விஜயகாந்த் எனும் 'அஞ்சான்' | Vijayakanth Birthday Special |
'அவர் அப்பவே அப்டிங்க'-
விஜயகாந்த் எனும் 'அஞ்சான்'
அது '1996' ஏப்ரல் மாதம் தமிழகம் பரபரப்பாக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரம். அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்து 'கலைஞருக்கு கலையுலக பொன்விழாவை' நடத்தப்போவதாக அறிவிக்கிறார் விஜயகாந்த். ' இந்த விழாவில் அரசியல் கலப்பு சிறிதும் கிடையாது. தேர்தலை கருத்தில்கொண்டு இவ்விழா நடத்தப்படவில்லை. நாங்கள் ஏற்கனவே தீர்மானித்திருந்தபடிதான் இவ்விழாவை நடத்துகிறோம். இதற்கு யாராவது அரசியல் சாயம் பூசினால் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்கள் மீது எப்படிப்பட்ட முத்திரை குத்தினாலும் கவலையில்லை' என்று கூறி கலைஞரின் கலையுலக பொன்விழாவில் மொத்த திரையுலகத்தையும் கலந்துக்கொள்ள செய்து கலைஞருக்கு ஆறடி உயரமுள்ள தங்க முலாம் பூசப்பட்ட பேனாவையும் நினைவுப்பரிசாக அளிக்கிறார். இந்த நிகழ்ச்சி நடந்தபோது ஜெயலலிதா அவர்கள்தான் முதல்வர். திமுக 91' தேர்தலில் மிகப்பெரிய படுதோல்விக்கு பிறகு மீண்டெழ தயாராகிக்கொண்டிருந்த காலக்கட்டம் அது. ஜெயலலிதாவின் அந்த 91-96 கால அரசியலைப் பற்றி குறிப்பிடும் போது 'சர்வாதிகாரத்தனமான கொடுங்கோல் ஆட்சி' என்று அன்றைய காலக்கட்டத்தை குறிப்பிட்டு விமர்சிப்பார்கள். அந்த நிலையில் எத்தகை அச்சமுமின்றி எதிர்க்கட்சிக்காரரான கருணாநிதிக்கு விழா எடுத்து மெர்சல் காட்டியுள்ளார். இன்றைய நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் பதறிப்போய் தான் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை என அறிக்கைவிடும் நடிகர்களை நினைக்கும் போது விஜயகாந்த் யாருக்கும் பயப்படாத 'அஞ்சான்' ஆகவே மனதில் நிற்கிறார். அதே நேரத்தில் சட்டமன்றத்தில் ஜெ வை பார்த்து கொந்தளித்தது நாகரீக குறைவாக இருந்தாலும் 'எந்த ஊர்க்காரன் லே இவன் முத்துப்பாண்டியவே எதிர்த்துட்டான்' என வெகுஜன மக்களை கவர்ந்த 'கில்லி' மொமண்ட் அது. 'உங்கள மாதிரி ரைட்ல வர்ரன் லெஃப்ட்ல வர்ரன் இந்தா வர்ரன் அந்தா வர்ரன்னு ஏமாத்துற வேல எனக்கு தெரியாது' என பஞ்சடித்து ' நா எப்ப வருவேன் எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது' என உதார் விட்டுக்கொண்டிருந்த சில நடிகர்களை சீண்டிப்பார்த்திருப்பார் விஜயகாந்த் எனும் 'ட்ரோல்'சிம்மன். கலாய்த்த விஜயகாந்த் அரசியலில் இறங்கி ஏற்ற இறக்கத்தோடு ஒரு இன்னிங்ஸை ஆடிவிட்டார். ஆனால் விஜயகாந்தால் ட்ரோல் செய்யப்பட்ட அந்த நடிகரை இன்றைய 'கோமாளி' நடிகரும் கிண்டல் செய்துவருகிறார்.ஹாஹாஹா......
சுற்றத்தார் இறங்கலாமா வேண்டாமா என ஆழம்பார்த்துக்கொண்டிருந்த காலத்தில் எந்த புறக்காரியங்களை கண்டும் அஞ்சாமல் வெற்றியோ தோல்வியோ களத்தில் இறங்கி 'சண்ட' செய்த விஜயகாந்த் திரையுலகிலும் அரசியலிலும் ஜெயிக்கத்துடிப்பவர்கள் புரட்டிப்பார்க்க வேண்டிய வரலாற்று புத்தகம். வெறும் 'இன்ஸ்பிரேஷன்' பக்கங்கள் மட்டும் அந்த புத்தகத்தில் இருக்காது. அவர் செய்த பிழைகளும் நம்மை தட்டிக்கொடுத்து புதிய தடம்பதிக்க வழிகாட்டும்.
இப்பேற்பட்டவர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சரிந்துவிழும் போது மனது கசங்கிதான் போகிறது.மீண்டும் விஜயகாந்த் அதே 'அஞ்சானாக' செகண்ட் இன்னிங்ஸில் களமிறங்கி அடித்து நொறுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்.
வரனும் நீங்க அதே 'அஞ்சானா' திரும்ப வரனும்.
-உ.ஸ்ரீ

Comments
Post a Comment