Posts

Showing posts from August, 2019

விஜயகாந்த் எனும் 'அஞ்சான்' | Vijayakanth Birthday Special |

'அவர் அப்பவே அப்டிங்க'- விஜயகாந்த் எனும் 'அஞ்சான்' அது '1996' ஏப்ரல் மாதம் தமிழகம் பரபரப்பாக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரம். அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்து 'கலைஞருக்கு கலையுலக பொன்விழாவை' நடத்தப்போவதாக அறிவிக்கிறார் விஜயகாந்த். ' இந்த விழாவில் அரசியல் கலப்பு சிறிதும் கிடையாது. தேர்தலை கருத்தில்கொண்டு இவ்விழா நடத்தப்படவில்லை. நாங்கள் ஏற்கனவே தீர்மானித்திருந்தபடிதான் இவ்விழாவை நடத்துகிறோம். இதற்கு யாராவது அரசியல் சாயம் பூசினால் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்கள் மீது எப்படிப்பட்ட முத்திரை குத்தினாலும் கவலையில்லை' என்று கூறி கலைஞரின் கலையுலக பொன்விழாவில் மொத்த திரையுலகத்தையும் கலந்துக்கொள்ள செய்து கலைஞருக்கு ஆறடி உயரமுள்ள தங்க முலாம் பூசப்பட்ட பேனாவையும் நினைவுப்பரிசாக அளிக்கிறார்.  இந்த நிகழ்ச்சி நடந்தபோது ஜெயலலிதா அவர்கள்தான் முதல்வர். திமுக 91' தேர்தலில் மிகப்பெரிய படுதோல்விக்கு பிறகு மீண்டெழ தயாராகிக்கொண்டிருந்த காலக்கட்டம் அது. ஜெயலலிதாவின் அந்த 91-96 கால அரசியலைப் பற்றி குறிப்பிடும்

தேசிய விருதில் புறக்கணிக்கப்பட்டதா தமிழ் சினிமா? - என்ன சொல்கிறார்கள் திரையுலகினர்??

சேர்ந்தே இருப்பது விருதுகளும் சர்ச்சைகளும்... தேசிய விருதில் தழிழ் புறக்கணிக்கப்பட்டதா? #Nationalawards 2018 ம் ஆண்டுக்கான 66 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியாகியிருந்த ஆயிரக்கணக்கான படங்களிலிருந்து சிறந்தவற்றை தேர்வு செய்து பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தாதுன்,பத்தே கூ, உரி, பத்மாவத்,மகாநட்டி, கே.ஜி.எப், நதிச்சார்மி போன்ற பிறமொழி படங்கள் விருதுகளை வாரிக்குவித்துள்ள நிலையில் தமிழில் 'பாரம்' என்ற ஒரு படம் மட்டுமே சிறந்த பிராந்திய மொழி படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற எந்த போட்டி பிரிவுகளிலும் தமிழ்ப்படங்களுக்கு விருது கிடைக்கவில்லை இதனைத் தொடர்ந்து தேசிய விருதுகள் பரிந்துறையில் தமிழ்ப்படங்கள் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன என்ற கண்டனக்குரலை தமிழ்த் திரையுலகினர் எழுப்பியுள்ளனர். 'சேர்ந்தே இருப்பது விருதுகளும் சர்ச்சைகளும்' என்பது போல ஆஸ்கர் முதல் டிவி சேனல் விருதுகள் வரை  எந்த விருதுகளாக இருந்தாலும் சர்ச்சைகளுக்கு தப்பியதில்லை இதில் தேசிய விருதுகளும் விதிவிலக்கல்ல. தேசிய விருதுகளி

பிஜேபி யின் முகமா ரஜினிகாந்த் ? | Is RajiniKanth is the supporter of Bjp in Tamilnadu?

