கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிடுவோமா?? #Kohli #IndVsEng

#GamePlan #GullySports கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிடுவோமா?? #Kohli #IndVsEng இங்கிலாந்தை முதல் இன்னிங்ஸில் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியதே இந்திய அணி இன்று வெற்றியின் விளிம்பில் இருப்பதற்கு மிக முக்கிய காரணம். இங்கிலாந்து 134 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக ஜோ ரூட் சீக்கிரமே அவுட் ஆனது காரணமாக அமைந்தது. கடந்த 3 போட்டிகளில் இரண்டு இரட்டை சதம் ஒரு 180+ ஸ்கோர் என ரூட் அசுர ஃபார்மில் இருந்தார். ஒருவேளை ரூட் முதல் இன்னிங்ஸில் நின்று ஒரு சதம் அடித்திருந்தால் கூட ஆட்டம் இன்னும் நெருக்கமாக சென்றிருக்கும். ஆனால், ரூட்டை மிக சாமர்த்தியமாக ப்ளான் செய்து கோலி வெளியேற்றினார். ஸ்வீப் ஷாட் தான் என்னுடைய ஆயுதம் என வெளிப்படையாக கூறிவிட்டு இந்தியா வந்தார் ரூட். ஆனாலும், முதல் போட்டியில் அவரின் ஸ்வீப் ஷாட்டை இந்திய பௌலர்களால் கட்டுப்படுத்த முடியவே இல்லை. பௌலர்களின் லைன் & லெந்தை ஸ்வீப் ஷாட்டின் மூலம் மொத்தமாக குலைத்திருந்தார். ஆனால், அதே ஸ்வீப் ஷாட்டின் மூலம் இந்த முதல் இன்னிங்ஸில் ரூட்டின் விக்கெட்டை எடுக்க திட்டம் போட்டார் கோலி. ரூட்டின் பலம் ஸ்வீப்தான். ஆனால், அந்த ஸ்வீப்பை வலுக்கட்டாயமாக ஆடவைத்துதான் அவரின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும். இதுதான் கோலியின் ப்ளான். சிப்லே அவுட் ஆகி ரூட் வந்தவுடனே அக்சர் படேல் வீசிய ஒரு டெலிவரியில் Front foot டிஃபன்ஸ் ஆட முயன்று ரூட் பீட்டன் ஆகியிருப்பார். இந்த டெலிவரிக்கு பிறகு கமெண்ட்ரியில் இருந்த கவாஸ்கர் 'This is the pitch made for him' என கூறியிருப்பார். ஸ்பின்னை இறங்கி வந்து ஆடுவதற்கு ரூட்டிற்கு ஸ்டம்பிங் பயத்தை கொடுத்தது இந்த டெலிவரிதான். ரூட் ஸ்வீப்தான் ஆடுவார். அதை தடுக்க வேண்டுமெனில் லெக் சைடில்தானே ஃபீல்டை பலப்படுத்த வேண்டும். ஆனால், மாறாக கோலி ஆஃப் சைட் ஃபீல்டை முழுமையாக பலப்படுத்தினார். அக்சர் வீசிய அடுத்த ஓவரில் ரூட் ஸ்டரைக்கில் இருக்கும் போது இரண்டு ஸ்லிப், சில்லி பாய்ண்ட் கவர் வைத்து ஆஃப் சைட் முழுமையையும் டைட் ஆக்கினார். லெக் ஸ்லிப் இருந்தது மற்றபடி லெக் சைடு ஃப்ரீயாக இருந்தது. ஷார்ட் ஃபைன் லெக் ஷார்ட் ஸ்கொயர் லெக் இரண்டுக்கும் இடையில் மட்டும் அஸ்வினை நிறுத்தி வைத்திருந்தார் கோலி. ரூட்டுக்கு ஸ்பின்னை எதிர்கொள்ள பிரதானமாக சில ஆப்சன்கள் இருந்தது. Front foot இல் டிஃபன்ஸ் ஆடலாம். ஆனால், சில்லி பாயிண்டில் கேட்ச் ஆகும் வாய்ப்பு இருந்தது என்பதால் அதை ரூட்டால் ஆட முடியவில்லை. பிட்ச் ஸ்பின்னுக்கு உதவியது என்பதால் (அதுவும் க்ரீஸுக்கு முன்பாக அந்த தூசி படிந்த இடம் ஸ்பின்னுக்கு பெரிதாக உதவியது) இறங்கி வந்தால் ஸ்டம்பிங் ஆடும் வாய்ப்பு இருந்தது. முந்தைய ஓவரில் அக்சரின் டர்னில் ரூட் பீட்டன் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த ஷாட் ஆப்சனும் ரூட்டுக்கு க்ளோஸ். அடுத்து Back Foot இல் சென்று ஆஃப் சைடில் தட்டிவிட்டு சிங்கிள் தட்டலாம் என்றால் ஆஃப் சைடு முழுமைக்கும் அரணாக ஃபீல்டர்கள் இருப்பதால் இயல்பாகவே ஒரு வீரரின் மனம் அப்படி ஷாட்டுக்கு முயற்சிக்காது. ரூட்டும் அப்படியே. எனவே இறுதியாக ரூட்டுக்கு இருந்த ஒரே ஆப்சன் ஸ்வீப். அதைத்தான் அந்த டெலிவரியில் ரூட் செய்தார். ஆனால், டாப் எட்ஜ் ஆகி ஷார்ட் ஸ்கொயர் லெகில் அஸ்வினிடம் கேட்ச் ஆனார். ரூட் அவுட்! இன்றைக்கு இரண்டாவது இன்னிங்ஸிலும் ரூட்டுக்கு இப்படியே ஃபீல்ட் செட்டப் வைத்து அட்டாக் செய்கிறார் கோலி. பயிற்சியாளர் குழுவின் திட்டமிடலும் கோலியின் சரியான நடைமுறைப்படுத்தலுமே ரூட்டை சீக்கிரம் வெளியேற்ற வைத்தது. கடந்த போட்டியில் தோற்றவுடன் கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என சொன்னவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review