும் என அறிந்திடாதவரா அமித்ஷா?
'எங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தப்போகிறோம்' என பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பேசியதில் உள்ள ' சேர்த்தே' என்ற வார்த்தையை அமித்ஷா தவறுதலாக 'ஒரே' என்ற வார்த்தையாக புரிந்துகொண்டார் போல அவருடைய நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் அதை மெய்ப்பிப்பதாகவே உள்ளது. ' இந்தியாவில் பல மொழிகள் உள்ளது. ஒவ்வொன்றும் தனித்தன்மைக் கொண்டது எனக்கூறிவிட்டு இருந்தாலும் இந்தியா ஹிந்தியால் தான் அடையாளப்படுத்தப்பட வேண்டும்' எனவும் கூறியுள்ளது மிகப்பெரிய முரண். அதேபோல ஜம்மு காஷ்மீர் மக்களின் நலனுக்காக நடவடிக்கை எடுக்கிறேன் என்ற பெயரில் சிறப்பு அந்தஷ்த்தை நீக்கிய பிறகு அந்த மக்களையும் மக்களின் பிரதிநிதிகளையும் பேசவிடாமல் தடுத்து கட்டுப்பாடுகளுடன் கட்டிப்போட்டிருப்பதும் எவ்வளவு பெரிய முரண். அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு அடிப்படையிலேயேவிமர்சனத்துக்குரியது என்றாலும் இந்த விஷயத்தில் வெளிநாட்டவர்களை வெளியேற்ற வேண்டும் என முடிவெடுத்துவிட்டால் பாரபட்சமன்றி எல்லோரையும் வெளியேற்றிவிட வேண்டியதுதானே இடையில் குடியுரிமை மசோதாவை நுழைக்க முயற்சி செய்வது ஏன்? இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கையில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை மட்டும் ஒதுக்க நினைப்பது ஏன்? இந்த முரண்களை எல்லாம் புரிந்துக்கொண்டால் அமித்ஷா வின் அதிரடி நடவடிக்கைகளின் பிண்ணனியும் பிஜேபியின் அடுத்த இலக்கும் எளிதில் பிரிந்துவிடும்.
நாராயணன் திருப்பதி,
அமித்ஷா பலகட்சிமுறை வேண்டாம் என்று சொல்லவில்லை, பலகட்சி முறை சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறதா? என்றுதான் கேள்வி எழுப்பியுள்ளார். நாம் சரியான அரசியலைமைப்பு சட்டத்தை பெற்றிருந்தும் அதை முழுமையாக இதுவரை பயன்படுத்தியிருக்கிறோமா? இந்தியாவில் பேசப்படவேண்டிய இதுவரை பேசப்படாமல் இருந்த விஷயங்களை மிக நேர்மையாகவும் நேரடியாகவும் அமித்ஷா பேசும் தொனி எதிர்க்கட்சியினருக்கு பிடிக்கவில்லை. அரசியலமைப்பு சட்டத்தின்படி வெற்றிப்பெற்று ஆளும்கட்சியாக அமர்ந்த பின்பு எதிர்க்கட்சிகளின் வாதங்களை ஏன் கேட்க வேண்டும்?காஷ்மீர் விவகாரத்தில் அந்த மக்களுக்கு இதுவரை மறுக்கப்பட்டு வந்த பல உரிமைகள் இனி கிடைக்கப்போகின்றது. தாய்மொழிக்கல்வி என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் கொள்கையே. உள்துறை அமைச்சர் மற்றும் இந்தி வளர்ச்சிதுறை அமைச்சர் என்ற காரணத்தால்தான் அமித்ஷா இந்தி குறித்த கருத்தை தெரிவித்திருந்தார். ஹிந்தி குறித்த இதே போன்ற கருத்தை சிதம்பரமும் தெரிவித்துள்ளார்.இந்தியா பல கலாச்சாரங்களை கொண்டிருந்தாலும் ஒரே நாடு என்பதுதான் உண்மை. பல தேசியங்கள் சேர்ந்த நாடு என்பது பிரிவினைவாதிகளின் பேச்சு. அமித்ஷா மற்றும் பிஜேபியினால் ஊழல் ஒழிந்துவிடும் அச்சப்படும் எதிர்க்கட்சியினரே இந்த ஆட்சியின் மீது தேவையற்ற விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
ஆர்.கோபண்ணா,
அமித்ஷா - மோடி கூட்டணியை கோத் ரா ரயில் எரிப்பு, குஜராத் கலவரம் முதல் பார்த்து வருகிறோம். மக்களை மதரீதியாக மொழிரீதியாக திரட்டுவது , சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களை திருப்புவது போன்ற பதுங்கு திட்டங்களை மோடியும் அமித்ஷாவும் நீண்டகாலமாக கடைபிடித்துவருகின்றனர். தற்போது முழு மெஜாரிட்டி இருப்பதால் ஆர்.எஸ்.எஸ் ன் கொள்கைகளை அமல்படுத்துவதில் வேகம் காட்டிவருகின்றனர். மொழி விஷயத்தில் சிறுபான்மை பெரும்பான்மை என்று பார்த்தெல்லாம் ஒரு மொழியை அறிவித்துவிட முடியாது.இந்தி பேசாத மக்கள் விரும்பாத வரை இந்தியாவில் ஆங்கிலமும் தொடரும் என முன்னாள் பிரதமர் நேரு கூறியிருக்கிறார். அப்படி அறிவிப்பது இந்தியாவின் ஒற்றுனையையே சீர்குலைத்துவிடும். காஙம்ஷ்மீர் இந்தியாவோடு இணையும்போது அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை பாஜக மீறியிருப்பதன் மூலம் காஷ்மீர் மக்களை அந்நியப்படுத்திவிட்டனர். மக்களை மதரீதியாக அணிதிரட்டுவதன் மூலம் வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர் ஆனால் காந்தி, நேரு பிறந்த மண்ணில் வகுப்புவாம் மீண்டும் விரட்டியடிக்கப்படும். பொருளாதார மந்தநிலையை மூடிமறைப்பதற்காக மக்களின் உணர்ச்சியை தூண்டும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட்டுவருகின்றனர். நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் பிரிவினைவாதத்தை தூக்கிப் பிடிக்கும் இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் விரைவில் வெறுப்படைவார்கள்.
(புதிய தலைமுறை இதழில் வெளியான எனது கட்டுரை)

Comments
Post a Comment