லோக்கல் ல இருந்து நேஷனல் வரைக்கும் தளபதி தான் !
தளபதி ன்னா சும்மா இல்லடா....
விஜய் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத சூப்பர்ஸ்டார்....ஸாரி..ஸாரி.....மெர்சலுக்கு பிறகுதான் ஆல் இந்தியா முழுவதும் அறிமுகமாகிவிட்டாரே ! அதனால் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகன் என்றே சொல்லலாம். விஜய்யின் மெர்சலான மேடைப் பேச்சுகளை போலவே அவரது சினிமா பயணமும் கனவுகளை தேடி ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் மோட்டிவேசன் டானிக் ! நாளைய தீர்ப்பு முதல் பிகில் வரை இவரது கேரியரை கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தாலே இது தெரியும்.
என்னதான் இயக்குனரின் பையனாக கொஞ்சம் எளிதாகவே சினிமாக்குள் நுழைந்துவிட்டாலும் வாய்ப்புகளை பயன்படுத்தி அடுத்தடுத்து முன்னேறியது என்னவோ விஜய்யின் உழைப்பாலும் சாமர்த்தியத்தாலும்தான். ' குரங்கு மாதிரி இருக்குறான் இவன் மூஞ்சையெல்லாம் காசு கொடுத்து பாக்கனுமா' என 20 வயது பையன் மீது வைக்கப்பட்ட விமர்சனம் இல்லை இதை விமர்சனம் என்றே சொல்ல முடியாது. முட்டி மோதி மேலே ஏற முயற்சித்துக்கொண்டிருப்பவனை பார்த்து ஏற்கனவே மேலே இருக்கும் ஒருவன் கைத்தட்டி இழிவாக பேசுவது போன்றது. அவன் பேசுகிறான் என்பதற்காக மேலே ஏறும் முயற்சியை விஜய் கைவிட்டிருந்தால் ஜோசப் விஜய் தளபதி விஜய்யாக மாறியிருக்க மாட்டார். நேசமணி பாணியில் சொல்ல வேண்டுமானால் " ஒரே விமர்சனம் தான் விஜய்யின் மொத்த கேரியரும் க்ளோஸ்" என்றாகியிருக்கும். விஜய்யின் படங்களை மொத்தம் நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அறிமுககால படங்கள், காதல் + குடும்ப படங்கள், ஆக்சன் மசாலா படங்கள், மெசேஜ் படங்கள்.
அறிமுககால படங்களை பொறுத்தமட்டில் நாளைய தீர்ப்பு,ரசிகன், தேவா என கொஞ்சம் ஆக்சன், நிறைய க்ளாமர் கலந்த படங்களிலேயே நடித்திருந்தார். விஜய்யை பி மற்றும் சி செண்டர் ஆடியன்ஸ்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே இந்த மாதிரியான படங்களில் நடிக்க வைத்ததாக எஸ்.ஏ.சி ஒரு பேட்டியில் பேசியதாக ஞாபகம். பி&சி ஆடியன்ஸ்களின் ரசனை இப்படித்தான் இருக்கும் என தப்புக்கணக்கு போட்டுவிட்டார்கள். விளைவு, விஜய்யின் இந்தகால படங்களில் எந்தவொரு படமும் மிகப்பெரிய ஹிட் ஆனதாக ரெக்கார்டில் இல்லை. எந்தவொரு துறையிலும் அப்டேட் என்பது அத்தியாவசியம் அப்டேட்டாகவில்லையென்றால் தூக்கியெறிந்து பாய் சொல்லிவிடுவார்கள். இந்த அப்டேட்டிங் பார்முலாவை நன்கு உணர்ந்திருந்த விஜய் இரண்டாவது கட்டமாக தேர்ந்தெடுத்தது காதல் + குடும்ப படங்களைத்தான் மென்மையான அடுத்த வீட்டு பையன் இமேஜில் இவர் நடித்த காதல் படங்கள் அனைத்தும் அன்றைய இளசுகளின் ஐ மீன் 80'ஸ் கிட்ஸ்களின் பேவ்ரட் லிஸ்டில் இடம்பிடித்தன. பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை , லவ் டுடே போன்ற படஙகள் இளசுகள் தாண்டி குடும்பங்களையும் சென்று சேர்ந்தது. பூவே உனக்காக படத்தில் ஆனந்தம் ஆனந்தம் பாடும், காதலுக்கு மரியாதையில் ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே, லவ் டுடேயில் என்ன அழகு! எத்தனை அழகு ! போன்ற பாடல்கள் இன்றும் ஹார்ட்டின்களை அள்ளிக்குவிக்கின்றன பாடல்கள் மட்டுமல்ல அந்த படங்களும் அத்தனை அழகு. படிப்படியாக விஜய்யின் ஹிட் லிஸ்ட் நீள ஆரம்பித்தது. ஒரே மாதிரி காதல் படங்களில் நடித்தால்தான் ரசிகர்கள் முகம் சுளித்துவிடுவார்களே....