ஆட்டமே இனிதான் ஆரம்பம் ! இது மகா திரில்லர் ! |Maharashtra Politics | #Shivasena #Cong #NCP
பரபரப்பு ஓய்ந்தாலும் ஆட்டம் ஓயாது ;
இது மகா திரில்லர் !
அக்டோபர் 24 ம் தேதி தேர்தல் முடிவு வெளியானதிலிருந்தே பரபரப்பு தீயால் பற்றி எரிந்து கொண்டிருந்த மகாராஷ்டிரா அரசியல் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு கொஞ்சம் ஆசுவாசமடைந்துள்ளது. தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலகியதை தொடர்ந்து உத்தவ் தாக்கரே முதல்வராவது ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில் மகா அரசியல் பரபரப்பு சற்று தணிந்திருந்தாலும் உண்மையான ஆட்டம் இனிதான் ஆரம்பம் ஆக போகிறது.
இரு வெவ்வேறு துருவ கொள்கைகளை உடைய மூன்று கட்சிகள் ஆட்சியமைக்கிறதே இதனால் கொள்கை முரண்பாடு ஏற்பட்டு ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று நினைத்தால் நாம்தான் முட்டாள். இது அதிகாரத்திற்காக எந்த வண்ணத்தையும் பூசிக்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராக இருக்கும் காலம். அதனால் கொள்கையெல்லாம் இவர்கள் கூட்டணியை முறித்து விடுவதற்கு வாய்ப்பிருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் இவர்கள் கூட்டாக கைப்பற்றப்போகும் அதிகாரத்திற்கு இவர்களை பிளவுபடுத்தி சுக்குநூறக்கும் வல்லமை அதிகம் உள்ளது
உத்தவ் தாக்கரே முதல்வர் ஆன பிறகு அமைச்சரவை ஒதுக்குவதுதான் இந்த கூட்டணியின் மிகப்பெரிய தலைவலியாய் இருக்கும். இருக்கிற 38 அமைச்சரவை இடங்களை மூன்று கட்சிகளும் மனக்கசப்பின்றி பிரிக்க வேண்டும் அதிலும் பசையுள்ள முக்கிய துறைகளை யார் அதிகம் கைப்பற்றுகிறார்கள் என்பதில் போட்டி ஏற்படும். இவற்றையெல்லாம் கடந்து அமைச்சரவை பங்குபோட்டு பிரித்துவிட்டாலும் பிரித்த அமைச்சரவை இடங்களை தங்கள் கட்சி எம்.எல்.ஏ க்களுக்குள் பிரித்து ஒதுக்குவதற்குள் மூன்று கட்சிக்கும் போதும் போதும் என்றாகிவிடும். இதில் தான் இந்த மூன்று கட்சிகளும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கர்நாடகா அரசியலில் கடந்த ஆண்டு இதே போன்றதொரு நிலை காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணுக்கு ஏற்படும் போது அமைச்சரவையில் இடம் கிடைக்காத எம்.எல்.ஏ க்கள் தனியே கூட்டம் போட்டதுதான் அங்கு காங்-மஜத ஆட்சியிழப்பு வரை செல்வதற்கு முக்கிய காரணமானது. ஆனால் கர்நாடகாவில் பிஜேபி பெரும்பான்மை பெற ஏறக்குறைய 10 லிருந்து 15 எம்.எல்.ஏ க்கள் தான் தேவைப்பட்டார்கள் என்பதால் கர்நாடக களம் வெகு சூடாக இருந்தது. மகாராஷ்டிரா வை பொறுத்தவரை பிஜேபி இன்னும் பெரும்பான்மை பெற 40 இடங்கள் தேவைப்படுகிறது 40 எம்.எல்.ஏ க்களை அவ்வளவு சுலபமாக பிஜேபியால் வளைத்துவிட முடியாது என்பதால் கர்நாடகா அளவுக்கு பரபரப்பிருக்க வாய்ப்பில்லை. மகாராஷ்டிராவில் மொத்தம் 29 சுயேட்சைகள் உள்ளனர் . சுயேட்சைகள் பெரும்பாலும் ஆட்சியில் இருப்பவர்களுக்குத்தான் ஆதரவளிப்பார்கள் என்பதால் இந்த விஷயத்தில் ஆளப்போகும் கூட்டணிக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா அட்வாண்டேஜ். பிஜேபி யை பொறுத்தவரை அந்த கட்ச எந்த வாய்ப்புகளையும் உருவாக்கக் கொள்ளாவிட்டாலும் தானாக உருவாகின்ற வாய்ப்புகளை சந்தர்ப்பங்களை தனக்கு சாதகமாக மடைமாற்றிக் கொள்வதில் கெட்டிக்காரர்கள். பிஜேபி, எதிர்தரப்பினர் 0001 % தவறு செய்தாலும் அதை 100% தனக்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளும் என்பதற்கு கர்நாடகா உட்பட பல உதாரணங்கள் உள்ளன. மகாராஷ்டிராவிலே பிஜேபி அஜித் பவாரை பயன்படுத்திக்கொண்ட விதத்தை பார்த்தாலே இது புரிந்திரிக்கும். ஆக, இந்த மூன்று கட்சிகளை சேர்ந்த ஆளப்போகும் கூட்டணி அதிகார வெறியில் சிறு தவறு செய்தாலும் கர்நாடகத்தில் நிகழ்ந்த அத்தனை காட்சிகளும் மகாராஷ்டிராவிலும் பிஜேபி யால் நிகழ்த்தப்படும்.
ஆக,பரபரப்புதான் ஓய்ந்திருக்கிறதே தவிர டூ பீ கண்டினியுட் போட்டு மகா திரில்லர் ஆட்டம் இன்னும் தொடரத்தான் போகிறது.
-உ.ஸ்ரீ

Comments
Post a Comment