பிஜேபி யின் முகமா ரஜினிகாந்த் ? | Is RajiniKanth is the supporter of Bjp in Tamilnadu?
பிஜேபி யின் முகமா ரஜினிகாந்த்?
மோடி-அமித்ஶா கூட்டணி கிருஷ்ணர்-அர்ஜீனர் கூட்டணி போன்றது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் ஒரு ராஜதந்திர நடவடிக்கை என ரஜினி பேசியதை தொடர்ந்து தமிழகத்தில் பிஜேபியின் முகமாக மாறுகிறாரா ரஜுனி? ரஜினி+பிஜேபி+அதிமுக கூட்டணி உருவாகுமா? என பல விவாதங்களை தொலைக்காட்சிகள் நடத்திவிட்டன.
கடந்த இரண்டு மூன்று வருடத்தில் அதாவது ரஜினி 'போருக்குத் தயாராகுங்கள்' என்று ரசிகர்கள் மத்தியில் முழங்கிய காலகட்டத்திலிருந்து அவர் எந்தெந்த விஷயங்களில் குரல் கொடுத்துள்ளார் என்று பார்த்தாலே ரஜினி எந்த பக்கம் என்பதை நன்கு புரிந்து கொள்ள முடியும்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கையின் போது 'புதிய இந்தியா பிறந்தது' என்று ட்வீட் செய்திருப்பார்(இது அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறும் முன்)
காவிரிமேலாண்மை ஆணையம் கேட்டு பல கட்சியினரும் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்ட போது ஒரு கட்சியை சேர்ந்தவர் போலீஸை தாக்கியிருப்பார் அதற்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.அதன்பிறகு ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சமயத்தில் தூத்துக்குடி சென்றவர் 'எதற்கெடுத்தாலும் போராடினால் நாடு சுடுகாடாகிவிடும்'....சமூகவிரோதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றார். இதுவரை பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து வந்தவர் இதன்பிறகு அதாவது 2018 கடைசியிலிருந்து அதாவது நாடாளுமன்ற தேர்தல் நெருங்க நெருங்க மோடி குறித்தும் பிஜேபி குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார். 10 பேர் சேர்ந்து ஒருத்தரை எதிர்த்தா யார் பலசாலி ? போன்ற கருத்துக்களை இதன்பிறகுதான் பேசினார். சில ஆங்கில பேட்டிகளில் மோடி அவர்கள் குறித்து பெருமையாகவும் பேசியுள்ளார். தற்போது காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக அறிவித்திருப்பதை அழுத்தம் திருத்தமாக வரவேற்றுள்ளார். இதையெல்லாம் வைத்துக்கொண்டு ரஜினி+அதிமுக+பாஜக கூட்டணி ஏற்படுமா என்ற அளவுக்கு விவாதங்கள் நடைபெற தொடங்கிவிட்டன. என்னைப் பொறுத்தவரை ரஜினி+பாஜக+அதிமுக என்ற பேச்சே முட்டாள்த்தனமானது என்றே சொல்வேன்.
"சிஸ்டமே சரியில்லை" "சரியான தலைமை இல்லை" என சொல்லித்தான் ரஜினி அரசியலுக்கு வருவதாகவே கூறினார். அவர் இப்படி பேசுகையில் மாநில சிஸ்டத்தை கையில் வைத்திருந்தது அதிமுக, மத்திய சிஸ்டத்தை கையில் வைத்திருந்தது பாஜக. பிஜேபியை ரஜினி முதலில் இருந்தே தனது குட்புக்கில் வைத்திருப்பதால் பிஜேபியை விட்டுவிடலாம் ஆனால் அதிமுக அப்படியில்லை ஜெ இறந்த பிறகு தமிழகத்தில் 1 வருடமாக நடந்த குழப்பங்களை பார்த்துவிட்டு சரியான தலைமை இல்லை, தமிழகத்தை மற்ற மாநிலத்தவர் எவ்வளவு அவலமாக பார்க்கிறார்கள் என்று குறை கூறித்தான் அரசியல். அறிவிப்பையே வெளியிட்டார். தான் சரியில்ல்லை என்று கூறிய அதிமுக வோடே ரஜினி கூட்டணி வைப்பாரா? அப்படி கூட்டணி வைத்தால் அது பாமக-அதிமுக கூட்டணி போன்று கேலிக்கூத்தாகத்தான் இருக்கும்.
