யாருடைய எலிகள் நாம்!? - Book Review
லாக்-டவுன் நாளில் வெற்றிகரமாக முழுமையாக ஒரு புத்தகத்தை படித்து முடித்துவிட்டேன்.
சமஸின் #யாருடைய_எலிகள்_நாம்?
பல காலக்கட்டங்களில் சமஸ் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு. நெல்லை புத்தகக்கண்காட்சியில் அவர் சிறப்புரையாற்றிய அன்று வாங்கிய புத்தகம்.
அரசியல்,பொருளாதாரம்,வெளியுறவு,சூழலியல்,வரலாறு,மருத்துவம் என பல தலைப்புகளில் பரந்துப்பட்ட கருத்துக்களாக விரிகிறது கட்டுரைகள். சமஸ் எழுத்துக்களில் அதிகாரப்பரவல் என்கிற விஷயம்தான் அடிநாதமாக இருக்கும். இதிலும் அப்படித்தான். கிட்டத்தட்ட அவருடைய எல்லா கட்டுரைகளும் சாமானியன் பங்களிப்பையும் சாமானியனுக்கான பயன்பாட்டையும் இந்த அரசாங்கங்கள் உறுதி செய்திருக்கின்றனவா!? என்பதை கேள்விக்குறியாக்கி பிரச்சனைகளை இருதரப்பிலிருந்தும் அலசுகிறது. விடுதலைப்புலிகள், தூக்குத்தண்டனை, தனியார்மயமாக்கல், பார்ப்பணியம் ஆகியவற்றிலெல்லாம் இந்த சமூகத்தின் பொதுப்புத்திகளையெல்லாம் உடைத்தெறிந்து பேசியிருப்பது சிறப்பு. நமக்குள் ஒழிந்திருக்கும் ஜாதிய ஆதிக்கத்தை பிராமணர்கள் பெயரை சொல்லி வசதியாக மறைத்துக்கொள்கிறோம். அவர்கள் மீது எல்லா பழிகளையும் சுமத்திவிட்டு நம்மை கேள்விக்குள்ளாக்க தடுமாறுகிறோம், என படரும் ஒரு கட்டுரை ஜாதியில் ஊறிப்போன பலரின் முகத்திரையை கிழித்து உண்மையை உணர வைக்கும். வெவ்வேறு காலக்கட்டங்களில் கிட்டத்தட்ட 2004 லிருந்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் இன்றைய சூழலுக்கும் அப்படியே பொருந்தி போவதை பார்க்கும் போது,
பிஸி சிட்டி வித் பசி சிட்டிசன்ஸ்...
இங்க எந்த கட்சியும் நாட்டை பாலைவனமாக்கிற போறதும் இல்ல...
சோலைவனமாக்கிற போறதும் இல்ல...
இந்த அரசியலை உணர்ந்தால்தான் சாமானியன் சற்றேனும் முன்னேறி வர முடியும் இல்லை காலம் முழுவதும் யாருடைய எலிகள் என்றே தெரியாமல் ரொட்டித்துண்டுகளுக்காக ஓடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.....
-உ.ஸ்ரீ

Comments
Post a Comment