பிஜேபி யின் முகமா ரஜினிகாந்த்? மோடி-அமித்ஶா கூட்டணி கிருஷ்ணர்-அர்ஜீனர் கூட்டணி போன்றது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் ஒரு ராஜதந்திர நடவடிக்கை என ரஜினி பேசியதை தொடர்ந்து தமிழகத்தில் பிஜேபியின் முகமாக மாறுகிறாரா ரஜுனி?  ரஜினி+பிஜேபி+அதிமுக கூட்டணி உருவாகுமா? என பல விவாதங்களை தொலைக்காட்சிகள் நடத்திவிட்டன. கடந்த இரண்டு மூன்று வருடத்தில் அதாவது ரஜினி 'போருக்குத் தயாராகுங்கள்' என்று ரசிகர்கள் மத்தியில் முழங்கிய காலகட்டத்திலிருந்து அவர் எந்தெந்த விஷயங்களில் குரல் கொடுத்துள்ளார் என்று பார்த்தாலே ரஜினி எந்த பக்கம் என்பதை நன்கு புரிந்து கொள்ள முடியும். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கையின் போது 'புதிய இந்தியா பிறந்தது' என்று ட்வீட் செய்திருப்பார்(இது அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறும் முன்) காவிரிமேலாண்மை ஆணையம் கேட்டு பல கட்சியினரும் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்ட போது ஒரு கட்சியை சேர்ந்தவர் போலீஸை தாக்கியிருப்பார் அதற்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.அதன்பிறகு ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சமயத்தில் தூத்துக்குடி சென்றவர் 'எதற்கெடுத்தாலும் போராட

வேலூர் தேர்தல் யாருக்கான அலாரம்?? | Vellore Election Results | #DMK #ADmk

பணப்பட்டுவாடா பிரச்சனையினால் தள்ளிவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் தற்போது நடைபெற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. வெறும் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வை தோற்கடித்து திமுக வெற்றிப்பெற்றுள்ளது. தேர்தல் ஜனநாயகத்தில் எதிர்த்து நிற்கும் கட்சியை விட ஒரு வாக்கு அதிகம் பெற்றாலும் வெற்றிதான் என்றாலும் திமுக தற்போது பெற்ற வெற்றிக்குப்பின்னால் பல விஷயங்களை பகுப்பாய்வு செய்ய வேண்டும். ஏப்ரல் மாதம் நடைபெற்ற 38 தொகுதிகளுக்கான தேர்தலில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றிப்பெற்றிருந்தது. இதில் முக்கால்வாசி தொதிகளில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணியை தோற்கடிந்ந்திருந்தது. இதேநிலை வேலூரிலும் தொடரும் அரசின் மீதான அதிருப்தியே தங்களை பெருவாரியாக வெற்றிப்பெற செய்துவிடும் என்பதே திமுகவின் கணிப்பாக இருந்திருக்கும். ஆனால் இந்த முறை அதிமுக, திமுக விற்கு மரண பயத்தை காட்டிவிட்டனர் என்பதே உண்மை. 38 தொகுதிகளில் 37 ல் வெற்றிப்பெற்றதற்கு ஸ்டாலினின் தலைமைதான் காரணமா? இல்லை பிஜேபியின் மீதான வெறுப்பும் ஆண்டி-மோடி அலையும்தான் காரணமா? என பல விவாதங்கள் கிளம்பியிருந்தன

Nerkonda Paarvai - My Views | NKP | Ajith Kumar |

அனிருத்த ராய் சவுத்ரியின் இயக்கத்தில் அமிதாப் பச்சன் , டாப்சி உட்பட பலர் நடித்த பிங்க் என்ற ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த நேர்கொண்ட பார்வை. 'No means No' வேணாம்னா...வேணாம் !என்பதே படத்தின் ஒன்லைன்.💪 டைட்டில் கார்டு முடிந்தவுடன் தல என்ட்ரி தான் என நினைத்த ரசிகர்களை கொஞ்சம் வெயிட்டிங் மோடில் இருக்க சொல்லி கதையின் முக்கியப் பாத்திரங்களான ஸ்ரத்தா,அபிராமி(பிக்பாஸ் புகழ்), ஆன்ட்ரியா ஆகியோரை அறிமுகபடுத்திவிட்டு மெதுவாக காட்சிகள் நகர்கிறது. மூன்று பேரும் படத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.  'அந்த பொண்ணுக்குள்ளயும் எதோ இருந்துருக்கு பாரேன்' என்று  சொல்லுமளவுக்கு நடிப்பில் அசத்தியுள்ளார் பிக்பாஸ் அபிராமி. பல்கேரிய வில்லனாகவே இருந்தாலும்  பத்து நிமிடம் செந்தமிழில் பன்ச் டயலாக் பேசி மிரட்டும் அஜித் குமாருக்கு, இந்த படத்தில் 20 நிமிடங்களுக்கு பிறகுதான் முதல் டயலாக்கே. இது அஜித் படம்தானா? இல்லை தப்பித்தவறி வேறெதுவும் டப்பிங் படத்திற்கு வந்துவிட்டோமா? என நினைக்கும் போதெல்லாம் டக்குடக்கென்று அஜித் முறைத்து பார்ப்பது போல் ஒரு க்ளோஸ் அப் வை