கருணாநிதியின் உடல்நிலை இதுவரை..
18.07.18 - உடலில் பொருத்தப்படிருந்த ட்ரக்கியோஸ்டோமி கருவியை மாற்றுவதற்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
26.07.18 - வயது முதிர்வின் காரணமாக கலைஞர் கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளது.கோபாலபுரம் இல்லத்திலேயே மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தார்.
28.07.18 - நள்ளிரவு 1:30 மணியளவில் திடீரென ஏற்பட்ட இரத்த அழுத்தக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு இரத்த அழுத்தம் சீரானது.மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தார்.
28.07.18 - இரவு 8 மணிக்கு வெளியான அறிக்கையில் கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.
29.07.18 - இரவு 9:50 மணிக்கு வெளியான அறிக்கையில் கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு பின் தற்போது கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை முன்னேறி வருவதாக கூறப்பட்டிருந்தது.
31.07.18 - கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது. வயது முதிர்வின் காரணமாக தொடர்ந்து மருத்துவமனையிலலிருந்து சிகிச்சை பெற வேண்டும். மேலும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
06.08.18 - கலைஞர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வயது முதிர்வின் காரணமாக உடல் உறுப்புக்களை சீராக்குவதில் சவால் ஏற்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்கு பிறகே எந்த முடிவும் கூற முடியும்.
07.08.18 - 6:40 மணியளவில் வெளியான அறிக்கையில் இந்தியாவின் மூத்த அரசியல்வாதியான கலைஞர் கருணாநிதி மாலை 6:10 மணியளவில் காலமானார் என காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

Comments
Post a Comment