Nerkonda Paarvai - My Views | NKP | Ajith Kumar |

அனிருத்த ராய் சவுத்ரியின் இயக்கத்தில் அமிதாப் பச்சன் , டாப்சி உட்பட பலர் நடித்த பிங்க் என்ற ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த நேர்கொண்ட பார்வை.

'No means No' வேணாம்னா...வேணாம் !என்பதே படத்தின் ஒன்லைன்.💪

டைட்டில் கார்டு முடிந்தவுடன் தல என்ட்ரி தான் என நினைத்த ரசிகர்களை கொஞ்சம் வெயிட்டிங் மோடில் இருக்க சொல்லி கதையின் முக்கியப் பாத்திரங்களான ஸ்ரத்தா,அபிராமி(பிக்பாஸ் புகழ்), ஆன்ட்ரியா ஆகியோரை அறிமுகபடுத்திவிட்டு மெதுவாக காட்சிகள் நகர்கிறது. மூன்று பேரும் படத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.
 'அந்த பொண்ணுக்குள்ளயும் எதோ இருந்துருக்கு பாரேன்' என்று  சொல்லுமளவுக்கு நடிப்பில் அசத்தியுள்ளார் பிக்பாஸ் அபிராமி.

பல்கேரிய வில்லனாகவே இருந்தாலும்  பத்து நிமிடம் செந்தமிழில் பன்ச் டயலாக் பேசி மிரட்டும் அஜித் குமாருக்கு, இந்த படத்தில் 20 நிமிடங்களுக்கு பிறகுதான் முதல் டயலாக்கே. இது அஜித் படம்தானா? இல்லை தப்பித்தவறி வேறெதுவும் டப்பிங் படத்திற்கு வந்துவிட்டோமா? என நினைக்கும் போதெல்லாம் டக்குடக்கென்று அஜித் முறைத்து பார்ப்பது போல் ஒரு க்ளோஸ் அப் வைத்து அஜித் ரசிகர்களை மனம் தளரவிடாமல் பார்த்துக்கொள்கிறார் இயக்குனர் வினோத். வா...ம்மா மின்னலு ! ஸ்டைலில் சில நிமிடங்கள் வந்துபோகும் அஜித்தை பார்த்து அசதியிலிருந்த ரசிகர்களுக்கு தெறிக்கவிடலமா....!
பாணியிலான ஒரு சண்டைக்காட்சி எனர்ஜியூட்டுகிறது. ரவுடிகளை பந்தாடிவிட்டு பாதிக்கப்பட்ட மூன்று பெண்களுக்காக அஜித் கோட் போட்டு கோர்ட்டுக்கு வாதாட கிளம்புவது போல் முதல்பாதி முடிகிறது.


பாதிக்கப்பட்ட மூன்று பெண்களுக்காக அஜித் வாதாட அவருக்கு எதிராக சின்னத்திரையின் 
பெரிய கை ரங்கராஜ் பாண்டே களமிறங்க இரண்டாம் பாதி பரபரப்பாக தொடங்குகிறது.

அட்ரா சக்க...பாண்டே vs அஜித், இனிமே படம் ஃபுல்லா ஃபயர்தான் என நினைக்கும்போதே டபாலென்று கட் செய்து அஜித்-வித்யாபாலன் ப்ளாஸ்பேக் ஓப்பன் ஆகிறது. இதுல்லாம் படத்துக்கு தேவை இல்லன்னு டைரக்டருக்கே தெரியும். அடிச்சு பிடிச்சு ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி முதல் காட்சி பார்த்த அஜித் ரசிகர்களுக்கு கூடுதலாக 10 நிமிடம் தலயை திரையில் பார்த்தோம் என்ற திருப்தியை கொடுத்திருக்குமே தவிர மற்றபடி அந்த காட்சிகள் ஸ்பீட் பிரேக்கர் தான்.