விஜய்யின் அப்டேட்டிங் பார்முலாவை மீண்டும் அப்ளை செய்ய வேண்டிய நேரம் வந்தது. இந்த முறை விஜய் டிக் அடித்தது ஆக்சன் கேட்டகிரி. லவ்வர் பாய் ஆங்கிரி பாயாக மாறினால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ற சந்தேகம் பலருக்கும் இருந்திருக்கும் ஏன் விஜய்க்கே கூட அந்த தயக்கம் இருந்திருக்கும் ஆனாலும் ரிஸ்க் எடுத்தார். "வாழ்க்கை ஒரு வட்டம்டா இங்க தோக்குறவன் ஜெயிப்பான் ஜெயிக்குறவன் தோப்பான்"......" நம்ம தியேட்டர்ல உன் படத்த ஓட்டின ஸ்கீரினு கிழிஞ்சிரும்"என அனல் தெறி வசனங்கள் பட்டைய கிளப்ப ரசிகர்கள் சிலுத்து போய் சில்லறையை சிதறவிட்டனர். குழப்பத்தில் இருந்த விஜய்யும் "இனி நான் போற பாதை ஆக்சன் பாதை " என முடிவெடுக்க அடுத்தடுத்து மெகா ஹிட்களாக விஜய்யின் மடியில் வந்து விழுந்தன. விஜய்யின் கேரியரை பற்றி பேசும்போது " கில்லி" படத்தைப் பற்றி பேசாமல் விட்டுவிட்டால் தெய்வக்குத்தமாகிவிடும். "அவன் எப்டி இருந்தான் சொல்லு செல்லம் , அவன் நெருப்பு மாதிரி இருந்தான்" என கில்லி படத்தில் ஒரு வசனம் வரும் நிஜமாகவே படம் முழுவதும் நெருப்பான பெர்பார்மென்ஸைத்தான் கொடுத்திருந்தார் விஜய். காமெடி, ஆக்சன்,பன்ஞ் டயலாக்குகள், ரொமான்ஸ் என சர்வமும் சரிவிகிதத்தில் கலந்திருக்க விஜய்யின் நெருப்பு போன்ற நடிப்பும் பிரகாஷ் ராஜின் செல்லமான வில்லத்தனமும் படத்தை தமிழ் சினிமாவின் ஆல் டைம் ப்ளாக்பஸ்டராக மாற்றியது. இன்றைக்கு வரைக்கும் இப்படியொரு பரபர கமர்ஷியல் படத்தை எடுக்க பல இயக்குனர்களும் முயன்றுக்கொண்டிருக்கிறார்கள் ஆனால் முடியவில்லை. தளபதி ரசிகர்கள் சார்பில் இயக்குனர் தரணிக்கு கோடானு கோடி நன்றிகள் ! கில்லிக்கு பிறகு சினிமாவில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டார் இளையதளபதி. சிம்மாசனம் ஏறிய பிறகும் சில சறுக்கல்கள் ஏற்பட மீண்டும் அப்டேட்டிங் பார்முலாவுக்கு வேலை வந்தது. இந்த முறை கையிலெடுத்தது பொறுப்பான சோசியல் மெசேஜ் படங்கள். அதுவரை விஜய்யாக இருந்த விஜய்யை மொத்தமாக வேறொருவராக மாற்றி திரையில் வெடித்து சிதற வைத்தது துப்பாக்கி. விஜய் படங்களிலே கில்லி க்கு பிறகு அப்படியொரு அதிரி புதிரி ஹிட் துப்பாகிதான். எப்டி சொன்னாலும் மாஸாகவே இல்லாத பி.ராமானுஜம் டைப் "ஐ எம் வெயிட்டிங்" டைலாக்கும் விஜய்யின் மேனரிசத்தால் தெறி மாஸ் ஆனது. இதே துப்பாக்கி கூட்டணி மீண்டும் கத்தியில் இணைய எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. படமும் வேற லெவலாக இருக்க அந்த தீபாவளியும் தளபதி தீபாவளிதான். அதிரடி ஆக்சன், டான்ஸ் எல்லாவற்றையும் தாண்டி அனைவர் மனதிலும் இடம்பிடித்தது ஜீவானந்தம் கேரக்டர்தான். விஜய்க்கு நடிக்க தெரியாது என விமர்சித்தவர்களும் திரையில் விஜய் கண்ணீர் சிந்துவதை பார்த்து கண் கலங்கினர் ஸ்டேட்லாம் நிறைய பாத்தாச்சு இனிமே போனா நேஷ்னல் தான் என விஜய்யும் அட்லியும் சேர்ந்து செய்த தரமான சம்பவம்தான் மெர்சல். வெற்றி , மாறன் , தளபதி என மூன்று கேரக்டர்களில் தளபதி பின்னியெடுக்க க்ளைமாக்ஸில் பேசப்பட்ட ஜி.எஸ்.டி. வசனம் மொத்த இந்தியாவிலும் புயலை கிளப்பி நேஷ்னல் மீடியாக்களின் கவனம் முழுவதும் விஜய்யின் பக்கம் திரும்பியது. "பாத்தியா எங்க ஆளு செண்ட்ரலையே பதற விடுறாரு " என விஜய் ரசிகர்கள் காலரை தூக்கிவிட்ட மொமண்ட் அது. அவருக்கான ட்ரெயினுக்காக காத்திருந்தார் கடும் போராட்டஙளுக்கு பிறகு ட்ரெயினில் இடம்பிடித்தார் இன்று வரை அவரின் வெற்றிப் பயணம் நிற்காமல் தொடர்கிறது. இதெல்லாம் சும்மா சாம்பிள் தான் விஜய்யை பற்றி எழுத வேண்டுமானால் பக்கம் பக்கமாக எழுதுவேன் எழுதி முடிப்பதற்குள் அடுத்த பிறந்தநாள் வந்துவிடும் என்பதால் இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.
ஹாப்பி பர்த்டே தளபதி !

Comments
Post a Comment