ரஜினிக்கு இருக்கும் அடுத்த வாய்ப்பு பிஜேபி யோடு கூட்டணி சேர்வது என்று பேசப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை ரஜினி இதற்கும் ஓகே சொல்லமாட்டார் என்றே நினைக்கிறேன். இன்றைய நிலையில் தமிழகத்தில் பிஜேபியின் செல்வாக்கு என்னவென்று ரஜினிக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்ம் வார்டு வாரியாக மக்கள் மன்றத்தில் உறுப்பினர்களை சேர்த்துள்ளார் நிச்சயம் களத்திலிருந்து வரும் தகவல்களையும் கேட்டறிந்திருப்பார் அதனால் பிஜேபியை கூட்டு சேர்த்துக்கொள்ள யோசிக்கத்தான் செய்வார் ஒரு வேளை நாடாளுமன்ற தேர்தலும் சட்டமன்ற தேர்தலும் சேர்ந்து வருமாறு இருந்திருந்தால் நிச்சயம் காங்-திமுக கூட்டணி பக்கம் போயிருக்கமாட்டார் ஊழல் எதிர்ப்பு என்பதை காரணம் காட்டி பிஜேபி பக்கம் கரைசேர்ந்திருப்பார். அந்த சமயத்தில் பிஜேபிக்கும் ரஜினியின் ஆதரவு பெருமளவு தேவைப்பட்டிருக்கும். ஆனால் தற்போது தனியே வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் பிஜேபியை கூட்டணியில் சேர்ப்பதை வெற்று சுமையாகத்தான் கருதுவார்.
எல்லாவற்றுக்கும் மேலாக ரஜினிக்கு வயது 70 இருக்கும், அவர் நீண்ட காலம் நிலைத்து நின்று ஒரு கொள்கையை மக்கள் மத்தியில் ஊன்றி இருபது முப்பது வருடம் அரசியல் கட்சி நடத்தி ஆட்சியை பிடிக்க வரவில்லை. வருகிற 2021 தேர்தலுக்கு 3 மாதம் முன்பாக கட்சி தொடங்கி தேர்தலில் நின்று வெற்றிபெற்று முதல்வராகிவிட வேண்டும் என்பதுதான் அவர் குறிக்கோள். அப்படியிருக்கையில் அவர் வெற்றிக்கான வழி என்னவென்றுதான் தேடுவார் தன்னைப் பற்றி பாசிட்டிவ்வான மனநிலையே மக்களிடம் இருக்க வேண்டும் என்று எண்ணுவார். அப்படியிருக்கையில் பிஜேபி யை தன்னோடு சேர்த்துக்கொண்டு அவர்கள் மீது தமிழக மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை தன் மீது தானே வாரி இரைத்துக்கொள்ளமாட்டார்.அதனால் நிச்சயம் பாஜக வை பல்லக்கில் தூக்கி வைத்துக்கொண்டு பாஜக செல்வாக்கு பெற வேலை செய்யமாட்டார். இப்போது பாஜக வுக்கு ஆதரவாக பேசி வருவதெல்லாம் ஒரு நட்பு ரீதியில் ஒரே எண்ண ஓட்டத்தின் அடிப்பையில் இருப்பதால் பிஜேபிக்காக பேசுகிறார் என்றுதான் பார்க்க வேண்டும். மேலும் அவர் இதுவரை எந்த கொள்கையையோ எந்த கட்சியையோ எந்த தலைவரையோ தாக்கி பேசியதில்லை வாய்ப்பு கிடைத்தால் எல்லா தரப்பையும் புகழ்ந்துதான் பேசியிருக்கிறார். ராகுல் ராஜினாமாவின் போது ராகுல் மீண்டும் தலைவராக வேண்டும் எனக்கூறியுள்ளார். புதியக்கல்விக்கொள்கையை எதிர்த்த சூர்யாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். ரஜினி இதுவரை தனக்கான வாய்ப்புகள் அனைத்தையும் ஓப்பனாகவே வைத்துள்ளார் ஆனால் ஒருபக்கம் மட்டும் கூடுதல் கரிசனம் காட்டி வருகிறார் . முதல்வராவதுதான் ஒரே குறி என்றால் பிஜேபி யுடன் ரஜினி ஒரு எல்லையை தாண்டி நெருங்கமாட்டார் என்பதே என் கணிப்பு. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனுக்கும் பிஜேபிக்கும் , தெலுங்கானா முதல்வர் சந்திர சேகருக்கும் க்கும் பிஜேபிக்கும் இருப்பதை போன்ற உறவுதான் தனக்கும் பிஜேபிக்கும் இருக்க வேண்டுமென்பதே ரஜினியின் விருப்பமாக இருக்கும்.
யாருக்கு ஆதரவாக நிற்பதென்பதும் யாருக்கு எதிராக நிற்பதென்பதும் ரஜினி அவர்களின் உரிமை. அதை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் இந்த நிலைப்பாடை எடுத்தாலே மக்கள் விரோதி எனக்கூற யாருக்கும் உரிமை கிடையாது. முதலில் ரஜினி பேசட்டும்...! மக்கள் கேட்கட்டும்...! முடிவு அவர்கள் கையில்..!
-உ.ஸ்ரீ

Comments
Post a Comment