நோ ஐபிஎல் ! ஓய்வு பெறுகிறாரா தோனி??? #Dhoni #IPL #ViratKohli
கொரோனா பாதிப்பில் ஐபிஎல்....ரிட்டையர் ஆகிறாரா தோனி? கேள்விக்குறியில் தோனியின் கம்பேக்...
கொரோனா பாதிப்பால் தியேட்டரெல்லாம் மூடியிருக்கே, 'மாஸ்டர்' ரீலிஸ் என்னாகும்? 'வலிமை' அப்டேட் வருமா வராதா?? என ஒருபுறம் தலதளபதி ரசிகர்கள் கன்னத்தில் கைவத்திருக்க, ஐபில் நடக்குமா...நடக்காதா? தோனியின் கம்பேக் ஐ எதிர்பார்க்கலாமா கூடாதா?? என கிரிக்கெட் ரசிகர்கள் மறுபுறம் சோக எமோஜிக்களை பறக்கவிட்டு கொண்டிருக்கின்றனர்.
ஐபிஎல் என்றாலே இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். ஏப்ரல்-மே இரண்டு மாதமும் திருவிழா கொண்டாட்டம்தான். அதிலும் இந்த ஐபிஎல் தோனி ரசிகர்களுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் தோனி ரன் அவுட் ஆகி இந்தியா தோல்வியுற்ற பிறகு எந்த சர்வேதேச போட்டிகளிலுமே தோனி விளையாடவில்லை. இராணுவத்தில் கொஞ்ச நாட்கள் பயிற்சி, ஷிவா வுடன் டைம்பாஸ், சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு, அப்பப்போ ஜார்கண்ட் வீரர்களுடன் வலைப்பயிற்சி என தோனி இந்த காலக்கட்டத்தில் வழக்கம்போல கூலாகவே இருந்தார். ஆனால் 9 மாதமாக தோனியை இந்திய அணியின் ஜெர்ஸியில் பார்க்காமல் ரசிகர்கள்தான் கடும் அப்செட். பிசிசிஐ யும் தோனியை சம்பள ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்க இடையிடையே தோனி ரிட்டயர்மெண்ட் அறிவிப்பை வெளியிடப்போகிறார் என யூகங்கள் வேறு கிளம்பி தோனி ரசிகர்கள் மத்தியில் ஏகத்துக்கும் சோக மியுசிக் வாசிக்க வைத்தது. இந்நிலையில் தான் மார்ச் 29 அன்று ஐபிஎல் போட்டிகள் என அறிவிக்கப்பட தோனியை மஞ்சள் ஜெர்சியில் மீண்டும் களத்தில் அன்லிமிட்டெட் அதிரடிகளோடு பார்க்க தோனி ரசிகர்கள் வெறித்தனமாக தயாராகினர். தோனியும் மார்ச் 1 ஆம் தேதியே சென்னை வந்து அடுத்த நாளிலிருந்தே சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட தொடங்கினார். இந்த பயிற்சி முகாமை பார்ப்பதற்கே ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு அட்டகாசப்படுத்தினர். இந்நிலையில் தான் ஐபிஎல் போட்டிகள் கொரோனா பாதிப்பு காரணமாக ஏப்ரல் 15 வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஏப்ரல் 15 க்குள் நிலைமைகள் சரியாகி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படுமா அல்லது இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் முழுவதுமாக நிறுத்தி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டிசம்பர் மாதம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனியிடம் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கேட்டதற்கு, 'எதுவானாலும் ஜனவரி மாதத்திற்கு பிறகு பேசுவோம்' எனக்கூறியிருந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ரவிசாஸ்திரியும் 'ஐபிஎல் ல் தோனியின் ஃபார்மை பொறுத்து அவரின் உலகக்கோப்பை தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும்' என கூறியிருந்தார். இந்நிலையில் ஐபிஎல் முழுவதுமாக தடைபடுமாயின் தோனியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தோனியின் கேரியர் க்ராஃபை எடுத்து பார்த்தால் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த அளவுக்கான இடைவேளை எங்கேயுமே ஏற்பட்டதில்லை. காயம் காரணமாக ஒரு சில போட்டிகளில் விளையாடாமல் இருந்திருக்கிறாரே தவிர ஃபார்ம் அவுட் காரணமாக எங்கேயுமே அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டதில்லை. இப்போதும் தோனியே விலகியிருந்தாலும் பிசிசிஐ க்கும் தோனிக்கும் திரைமறைவில் என்ன பேச்சுவார்த்தைகள் உள்ளது என்பது தெரியவில்லை. அணியை பொறுத்தவரையில் நீண்ட காலமாக இருந்த நம்பர் 4 பிரச்சனையை ஸ்ரேயாஸ் ஐயர் தீர்த்து வைத்தார். ஆனால் அடுத்த தோனியாக ரிஷப் பண்ட் உருவாகி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஃபினிஷர் ரோலை நிரப்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சொதப்பியெடுத்திருக்கிறார் பண்ட். ராகுலை அந்த இடத்தில் பயன்படுத்தினாலும் ராகுலுக்கென்று நிலையாக ஒரு இடம் தேவைப்படுகிறது. காயத்திலிருந்து மீண்டு வந்த ஹர்திக் பாண்டியா முரட்டு ஃபார்மிற்கு வந்திருப்பதால் ஹர்திக் பாண்டியா இந்த இடத்தில் ட்ரம்ப் கார்டாக இருப்பார். இந்நிலையில்தான் அக்டோபர்-நவம்பரில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை அணியில் ரிஷப் பண்டா? தோனியா? என்ற நிலை உண்டாகியுள்ளது. டி20 அணித்தேர்வு குறித்து பேசியுள்ள சேவாக்கும் ரிஷப் பண்ட்டை டிக் செய்துள்ளார். முன்னதாக
ரவிசாஸ்திரி பேசியதை வைத்துப்பார்த்தால் ஐபிஎல் விளையாடாவிட்டால் தோனியின் தேர்வு என்பது கேள்விக்குறிதான். அப்படியானால் தோனியின் சர்வதேச கிரிக்கெட் முடிவுக்கு வருகிறது என்று அர்த்தம்.
