World Book Day !!!
#WorldBookDay ! 2018 நெல்லை புக் ஃபேர். அந்த எக்சிபிசன் நடந்தப்போ 10 நாளும் சும்மா போயி ஒவ்வொரு கடையா சுத்தி பார்த்திட்டு வந்துருவன். (எக்சிபிசன் தான வாங்கனும் னு அவசியம் இல்லையே😇) நம்ம பொறுத்தவரை ஸ்கூகுல் காலேஜ் படிக்கும் போது கைட் வாங்குனதோட சரி, மத்தபடி வேறெந்த புக்குக்கும் துட்டு செலவழிச்சதில்ல. மற்ற புக்குகள படிக்கிற பழக்கமும் இல்ல. அப்பதான் இந்த நெல்லை புக் ஃபேர் போட்டாங்க, அதுக்கு சும்மா டெய்லி போய் சுத்திட்டு, கடைசி நாள்ல இவ்ளோ நாள் வந்ததுக்காச்சு எதாது ஒரு புக் வாங்குவோம்னு பார்த்தா அங்க 100 புக் ஸ்டால் ல லட்சக்கணக்கான புக் இருந்துச்சு. எனக்கு புக் பத்திலாம் ஒரு விவரமும் தெரியாததுனால எத வாங்குறதுன்னு பயங்கர கன்ஃபியுசன். அப்பதான் தூரத்துல நம்ம விஜய் டிவி கோபிநாத் மைக் பிடிச்சிக்கிட்டு நிக்குறா மாதிரி ஒரு ஃபோட்டோ இருந்துச்சு, நேரா அங்க போய் பார்த்தா ப்ளீஸ் இந்த புக்க வாங்காதீங்கன்னு இந்த புக்கு இருந்துச்சு. எதை செய்யக்கூடாதுன்னு சொல்றாங்களோ அதை முதல்ல செய்றதுதான நம்மளோட மைண்ட் செட்😂 நானும் உடனே வாங்காதீங்கனு போட்ருந்த இந்த புக்க வாங்கிட்டேன். புக் வாங்குறதுக்கு நா வச்சிருந்த பட்ஜெட் 200 ருவா ஆனா அந்த 100 ரூவாதான் அதனால மிச்சம் இருந்த 100 ரூவாய்க்கு என்ன வாங்கலாம்ன்னு யோசிச்சிக்கிட்டே ஒரு யுடர்ன் போட்டா அதே கடைல அதே கோபிநாத்தோட 'மண்ட பத்தரம்' ன்னு ஒரு புக்கு இருந்துச்சு பார்த்தவுடனே....அட...டைட்டிலே வித்தியாசமா இருக்கேன்னு மிச்ச துட்டுக்கு அந்த புக்க வாங்கிட்டேன். லட்சத்தில் இருவரா இருநூறு ரூபாய்க்கு என் பட்ஜெட்டுக்குள்ள என் கைல சிக்குன 2 புத்தகங்கள் இதான். முதல் முதல்ல பாட புத்தகங்கள் தவிர்த்து பொதுவான ஒரு புக்கு வாங்குறதுக்கு துட்டு செலவழிச்ச நாள் அதுதான். இந்த இரண்டு புக்குமே ரொம்ப எளிமையா எந்த சிரமமும் அயர்ச்சியும் இல்லாம யார் வேணுமானாலும் படிக்கிற லெவல் ல இருக்குற புத்தகங்கள்தான். Whenever I feel low, I took these books Just read 2 pages of it then it feels 'Life is Very Short Nanbaaaa.....Always be happy'. புத்தகங்கள் படிக்கிறதும் ஆல்வேஸ் பீ ஹாப்பிதாங்க.....
-உ.ஸ்ரீ
#WorldBookDay
#Books
-உ.ஸ்ரீ
#WorldBookDay
#Books

Comments
Post a Comment