தலைவன் பாண்டே வாயில் இருந்து கேள்விகளா கொட்ட ஆரம்பிச்சா 1 மணி நேர விவாத நிகழ்ச்சியே பரபரப்பா திரில்லர் படம் பாத்தா மாதிரி போகுமே இப்ப வேற அஜித் vs பாண்டே வேற லெவல் ல இருக்கும் என கற்பனை செய்தவர்களுக்கு கொஞ்சம் பிம்பிலிக்கா பிலாப்பிதான். பல அரசியல்வாதிகளை கேள்விகளாலயே வியர்க்க வச்ச அந்த மனுசன போயி தேவையில்லாம சினிமா க்கு கூட்டி வந்து இப்டி பன்னிட்டீங்களே என்றுதான் கேட்க தோனுகிறது.
எதிரில் இருக்கிறவரை பேசவிடாத மாதிரி சத்தமாக பேசுகிற சீன்களில் நன்றாக நடித்திருக்கிறார். மற்றபடி
கை வீசம்மா...! கை வீசு.... என டீச்சர் ரைம்ஸ் சொல்லிக்கொடுக்க டீச்சரின் மாடுலேசனில் சிறிதும் பிசகாமல் திரும்ப படிக்கும் கிண்டர் ஹார்டன் ஸ்கூல் பிள்ளைகளை போல் இருக்கிறது அவரது நடிப்பு. அதற்கு நேர்மாறாக அஜித் நடிப்பில் பட்டையைக் கிளப்புகிறார்.

பாண்டே வுக்கு பதில் பிரகாஷ் ராஜ் போன்ற அனுபவ நடிகர் நடித்திருந்தால் அவருக்கு எதிராக வாதாடும் அஜித்தின் கேரக்டர் இன்னும் பலமாக இருந்திருக்கும்.யுவன் 'ரீமேக் படத்துக்கெல்லாம் இவ்ளோ போதும்டா' என நினைத்து கீபோர்டில் கைவைத்திருப்பார் போல அதனால் வழக்கமான அஜித்-யுவன் கூட்டணியின் மேஜிக் இதில் இல்லை.

செகண்ட் ஹாஃப் முழுவதும் கோர்ட் ரூமுக்குள்ளே நடப்பதால் காட்சிகள் கொஞ்சம் போரடிப்பது போல் இருக்கும். நல்ல வேளை 'மூத்திர சந்துக்குள்ள வச்சு ஒரு மூணு பேரு திணற திணற அடிச்சானுக பாரு' என்ற லெவலுக்கு ரசிகர்களை அழைத்து செல்லாமல் சரியான நேரத்தில் எண்ட் கார்டு போட்டு விடுகிறார் வினோத்.

'இந்த மாதிரி பொண்ணுக்கெல்லாம் இப்படித்தான் நடக்கும்..

இந்த மாதிரியில்ல எந்த மாதிரி பொண்ணுக்கு அப்படியெல்லாம் நடக்கக்கூடாது.'  விருப்பமின்றி உறவுக்கு வற்புறுத்துவது வன்முறை என்பதை அழுத்தமாக பதிவுசெய்திருக்கிறார்கள்.

படம் சொல்லவரும் கருத்து இன்றைய சமூகத்துக்கு நிச்சயம் தேவையான ஒன்று. நேர்த்தியான காட்சிகளும், இன்னும் பவர்ஃபுல்லான வசனங்களையும் சேர்த்திருந்தால் நேர்கொண்ட பார்வை கூடுதல் ஆக்ரோஷமாக இருந்திருக்கும். எக்சாம் ஹாலில் காலடி எடுத்து வைக்கும் வரை நியாபகத்தில் இருக்கும் அல்ஜீப்ரா பார்முலாக்கள் பேனாவை கையிலெடுத்தவுடன் சடாரென்று மறந்துபோவது போல் தியேட்டரைவிட்டு வெளியில் வந்தவுடன் பெரியளவில் நினைவில் நிற்கும்படியான காட்சிகள் இல்லை என்பது சிறிய மைனஸ்.
அஜித் மாதிரியான மாஸ் பிம்பம் உடைய நடிகர் ஒருவர் இதுபோன்ற கதையில் நடிப்பதற்கு ஒரு ஸ்டாண்டிங் ஓவியேஷனே கொடுக்கலாம். தமிழ் சினிமாவின் புதிய மாற்றத்தை அஜித் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்துள்ளார். இன்னும் பல மாஸ் ஹீரோக்கள் இனி இந்த ரூட்டிலும் விஜயம் செய்வார்கள் என நம்புவோமாக...

அஜித் ரசிகர்களை பொறுத்தவரை ஹெச்.வினோத் தடபுடலான விருந்துக்கு முன் கொடுத்துள்ள ஸ்டார்ட்டர் மட்டுமே இது. ஃபுல் மீல்ஸ் அடுத்து அஜித்தை வைத்து வினோத் இயக்கப்போகும் Thala60 தான்.

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review