ஆனால் தோனி விஷயத்தில் இன்னும் சில காரணிகளை சேர்த்தே பார்க்க வேண்டும்.
நியுசி தொடரின் போது சஹால் டிவி யூடியூப் சேனலுக்காக இந்திய அணியினர் பயணம் செய்யும் பேருந்தில் சஹால் ஒரு வீடீயோவை எடுத்திருப்பார். அதில் தோனியின் சீட்டை காண்பித்து இதில் யாரும் அமருவதில்லை காலியாகவே வைத்துள்ளோம் எனக்குறிப்பிட்டிருப்பார். உண்மையில் சில விஷயங்களை வைத்து பார்த்தால் பேருந்தில் மட்டுமில்லை இந்திய அணியிலும் தோனிக்கான இடம் காலியாக இருப்பதாகவே தோன்றுகிறது.
இந்திய அணி 2013 க்கு பிறகு எந்த ஐசிசி கோப்பையையும் வெற்றி பெற்றதே இல்லை. அதுவும் கோலியின் தலைமையில் முக்கியக்கட்டங்களில் எல்லாம் சொதப்பியே வருகிறது. கோலியின் அந்த ஆக்ரோஷமான மனநிலையும் பல நேரங்களில் இந்தியாவுக்கு நெகட்டிவ்வாகவே அமைந்துள்ளது. இதை நடந்து முடிந்த நியுசி சீரிஸில் கூட பல இடங்களில் பார்த்திருப்போம்.அணியில் தோனி இடம்பெறுவதென்பது அணிக்குள் அவரை போன்றே ஒரு கூலான மனநிலையை கொண்டு வர உதவியாக இருக்கும். தோனி பேட்டிங்கில் எந்த அளவுக்கு அதிரடியாக இருப்பார் என்பது கேள்விக்குறி என்றாலும் ஒரு விக்கெட் கீப்பராகவும் கேப்டன்சியில் கோலிக்கு உதவியாகவும் சமரசமின்றி செயல்படுவார். பண்ட் க்கு வயதிருப்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கொடுத்துக்கொள்ளலாம். பண்ட்க்கு பதில் தோனி எடுக்கப்படும் பட்சத்தில் 2007 டி20 உலகக்கோப்பை வெற்றியோடு இந்திய கிரிக்கெட்டில் தனது சாதனை அத்தியாயங்களை எழுதத்தொடங்கிய தோனி அதே டி20 தொடரில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம்.
இந்த ஓய்வு விஷயத்தில் தோனி என்ன நினைக்கிறார் என்பதும் முக்கியம். 2014 ல் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதாகட்டும், அதன்பிறகு ஓடிஐக்களில் கேப்டன் பொறுப்பை துறந்ததாகட்டும் எந்த முடிவையுமே தோனி எவ்வித முன்னறிவிப்பும் சர்ச்சைகளுமின்றி ஒரு மாலை வேளையில் ஜஸ்ட் லைக் தட் அறிவித்துவிட்டு போனார். அதற்காக அவர் எந்தவித பிரிவு உபச்சார விழாக்களையும் எதிர்பார்த்ததில்லை.
தோனி கேப்டனாக இருந்த சமயத்தில் இதே போன்று சீனியர் வீரர்களான சேவாக்,கம்பீர்,ஹர்பஜன் போன்றவர்களின் தேர்வில் எப்படி செயல்பட்டார் என்பது எல்லாருக்கும் தெரியும்.
ஒரு குழந்தை உருவாக 10 மாசம், ஒரு பட்டதாரி உருவாக 3 வருசம், ஒரு தலைவன் உருவாக ஒரு யுகமே தேவைப்படுது. ஒரு தலைமுறைக்கே ஒரு தலைவந்தான் கிடைப்பான். ஆம், சச்சினுக்கும் கோலிக்கும் இடைப்பட்ட தலைமுறையின் கிரிக்கெட் உலக தலைவன் தோனி. ஒரு வீரராக மட்டுமில்லாமல் இந்திய அணியின் கேப்டனாக இருந்து சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து இந்தியாவுக்கு கனவாக இருந்த பல அசாத்திய வெற்றிகளை சாத்தியப்படுத்தியவர் தோனி.
'10 ரன் அடிக்கிறோமா 100 அடிக்கிறோமா என்பது முக்கியமில்லை. அணிக்கு தேவையான ரன்களை அடிக்கிறோமா என்பதுதான் முக்கியம்' என தோனி பலமுறை கூறியிருக்கிறார். இப்போது அணியின் எதிர்காலத்திற்கு தேவையான ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலையில் தோனி இருக்கிறார். வழக்கம்போல தனது ஸ்டைலில் கூலாக ஒரு முடிவை அறிவிப்பார் தோனி. அது ரசிகர்களுக்கு சந்தோசமான முடிவோ வருத்தமான முடிவோ எதுவானாலும் தோனியை பொறுத்தவரையில் இந்திய ஜெர்சியின் எதிர்காலத்திற்காக தோனி அடிக்கப்போகும் மற்றுமொரு வின்னிங் ஷாட்டாகத்தான் அந்த முடிவு இருக்கும்.
தல போல வருமா...!
-உ.ஸ்ரீ

Comments
Post a Comment