ப்ரஸ்மீட் விஜய்யை விட எண்டெர்டெயினர் விஜய்யே அதிகம் கவர்கிறார் ! இது பிகிலின் வெறித்தனம் ! #Bigil #BigilMyViews


ஃபுட்பாலும் ரவுடியிசமும் ஒரே ப்ளாட்பார்மில் முட்டிக்கொள்ள விதிவசத்தால் ரவுடியாகும் ஃபுட்பால் ப்ளேயர் மீண்டும் கால்பந்தை கையிலெடுத்து....ஸாரி...ஸாரி...காலில் எடுத்து பெண்கள் அணியின் கோச் ஆக மாறி  கப்பை தட்டித் தூக்குவதுதான் பிகிலின் கதைச்சுருக்கம்.
'ராஜா ரணி ன்னு ஒரு அழகான லவ் ஸ்டோரிக்கு பிறகு, என்னை வச்சு ஒரு ஆக் ஷன் படம் கொடுக்கனுங்ற அட்லீ யோட 'வெறி' தான் இந்த 'தெறி'.." இது தெறி ஆடியோ வெளியீட்டு விழாவில் அட்லீ குறித்து விஜய் பேசியது. இது தெறி படத்திற்கு எவ்வளவு பொருந்துகிறதோ இல்லையோ 'பிகில்' க்கு 200% பொருந்திப்போகிறது. கேப்டன் மைக்கேல் ஆக அறிமுகமாகும் முதல் காட்சியிலிருந்தே அதகளப்படுத்துகிறார் விஜய். குறிப்பாக அந்த ஓப்பனிங்க் சண்டை காட்சியும் வெறித்தனம் பாடலுக்கு விஜயின் நடனும் தொபக்கென்று ஸ்கீரினை கிழித்துக் கொண்டு உள்ளே சென்று விஜயிடம் மைக்கை நீட்டி "உங்களுக்கு வயசே ஆகாதா விஜய்?? என கேட்க வைத்துவிடும் போல. ஆடுறாரு...பாடுறாரு...விளையாடுறாரு...நடிக்கிறாரு காமெடி உட்பட எல்லா ஏரியாவிலும் ராவடி ராசாவாக நிற்கிறார்  'வேற லெவல் விஜய் நீங்க வேற லெவல்'. விஜய்யை தவிர்த்து "தீபாவளிக்கு முந்தைய நாள் ஷாப்பிங் போனது போல" ஸ்க்ரீனில் அவ்வளவு கூட்டம். எல்லாரும் தங்களது மில்லிமீட்டர் சைஸ் கேரக்டர்களை கரெக்டாக செய்திருக்கிறார்கள். விஜய்யின் ஸ்கீரின் ப்ரெஸ்ஸனஸால் விறுவிறுவென நகரும் திரைக்கதையில் நயந்தாராவும் உனக்காக பாடலும் கடுப்பேற்றும் டோல்கேட். "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே"என எம்.ஜீ.ஆர் பாடலோடு அறிமுகமாகும் ராயப்பன் விஜய் தான் படத்தின் தலைமகன். கத்தி ஜீவானந்தம் மெர்சல் வெற்றிமாறன் வரிசையில் ராயப்பன் கேரக்டரும் விஜயின் கேரியெரில் மீண்டும் ஒரு மைல்கல். "கப்பு முக்கியம் பிகிலு" என ஒவ்வொரு முறை ராயப்பன் சொல்லும் போதும் வெளிப்படும் 'நடிகர்' விஜய் நம்மை ஏதோ செய்துவிடுகிறார். "இருபது ஓவர் மேட்சே பரபரவென இருக்கும் ஆனால் அந்த 20 ஓவரையும் சூப்பர் ஓவர் போல விளையாடினால் (நயன்தாரா போஷன் தவிர) அதுதான் பிகிலின் முதல்பாதி.
விஜய் ரசிகர்களின் வெறித்தனத்திற்கு தீனி போட்ட முதல்பாதி படம் இரண்டாம் பாதியில் அப்படியே சிங்கப்பெண்களை முறுக்கேற்றும் பணியை கச்சிதமாக செய்கிறது. இண்டர்வெலுக்கு பிறகு வரும் இரண்டு பெண்களின் பின்கதைகளும் சமூகத்தை அப்படியே பிரதிபலிப்பவை. காதலனால் பாதிக்கப்பட்ட பெண் விஜயின் முன்னிலையில் அவனுக்கு கொடுக்கும் பதிலடி காலா படத்தின் க்ளைமாக்ஸில் ஆடையை உறுவிய போலீஸ்காரனுக்கு அந்த பெண் கொடுக்கும் பதிலடிக்கு சற்றும் சளைக்காத வீரியயமான காட்சி. அந்த காட்சியை கொண்டாடிய அறிவு ஜீவிகள் இந்த காட்சியையும் கொண்டாடுவார்கள் என நம்புவோமாக. ஃபுட்பால் ப்ளேயர்களாக வரும் பெண்களும் மனதில் பதிந்து விடுகின்றனர். ஆனால் ஃபுட்பால் அவ்வளவாக மனதில் பதியவில்லை. எடிட்டர் ரூபன் இன்னும் சரியாக ஃபுட்பால் காட்சிகளை எடிட் செய்திருந்தால் படம் இன்னும் 'கில்லி' யாக இருந்திருக்கும். இரண்டாம் பாதியில் ரஹ்மானின் இசை உலகத்தரம். ஆனால் முதல் பாதியில் வரும் பல மாஸ் காட்சிகளில் ரஹ்மானின் வெறித்தனம் மிஸ்ஸிங்.
சில மறைமுகமான அரசியல் பன்ச்கள்  ஆங்காஙகே இருந்தாலும் கடைசி சில ஆண்டுகளாகவே விஜய் படம் என்றால் ஒரு சோஷியல் மெசேஜ் , அரசியல் பன்ச், கடைசியில் ஒரு ப்ரஸ்மீட் சீன் என க்ளீச்சே ஆக  இருந்த நிலையில் இந்த படத்தில் அந்த விஷயங்களையெல்லாம் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொண்டு பழைய எண்டெர்டெயினர் விஜய் நின்று விளையாடியிருப்பது சூப்பர் ஸ்பெஷல் வெறித்தனம். ப்ரஸ்மீட் விஜய்யை விட எண்டெர்டெயினர் விஜய்யே ரசிகர்களை அதிகம் கவர்கிறார்.
ஸ்போர்ட்ஸ் படங்களுக்கே உரிய அதே க்ளீச்சேக்களுடன் அப்படியே படம்  இருந்தாலும் அட்லீயின் திரைமொழி ஆல் செண்டர் ஹிட் அடிக்கும் ரகம்.
"அவன் எழுந்து கிழுந்து வந் ட்டான்னா இந்த தீபாவளி நம்மள்து"
எழுந்துவிட்டார் ! வென்றுவிட்டார் !
ஹாப்பி தீபாவளி நண்பா !

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review