கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

வங்கிகளில் தொழில் தொடங்குவதற்காகவோ பிற தேவைகளுக்காகவோ கடன் பெற்று விட்டு திருப்பி செலுத்தவில்லையெனில் அது வாராக்கடன் ஆகும்.

இந்திய வங்கிகளுக்கு தற்போது இருக்கும் மிகப்பெரிய தலைவலி இந்த வாராக்கடன்கள் தான். இந்தியாவில் உள்ள 21 பொதுத்துறை வங்கிகளில் 19 பொதுத்துறை வங்கிகள் தற்போது வாராக்கடன் உள்ளிட்ட பிரச்சனைகளால் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. எடுத்துக்காட்டாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான் காலாண்டின் நஷ்டம் 4,876 கோடி ஆகும்.வங்கியின் மொத்த வாராக்கடன் 10.69% ஆகும்.

இந்தியாவின் மொத்த வாராக்கடன் 8.6 லட்சம் கோடிக்கும் மேல் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பெரிய தொழிலதிபர்கள் வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதே ஆகும்.

நீரவ் மோடி மற்றும் மெகுல் கோக்சி 13,500 கோடி விஜய் மல்லையா 9000 கோடி, விக்ரம் கோத்தாரி 800 கோடி என வங்கிகளில் கடன் பெற்று  தப்பிச் சென்று விட்டனர் என்று நாம் செய்தித்தாள்களில் படித்திருப்போம்.

தப்பிச்சென்ற இவர்களில் ஒருவரை கூட இன்னும் வெளிநாட்டில் இருந்து கைது செய்து அழைத்து வர முடியாத நிலையில் தற்போது இவர்களை போன்று 28 பொருளாதார குற்றவாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இவர்களில் 8 பேர் பெண்கள்.

இவர்களை நாடு கடத்தி அழைத்து வருவதற்காக இந்தியா பல்வேறு நாடுகளிடம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களுள் ஒன்றான தமிழகத்தின் பட்ஜெட்டில் தமிழகத்தின் மொத்தக்கடனாக கூறப்பட்டிருப்பதே 3,55,000 கோடிதான் ஆனால் இந்திய வங்கிகளின் வாராக்கடன் மட்டுமே 8.6 லட்சம் கோடிக்கும் மேல் !

நீரவ் மோடி எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை, கோக்சி ஆண்டிகுவா நாட்டில் குடியுரிமை வாங்கி செட்டில் ஆகி விட்டார், விஜய் மல்லையா லண்டனில் இருந்து கொண்டு இந்திய சிறைகளின் வீடியோவை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல விரைந்து தண்டிக்கப்பட வேண்டியவர்களாவர்.

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.... தடுமாறும் இந்தியா... மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?! #WTCFinals #Day3