காங்கிரஸை கழட்டி விட பார்க்கிறதா திமுக?



எவ்வளவு நாள் தான் காங் க்கு பல்லக்கு தூக்குவது.....வருகிற உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து நிற்க வேண்டும் என திருச்சியில் கே.என்.நேரு பேச்சு.

சில தினங்களுக்கு முன் நடைபெற்ற திமுக கூட்டத்தில் " நாங்குநேரி தொகுதியை காங் எங்களிடம் கொடுத்துவிடுங்கள், திமுக ஈசியாக ஜெயித்துவிடுவோம். வருகிற சட்டமன்ற தேர்தலிலும் தலைவர் கூட்டணி கட்சிகளுக்கு குறைவான சீட்டையே கொடுக்க வேண்டும்." என உதயநிதி பேசியிருந்தார்.

இவ்விரண்டு பேச்சுகளை வைத்து பார்க்கையில் திமுக காங்கிரஸை ஒரு சுமையாக பார்ப்பதாகவே தோன்றுகிறது. ஸ்டாலினால் வெளிப்படையாக பேச முடியாததை அவருக்கடுத்த வரிசையில் இருப்பவர்கள் ஸ்டாலினின் குரலாக ஒலிக்கின்றனரோ என்ற சந்தேகம் எழுகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் கொடுத்த வெற்றியின் மமதையாக கூட இருக்கலாம். உண்மையில் நடந்து முடிந்த தேர்தலை ஒட்டுமொத்தமாக பார்த்தால் திமுக க்கு மிகப்பெரிய வெற்றிபோலவே தோன்றும் . ஆனால் இந்த வெற்றியை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் என  இரண்டாக பகுத்து பார்த்தால் நாடாளுமன்ற அளவில் அதிமுக + யை திமுக + ஒயிட் வாஷ் செய்துவிட்டது. ஆனால் இடைத்தேர்தலில் 22ல் 13 ஐ மட்டும்தான் திமுக பெற்றது எஞ்சிய 9 இடங்களை அதிமுக கைப்பற்றியது. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் நிச்சயம் இது ஸ்டாலின் எதிர்பார்த்த வெற்றியில்லை. நாடாளுமன்றத்திற்கு தெள்ளத்தெளிவாக ஒட்டுமொத்தமாக திமுக+ க்கு வாக்களித்த மக்கள் இடைத்தேர்தலில் ஏன் அதிமுகவுக்கும் வாக்களித்து ஆட்சிக்கு தேவையான எண்ணிக்கையில் சீட்டை வழங்கி அரியாசானத்தில் எடப்பாடியை ஜம்மென  அமர வைத்தது ஏன் ?  ஒரு வேளை மோடி எதிர்ப்பில் உறுதியாக இருந்த மக்கள் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்வதில் உறுதி காட்டவில்லையோ ? அப்படியென்றால் இந்த வெற்றி உண்மையில் திமுகவுக்கானதா? என்ற கேள்விகள் திமுக உயர்மட்டத்திலும் எழும்பியிருக்கும். இப்படி மக்களின் தீர்ப்பை  தெளிவாக புரிந்துகொள்ள முடியாத சூழ்நிலை இருக்கையில் திமுக கூட்டணிக்கட்சிகளை புறக்கணிப்பது போன்று பேசுவது சரியா? 2016 ல் மக்கள் நல கூட்டணி பிரித்த சொற்ப வாக்குகள் தான் திமுக க்கு எமனாக அமைந்தது. ஒரு சில தொகுதிகளில் வெகு சிலநூறு வாக்கு வித்தியாசத்திலெல்லாம்  தோற்றிருந்தார்கள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற படிப்பினையை முன்பே உணர்ந்திருக்கும் திமுக மீண்டும் அதுபோன்றதொரு தவறை செய்தால் வெண்ணை திரண்டு வருகையில் பானையை உடைத்த கதையாகிவிடும்.

இந்த தேர்தலிலேயே நா.த 16 லட்சம், மநீம 15 ல, அமமுக 25 ல என வாக்குகளை அறுவடை செய்துள்ளனர். அடுத்த தேர்தலில் நியு அட்மிஷனாக ரஜினிகாந்த் வேறு களமாட காத்திருக்கிறார். அவர் மக்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்த போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மநீம வே 15 லட்சம் வாக்குகள் வாங்கும் போது நிச்சயம் ரஜினி அதைவிட கூடுதலான வாக்குக்களைத்தான் பெறுவார். அப்படியிருக்கையில் காங்கிரஸை கூட்டணியிலிருந்து வெளியே அனுப்பினால் அவர்கள் கமல் , தினகரன் என ஒரு கூட்டணியை முயற்சி செய்து தேர்தலில் இறங்கினால் ( அரசியல் நாம் எதிர்பார்ப்பதை தாண்டிய ட்விஸ்ட்களை உள்ளடக்கியது.)இவர்கள் பிரிப்பது சொற்ப வாக்குகளாக இருந்தாலும் அது திமுக வுக்கு தலைவலியே.மொத்தத்தில் திமுக தேவை இல்லாத ஆணிகளை பிடுங்குகிறேன் என்ற பெயரில்  சுத்தியலை நடுமண்டையில் விழச்செய்து மர்கயா ஆகாமல் இருந்தால் சரி.  இதிலிருந்து எடப்பாடியின் சீட்டுக்கு 2021 வரை எந்த பிரச்சனையையும் ஸ்டாலின் ஏற்படுத்தமாட்டார் என்பது மட்டும் தெளிவு. அவ்வாறு ஏற்படுத்துவதாக இருந்தால் காங் எம்.எல்.ஏ க்களின் தயவு நிச்சயம் தேவை. ஆனால் திமுகவினர் மைக் பிடித்து காங்கிரஸை தொடர்ந்து சுரண்டிப் பார்ப்பதை பார்த்தால் ஆட்சிக்கலைப்பு என்ற ஐடியாவெல்லாம் ஸ்டாலினுக்கு இல்லையென்றே தோன்றுகிறது. எது எப்படியோ 2021 வரை எடப்பாடிதான் போல......ராசிக்கார சி.எம் !

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.... தடுமாறும் இந்தியா... மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?! #WTCFinals #Day3

கோலி எனும் சபிக்கப்பட்ட மாவீரன்! #Kohli #WTCFinals #IndVsNz