இந்த தோட்டா உங்களையும் பதம் பார்க்கலாம் ! - எனை நோக்கி பாயும் தோட்டா ! #Dhanush #GVM #ENPT #MyOpinion

எனை நோக்கி பாயும் தோட்டா !



அண்ணனை கொன்றவர்களை தம்பி பழிவாங்கும் அதே பழைய காலத்து டெம்ப்ளேட் கதையை ஜிவிஎம் தன்னுடைய டெம்ப்ளேட்டில் தனுஷை மட்டும் ப்ரெஷ்ஷாக வைத்து இயக்கியிருக்கும் படம்தான் இந்த எனை நோக்கி பாயும் தோட்டா !


அண்ணனை கொன்றவர்களை தேடிப்பிடித்து பழிவாங்கும் ஹீரோ இதுதான் படத்தின் மையக்கதை. ஆனால், இந்த கதையே படம் முடிவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்புதான் தொடங்குவது படத்தின் மிகப்பெரிய மைனஸ். முதல் பாதியின் முதல் பாதி முழுவதும் வரும் தனுஷ் மேகா ஆகாஷ் காதல் காட்சிகள் ஜிவ்ஜிவ் ஃபீலிங்கை கொடுக்கின்றன. மேகா ஆகாஷ் சினிமா ஹீரோயின் என்பதை தவிர்த்து அவருக்கு வேறு மாதிரியான கேரக்டரை கொடுத்திருந்தால் காதல் காட்சிகள் ரசிகர்களுக்கு இன்னும் கனெக்ட் ஆகியிருக்கும். முதல் பாதி முழுவதும் மீண்டும் மீண்டும் காதலும் பாடலுமாக நகர்வது ஒரு கட்டத்தில்  சலிப்பை ஏற்படுத்துகிறது. இதே விஷயம் எடிட்டருக்கும் தோன்றியிருக்கும் போல, இரண்டாம் பாதியில் வரும் சண்டைக்காட்சிகளுக்கான லீடை முதல் பாதியில் ஆங்காங்கே சொருகி கொஞ்சம் நான் லீனியர் (nonlinear) முறையில் ஒப்பேத்த பார்த்திருக்கிறார்.படத்தின் முக்கியமான கதைக்கான லீட் கூட முதல் பாதியில் இல்லாததால் இந்த டெக்னிக் எந்த சுவாரஸ்யத்தையும் சஸ்பென்சையும் கொடுக்கவில்லை. பாடல்கள் மற்றும் பிஜிஎம் க்காக தர்புகா சிவாவுக்கு ஒரு தம்ப்ஸ் - அப் கொடுக்கலாம்.


புகைபிடித்தல் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என தனுஷின் வாய்ஸ் ஓவரில் தொடங்கும் படம் கடைசியில் சுபம் போடும் வரை தனுஷின் வாய்ஸ் ஓவரிலே முடிகிறது. ரொமாண்டிக்  சீன்ஸ் க்கு கொடுக்கப்பட்டிருக்கும் வாய்ஸ் ஓவர் கூட ஓகே. வலி இருக்கும்னு தெரியும் ஆனா கத்தி இருக்கும்னு தெரியாது, கத்தி இறங்குறதுக்குல்ல நா இறங்கனும், கையால தான் அடிப்பேன்னு எதிர்பார்ப்பாங்க ஆனா நா காலா ல அடிச்சன்' என பைட் சீனுக்கு மத்தியில் தனுஷின் வாய்ஸ் ஓவரெல்லாம் 'போதும்டா சாமி' ரகம். அதிலும், க்ளைமாக்ஸில் வரும் வாய்ஸ் ஓவர்களெல்லாம் அரை போதையில் உளறும் குடிமகன்கள் போல் தனுஷுக்கும் புரியாமல் நமக்கும் புரியாமல் கடுப்பேற்றுகின்றன. முதல் ல கடுகு அப்புறம் நாலு  சின்ன வெங்காயம் என ஆரம்பித்து கடைசியில் கொத்தமல்லியில் முடிக்கும் சமையல் ஷோ செஃப் மாதிரி,  தனுஷை படம் முழுவதும் வாய்ஸ் ஓவர் கொடுக்க வைத்ததை தவிர்த்திருக்கலாம். இந்த முறையிலான கதை சொல்லாடலை கௌதம் மேனனே இனி கொஞ்சம் மாற்றலாம்.


போன மாத எக்சாமில் முதக் ரேங்க் எடுத்த ஸ்கூல் ஸ்டூடண்ட் தலைக்கனம் ஏறிப்போய் இந்த மாத எக்சாமில் 5 வது ரேங்க் எடுப்பது போல, அசுரன் எனும் ஆகச்சிறந்த படத்திற்கு பிறகு தனுஷீக்கு இப்படியொரு படம். ஆனால் இது தனுஷ் முந்தைய மாதம் கமிட் ஆன படம் இல்லை அசுரனுக்கு மூணு வருடம் முன்பாக கமிட் ஆன படம் என்பதால் இதில் தனுஷை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை.

ஊர்க்கு ஒதுக்குப்புறமா இருக்குற  காலேஜ் ல  என் ஜினியரிங்க் படிக்கிற ஸ்டூடண்ட் மாங்கு மாங்குனு படிச்சு முதல் மார்க் எடுத்தா, அந்த காலேஜே அப்ரூவ்ட் இல்லன்னு சொல்லி  அந்த காலேஜ் வச்ச எக்சாம்லாம் செல்லாதுன்னு  கவர்மெண்ட் குண்ட தூக்கி போடுமாம். அந்த ஒதுக்குப்புற என்ஜினியரிங் காலேஜ் ஸ்டூடண்ட் நிலைமைதான் தனுஷ் க்கு.  படம்  அப்ரூவ்ட் இல்லாத  காலஜ் போல சொதப்பியிருக்கிறதே தவிர தனுஷ் பெர்ஃபார்மெனில் வழக்கம் போல சிக்சர்தான்.

 தனுஷீக்கு ஈடுகொடுத்து நடிக்க வேண்டிய முக்கிய கதாபாத்திரத்தில் மேகா ஆகாஷ் தன்னுடைய பணியை சிறப்பாக செய்திருக்கிறார். சசிக்குமாரின் கதாபாத்திரத்திற்கு சரியான பிண்ணனி இருந்திருந்தால் படத்தின் வேகம் இன்னும் கூடியிருக்கும்.  வில்லன்கள் தோற்றத்திலும் சரி நடிப்பிலும் சரி நச் !


மொத்தத்தில், தோட்டா தனுஷை நோக்கி மட்டுமல்ல பல நேரங்களில் படம் பார்த்துக்கொண்டிருக்கும் உங்களின் மீதும் பாய்ந்து உடலை பதம் பார்ப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற ஸ்டேச்சுட்டரி வார்னிங்க்கோடு முடித்துக் கொள்கிறேன்..

-உ.ஸ்ரீ

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review