பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான் - முழு விவரம்


 பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக பிடிஐ கட்சியின் தலைவர் இம்ரான் கான் இன்று(18.08.2018) பதவியேற்றார்.

கடந்த ஜீலை 25 ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. 272 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

தேர்தல் முடிவு :
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்றது . நவாஸ் ஷெரீப் ன் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி 64 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களிலும் சுயேட்சைகள் 13 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தனர்.

பெரும்பான்மை ?
ஆட்சியமைக்க தேவையான 137 பெரும்பான்மை உறுப்பினர்களை எந்த கட்சியும் பெறவில்லை. இதனால் பிரதமர் பதவிக்கு இழுபறி ஏற்பட்டது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி மற்ற சிறு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைப்பதாக முடிவு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 11 ம் தேதி இம்ரான் கான் பதவியேற்பதாக இருந்தார். தற்போது ஒரு வார தாமதத்துக்கு பிறகு இன்று ( 18.08.2018 ) பதவியேற்றுள்ளார்.

இன்று காலை இஸ்லாமாபாத் ல் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அந்நாட்டு அதிபர் மம்நூன் ஹிசைன் முன்பு இம்ரான் கான் பதவியேற்றார்.

இம்ரான்கான் பதவியேற்பு விழாவிற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ், நவ்ஜோத் சிங் சித்து  ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
நவ்ஜோத் சிங் சித்து மட்டும் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.

இந்த பதவியேற்பு விழாவில் நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரி ஜாவ்த் பஜ்வா வை கட்டியணைத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.



Comments

Popular posts from this blog

ஆஸ்கரை புறக்கணிக்கும் ரஜினி ! வாழ்க்கை ஒரு வட்டம்டா....வாழு விடு.... ட்ரம்புக்கு கோலிவுட் ஸ்டார்களின் பதிலடி...

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.... தடுமாறும் இந்தியா... மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?! #WTCFinals #Day3